அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
- வணங்கப்பட தகுதியானவன், நீயே தூய்மையானவன், நான் அநியாயக் காரர்களில் ஒருவன் என பிரர்த்தனை செய்த நபி யார்?
யூனூஸ் நபி. அல்குர்ஆன் 21:87 - துன்பம் என்னைப் பீடித்துக் கொண்டது கருணையாளர்களில் நீயே மிக்க கருணையாளன் என பிரார்த்தனை செய்த நபி யார்?
அய்யூப் நபி. அல்குர்ஆன் 21:83 - தனித்தவனாக என்னை நீ விட்டு விடாதே! நீயே வாரிசு அளிப்போரில் மிகச் சிறந்தவன் என பிரார்த்தனை செய்த நபி யார்?
ஸகரிய்யா நபி. அல்குர்ஆன் 21:89 - எங்களிடமிருந்து இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக என பிரார்த்தனை செய்த நபிகள் யார்?
இப்றாஹிம் நபி, இஸ்மாயில் நபி. 2:127 - உங்கள் வீடுகளையே நீங்கள் கிப்லா வாக ஆக்கி தொழுகையை நிலைநாட் டுங்கள் என்று யாருக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்?
மூஸா நபி, ஹாருன் நபி. குர்ஆன் 10:87 - இவ்வுலகிலும், மறுமையிலும் நற்பாக்கி யங்களை தருவாயாக என்று கேட்ட நபி யார்?
இப்றாஹிம் நபி. அல்குர்ஆன் 2:201 - பொறுமையையும், காஃபிர்கள் மீது வெற்றியடைய உதவி செய்வாயாக என கேட்டவர் யார்?
தாலூத். அல்குர்ஆன் 2:250 - நீ இறக்கியதை நம்பிக்கை கொண்டு தூதரை பின்பற்றினோம் என கூறியவர் கள் யார்?
ஹவாரியூன்கள். அல்குர்ஆன் 3:53 - எங்களுக்கு நாங்களே அநியாயம் செய்து கொண்டோம். நீ மன்னிக்கா விட்டால் நஷ்டமடைந்தவர்களாக ஆகி விடுவோம் என கேட்டவர்கள் யார்?
ஆதம்(அலை), ஹவ்வா(அலை). (7:23) - எமக்கும் எமது சமூகத்திற்கும் இடையில் நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக என கேட்ட நபி யார்?
ஷிஐப்(அலை). அல்குர்ஆன் 7:89 - முஸ்லிம்களாகவே எங்கள் ஆத்மாக்க ளைக் கைப்பற்றுவாயாக என பிரார்த் தனை செய்தவர்கள் யார்?
மூஸாவின் சந்ததியினர். குர்ஆன் 7:126 - இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே என்று கூறிய நபி யார்?
நூஹ் நபி. அல்குர்ஆன் 11:41 - நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்ப் பாயாக என கேட்ட நபி யார்?
யூஸுப் நபி. அல்குர்ஆன் 12:101 - தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்ததிகளை யும் ஆக்குவாயாக என கேட்ட நபி யார்?
இப்றாஹிம் நபி. அல்குர்ஆன் 14:40 - உனது அருளை எமக்கு வழங்கி எமது காரியத்தில் நேர்வழியை தருவாயாக என கேட்டவர்கள் யார்?
குகைவாசிகள். அல்குர்ஆன் 18:10 - என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக என கேட்ட நபி யார்?
மூஸா நபி. அல்குர்ஆன் 20:27 - என் சமுதாயத்தினர் என்னை பொய்ப் பித்தத்தின் காரணமாக எனக்கு உதவி செய்வாயாக என கேட்ட நபி யார்?
நூஹ் நபி. அல்குர்ஆன் 23:26 - என்னையும், என் குடும்பத்தையும் இவர்கள் செய்பவற்றை விட்டும் காப்பாயாக என கேட்ட நபி யார்?
லூத் நபி. அல்குர்ஆன் 26:169 - என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ அரு ளிய அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்த அருள்புரிவாயாக என கேட்ட நபி யார்?
ஸுலைமான் நபி. அல்குர்ஆன்: 27:19 - எனக்காக உன்னிடத்தில் சுவர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டித் தருவாயாக என கேட்டவர் யார்?
பிர்அவ்னின் மனைவி. குர்ஆன் : 66:11