அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
- அல்லாஹ் மரணத்தையும், வாழ்வையும் எதற்காக படைத்தான்?
மனிதர்களை சோதிப்பதற்காக. (அ.கு.67:2) - யாருக்கு நிச்சயமாக சுவனச் சோலை கள் உண்டு என அல்லாஹ் கூறுகிறான்?
நம்பிக்கை கொண்டு நல்லறம் புரிந் தோருக்கு. (அ.கு. 2:25) - அனைத்துப் பெயர்களையும் யாருக்கு கற்றுக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
ஆதம்(அலை) அவர்களுக்கு. (அ.கு.2:31) - சிறுமையடைந்த குரங்குகளாக மாறி விடுங்கள் என யாரை அல்லாஹ் கூறுகிறான்?
சனிக்கிழமைகளில் வரம்பு மீறி மீன் பிடித்தவர்களை. (அ.கு. 2:65) - தான் அறிவீனர்களில் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிய நபி யார்?
மூஸா(அலை) (அ.கு. 2:67) - யாருக்கு கேடு என அல்லாஹ் கூறுகிறான்?
அற்ப கிரயத்திற்காக தம் கைகளால் நூலை எழுதி இது அல்லாஹ்விடம் இருந்து வந்தது என கூறுவோருக்கு. (அ.கு. 2:79) - அல்லாஹ் என்னை நேர்வழியில் செலுத்துவான் என கூறிய நபி யார்?
இப்றாஹிம் (அலை) அவர்கள். அ.கு.37:99 - அல்லாஹ் யாருக்காக சுட்டெறிக்கும் நரகத்தை தயார் செய்து வைத்துள்ளான்?
நிராகரிப்பாளர்களுக்கு. (அ.கு. 33:64) - ஷைத்தான் நெருங்கிய தோழனாக யாருக்கு இருப்பான்?
அல்லாஹ்வின் நல்லுபதேசத்தை புறக் கணித்தவருக்கு. (அ.கு. 43:36) - இழிவானவரும், தெளிவாக பேச முடி யாதவரும் என யாரை பிர்அவ்ன் கூறினான்?
மூஸா(அலை) அவர்களை. (அ.கு. 43:52) - மனிதனுக்கு எந்த அளவுக்கு அருகில் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
பிடரி நரம்பை விட அருகே. (அ.கு.50:76) - படைப்புகளிலேயே மிகச் சிறந்தவர்கள் என அல்லாஹ் யாரை கூறுகிறான்?
நம்பிக்கை கொண்டு நல்லறம் புரிவோர். (அ.கு. 98:7) - வானவர்களுக்கு பெண்களின் பெய ரைச் சூட்டுபவர்கள் யார்?
மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர் கள். (அ.கு. 53:27) - மறுமை நாளில் நண்பர்களே சிலருக்கு எதிரிகளாக யாரைத் தவிர இருப்பார்கள்?
பயபக்தியுள்ளவர்கள் தவிர. (அ.கு43:67) - மறுமைக்கான அடையாளமாக உள்ள நபி யார்?
ஈஸா(அலை) அவர்கள். (அ.கு. 43:61) - உங்கள் வீடுகளைத் தவிர வேறு வீடு களில் நுழையும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்?
அனுமதி கோராமலும், ஸலாம் கூறா மலும் நுழையவேண்டாம். (அ.கு.24:27) - எவர்கள் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
பாக்கியம் பெற்றவர்கள். (அ.கு. 11:108) - எவர்கள் நரகத்தில் இருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
தூர்பாக்கியம் அடைந்தவர்கள். (11:106) - இஸ்ராயீலின் சந்ததிகளில் நிராகரித் தோரை யார் யாரெல்லாம் சபித்தார்கள்?
தாவூத்(அலை) அவர்கள், ஈஸா(அலை) அவர்கள். (அ.கு. 5:78) - வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாருக்கு உரியன?
அல்லாஹ்வுக்கே. (அ.கு. 42:4)