ஒரே அமீரின் கீழ் ஒரே ஜமாஅத்தாக ஒன்றிணைவோம்!
கைது செய்யப்பட்டு கோவை சிறையில் இருந்த சகோதரர் அய்யா வழி பாலமுருகன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டி ருக்கிறார். அவரின் விடுதலைக்கு உதவிய அனைத்து தோழர்களுக்கும் மகத்தான நன்றியும், வாழ்த்தும்…
மேற்கண்ட செய்தி நமக்கு மகிழ்ச்சியே. இவரும் நெல்லை கண்ணன் அவர்களும் அப்படி என்னதான் தவறு செய்துவிட்டார் கள். ஆம்! அவர்கள் செய்த தவறு இதுதான். தாங்கள் பிறப்பாலும், தோற்றத்தாலும், அணியும் உடையாலும் நெற்றி நிறைய பட்டை தீட்டிய விபூதி அலங்காரத்தாலும் தீவிர இந்துப் பற்றாளர்களாக இருந்து கொண்டு முஸ்லிம்கள் நடத்தும் போராட்ட மேடைகளில் இந்துத்துவா தீவிரவாதத்தைக் கண்டித்தும் எதிர்த்தும் பேசியதால்தான் சிறைவாசமும், கிரிமினல் நடவடிக்கையும். இவர்களை இவ்வாறு தொடர்ந்து பேசவிட்டு விட்டால் அப்பாவி இந்துக்கள் பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச் சியை புரிந்து கொண்டு உண்மை நிலையை அறிந்து விட்டால் பாஜக இந்துக்களால் புறக்கணிக்கப்பட்டு விடும் என்ற காரணம் தான் இவர்கள் மீதான உடனடி நடவடிக்கை.
ஆனால் இஸ்லாமியப் பெயர் தாங்கிய பிரிவு இயக்கங்களைச் சார்ந்த பேச்சாளர் கள் தங்கள் தங்கள் இயக்கங்களை அப்பாவி முஸ்லிம் இளைஞர்களிடம் வீரியமாக வளர்க்க வேண்டி இன வெறியை தூண்டும் விதமாக மேடைகள் தோறும் மார்க்கம் தடுத்த வசைச் சொற்களை இந்துத் தலைவர் கள் மீதும் இந்துத் தெய்வ வழிபாட்டு முறை களை ஏசிப் பேசுவது கொண்டும் அப்பாவி இந்துக்களை இஸ்லாமிய மார்க்கத்திற்கெதி ராக திருப்பி விடுகிறார்கள். இந்த இஸ்லா மிய வெறுப்பு அப்படியே பாஜக மீது வெறித்தனமாக ஆதரவாக மாறி விடுகிறது. இந்த உண்மையை விளங்கிய ஆட்சியாளர் களும், அதிகாரிகளும் போலி இஸ்லாமியப் பெயர் தாங்கிய பிரிவினை இயக்கங்களின் தலைவர்கள் அவர்கள் எவ்வளவு மோசமாக வீராவேசமாகப் பேசினாலும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமாட்டார் கள். எடுக்கப் போவதுமில்லை. காரணம் இஸ்லாமிய இயக்கவாதிகள் மதிகெட்ட வீராவேசப் பேச்சினால் கோபம் கொள் ளும் பெருங்கொண்ட அப்பாவி இந்துக்கள் மத்தியில் பாஜக மேலும் மேலும் பலம் கொண்ட கட்சியாக மாறும். மிருக பலத் துடன் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! சகோதரிகளே!!
இப்போது புரிகிறதா! காவிப் பயங்கர வாதக் கட்சியான பாஜகவை ஆட்சிக் கட்டி லில் அமர்த்தியது யாரென்று சாட்சாத் மேலே குறிப்பிட்டுக் காட்டிய பிரிவு இயக்கங்களும் அதன் தலைவர்களுமேயா வர். எனவே இஸ்லாமிய மார்க்கத்திற்கெதி ரான இந்தப் பிரிவினைவாத இயக்கங்களை புறக்கணித்துவிட்டு நாம் அனைவரும் இந்தியா முழுவதும் இணைத்து நபி(ஸல்) காட்டிய வழியில் முஸ்லிம் ஜமாஅத் என்ற பெயரில் ஒரே அமீரின் கீழ் ஒரே ஜமாஅத் தாக ஒன்றிணைந்து இதன்மூலம் நமது தாய் திருநாடான இந்தியாவை வளம் பெற்ற நாடாகவும், தன்னிறைவு பெற்ற நாடாக வும், ஓர் வல்லரசான நாடாகவும், மத நல்லி ணக்க நாடாகவும் நம்மால் மாற்ற முடியும். அல்குர்ஆன் மற்றும் நபிவழிப்படி நாம் வாழ்ந்தோமேயானால் நமது இந்து சகோத ரர்கள் அனைவரும் நமது சமுதாயத்தினர் மீது உண்மையாகவே பாசம் கொள்வார் கள். நமது சமுதாயத்தின் கண்ணியம் உய ரும். இப்போதுள்ள இந்துக்களின் முஸ்லிம் வெறுப்பு அரசியல் நிலை நிச்சயமாக மாறும். அத்தகைய மாற்றம் ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மீது அருள் புரிவனாக.