அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
- வானங்களையும், பூமியையும் இவற்றிற்கு இடைப்பட்டதையும் எத்தனை நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
ஆறு நாட்களில். அல்குர்ஆன் 50:38 - பயபக்தியாளர்கள் மறுமையில் எங்கி ருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
பாதுகாப்பான இடத்தில். குர்ஆன் 44:51 - யார் வெற்றிபெற மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
குற்றவாளிகள். அல்குர்ஆன் 10:17 - சூழ்ச்சி செய்வதில் மிக விரைவானவன் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ். அல்குர்ஆன் 10:21 - மூஸா(அலை) அவர்களின் கைத்தடி என்னவாயிற்று?
தெளிவான பெரியதொரு பாம்பாயிற்று அல்குர்ஆன் 7:107 - யூனுஸ்(அலை) அவர்கள் எவ்வாறு கடலில் எறியப்பட்டார்கள்?
சீட்டுபோட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின். அல்குர்ஆன் 37:141 - எனது இரட்சகனே! என் உள்ளத்தை நீ விரிவுபடுத்துவாயாக என எந்த நபி பிரார்த்தனை செய்தார்?
மூஸா(அலை). அல்குர்ஆன் 20:25 - என் முகத்தை அல்லாஹ்வுக்கே அடிபணி யச் செய்துவிட்டதாக எந்த நபி கூறினார்?
முஹம்மது நபி(ஸல்) அவர்கள். குர்ஆன் 3:20 - எந்த நாளில் வானம் பலமாக அசைந்து சுற்றும்?
மறுமை நாளில். அல்குர்ஆன் 52:9 - அல்குர்ஆனில் மொத்தம் எத்தனை வசனங்கள் உள்ளன?
6236 வசனங்கள். - அந்நாளில் பொய்ப்பிப்போருக்கு கேடு தான் என்ற வசனம் எத்தனை முறை எந்த அத்தியாயத்தில் பதிவாகியுள்ளது?
பத்து முறை. அத்தியாயம் 77, அல்முர்ஸலாத். - ஸூர் ஊதப்படும் நாள் என்னவாக இருக்கும்?
ஒரு கடினமான நாளாக இருக்கும். அல்குர்ஆன் 74:8,9 - எச்சரிக்கப்பட்டோரின் காலைப் பொழுது எதுவாகிவிடும்?
மிகக் கெட்டதாகிவிடும். குர்ஆன் 37:177 - ஸூலைமான்(அலை) அவர்களின் மாளிகை எவ்வாறாக இருந்தது?
பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகையாக இருந்தது. குர்ஆன் 27:44 - ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர்.
இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும். அல்குர்ஆன் 26:221, 222 - கவிஞர்களை பின்பற்றுபவர்கள் யார்?
வழிகேடர்கள். அல்குர்ஆன் 26:224 - எந்த நபிக்காக நெருப்பை குளிச்சியாக வும், இதமாகவும் நீ ஆகிவிடு என்று அல்லாஹ் கூறினான்?
இப்றாஹிம் நபிக்கு. அல்குர்ஆன் 21:69 - யாரை நேசிக்கமாட்டேன் என அல்லாஹ் கூறுகிறான்?
பெரும் மோசடிக்காரனான குற்றவாளியை. அல்குர்ஆன் 4:107 - தன்னை எப்படி அழைக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்?
பணிவாகவும், மெதுவாகவும் (அந்தரங் கமாகவும்) அல்குர்ஆன் 7:55 - தன்னை எவ்வாறு நினைவு கூற வேண் டும் என நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கூறினான்?
மனதில் காலையிலும், மாலையிலும், பணிவாகவும், மெதுவாகவும், உரத்த சப்தமின்றியும். அல்குர்ஆன் 7:205