படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை!
ஷரஹ் அலி, உடன்குடி
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.
(படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள்புரியட்டும்.
அந்த ஒரே இறைவனின் பெயரால்…
சமூகம் ஒன்றிணைத்து ஒரே தலைமையில் செயல்படுங்கள்; இல்லையேல் அறியாமை கால மரணமே!
ஏக இறைவனின் தெளிவான ஆதாரங் கள் தங்களிடம் வந்த பின்னரும் யார் தங்க ளுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு பிளவுபட்டார்களோ, அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அத்தகையோ ருக்குக் கடுமையான வேதனை உண்டு. (இறைநூல்: 3:105)
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை தம் விருப்பப்படிப் பலவாறாகப் பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டார்களோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை; அவர் களுடைய வியங்கள் எல்லாம் அல்லாஹ் விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டு இருந்தவற்றைப் பற்றி முடிவினில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (இறைநூல் 6:159)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்த எச்சரிக்கை செய்திகள் :
என் சமுதாயத்தவர்களின் வியத்தில் நான் மிகவும் பயந்து கொள்வது நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களைத்தான்.
என் சமுதாயத்தின் மீது நான் அதிகம் பயப்படுவதெல்லாம் மக்களை வழிகேட்டின் பக்கம் அழைத்துச் செல்லும் பிரிவுகள் தலைவர்களைப் பற்றிதான். ஆய்வாளர்: முஸ்னத் அஹ்மத், 137, ஜாமிஉத் திர்மிதி: 2330.
நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது எண் ணிக்கையில் குறைவாக இருந்தாலும் சரியே என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். புகாரி: 1436
பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் உண் மையில் உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக, உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைந்து வாழ்பவரே உண்மையான உறவைப் பேணுபவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். புகாரி: 5991
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக, எப்போது பார்த்தாலும் சச்சரவு செய்து கொண்டு இருப்பவனே ஆவான் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன் னார்கள். புகாரி: 2457
வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று, மாறாக போதுமென்ற மனமே உண்மையான செல்வமாகும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன் னார்கள். புகாரி: 6446, 6447
எளிதாக்கப்படும் சொர்க்கப் பாதை :
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் செல்கிறாரோ அவருக்கு அதன்மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்கி விடுகிறான் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன் னார்கள். முஸ்லிம்: 5231
தன்னை மறைத்து கொள்ளும் இரவின் மீது சத்தியமாக பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக, ஆணையும், பெண்ணையும் (இறைவன்) படைத்திருப் பதின் மீதும் சத்தியமாக, நிச்சயமாக உங்களுடைய முயற்சிகள் பலவாகும்.
எனவே எவர் தானதருமம் கொடுத்து, தன் இறைவனிடம் பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை அவை நல்லவையயன்று உண் மைப்படுத்துகின்றாரோ, அவருக்கு நாம் சுவர்க்கத்திற்குச் செல்லும் வழியை இலேசாக்குவோம்.
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அந்த ஒரே இறைவனிடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ, இன்னும், நல்லவற்றை பொய்யாக்கு கிறானோ, அவனுக்கு கஷ்டத்திற்குள்ள நர கத்திற்கு செல்ல வழியைத் தான் இலே சாக்குவோம். (இறைநூல் 92: 1-10)
இறைநெறி நூலின் நேரடி எச்சரிக்கை :
பொங்கு கருணையாளன் தொடர் கிருபையாளன் ஒரே இறைவன் பெயரால்..
என்னிடம் இருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும். எவர்கள் என்னுடைய அந்நேர்வழியை (எவ்வித சுயவிளக்கமும் இல்லாமல்) பின்பற்றுகிறார்களோ அவர் களுக்கு யாதொரு பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (இறைநூல் : 2:38)
எவர்கள் (சுயவிளக்கம் மூலம் நேர்வழியை) நிராகரித்து என்னுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அவர்கள் அதில் என்றென் றும் தங்கி விடுவார்கள். (இறைநூல் : 2:39)
நேர்வழியையும் தெளிவான ஆதாரங் களையும் நாம் இறக்கி, அவற்றை மக்களுக்காக நெறிநூலில் (குர்ஆனில்) தெளிவுபடுத் திய பின்னரும், எவர்கள் அவற்றை மறைக் கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல் லாஹ்வும் சபிக்கிறான். சபிப்பவர்களும் சபிக்கின்றவர்கள். (இறைநூல்: 2:159)
என்னுடைய துக்கமே! இன்னவனை நான் என்னுடைய நண்பனாக (வழிகாட் டியாக) ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா? நல்லுபதேசம் (அல்குர்ஆன்) என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!
(அச்சமயம் நம்) தூதர் “என் இறைவனே! நிச்சயமாக என்னுடைய இந்த மக்கள் இந்த இறைநெறி நூலை முற்றிலும் வெறுத்துப் புறக்கணித்து விட்டார்கள் என்று கூறுவார்.
(இறைநூல்: 25:28,29,30)