இன்றைய அத்தியாவசியத் தேவை தியாகம்!
K.M.H.
முழுமை பெற்ற இஸ்லாம் எப் போது இப்பூவுலகிற்கு அறிமுகப்படுத் தப்பட்டதோ அப்போதிருந்தே அந்த இனிய மார்க்கத்திற்கும் நமது தாய்த்திரு நாடான இந்தியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. முஸ்லிம்களாகிய நாம் நமது தாய்நாட்டை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்யும் அளவிற்கு இந்தியாவில் முஸ்லிம்கள் சீரும் சிறப்பு மாக வாழும் வாய்ப்புகள் ஏற்பட்டன. ஆக 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பரம்பரை-மண்ணின் மைந்தர் கள் இன்று வந்தேறிகள் என்று வந்தேறி களால் வர்ணிக்கப்பட்டு நம் தாய் நாட்டை விட்டு விரட்டப்படும் சூழ் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே இந்திய நாட்டிற்குள் வந்தேறிகளாக கைபர் கணவாய் வழியாக வந்து நுழைந்த ஆரிய வர்க்கம் 3% இருந்தாலும் இன்று இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு இந்தியாவின் உண்மை வரலாற்றையே மாற்றி அமைக்கும் கைங் கர்யத்தைக் கனகச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர் களிடம் காணப்படும் படிப்பறிவும், ஒற்றுமையுமே காரணம். ஆனால் முஸ் லிம் சமுதாயமோ தங்களுக்கேற்பட்டுக் கொண்டிருக்கும் பேராபத்தை சிறிதும் உணராமல் அல்லது உணர்ந்தும் மனோ இச்சைக்கு ஆட்பட்டு அற்ப உலகின் ஆனந்தத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கொரு கொள்கை நாளுக்கொரு இயக்கம் என்று சிதைந்து சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் நிச்சயம் இந்திய நாட் டில் முஸ்லிம்கள் 15% இருந்தாலும் முஸ் லிம் சமுதாயத்திற்கு எதிர்காலம் இல்லை என்று சிற்றறிவு படைத்தவனும் கூறி விடலாம்.
இந்த படுபாதாள வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக் கிறது. முஸ்லிம்கள் இன்றைய தங்களின் மோசமான போக்கை மாற்றிக் கொள் ளாதவரை அல்லாஹ்வும் அவர்களது நிலையை மாற்றப் போவதில்லை, உயர்த்தப் போவதில்லை. இது நிச்சயம். காரணம் இது அல்லாஹ்வின் கடுமை யான எச்சரிக்கை. முதலில் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தனித்தனிப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கும் தலைவர் கள் தங்களின் பதவி ஆசையை விட் டொழிக்க வேண்டும். அவர்கள் தயாராக இல்லை என்றால் அவர்களது தொண்டர்கள் அவர்களைப் புறக் கணிக்க முன்வரவேண்டும். தனக்குப் பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறதென்று மமதையால்தான் இத்தகையவர்கள் தான்தோன்றித்தனமாக நடக்கிறார்கள். அடுத்து ஒரு பிரிவார் மற்ற பிரிவாருக்கு “குஃப்ர் ஃபத்வா’ கொடுப்பதையும், அவர்களின் இமாம்களில் பின்னால் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுப்பதை யும் விட்டொழிக்க வேண்டும். மற்ற முஸ்லிம்களை இழிவாகப் பார்க்கும் மனோ நிலையை விட்டொழிக்க வேண் டும். மற்றவர்களை இழிவாகப் பார்க்கிற வன் பெருமைக்காரன்; அவன் சுவர்க்கம் புகமுடியாது. நபி(ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கை இது.
அதேபோல் பரம்பரைப் பள்ளிகளின் நிர்வாகிகள், இமாம்கள், அவர் களின் ஆதரவாளர்கள் நபிவழியில் தொழுபவர்களைப் பள்ளிக்கு வரவிடாமல் தடுப்பதை விட்டொழிக்க வேண்டும். அவர்களுக்குத் திருமண பதிவேடு தரமாட்டோம், கபரஸ்தானில் ஜனாஸாவை அடக்க இடம் கொடுக்க மாட்டோம் போன்ற சட்ட விரோத நடவடிக் கைகளை நிறுத்த வேண்டும். அவனவன் அவனவனது கட்டைக்குத் தேடுகிறான். அவரவர்களின் அமல்களுக்கேற்ப நாளை மறுமையில் அல்லாஹ் கூலி கொடுப்பான். அவனது அதிகாரத்தில் நாம் தலையிடக் கூடாது என்ற பரந்த சரியான உறுதியான எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நபிவழியில் நடப்பவர்களை தடை செய்யாது பள்ளிக்கு வரவிட்டால் அவர்கள் வளர்ந்து விடுவார்கள். நம்முடைய தலைமைக்கும், ஆதிக்கத்திற்கும் ஆபத்து வந்துவிடும் என்ற குறுகிய போக்கு பரம்பரை நிர்வாகிகளுக்கும், இமாம் களுக்கும் இப்போதைக்கு வேண்டவே வேண்டாம். மாறாக அந்த பேராசையில் சமுதாயத்தைப் பிளவுபடுத்தினால் இந்திய மண்ணில் அவர்களும் அவர் களின் சந்ததிகளும் முஸ்லிம்களாக வாழும் வாய்ப்பே அற்றுப்போகும் ஆபத்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்வார்களாக.
எனவே முஸ்லிம்களில் எந்தப் பிரிவினராக இருந்தாலும் அவர்களின் இறுதித் தீர்ப்பு வல்ல அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன் மறதியாளனோ, தவறிழைப்பவனோ இல்லை என்பதில் உறுதியாக இருந்து, இவ்வுலகில் ஒருவரை ஒருவர் காஃபிர் என்பதோ, ஒருவரை ஒருவர் பள்ளிக்கு வரவிடாமல் தடுப்பதோ, ஒருவர் தனது கொள்கையை மற்றவர்களிடம் திணிப்பதோ கூடாது. எங்களின் கடமையயல்லாம் அல்லாஹ்வின் தெளிவான செய்தியை பகிரங்கமாக அறிவிப்பதேயாகும். (அல்குர்ஆன் 36:17) என்ற பரந்த மனப்பான்மையுடனும், சகோதர பாசத்துடனும், மனித நேயத்துடனும் பழக முற்படுவார்களாக. இந்த உபதேசங்கள் அனைத்தும் கசப்பாகத்தான் இருக்கும். காரணம்! உண்மை கசக்கவே செய்யும். உண்மை கசப்பாக இருந்தாலும் அதைச் சொல்லிவிடுவது நமது கடமை. இது நபி (ஸல்) அவர்களின் கட்டளை. இன்றைய முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் தங்களின் பதவி ஆசைகளைத் துறந்து ஒன்றுபட்ட சமுதாயத்திற்காக தியாகம் செய்ய முன்வரவேண்டும். அதுவே இந்திய மண்ணில் நாம் தாய்த் திருநாட்டில் முஸ்லிம்களாக சுதந்திரத் தோடும், முழு உரிமையுடனும் வாழ வழி வகுக்கும். தியாகம் செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.