புரோகிதர்களை புறக்கணிப்போம்! நபிவழி நடப்போம்! இம்மை-மறுமை வெற்றி பெறுவோம்!
அஹமது இப்ராஹீம்
இவ்வுலக வாழ்க்கை ஒரு அற்ப வாழ்க்கை! இவ்வாழ்க்கையை நம்பி நாம் ஏமாந்துவிடக்கூடாது! மறுமை வாழ்க்கை ஒன்றே உண்மையானது! நிரந்தரமானது!
நபிவழியில் மறுமைக்காக உழைக்கும் ஒரு முஸ்லிம் எவரோ அவரே புத்திசாலியாவார். ஆனால் அத்தகைய புத்திசாலியாக விடாமல் தடுத்து நரகத்தில் கொண்டு போய் தள்ளிவிடுவதற்கென்றே படைக்கப்பட்டவன் தான் ஷைத்தான் என்பவன். இந்த ஷைத்தானுக்கே தீய வழி காட்டும் பெரிய ஷைத்தான்கள்தான் தாஃகூத் என்ற பெரிய மனித ஷைத்தான்கள். இவர்களிடம் நாம் ஏமாறாமல் இருப்பது மிகமிக முக்கியம். இவர்கள் பெரிய மனிதர் வடிவில் நாட்டிற்குள் ஏராளமாக நடமாடுகின்றனர்.
இவர்கள் ஒன்றாக ஒரே உம்மத்தாக இருக்க வேண்டிய நமது இஸ்லாமிய சமுதா யத்தை நான்கு மத்ஹபுகளாகவும் பலப்பல இயக்கங்களாகவும் பிரித்து அதன் மூலம் தங்கள் வயிறுகளை நிரப்புகின்றனர். இவர்கள் தமது அப்பாவி முஸ்லிம் இளைஞர் களை மூளைச்சலவை செய்து இனவெறி, இயக்க வெறிகளை ஊட்டி வழி கெடுக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன் நுபுல் சர்மா என்ற பெண் சங்கி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை மிகவும் தரக்குறைவாக விமர் சனம் செய்ததாகக் கூறி வட இந்தியாவில் சில ஊர் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு வந்திருந்த வாலிபர்களிடம் அந்தந்தப் பள்ளி மத குரு மார்கள் வெறியூட்டும் விதமாகப் பேசி தூண்டிவிட்டதன் விளைவாக சாலை மறியல் மற்றும் கண்டன ஊர்வலம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடந்ததில் நம்முடைய வாலிபர்கள் சிலர் காவல்துறை யால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் இதற்கு காரணமான மதகுருமார்கள் பள்ளி வாசலுக்குள் பத்திரமாக இருந்து கொண்டார்கள். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை முஸ்லிம்கள் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களது வீடுகள் இடிக்கப்பட்டது. அவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நமது இந்தியாவில் பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கு என்னதான் தீர்வு என்பதை அல்குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் மட்டுமே பார்க்க வேண்டும். ஆனால் முஸ்லிம் பெயர் தாங்கிய இயக்கவாதிகள் எதற்கெடுத்தாலும் குர்ஆன், ஹதீஃத் என்கிறீர்களே! என இயக்கவாதிகள் நம்மை எதிர்க்கின்றனர். முதலில் இந்த மதகுருமார்கள் அல்குர் ஆனை பொதுமக்கள் தங்கள் தாய்மொழியில் படித்து விபரம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். எனவே பொதுமக்கள் இத்தகைய புரோகிதர்களை புறக்கணித்தே ஆகவேண்டும்.
இப்போது நுபுல் சர்மா விடயமாக அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என உருது பேசக்கூடியவர்கள் உருதுவில் மொழி பெயர்க்கப்பட்ட அல்குர்ஆனை, இது போன்றே அவரவர் தாய்மொழியிலுள்ள குர்ஆனை படித்துப் பார்க்க வேண்டும். அதில் 3வது அத்தியாயம் 186வது வசனத்தில் இதற்கான தீர்வு உள்ளது. முஃமின்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக் களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர் கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப் பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்! ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர் களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரி யங்களிலும் (நன்மையைத் தேடித்தரும்) தீர் மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன் 3:186)
மேற்கண்ட வசனத்தில் நிராகரிப்பாளர் களான இந்துத்துவா பயங்கரவாதிகளிட மிருந்து நிந்தனைகள்-வசைச் சொற்கள், கேவலமான வார்த்தைகள் ஆகியவற்றை திட்டமாக செவிமடுப்பீர்கள்! என எல்லாம் வல்ல அல்லாஹ் திருகுர்ஆனில் கூறியுள் ளான். அவ்வாறு இழிவுபடுத்தும் போது முஸ்லிம்கள் பொறுமை காக்கவேண்டும். இன்னும் முஸ்லிம்கள் அனைவரும் அல் லாஹ்வுக்கு அஞ்சி நபிவழி நடக்க வேண் டும். இதுதான் தீரச் செயல் என்கிறான்.
ஆனால் நடந்தது என்ன?
மேற்கண்ட அல்லாஹ்வின் உபதேசம் முஸ்லிம் மத அறிஞர்களால் தூக்கி வீசப்பட்டுள்ளது. கண்டன ஊர்வலம் என்ற பெயரில் சாலை மறியல் நடைபெற்றது. இவ்வாறான சாலை மறியலை அல்லாஹ் அல்குர்ஆன் 29:29வது வசனத்தின் மூலம் தடை செய்கின்றான். நபி(ஸல்) அவர்களும் ஆர்ப்பாட்டங்களை தடை செய்கின்றார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) அறிவித்தார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அன்சாரிகளான) எங்களிடம் எனக்குப் பிறகு (ஆட்சி யதிகாரத்தில் உங்களை விடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கிற சில வியங்களையும் பார்ப்பீர்கள் என்றார்கள். மக்கள் அப்போது நாங் கள் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், இறைத் தூதர் அவர்களே? என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், (ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர் களின் உரிமையை வழங்கி விடுங்கள். உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்றார்கள். புகாரி: 7052, அத்தியாயம்: 92, குழப்பங்கள் (சோதனைகள்)
அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் தடுத்த கண்டன ஊர்வலம் என்ற பெயரில் சாலைமறியல் வன்முறையாட்டம் நடத்தினர். அல்லாஹ்வின் உபதேசம் புறக்கணிக்கப்பட்டது. எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும். மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாகவே எழுப்புவோம் என்று கூறினான். (அல்குர் ஆன் 20:124)
நெருக்கடியும் வந்தது!
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த காவல் துறை தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தி முஸ்லிம் இளைஞர்களை நரவேட்டையாடியது. இவ்வாறான சூழ்நிலை ஏற்படக் காரணம். ஜும்ஆ ஃகுத்பாவை உணர்ச்சியைத் தூண்டும் ஃகுத்பாவாக-பிரசங்கமாக மாற்றிய முல்லாக்களே மூலகாரணம்! இத்தகைய புரோகிதர்களை புறக்கணித்து விட்டு முஸ்லிம்கள் அல்குர்ஆனோடும், நபி மொழிகளோடும் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்த அரும்பாடுபடுவோம். இந்நிலை ஏற்பட்டுவிட்டால் இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நிச்சயம் முடிவு கட்டிவிடுவான். அதன் பிறகு நமது இந்தியா ஓர் அமைதியான நாடாகவும், பொருளாதார வல்லரசாகவும் மாறிவிடுவதில் எத்தகைய சந்தே கமும் கிடையாது. இப்படிப்பட்ட இந்தியா உருவாக நாம் செய்ய வேண்டியது. நபிவழி யில் மட்டுமே நடந்து எல்லா விடயங்களிலும் பொறுமை காத்து இந்த புரோகிதர் களை முற்றாக புறக்கணித்து சுயமாக மார்க்கத்தைப் படித்து அதன்படி நடப்போம்! இம்மை மறுமை வெற்றி பெறுவோம்!