நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
ஜூலை தொடர்ச்சி….
“ஓரிறைத் தேட்டத்திற்க்கு முன்மாதிரியாக பாரசீகர்களைப் புகழ்ந்து பேசிய அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள்”
நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு “அல்ஜுமுஆ’ எனும் (62வது) அத்தியாயத்தில் “இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)’ எனும் (3வது வசனம் அருளப் பெற்றது. அப்போது, “அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல்ஃபாரிஸீ(ரழி) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சல்மான் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரம் குழுமத்தின் அருகில் இறை நம்பிக்கை இருந்தாலும் “சில மனிதர்கள்’ அல்லது “இவர்களில் ஒருவர் அதனை அடைந்தே தீருவார்’ என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரி 4897,4898)
“உலக நடைமுறையிலுள்ள சில பொது நியதியை பின்பற்றிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்”
(தன்னை நபி என்று வாதிட்ட) முஸல்லாமாவின் தூதுவர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது அவரிடம் நபியவர்கள் நீர் முஸல்லாமாவை இறைத்தூதர் என்று உறுதி மொழி கூறுகிறீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம்! என்று சொல்லிய போது “”தூதுவர்களாக வரக்கூடியவர்களைக் கொல்லக்கூடாது என்ற உலக வழக்கிலுள்ள நியதி மட்டும் இல்லை என்றால் நான் உமது கழுத்தை வெட்டியிருப்பேன் என்று கூறினார்கள். (ஹாகிம், பைககீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் 4:203)
இதனால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கை நடந்த நாளில் குறைஷ´யர் சார்பில் தம்மிடம் தூதுவர்களாக வந்தவர்கள் பலரை பொது நியதியின் அடிப்படையில் நல்ல முறையில் நடந்துகொண்டார்கள். (சீரத் இப்னு ஹிஷாம், அல்பிதாயா வந்நிஹாயா, தஃப் ஸீர் இப்னு கஸீர் 4:202,203)
“ஆடு மேய்ப்பவர்களிடம் பணிவும் அப்பாவித்தனமும் காணப்படும் என்று சொன்ன நபி(ஸல்) அவர்கள்”
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள்: பெருமையும், கர்வமும் கிராமவாசிகளான நாடோடிகளிடைய காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். (அபூஹுரைரா(ரழி), புகாரி : 3499,3301)
“சேவல்கள் கூவுகின்ற சப்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள் என்ற நபி(ஸல்) அவர்கள்”
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சப்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள். ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (எனவே தான் கூவுகின்றன) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேளுங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (எனவே தான் கத்துகிறது) (அபூ ஹுரைரா(ரழி) புகாரி: 3303)
“உயர அங்கிகள் அணியும் விசயத்தில் கிறிஸ்தவர்களைப் பாராட்டிப் பேசிய நபித் தோழர்கள்”
இப்னுஇஸ்ஹாக்(ரஹ்) அவர்கள் தமது வரலாற்று நூல் ஒன்றில் கூறியிருப்ப தாவது ஹிஜ்ரி ஒன்பதாவது ஆண்டு “”நஜ் ரான்” (யமன்) என்ற ஊரிலிருந்து அறுபது பேர் கொண்ட கிறிஸ்தவர்களின் குழு வொன்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களைச் சந்திக்க (மதீனாவிற்கு) வந்தார்கள் அதில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் முக்கியப் பிரமுகர்கள் பதினான்கு பேரும் அடங்கியிருந்தனர்.
நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுது கொண்டிருந்தபோது “”மஸ்ஜிதுந் நபவி” பள்ளிவாசலுக்குள் வந்த அவர்களின் சமயத் தலைவர்களின் ஆடைகளில் அழகான உயர மான அங்கிகள் மற்றும் மேல் துண்டுகளை அவர்கள் அணிந்திருந்தார்கள் அவர்கள் ஹாரிஸ் பின் கஅப் என்பவரின் பரம்பரையி னர் ஆவர். அவர்களைப் பார்த்த நபித் தோழர்கள் “”இவர்களைப் போன்ற எந்தக் குழுவினரையும் அதற்குப் பிறகு தாங்கள் கண்டதே இல்லை’ என்று கூறினார்கள். (சீரத் இப்னு ஹிஷாம் பாகம் 2, பக்கம் 162-170, தஃப்ஸீர் இப்னு கஸீர் 2:111-115)
“மார்க்கக் கல்வியைக் கேட்டதற்கு வெட்கப் படாதவர்களில் சிறந்தவர்கள் மதீனத்துப் பெண்கள் என்றார்கள்”
“பெண்களில் சிறந்தவர்கள் (மதீனத்துப் பெண்களான) அன்சாரிப் பெண்களே ஆவார்கள். (ஏனெனில்) மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கம் ஒருபோதும் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (புகாரி பாகம் 1, பக்கம் 135, பாடம் 50, மேலும் பார்க்க, ஹதீத் எண் 130, 227-229, 282, 306, 314, 315, 3328, 6121, 7352)
“ஒரு குர்ஆன் வசனத்திற்கான சரியான பொருளை இரு கிராமவசிகளிடமிருந்து விளங்கிக் கொண்ட இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள்”
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவனே) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன்; வானவர்களை இரண்டிரண்டு, மூம்மூன்று, நான்கு நான்கு இறக்கைகளைக் கொண்ட தூதர்களாக ஆக்கியவன் படைப்பில் தான் நாடுவதை அவன் அதிகப்படுத்துவான். நிச்சய மாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான் (35:1) எனும் வசனத்தில் வரும் “”ஃபாத்திருஸ் ஸமாவாத்தி வல்அர்ள்” என்பதன் பொருள் தெரியாமல் இருந்தேன்; ஒருமுறை இரண்டு கிராமவாசிகள் என்னிடம் வந்தார்கள்; அவர்கள் இருவரும் ஒரு கிணறு தொடர் பாக வழக்காடினர்.
அப்போது அவ்விருவரில் ஒருவர் மற்றவரிடம் “நானே இந்தக் கிணற்றை முதன்முதலாகத் தோண்டினேன் (“ஃபதர்த் துஹா’) என்றார்; இதைக் கேட்ட நான் “ஃபாத்திருஸ் ஸமாவாத்தி வல்அர்ள்” என்பதன் பொருளை விளங்கிக் கொண்டேன். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்(ரழி) தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்ஸீர் தபரீ, ஸுஅபுல் ஈமான், தஃப்ஸீர் இப்னு கஸீர் 7:531,532)
“ஃபாத்திர்” எனும் சொல் “ஃபத்தர” என்ற வினைச் சொல்லின் வினையாலணையும் பெயர் (ஹிலிற்ஐ புஆeஐமி) ஆகும். “ஃபத்தர” எனும் சொல்லுக்கு பிளத்தல், இலை துளிர்த்தல், மொட்டு விரிதல், வெடிப்பு உருவாக்குதல், முதலான பொருள்கள் அகராதியில் காணப்படுகின்றன. இங்கு “படைத்தல்’ என்று பொருள். அதிலும் ஒன்றை முன்மாதிரி ஏதுமின்றி ஆரம்பமாகப் படைப்பவனுக்கே “ஃபாத்திர்’ என்று பெயர் வைத்துள்ளனர். (தஃப்ஸீர் இப்னு கஸீர் 7:530)
அவர்களது மொழி வழக்கில் அருளப்பட்ட காரணத்தினால் மக்கத்து “”குறை´யரின் மொழி வழக்கிலேயே குர்ஆனைப் பதிவு செய்த உத்தம நபித்தோழர்கள்”
அனஸ் இப்னு மாலிக்(ரழி) அறிவித் தார்(மூன்றாவது கலீஃபா) உஸ்மான்(ரழி) நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா(ரழி) வசமிருந்த குர்ஆன் பதிவு களை வாங்கி வரச் செய்து), ஸைத் இப்னு ஸாபித், ஸயீத் இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரழி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர்களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியயடுக்கப் பணித் தார்கள். மேலும், உஸ்மான்(ரழி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித்(ரழி) அவர்களைத் தவிர இருந்த குறை´யரான மற்ற மூவரிடமும்), “நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஓர் அரபி மொழி (எழுத்திலக்கணம்) விஷயத்தில் கருத்து வேறுபட்டால், குறைஷ´யரின் மொழி வழக்கத்திலேயே அதைப் பதிவு செய்யுங்கள்! ஏனெனில், குர்ஆன் குறை´ யரின் மொழி வழக்கில்தான் அருளப் பெற்றது என்று கூறினார்கள். அம்மூவரும் அவ்வாறே செய்தனர். (புகாரி 4984,3506, 4907)
“ஒருவருடைய நற்செயல் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால் நீங்களும் செயல்படுங்கள்”
9:105, வசனம் குறித்து நபி(ஸல்)அவர் களின் துணைவியார் ஆயிஷா(ரழி) அவர் கள் கூறும்போது, ஒரு மனிதர் ஆற்றும் நற் செயல் உம்மைக் கவர்ந்து மகிழ்ச்சி அளித் தால் “நீங்கள் செயல்படுங்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறை நம்பிக்கையா ளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள்” என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள். (புகாரி : பாகம் 7, பக்கம் 896, பாடம் 46, ஹதீத் 7530, துக்கு முன்னருள்ள பதிவு, தஃப்ஸீர் இப்னு கஸீர் 4:392)
“அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு உதவிய””இப்னு தஃம்னா”வை முன்மாதிரியாகப் பதிவு செய்த இமாம் புகாரி(ரஹ்) அவர்கள்”
ஆயிஷா(ரழி) அறிவித்தார்: எனது பெற்றோர்களான(அபூ பக்கரும், உம்மு ரூமானும்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தை கடைப்பிடிப்ப வர்களாகவே இருந்தனர். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும், மாலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தராமல் எங்களின் எந்தவொரு நாளும் கழிந்ததில்லை. (மக்கா நகரில் வாழ்ந்த) முஸ்லிம்கள் (இணை வைப்பவர்களால் பல்வேறு துன்பங்கள்) சோதனை களுக்கு உள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்கர் (ரழி) அவர்கள் அபிசீனிய நாட்டை நோக்கி, நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள்.
அவர்கள் (யமன் செல்லும் வழியில்) “பர்குல் கிமாத்’ என்னும் இடத்தை அடைந் தபோது “இப்னு தஃம்னா’ என்பவர் அவர் களைச் சந்தித்தார். அவர் “அல்காரா’ எனும் (பிரபல) குலத்தின் தலைவராவார். அவர் “அபூபக்கரே எங்கே செல்கிறீர்?’ என்று கேட் டார். “என் சமுதாயத்தினர் என்னை (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்குத் தள்ளிவிட்டனர். எனவே, நான் பூமியில் பரவலாகப் பயணம் செய்து (நிம்மதியாக) என் இறைவனை வணங்கப் போகிறேன்’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
அப்போது இப்னு தஃம்னா, “அபூ பக்கரே! தங்களைப் போன்றவர்கள் (தாமா கவும்) வெளியேறக் கூடாது. (பிறரால்) வெளியேற்றப்படவும் கூடாது. (ஏனெனில்) நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். இரத்த பந்த உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள், சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள் என்று (அவர்களின் அறச்சேவைகளைப் புகழ்ந்து) கூறிவிட்டு, “தங்களுக்கு நான் அடைக்கலம் தருகிறேன்.
நீங்கள் (மக்காவிற்கே) திரும்பிச் சென்று உங்களின் (அந்த) ஊரிலேயே உங்க ளுடைய இறைவனை வணங்குங்கள்’ என்று கூறினார். அபூ பக்கர் (அபிசீனிய பயணத்தை ரத்துச் செய்துவிட்டு மக்காவிற்குத்) திரும்பி னார்கள். அவர்களுடன் இப்னு தஃம்னாவும் பயணமா(கித் திரும்பி)னார். மாலையில் இப்னு தஃம்னா குறைஷ´க் – குல பிரமுகர்களைப் போய்ச் சந்தித்து அவர்களிடம் (நாட்டு மக்களுக்காகப் பாடுபடும்) அபூபக் கரைப் போன்றவர்கள் (நாட்டிலிருந்து தாமாக) வெளியேறுவதோ, (பிறரால்) வெளியேற்றப்படுவதோ கூடாது.
ஏழைகளுக்காக உழைக்கும், உறவுக ளைப் பேணி வாழும், (சிரமப்படுவோரின்) பாரம் சுமந்து வரும், விருந்தினர்களை உப சரித்து வரும், சத்திய சோதனைகளில் (ஆட் படுத்தப்பட்டோருக்கு) உதவி வரும் ஒரு (ஒப்பற்ற) மனிதரையா (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்கு உள்ளாக் குகிறீர்கள்? என்று கேட்டார். (அபூ பக்ர் (ரழி) அவர்களுக்கு தாம் அடைக்கலம் தரப் போவதாகக் கோரிய) இப்னு தஃம்னாவின் அடைக்கலத்தை குறை´கள் மறுக்கவில்லை.
அவர்கள் இப்னு தஃம்னாவை நோக்கி, “அபூபக்கர், தம் இல்லத்திற்குள்ளேயே தம் இறைவனை வணங்கவோ, தொழுகவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும், ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ, இவற்றை பகிரங்க மாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (புதிய மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார் களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறிவிடுங்கள் என்று கூறினார் கள். (புகாரி 3905, 2297,476)
அவர்கள் எத்தகையோரென்றால் (உபதேசிக்கப்படும்) சொல்லை செவியுறுவார்கள். பின்னர், அதில் மிக அழகானதைப் பின்பற்றுவார்கள்; அவர்கள் எத்தகையோ ரென்றால், அல்லாஹ் அவர்களை(யே தேர்ந்தெடுத்து) நேர்வழியில் செலுத்தி விட்டான்; இன்னும் அவர்கள் தான் அறிவுடையோர் ஆவர். (39:18) இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது, ஒருவர் மக்களுடன் அமர்ந்திருக்கும்போது அவர்களின் உரையாடல்கள் அவரது காதில் விழுகின்றன. அவற்றில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. ஆனாலும் அவர் தாம் செவியுற்ற நல்லதை மட்டுமே பிறரிடம் கூறுகின்றார்; மற்றதைத் தவிர்த்து விடுகின்றார். இதையே இவ்வசனம் குறிக்கிறது. (தஃப்ஸீர் அல்பஹ்ருல் முஹீத், இப்னு கஸீர் 7:897-899)
நாம் மூஸாவுக்காக ஒவ்வொரு வி யம் குறித்தும் பலகைகளில் எழுதினோம் அது அறிவுரையாகவும், ஒவ்வொன்றுக்கும் விளக்கமாகவும் அமைந்தது. “எனவே அவற்றைப் பலமாகப் பற்றிக் கொள்வீராக! அவற்றிலுள்ள சிறந்த (நல்ல) கருத்துக்களை எடுத் துக் கொள்ளுமாறு உம்முடைய சமுதாயத் தாருக்குக் கட்டளையிடுவீராக! (என்று மூஸாவிடம் கூறினோம். (7:145)
எவர்(ஒருவர் ஒரு) நல்லவற்றை (அது எவரிடத்தில் இருந்தாலும் அவை நல்லவை தானென்று) உண்மைப்படுத்துகின்றாரோ அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம். (92:5-7)
எனவே முஃமின்களே! நியாயத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியா(ளர்களா)க இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு(ஒரு நல்லவற் றுக்கு) அது நல்லதுதான் என்று சாட்சி கூறி நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம், நீதி செய்யுங்கள். இதுவே (தக்வா எனும்) பயபக்திக்கு மிக்க நெருக்க மானதாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை (யயல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின் றான். (5:8)
அன்றியும் உண்மையைக் கொண்டு வந்தவரும் அவ்வுண்çமை ஏற்(று உறுதிப் படுத்து)பவர்களும் (ஆகிய) இவர்கள் தான் பயபக்தியுடையவர்கள் ஆவார்கள். அவர் களுக்கு அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கிறது. இதுவே நன்மை செய்து கொண்டிருந் தோருக்குரிய நற்கூலியாகும். (39:34)
நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!