ஆலிம் என்று சொல்பவர் காதில் ஊதும் சங்கு!
அபூ உஸ்மான்,
ஆலிம் என்றால் யார்? இந்தக் கேள்விக்கு பதில் குர்ஆனில் பார்த்தால்,
“அல்லாஹ்வுக்கு யார் அதிகம் அஞ்சு கிறார்களோ, அவர்கள்தான் உலமாக்கள்” என்ற கருத்துப்பட, அல்லாஹ் பல இடங்களில் சொல்லிக் காட்டியுள்ளான். ஆனால், இன்றைய மக்கள் மத்தியில் யார் ஆலிம்? என்று கேட்டால், வெள்ளை சட்டை, வெள்ளைக் கைலி, தாடி, தொப்பி, கையில் பாசி மணி போன்ற கெட்அப்பில் வருப வரும், பள்ளிவாசலில் ஐந்து வேளை தொழ வைப்பவரும், ஃபாத்திஹா ஓதி, மெளலூது ஓதி, இறந்துவிட்டவருக்கு தல்கீன் ஓதி, தன்னுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்பவரும் தான் ஆலிம். அவர் ஏதாவது ஒரு அரபி கல்லூரி என்று சொல்லக்கூடிய “புரோகிதர்கள் வளரும் மையங்களில்’ 7 வருடமோ, 5 வருடமோ, 4 வருடமோ படித்திருக்க வேண்டும்; மன்னிக்கவும் தங்கி இருக்க வேண்டும். இப்படி, அங்கே தங்கி இருந்து, மார்க்கம் என்ற பெயரில், இஸ்லாம் மார்க்கம் சொல்லாதவைகளை படிப்பதும், முன்னோர்கள் எழுதி வைத்த கற்பனைகளைப் படிப்பதும், அதன்படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ப வரும்தான் ஆலிம் என்றும் இப்போது அறி யப்படுகிறார்கள். இந்த ஆலிம் என்று சொல் லக்கூடியவர்கள், தங்களுக்கு வசதியாக ஊரை நாலாக்கி, ஆளுக்கொரு பள்ளிவாசல் கட்டிக் கொண்டு, 4 பள்ளிவாசல்களிலும், தங்கள் யூகங்களையும், கற்பனைகளையும், பயான்களாகச் சொல்லி, மக்களை வழி கேட்டின் பக்கம் இட்டுச் செல்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
மேலும், தங்களுக்குக் கீழ் உள்ள மக்களை தங்கள் கொள்கைதான் சிறந்தது என்று நம்பவும் வைத்து விடுகிறார்கள். இப்படி நம்பிய மக்கள், தங்கள் தலைவர்கள் என்று ஆலிம்களில் யாரை நம்புகிறார்களோ அவர்களுக்கு நல்ல மரியாதையை யும், கண்ணியத்தையும் கொடுத்து, சாதாரண மக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டிவிடுகிறார்கள். இதன் காரணத்தினால், பள்ளிவாசல் இமாமும் சரி, தலைவர்கள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தொண்டைத் தொழிலாக்கிய வர்களும் சரி, தனக்கென்று ஒரு இமேஜை ஏற்படுத்திக் கொண்டு “ராஜ வாழ்க்கை” வாழ்வதை இந்த உலகத்தில் பார்க்கிறோம்.
உண்மையில் இந்த பள்ளிவாசல் இமாம்கள் எப்படி இருக்க வேண்டும்? ஆனால், எப்படி இருக்கிறார்கள்? என்ற வேதனையின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை.
அல்லாஹுதஆலாவால், நல்லடியார் என்று சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட இப்ராஹீம்(அலை) அவர்களைப் பார்த்து அல்லாஹ் சொல்கிறான்.
“நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்குகிறேன்” என்று அல்லாஹ் கூறினான். அல்குர்ஆன் 2:124
அல்லாஹ்தஆலா இப்ராஹீம்(அலை) அவர்களை இமாமாக ஆக்கிவிட்டு, அப்படியே விட்டுவிடவில்லை. மாறாக இப்ராஹீம்(அலை) அவர்களைப் பற்றி, இந்த உலக மக்களுக்கும் தெரியப்படுத்துகிறான்.
“நிச்சயமாக நாம் அவரை தேர்ந்தெடுத்தோம்”
“நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார்களின்! கூட்டத்தில் இருப்பார்” அல்குர்ஆன் 2:130
மேலும், அல்லாஹ் அவரிடத்தில் “கட்டுப்படு’ என்று சொன்னபோது அகிலங்கள் அனைத்தையும் பராமரிக்கின்ற அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டேன்” என்று கூறினார். அல்குர்ஆன் 2:131
இதையே இப்ராஹீம்(அலை) தம் குமாரர்களுக்கு போதனை செய்தார்; யஃகூபும் இவ்வாறே செய்தார்.
“என் குமாரர்களே! அல்லாஹ் உங்க ளுக்குச் சன்மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்”. அல்குர்ஆன் 2:132
மேலே, அல்லாஹ் சுப்ஹானவத ஆலா இப்ராஹீம்(அலை) பற்றி, உலக மக்களுக்கு தெளிவாக உண்மையை உடைக்கிறான். மக்களுக்கு இமாமாக இருப்பவர், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டு, குர்ஆனிய கருத்துக்களை தன் வாழ்நாளில் ஏற்று, தான் ஏற்றுக் கொண்ட குர்ஆனிய கொள்கைகளை தன் நடைமுறையில் காண்பித்து, உலக மக்களை, இந்த குர்ஆனின் பக்கம் அழைக்க வேண்டும். இதுதான் அல்லாஹ் வலியுறுத்தும் மேற்சொன்ன ஆயத்துக்களில் இமாம்களின் தகுதிகள் என்பது விளங்குகிறது. அல்லாஹ் வின் நல்லடியாராக இருக்க வேண்டும் என்றால் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பரி பூரணமாகப் பின்பற்றக் கடமைப்பட்டவர்கள்; மேலும், தமது சந்ததிகளுக்கும் இஸ் லாத்தின் கொள்கைகளைச் சொல்லிக் கொடுத்து, தான் ஒரு “முஸ்லிமாக’ இந்த உல கத்தில் வாழ்ந்து, “முஸ்லிமாகவே’ மரணிக் கக் கடமைப்பட்டவர்கள், இன்று எந்தக் கதியில் இருக்கிறார்கள்? சிந்தித்துப் பார்த் தாலே வயிறு எரிகிறது! இந்த அழகான இஸ் லாமிய மார்க்கம், இஸ்லாமிய புரோகித முல்லாக்களால் மதமாக்கப்பட்டு இருக்கிறதே என்ற கவலை பிறக்கிறது. ஆனாலும், அல்லாஹ்வின் மார்க்கம் பற்றிய வாக்கு நமது கவலையைப் போக்குகிறது’.
“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட நாடுகின்றனர். ஆனால் நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்’. அல்குர்ஆன் 61:8
இந்த இறைவாக்கு, இந்தப் புரோகித முல்லாக்கள் என்னதான் புளுகு மூட்டைகளை கட்டவிழ்த்து விட்டு மக்கள் மத்தியில் உலவவிட்டாலும் மார்க்கத்திற்காக தன் னையே அர்ப்பணிக்கின்ற ஒரு கூட்டத் தாரைக் கொண்டு வந்து, இந்த இஸ்லாமிய மார்க்கத்தைப் பரிபூரணமாக்கியே தீருவான். அல்லாஹ் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியால் நமது உள்ளம் ஆறுதல் அடைகிறது. சரி, பள்ளிவாசல்களில் இமாம்களாக, வேலை செய்கிறார்களே! அவர்களுடைய உண்மையான கடமை என்ன தெரியுமா?
இந்த உலகத்தில் ஏதாவது ஒரு பள்ளி யில் இமாமாக இருக்கக் கூடிய ஒருவருக்கு, அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக் கும் குர்ஆனை முழுமையாக படிக்கச் சொல்லி, அதன்படி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதுதான் இமாம்களின் முதல் கடமை. மேலும், இவர் முதலில் குர்ஆனை முழுமையாகப் படித்து, அதன் பொருள் உணர்ந்து, ஏவலை ஏற்றுக் கொண்டு, விலக்கலை தவிர்த்துக் கொண்டு வாழ வேண்டும்.
உதாரணமாக, ஓர் ஊரில் 500 பேர் வாழ்கின்ற ஏரியாவுக்கு ஒருவர் பள்ளிவாசல் இமாமாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த 500 பேருக் கும் குர்ஆனை கட்டாயமாக அவர்களைப் படிக்கச் சொல்லி, அதன்படி நடப்பதற்கு தினமோ, அல்லது வாராவாரமோ ஏவிக் கொண்டே இருக்க வேண்டும். ஊரில் நடக் கின்ற, குர்ஆனுக்கு மாற்றமான செயல் களைக் கண்டித்துக் கொண்டும், அதை களைவதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். மேலும், நபி(ஸல்) அவர் களின் வாழ்க்கை வழிமுறைகளை மக்கள் தெரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். முஸ்லிம் பெயரில் உள்ள எல் லோரும் “முஸ்லிம்’ என்ற ஜமாஅத்தாகவே இருக்க வேண்டும். அந்த ஊரில் நடக்கின்ற சுக துக்கங்களில் கலந்து கொண்டு, மாற்று மதத்தினருக்கும் இஸ்லாமியக் கொள்கை களைப் பரப்ப வேண்டும். இவருக்குத் துணையாக, அந்த ஊரில் உள்ள மக்களை வேலைக்குப் போவதற்கு முன்பாகவோ, அல்லது வேலை முடிந்து வீடு திரும்பியவு டனோ பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இமாமாக இருப்பவர்தான் அந்த ஊர் தலை வராகவும் இருக்க வேண்டும். தலைவராக இருந்து மக்களுக்கு குர்ஆனை சரியாகப் போதிக்க வேண்டும்.
ஆனால், பரிதாபம்! இன்று கைகட்டி, வாய்ப்பொத்தி, கூனிக்குறுகி, சம்பளம் வாங்கிக்கொண்டு தன் வாழ்வு நன்றாய் இருந்தால் போதும் என நினைக்கும் இமாம் களைத்தான் நம்மூரிலும், உலகத்தின் பெரும்பாலான இடங்களிலும் காண முடிகிறது. காரணம், குர்ஆனிய கருத்துக்களைச் சொன்னால், தலைவர் கோபித்துக் கொள் வார் என்ற அச்சம்! வட்டி வாங்கக் கூடாது என்று பேசினால், வட்டி வாங்கக்கூடிய தலைவர் கோபித்துக் கொள்வார்; தாடி வைக்க வேண்டும் என்று பேசினால், தலைவர் ஷேவிங் பண்ணி இருப்பதால், “”என்னய்யா! தாடி கீடின்று பேசற”… தொழுவுங்க நோன்பு வைய்யுங்கள், ஜகாத் கொடுங்க, ஹஜ் செய்யிங்கன்னு என்று மட்டும் பேசினா போதும், உன்னைய யார்யா? நன்மையை ஏவீ, தீமையை தடுக் கச் சொன்னது. எங்களுக்குத் தெரியாதா? என்று ஏளனமாகப் பேசும் குடி மக்களின் தலைவர்கள் இன்று பள்ளிவாசல்களை நிர் வகிக்கும் தலைவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்தத் தலைவர்களுக்கு பயந்து கொண்டு உண்மையைச் சொல்ல மறுக்கும் இமாம்கள் ஒருபுறம்; மற்றொரு வகையினர், தாம் ஓதிப்படித்த கல்லூரியில் சொல்லிக் கொடுத்த கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் பரப்பி, தலைவருக்கும் சொல்லி, இஸ்லாத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லும் அள வுக்கு இவர்களுடைய கொள்கைகள் ஒரு புறமும், இப்படி தங்கள் பணிகளை செவ்வனே செய்யாததால் “இஸ்லாமியப் பிரச்சாரப்பணி” முடங்கிப் போய், “”புரோகிதர்கள் எழுச்சி” அதிகம் ஏற்படு வதைக் கண்கூடாகக் காண்கிறோம். ஹதீ தில் நபி(ஸல்) அவர்கள் ஒரு நபி தோழரை இமாமாக ஏற்படுத்தி அறிவுரை கூறுகிறார் கள் பாருங்கள்!
உஸ்மான் இப்னு அபில்ஆஸ் கூறினார் கள்: அல்லாஹ்வின் தூதரே! என்னை எனது சமுதாயத்துக்கு இமாமாக ஆக்குவீர்களாக! என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட் டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள்! “”நீ அவர்களுக்கு இமாமாக இருந்து கொள். அவர்களில் பலவீனமானவர்களைக் கவனத்தில் கொள். நீ, பாங்கு சொல்வதற்கு கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்” என்று கூறினார்கள். நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ.
மேலே படித்த ஹதீதில், கூலி வாங் காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்ளச் சொல்லி நபி(ஸல்) அவர்கள் உஸ்மான் இப்னு அபில்ஆஸ்(ரழி) அவர்களை இமா மாக ஆக்கி, சமுதாயத்தின் கடமைகளை உணர்த்தும் வகையில், அவர்களில் பலவீன மானவர்களைக் கவனத்தில் கொள் என்று சொன்னார்கள். இந்த வார்த்தைக்கு மெத்தப்படித்த மேதாவிகள் தொழுகையில் சூராவை குறைவாக ஓதவேண்டும் என்று விளக்கம் அளிப்பார்கள். ஆனால், எதார்த் தத்தில் பலவீனமானவர்கள் என்பது அந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டாலும், இமாம் களாக இருப்பவர்கள் அவ்வூரின் பொறுப்பு தாரி என்று சூசகமாகவும், “நீ முஅத்தினை ஏற்படுத்திக் கொள்” என்று சொல்வதின் மூலம், சகல விசயங்களில் முடிவெடுக்கும் தகுதியை இமாமிடம் விட்டுவிடுகிறார்கள்.
அந்த இமாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்றால், குர்ஆனுக்கும், நபி வழிக்கும் கட்டுப்ப(ட்ட இமாமுக்கு மட் டும்தான் பொருந்தும்)டவேண்டும். ஆனால், இன்றைய நாட்களில், “குர்ஆனே யாருக் கும் புரியாது”; தனக்கு மட்டும்தான் புரியும் என்று சொல்வதின் மூலமும், முத்தஷா பிஹாத் ஆயத்துகளின் இறுதி முடிவு அல் லாஹ்வுக்கு மட்டும் தெரியும் என்பதற்குப் பதிலாக, ஆலிமுக்கும் தெரியும் என்று மொழி பெயர்ப்பதின் மூலமும் “தலைக் கனம்’ பிடித்தவர்கள்தான் இந்த இமாம்கள் என்று தன்னைக் கூறிக் கொள்பவர்கள் அதி கமாகி விட்டார்கள். மேலும், “”நாங்கள் தான் நபிமார்களின் வாரிசுகள்” “நாங்கள் தான் இஸ்லாமிய மார்க்கத்தைப் பிரச் சாரம்” செய்கிறோம் என்று தங்களைத் தாங் களே (கூறிக்கொள்ளும்) ஆலிம் என்று (தங்களைக்) கூறிக்கொள்பவர்களே! நீங்கள் உண்மையில் நபிமார்களின் வாரிசாக இருந்தால்,
- மார்க்கப் பணிக்கு கூலி வாங்காதீர்கள்.
2. ஏகத்துவத்தை உங்கள் உயிர் மூச்சாகக் கொள்ளுங்கள்.
3. இமாமத் செய்வதற்கு கூலி வாங்காதீர்கள்.
4. மார்க்கத்தில் இல்லாத சாஸ்திர சம்பிர தாயங்களை மார்க்கத்தில் நுழைக்காதீர்கள்.
5. இதுவரை நீங்கள் செய்த தவறுகளைப் பொதுமக்களிடம் சுட்டிக்காட்டி திருந்திக் கொள்ளுங்கள்.
6. குர்ஆனின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
7. உங்கள் கருத்துக்களை குப்பையில் போடுங்கள்.
8. நபி(ஸல்) அவர்களும், அவரது தோழர்களும் இந்த மார்க்கத்தை எட்ட வைக்க எப்படிப் பாடுபட்டார்களோ அப்படி உண்மையாக உழைக்க முன் வாருங்கள்.
9. தன்னலம் கருதாமல், மார்க்கப் பணிக்காக முழுவதும் அர்ப்பணிக்க முன் வாருங்கள்.
10. குர்ஆனும், நபிவழி மட்டும் தான் இஸ்லாம் என்ற உண்மையை அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துக் கொள்ளுங்கள்.
11. ஒருவர் மற்றவரை காஃபிராக்கும் மடமையை கொளுத்துங்கள்.
12. முன்னோர்கள் சொன்னதுதான் மார்க்கம் என்ற கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் சொல்லி, மக்களை வஞ்சிக்காதீர்கள்; கட்டுக்கதையாய் இருக்கும் தஃப்ஸீர்களை கொளுத்திவிடுங்கள்.
13. மார்க்கத்தில் உங்கள் சொந்த யூகங்களைச் சொல்லவே சொல்லாதீர்கள்.
14. மறுமைக்காக மட்டுமே வாழுங்கள்.
15. உலகத்தை விளைநிலமாக ஆக்கி, மறுமை வெற்றியை அதில் பயிரிடுங்கள்.
16. வெள்ளிக்கிழமை பயான் பேசும் போது குர்ஆனையும், நபிவழியையும் மட்டுமே பேசுங்கள்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாற்றமாக நடந்து கொண்டு, உங்களை ஆலிம்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற அல்லாஹ்வின் அடியார்களே! சிந்தித்துப் பாருங்கள். இந்த சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? கொஞ்சம் கவலைப்படுங்கள். உண்மையான குர்ஆனும், நபிவழியும் உங்கள் மூலமாகத்தான் பரவ வேண்டும் என்ற உங்கள் கூற்று பொய்யானது. அதற்கு மாறாக, மக்கள் அனைவருக்கும் புரியும் விதத்தில்தான் குர்ஆனை அல்லாஹ் இறக்கியுள்ளான் என்ற உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள். இமாமாக நீங்கள் இருந்து கொள்ளுங்கள் பரவாயில்லை. ஆனால், அல்லாஹ்வும், அவனது தூதரும் உங்களிடம் இருந்து எதை எதிர் பார்க்கிறார்களோ அதை செய்துவிட்டு, நாங்கள்தான் நபிமார்களின் வாரிசு; நபிமார்கள் காசுக்கோ, பணத்துக்கோ வாரிசாகவில்லை என்ற ஹதீதை பாதியை மட்டும் சொல்லிவிட்டு மீதியை விட்டு விடாதீர்கள். இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்குமானால், இதை உங் கள் காதுகளில் ஊதியதற்கு மறுமையில் நீங் களே சாட்சியாய் இருங்கள்.
“நிச்சயமாக இந்த குர்ஆனை நன்கு நினைவுபடுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டோ?”
அல்குர்ஆன் 54:17