பாவமும் மன்னிப்புத் தேடுதலும்.
எம். சையத் முபாரக்
(மனிதனுடைய) மனம் பாவம் (பாவங் கள்) செய்யும்படி அதிகம் தூண்டக்கூடிய தாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் 12:53)
நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக் கொண் டிருப்பதாலும் நாம் ஒவ்வொரு நாளும் இர விலும், பகலிலும் அதிகமானப் பாவங் களைச் செய்து கொண்டிருக்கிறோம். பாவங்களைப் பாவங்கள் என்று தெரிந்தும், தெரியாமலும், அலட்சியமாகவும் செய்து கொண்டிருக்கிறோம். இறை மறுப்பாளர் களும் பல கடவுள்களை வணங்கிக் கொண் டிருப்பவர்களும் பாவங்கள் செய்து கொண் டிருப்பது பற்றி நாம் அதிகம் அக்கறைக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், அல் லாஹ்வை மட்டுமே நம்பி வணங்கிக் கொண்டிருக்கும் நாம் சர்வ சாதாரணமா கப் பாவங்களை செய்து கொண்டும்; இதற் காக, இம்மையிலும், மறுமையிலும் அல் லாஹ்விடம் தண்டனைப் பெற வேண்டியி ருக்குமே என்பதையும் சிறிது கூட எண்ணா மல் இருக்கிறோம்.
பாவங்களைச் செய்துவிட்டு நாம் அலட் சியமாக இருப்பதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன.
முதல் காரணம் :
தீமையானக் காரியங்கள் அழகாகவும், இன்பமாகவும் நமக்குத் தெரிவதால் பாவங் களை விரும்பிச் செய்வது.
ஷைத்தான் அவர்களுக்கு அவர்களு டைய (தீய)ச் செயல்களை அழகாக்கிக் காண்பித்தான். (அல்குர்ஆன் 16:63)
பாவங்கள் அழகாக, இன்பமாக, பெரு மையாகத் தெரிந்தாலும், ஷைத்தான் ஏவும் அவையாவும் மானக்கேடானதாகவும், தீமையாகவும், இழிவாகவும் நமக்கு இம்மை மறுமையில் வேதனைத் தரத்தக்க தாகவுமே இருக்கும். பாவம் செய்யும்போது அது நமக்கு சுகமாகத் தெரிந்தாலும், பிறகு அது துன்பத்தையே தரும். அதைக் கீழேக் கண்ட வசனங்கள் மூலம் அறியலாம்.
தீமையைச் சம்பாதித்தார்களே அத்தகையோர் (அவர்கள் செய்த) தீமைக் குரிய கூலி அதைப் போன்றதாகும்; அவர் களை இழிவும் சூழ்ந்து கொள்ளும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து அவர் களைப் பாதுகாப்பவர் (எவரும்) இல்லை. இருண்ட இருளையுடைய இரவின் ஒரு பாகத்தால் அவர்களுடைய முகங்களை மூடப்பட்டது போன்று (காணப்படும்) அவர்கள் நரகவாசிகள், அதில் அவர்கள் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள். (அல்குர்ஆன் 10:27)
அவர்களை நாம் நிச்சயமாகச் சுகமனுப விக்கச் செய்வோம். பின்னர் நம்மிடமி ருந்து துன்புறுத்தும் வேதனை அவர்களை வந்தடையும். (அல்குர்ஆன் 11:48)
எவர் அநியாயம் செய்கிறாரோ அவரை நாம் வேதனைச் செய்வோம். பின்னர், அவர் தன் இரட்சகனிடம் திருப்பப்படு வார். அப்போது அவரை அவன் மிகக் கடு மையாக வேதனை செய்வான். (அல்குர்ஆன் 18:87)
அவர்களுடைய செயல்களைச் ஷைத் தான் அவர்களுக்கு அலங்கரித்துக் காண்பித் தான். ஆகவே, அவர்கள் நல்லறிவுடை யோர்களாக இருந்தும் (நேர்) வழியை விட் டும் அவர்களை அவன் தடுத்துவிட்டான். (அல்குர்ஆன் 29:38)
இரண்டாவது காரணம் :
சிறியப் பாவங்களைத் தானே நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைப்பது, சிறியப் பாவங்கள் தானே என்று மீண்டும் மீண்டும் அதைச் செய்து கொண்டிருப்பது நம்மை நரகம் எனும் படு குழியில் தள்ளிவிடும்.
சில பாவங்களை மிகவும் அற்பமாக முடியைவிட சிறியதாக நாம் நினைக்கி றோம். ஆனால், நபி(ஸல்) அவர்கள் காலத் தில் சிறிய பாவங்களைக் கூட நாங்கள் பெரிய பாவங்களாகக் கருதினோம் என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
அப்படியிருக்க, நாம் சிறிய பாவங்கள் தானே என்று அலட்சியமாகச் செய்து கொண்டிருக்கிறோமா?
எவர் பாவத்தைச் சம்பாதிக்கிறாரோ அவர் அதனைச் சம்பாதிப்பதெல்லாம் நிச்சயமாக தனக்குக் கேடாகவே முடியும். (4:111)
யார் தங்கள் மார்க்கத்தை விளையாட் டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத் துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை (மயக்கி) ஏமாற்றிவிட் டதோ அவர்களை விட்டுவிடும். எனினும், அவர்களுக்கு ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்த(தீய) செயல்களின் காரணமாக ஆபத் தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவிற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையை யும் கொடுத்தாலும் அது அவர்களிடமி ருந்து ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. இவர்கள் தாங்கள் செய்த(தீய) செய்கை களாலேயே தங்களை நாசமாக்கிக் கொண் டார்கள். இவர்கள் நிராகரித்துக் கொண்டி ருந்ததன் காரணமாக இவர்களுக்குக் கொதிக்கும் நீரும், துன்புறுத்தும் வேதனை யும் உண்டு. (அல்குர்ஆன் 6:70)
மூன்றாவது காரணம் :
பெரிய பாவங்களையயல்லாம் சிறிய பாவங்களே என்று எண்ணுவது.
விபச்சாரம், வட்டி வாங்குதல், பொய்ச் சாட்சி போன்ற பாவங்களையயல்லாம் செய்துவிட்டு இவைகளையயல்லாம் துச்ச மாக மதித்து இப்படிப்பட்ட பாவங்கள் செய்வதனால் பரவாயில்லை; அல்லாஹ் தண்டனை பிடிக்கமாட்டான் என நினைத்து நாம் இப்பாவங்களைத் தயங்காது செய்து கொண்டிருக்கிறோம். இணை வைக்கும் பாவத்தை மட்டும் செய்யாமல் இவைகளை யயல்லாம் செய்யலாம்; குற்றமில்லை என் றும் நினைக்கிறோம். ஆனால், மேற்கண்ட பாவங்கள் இணை வைக்கும் பாவத்திற்கு அடுத்த பெரிய பாவங்கள் ஆகும். அவைகள் நம்மை நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்து விடும்.
அர்ரஹ்மானுடைய அடியார்கள் எத்தகை யோரெனில், அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் தடுத்திருக்கும் எந்த உயிரையும் அவர்கள் உரிமையின்றி கொலைச் செய்யமாட்டார் கள். அவர்கள் விபச்சாரமும் செய்யமாட் டார்கள். எவரேனும் இவைகளைச் செய்ய முற்பட்டால் அவர் (அதற்குரியத்) தண்ட னையைச் சந்திப்பார். (அல்குர்ஆன் 25:68)
பெரிய பாவங்கள் எவை என்று சொல்லவா?
அல்லாஹ்விற்கு யாரையாவது இணை யாக்குவது, பெற்றோர்களைக் கொடுமைப் படுத்துவது, நியாயமின்றி ஒருவரைக் கொலை செய்வது என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லி விட்டு பின் சிறிது நேரம் சாய்ந்து நின்று, மீண்டும் நிமிர்ந்து பொய் சொல்வதும்; பொய்ச்சாட்சி கூறுவதும் என்றார்கள். இதை நபி(ஸல்) அவர்கள் திரும்பத் திரும் பச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நாங்கள் (சஹாபாக்கள்) அவர்கள் சொல் வதை நிறுத்திவிட்டால் போதும் என்று நினைக்கும்வரை. (புகாரி : 2653)
நான்காவது காரணம் :
பாவங்களைச் செய்துவிட்டு இவை களையயல்லாம் பாவங்களே அல்ல என்று அலட்சியத்துடன் இருப்பது.
பொய் சொல்வது, பத்தினிப் பெண் களை அவதூறு கூறுதல், சபித்தல் போன்ற பாவங்களையயல்லாம் செய்துவிட்டு, அதிக மாகச் செய்து கொண்டிருக்கிறோம். இரு பெண்களுக்கிடையில் காரணமே இல்லாமல் சண்டை வந்தால் கூட இந்தப் பிள்ளைகளையயல்லாம் புருனை அல்லா மல் வேறு யாருக்கோ பெற்றிருக்கிறாய் என்றும், நீ திருமணத்திற்கு முன்பே மற்ற வனுடன் படுத்துவிட்டு கர்ப்பத்தைக் கலைத்திருக்கிறாய் என்றும் மற்றவர்கள் காதைக் கூசச் செய்கின்ற, பேசத் தகாத வார்த்தைகளை சர்வசாதாரணமாக சிறிது கூட யோசிக்காமல் .பேசி விடுகிறார்கள்.
நிச்சயமாக, கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறு கிறார்களே அத்தகையோர் இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப் பட்டுள்ளனர். மேலும், (மறுமையில்) அவர் களுக்கு மகத்தான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 24:23)
பெண்களே! தர்மம் செய்யுங்கள், ஏனெ னில், நரகவாசிகளில் உங்களையே மிக அதிகமாக நான் கண்டேன் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்ட பெண்கள் அல்லாஹ்வின் தூதரே(ஸல்)! ஏன் அப்படி? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். சாபத்தை அதிகமாக்குகிறீர்கள். கணவனுக்கு மாறு செய்கிறீர்கள். (புகாரி: 29, முஸ்லிம்)
இப்படி அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும் சொல்லிக்கூட நமது பெண்கள் அவதூறு, சபிப்பது பற்றி சிறிது கூட கவலைப்படாமல் மிக அதிகமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள், அழிவை உண்டாக்கும் ஏழு வியங்களைத் தவிர்த்து கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவை: அல்லாஹ்விற்கு இணை வைப்பது, சூனியம் செய்வது, அல்லாஹ் தடுத்த உயிரை உரிமையின்றி கொலை செய்வது, வட்டியை உண்ணுதல், அனாதைகளின் சொத்தை விழுங்குதல், போர் மூண்டு நிற் கும் நாளில் (புறமுதுகு காட்டி) திரும்பி விடுதல், விசுவாசிகளான (கெட்டவைகளை விட்டும் விலகியிருக்கும்) பத்தினிப் பெண்களை அவதூறு பேசுதல் ஆகியவைகளாகும். (புகாரி: 2766, முஸ்லிம் 145)
ஒருவரையயாருவர் நிந்திப்பதால் அல் லது குற்றம் பிடிப்பதால் ஏற்படும் பாவம் யார் அந்தச் செயல்களை முதலில் ஆரம்பித் தாரோ அவரையேச் சாரும். (முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருக் கும் போது என் தாயார் என்னை அழைத்து உனக்கு ஒன்று தரப்போகிறேன் என்றார். என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். பேரீச்சம் பழம் என என் தாயார் சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அப் பழத்தை அவனுக்குத் தரவில்லை என்றால் நீங்கள் ஏமாற்றுகின்ற ஒரு செயலைச் செய்துவிட்டீர்கள் என்று உங்கள் பதிவேட்டில் பதியப்படும் என்று சொன்னார்கள் என அப்துல்லாஹ் இப்னு அமீர் அவர்கள் கூறினார். (அபூதாவூத்)
அவர்கள் பொய் சொல்லிக் கொண்டி ருந்ததன் காரணமாக அவர்களுக்குத் துன் புறுத்தும் வேதனையுண்டு. (குர்ஆன் 2:10)
ஒரு மனிதன் ஒரு பொய்யைச் சொன் னால் அந்தப் பொய்யின்(துர்) வாசனை மலக்குகளை ஒரு மைல் அப்பால் நிறுத்தி விடுகின்றது. (திர்மிதி)
ஐந்தாவது காரணம் :
பாவங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்; ஈமான் மட்டும் இருந்தால் போதும் என்று நினைப்பது.
ஆனால், பாவங்கள் அதிகமாக அதிகமாக ஈமான் பலவீனப்பட்டு அழிந்துவிடும் என் பதை பின்வரும் ஹதீத்கள் மூலம் உணரலாம்.
என் சமுதாயத்தில் தோன்றும் இரு பிரி வினருக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்கும் இல்லை. (விதியை மறுக்கின்ற) கத்ரியா என் பவர்களும் (பாவங்கள் எவ்வளவு வேண்டு மானாலும் செய்யலாம். ஈமான் மட்டும் போதும் எனக் கூறுகின்ற) முர்ஜியா என்ப வர்களுமே அவர்கள், வேடிக்கை, விவாதம் இவற்றில் பொய் சொல்வதை விட்டுவிடாத வரை ஒரு மூஃமின் முழுமையான ஈமானைப் பெற்றிட முடியாது. அவன் ஏனைய விவகா ரங்களின் அனைத்திலும் உண்மையைப் பேசினாலும் சரியே. (அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா)
லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது சுவ னத்தின் சாவியல்லவா? என்று வஹப் பின் முனப்பிஹ் என்பவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், எனினும் சாவி என்றால் அதற் குப்பற்கள் (ஆகிய செயல்பாடுகள்) இருக்க வேண்டும். ஆகவே, பற்களுள்ள சாவியை (லாயிலாஹ இல்லல்லாஹ்வுடன் அதற்குரிய செயல்பாடுகளைக் கொண்டு (திறந்தால்) அது உனக்குத் திறந்து கொள்ளும்; அவ்வா றில்லாவிடில் அது உனக்குத் திறக்காது என்றார்.
ஈமானால் வெளிச்சமாக இருக்கும் உள்ளத்தில் ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு கரும்புள்ளியாக விழுந்து உள்ளம் முழு வதும் கருமையடைந்துவிடச் செய்கிறது.
இப்படியாக, நாம் பாவங்களை அதிகமாக, அலட்சியமாக, சர்வசாதாரணமாகச் செய்து கொண்டிருப்பதன் காரணமாக பலவித கஷ்டங்கள் நம்மை வந்தடைகிறது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் முஸ் லிம்கள் தாக்கப்படுவதும், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் இதைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது.
அவர்கள் (பாவிகள்) எங்கு காணப்பட்ட போதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுவிட்டது. (அல்குர்ஆன் 3:112)
அல்லாஹ் அவர்களுடைய பாவங்களின் காரணமாக பிடித்துக் கொண்டான். இன்னும் அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன். (அல்குர்ஆன் 3:11)
வரம்பு மீறி பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கினோம். (குர்ஆன் 2:59)
(அவர்கள்) ஒவ்வொருவரையும் அவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித் துக் கொண்டோம். அவர்களில் எவர் மீது (கடும் புயல் காற்றின் மூலமாக) நாம் கல்மாரியை அனுப்பினோமோ அவர்களும் உள்ளனர். மேலும், அவர்களில் எவரைப் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டதோ அவர்களும் உள்ளனர். இன்னும் அவர்களில் (காரூன் போன்று) எவரை நாம் பூமிக்குள் அழுந்தச் செய்துவிட்டோமோ அவர் களும் உள்ளனர். மேலும், அவர்களில் (பிர் அவ்ன், ஹாமான் போன்று கடலில்) நாம் மூழ்கடித்தவர்களும் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை. எனினும் அவர்கள் தங்க ளுக்குத் தாமே அநியாயம் இழைத்துக் கொள்பவர்களாக இருந்தனர். குர்ஆன்29:40
முதலில் ஒரு பாவத்தைச் செய்யும் போது மனதில் பயம் ஏற்படுகிறது. அதையே திரும்பத் திரும்பச் செய்யும் போது மற்றவர்களை ஏமாற்றித் துணிச்சலு டன் (த்ரில்லாகச்) செய்கிறோமே என்ற ஆர் வமும் இன்பமும் ஏற்பட்டு, அந்தப் பாவங் களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மன நிலையை ஏற்படுத்துகிறது. இப்போது அச் செயல் பாவம் என்ற எண்ணம் நீங்கி சர்வ சாதாரண செயலாகி இன்பம் தருவதாக போலியாய் அமைந்து முடிவில் கேடு கெட்ட நிலைக்குக் கொண்டு வந்துவிடும். பாவத்தை இன்பமாக நினைத்து திரும்பத் திரும்பச் செய்வது இவ்வுலகிலும் துன்பத் தைத் தரும்; மறுமையில் நரகப் படுகுழியில் தள்ளிவிடும்.
செல்வத்தாலும், குமாரர்களாலும் எதை நாம் அவர்களுக்கு அதிகமாக கொடுத்து உதவினோமோ அதுபற்றி அவர்கள் எண் ணிக் கொண்டார்களா? (அவ்வாறு நாம் செய்வதால்) அவர்களுக்கு நன்மையான வற்றை விரைந்து வழங்குகின்றோம் (என எண்ணிக் கொண்டார்களா?) அவ்வாறல்ல, (அது ஏன் என) அவர்கள் உணரமாட்டார் கள். (அல்குர்ஆன் 23:55,56)
நாம் அவர்களுக்கு வேதனையைத் தாம தப்படுத்துவதெல்லாம் பாவத்தை (பின் னும்) அவர்கள் அதிகப்படுத்துவதற்காகவே தான். (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:178) இன்ஷா அல்லாஹ் தொடரும்……