மவ்லவிகள் (முஸ்லிம் மதகுருமார்கள்) எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நிகரானவர்களா?
அஹமது இப்ராஹீம்
அல்குர்ஆன் கூறுகின்றது :
அல்லது, அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின் றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக் கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (குர்ஆன் 42:21)
மேற்கண்ட வசனத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதரையோ அல்லது கற்பனைத் தெய்வங்களையோ தனக்குச் சமமா கக் கருதுபவர்கள் மீது கடும் கோபம் கொள் வதை நாம் பார்க்க முடிகிறது.
எந்த அளவுக்கு என்றால் தீர்ப்பு பற்றிய தன்னுடைய வாக்கு மட்டும் முந்தாமலிருந்தால் இதற்குள் அத்தகைய இணை வைப்பா ளர்களை உலகில் வைத்தே கடும் தண்ட னையைக் கொண்டு தண்டித்திருப்பான்.
ஆனால் நிச்சயமாக கப்ரில், மறுமையில் கடும் தண்டனை உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடைபெற்ற இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கு தியாகமும் எண்ணில் அடங்காதது.
இதில் உச்சகட்டமாக நமது மவ்லவிகள் என்ற மதகுருமார்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் விதித்த வரம்பை மீறி, ஆங்கிலேயர் களை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் ஆங்கில மொழி கற்பது ஹராம் (கூடாது) என்று குருட்டுத்தனமாக ஃபத்வாவை (மார்க்கத் தீர்ப்பை) வழங்கினார்கள்.
ஏற்கனவே தங்கள் மதகுருமார்களை கடவுளின் அவதாரங்களாகக் கருதிக் கொண்டிருந்த நமது சமுதாய அப்பாவி முஸ்லிம்கள் ஆங்கிலம் படித்துக் கொண்டி ருந்த தம் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியிலிருந்து திரும்பப் பெற்றார்கள்.
ஆனால், அதே வேளையில் பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளை தீவிரமாக ஆங்கிலம் கற்க வைத்தார்கள். இந்திய விடுதலைப் போரிலும் பிராமணர்கள் நமது சமுதாய அப்பாவி முஸ்லிம்களைப் போன்று ஆங்கிலேயர்களை எதிர்க்க எந்தத் தீவிரமும் காட்டவில்லை.
விளைவு : நமது சமுதாயம் கல்வியில் அதல பாதாளத்தில் கிடப்பதை சச்சார் குழு அறிக்கையின் மூலம் நாம் கண்டோம்.
அகில உலக நாடுகளின் தொழில்துறை நிறுவனங்களின் மேலதிகாரிகளில் பெரும்பாலோர் பிராமணர்கள்தான். அந்நிறு வனங்களில் பணியாற்றுவதன் மூலம் வரும் பொருளாதாரத்தில் மிகச் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரியான நாடுகளில் கீழ்மட்ட மற் றும் துப்புரவுப் பணிகளில் நமது சமுதாய இளைஞர்களே அதிகம் காணப்படுகின்றனர்.
இந்நிலைக்குக் காரணமானவர்கள் மத குருமார்களான மவ்லவிகளை இறைவனுக்கு நிகராக்கிய நமது சமுதாய அப்பாவி முஸ்லிம்களே என்றால் அது மிகையாகாது.
அல்லாஹ் அனுமதித்த ஒரு மொழியான ஆங்கிலத்தை கற்பது கூடாதென தீர்ப்பளித்த மவ்லவிகளின் செயல் வரம்பு மீறிய பாவச் செயலாகும் என்பது குர்ஆன் எச்சரிக்கை! அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 55:4)
மேலும் அது அல்லாஹ்வின் உபதேசத்தை மீறிய செயலாகும்.
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும். மேலும், நாம் அவனை கியாம நாளில் குருட னாகவே எழுப்புவோம்’ என்று கூறினான். (அல்குர்ஆன் 20:124)
இதன் எதிரொலியாக நமது சமுதாயம் ஆட்சியாளர்களால் குறிப்பாக சுதந்திரத் திற்குப் பிறகு இந்திய ஆட்சிக்கு ஆட்சியா ளர்களாக வந்த காங்கிரஸ்காரர்களில் பெரும்பாலோர் இந்துத்துவ சங்கிகளாக இருந்துள்ளனர். இவர்களாலும் பலவகை களில் நமது சமுதாயம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டது.
அதன்பின் ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசின் சங்கிகளால் நமது சமுதாயம் இன்றுவரை சொல்லொண்ணாத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு வருகிறது. இந்தத் துன்பம் தீர, ஒரே வழி! சமுதாயம் கட்டாயமாக ஒரு அமீரின் கீழ் ஒரே உம்மத் தாக ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு ஒன்றிணைய தடையாக உள்ளவர்கள் யாரென்றால் சாட்சாத் ஆங்கிலம் கற்கக் கூடாதென்று கடந்த காலங்களில் தீய தீர்ப்பளித்த அதே மவ்லவிகளின் வாரிசுகளான இந்தக் கால மவ்லவி கள்தான்.
எப்படி என்று கேட்கின்றீர்களா?
எல்லாம் வல்ல அல்லாஹ் அல்குர்ஆன் 21:92, 23:52 வசனங்களில் நமது சமுதாயத்தை பிரிவுகளற்ற ஒரே உம்மத் என்கின் றான். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் என அல்குர்ஆன் 3:103 வசனத்தின் மூலம் எச்சரிக்கின்றான்.
அல்குர்ஆன் 22:78ல் அல்முஸ்லிமீன் என்ற பெயரைத் தவிர வேறு வேறு பெயர் களில் பிரிந்து பிரிந்து செயல்படக்கூடாது என எச்சரிக்கின்றான்.
அவ்வாறு வேறு வேறு பெயர்களில் பிரிந்து செயல்பட்டால் பலம் குன்றி விடுவீர்கள் என்றும் கோழைகளாகி சிறுமையடைந்து விடுவீர்கள் எனவும் அல்குர்ஆன் 8:48 வச னத்தின் மூலம் அல்லாஹ் கூறுகின்றான். இதையே நபி(ஸல்) அவர்களும் ஜமாஅத்தில் முஸ்லிமீன் என்ற ஜமாஅத்தையும், அதன் அமீரையும் பற்றிப் பிடித்துக் கொள் ளுமாறும் அதல்லாத மற்றப் பிரிவுகள் (ஹனஃபி, ஷாஃபி, தல்ஹீது இயக்கங்கள் போன்ற பிரிவுகள்) அனைத்தையும் விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறும் எச்சரிக்கின்றனர்.
ஆதாரம்: புகாரி: 3606, 7084.
எனவே மேற்கண்ட எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உபதேசங்களையும் அவனின் திருத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் உபதேசங்களை ஏற்று மதகுருமார்களைப் புறக்கணித்து எல்லாப் பிரிவுகளையும் விட்டு நீங்கி ஜமாஅத்துல் முஸ்லிமீனில் ஒன்றிணைந்து இம்மை மறுமை வெற்றி பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இறைத்தூதர்(ஸல்) மீது அன்பு…!
சிராஜுல் ஹஸன்
ஒரு மனிதர் இறைத்தூதரிடம் வந்து, “இறைவனின் தூதரே, மறுமை நாள் எப்போது வரும்?’ என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அந்த நாள் திடீரென வந்துவிட்டால் அதை எதிர்கொள்ள நீ தயாரிப்புடன் இருக்கி றாயா?’ என எதிர் வினா தொடுத்தார்.
அதற்கு அந்த மனிதர், “நான் அதற் காக எந்தத் தயாரிப்பையும் செய்ய வில்லை. ஆனால் இறைவனையும் அவ னுடைய தூதரையும் நேசிக்கிறேன்’ என் றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓர் அற்புதமான கருத்தைக் கூறினார்.
“நீ யாரை நேசிக்கிறாயோ அவர் களுடன் இருப்பாய்”
“இதைக் கேட்டு நபித்தோழர்கள் அனைவருமே மகிழ்ந்தனர். இஸ்லாமிய வாழ்வியலை அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு, இந்த அறிவிப்புக்கு மகிழ்ந்தது போல் வேறு எதற்கும் மகிழ்ந்ததில்லை என்று நபிமொழி நூல்கள் கூறுகின்றன.
இந்த நபிமொழி நமக்கு ஒரு நல்ல முன்னறிவிப்பைத் தந்துள்ளது.
இறைத்தூதர் மீதான நம்முடைய அன்பு மாசற்றதாக, தூய்மையாக இருக்குமானால், மறுமையில் இறைத் தூத ருக்கு எத்தகைய உயர் ஈடேற்றம் கிடைக்குமோ, அவருக்கு எந்தச் சுவனத் தோட்டம் அருளப்படுமோ அதே போன்ற சுவனத் தோட்டங்களில் நாமும் இருப்போம்.
சரி! இப்போது முக்கியமான ஒரு கேள்வி.
நபியன்பு என்பது என்ன?
இறைத்தூதரை நான் நேசிக்கிறேன். ஆனால் ஐந்து வேளை தொழ முடியாது, “நபிகளார் மீது நான் உயிரையே வைத்துள்ளேன். ஆனால் ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன்’. “மாநபி மீது நான் மகத்தான அன்பு வைத்துள்ளேன். ஆனால் மது பாட்டிலைக் கீழே வைக்கமாட்டேன்’ என்கிற நிலையில் நம் வாழ்க்கை இருக்குமேயானால் இதற்குப் பெயர் நபியன்பு அல்ல.
இறைத்தூதர் மீது அன்பு கொண்டுள் ளோம் எனில் அவருடைய அழகிய வழி காட்டுதல் நம் வாழ்வில் எதிரொளிக்க வேண்டும். கண்ணிய நபிகளார் மீது நாம் காதல் கொண்டுள்ளோம் எனில் புண்ணி யச் செயல்கள் நம் வாழ்வில் பூத்துக் குலுங்கவேண்டும். தம்மைக் கொல்ல வந்த பகைவரையும் மன்னித்து அருளிய வர் மாநபி(ஸல்) அவர்கள்.
ஆனால் சின்னச் சின்ன கருத்து வேறு பாடுகளைக் காரணம் காட்டி, ஒரு புறம் சொந்த சகோதரர்களையே வெட்டிச் சாய்த்துவிட்டு, மறுபுறம் இறைத்தூதர் போதித்த சகோதரத்துவத்தையும் பரப்புரை செய்தால், இத்தகைய நடத்தை ஒருபோதும் நபியன்பு ஆகாது. நல் ஈடேற்றமும் நமக்குக் கிடைக்காது. “நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் இறைத்தூதரைப் பின்பற்றுங்கள். (குர்ஆன். 3:31)