மன அமைதியை ஏற்படுத்தக்கூடிய அருமருந்தாகும்!
அமீர், நிந்தாவூர், இலங்கை.
பிறகு, விசுவாசங்கொண்டோரே! அத்துக்கத்திற்குப் பின் (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான். உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ, அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணிவிட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர். (அதனால்) அவர்கள் கூறினார்கள். இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா? (என்று, அதற்கு) நிச்சயமாக இக் காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது என்று (நபியே!) நீர் கூறுவீராக!
அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தமது நெஞ் சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர். அவர்கள் (தமக்குள்) கூறிக் கொள்ளுகின் றார்கள். “இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்’ “நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!’ என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங் களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ள வற்றை (அகற்றிச்) சுத்தப்படுத்துவதற்காக வும் ஆகும். இன்னும், அல்லாஹ் உள்ளங்க ளில் உள்ளவற்றை அறிபவன். (அல்குர்ஆன் 3:154)
அல்லாஹ் தனது உண்மையான அடியார்கள் ஆயுதங்கள் சகிதம் நம்பிக்கையும் உறுதியும் கொண்டவர்களாகத் தனது தூதருக்கு அல்லாஹ் நிச்சயமாக வெற்றி அளிப்பான் என்றும் தூதரின் இலட்சியத்தை நிறை வேற்றுவேன் என்ற மன உறுதியோடும் உண்மையாகவே அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டியவாறு கவலையும், துக்கத்தை யும் சுமந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு மன அமைதியையும், நிம்மதியையும் வழங்கி அவர்களுக்கு உதவி புரிந்தான். அவர்களைத் தழுவிக் கொண்ட ஒருவகைச் சிற்றுறக்கமே அந்த நிம்மதியாகும். இது போன்ற பதற்றமான நேரங்களில் ஒரு வருக்கு உறக்கம் வருவது அவர் மனதளவில் அமைதியாக உள்ளார் என்பதற்குச் சான்றா கும். (தஃப்சீர் இப்னு கஸீர் : 2:273-280)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர் கள் கூறியதாவது : போரின்போது ஏற்படும் சிற்றுறக்கம் அல்லாஹ்விடமிருந்து கிடைக் கும் மன அமைதியாகும். தொழுகையின் போது ஏற்படும் சிற்றுறக்கம் ஷைத்தானிட மிருந்து வருவதாகும். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் : 2:273-280, 4:37-45)
அபூ தல்ஹா ஸைத் இப்னு ஸஹ்ல்(ரழி) அனஸ்பின் மாலிக்(ரழி) ஆகியோர் அறிவித் ததாவது: உஹுதுப் போருடைய நாளில் எங்கள் இடங்களில் நாங்கள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தபோது அந்த இடத் தில் எங்களைச் சிற்றுறக்கம் ஆட்கொண் டது. அப்போது முஸ்லிம் வீரர்கள் கேடயங்களுக்குக் கீழே மயங்கிக் கிடந்ததை நான் பார்த்தேன். அன்று அவ்வாறு சிற்றுறக்கம் ஆட்கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். எந்த அளவுக்கென்றால் என்னுடையவாள் என்னுடைய கையிலிருந்து பல முறை (நழுவி) விழுந்துவிட்டது. அது விழ, நான் அதை எடுப்பேன், (மீண்டும்) அது விழ, அப்போதும் நான் அதை எடுப்பேன். (புகாரி: 4068,4562, திர்மிதி, முஸ்னது அஹ்மத், தபகாத்துல் குப்ரா, தஃப்சீர் இப்னு கஸீர் : 2:273-280, 4:37-45)
ஸுபைர் பின் அல் அவ்வாம்(ரழி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உஹதுப் போருடைய நாளில் நான் இருந்தபோது ஒரு சந்தர்ப்பத் தில் எங்களுக்குக் கடுமையான அச்சம் ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு அல்லாஹ் உறக்கத்தை அருளினான். அதனால் எங்களில் ஒவ்வொருவருடைய தாடையும் (அமைதியான உறக்கத்தினால்) அவரவரது நெஞ்சில் (சாய்ந்தது) இருந்தது. (தஃப்சீர் இப்னு கஸீர் : 2:273280) இது போன்றே பத்ருப் போரின் போதும்,
(உங்களின்) மன அமைதிக்காகச் சிற்று றக்கம் உங்களைத் தழுவுமாறு (அல்லாஹ் வாகிய) அவன்தான் தன் (அருளி) னால் செய்வதை நீங்கள் எண்ணிப் பாருங்கள். மேலும் வானிலிருந்து (மழை) நீரை உங்கள் மீது அவன் பொழியச் செய்ததையும் (நீங் கள் எண்ணிப்பாருங்கள்) அதன்மூலம் உங் களை அவன் தூய்மைப்படுத்தி ஷைத்தானின் அழுக்காறுகளை உங்களைவிட்டு அகற்றி உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தி அதைக் கொண்டு (உங்கள்) பாதங்களை உறுதிப் படுத்த வேண்டும் என்பதற்காகவே (அவன், இவ்வாறு உதவி செய்தான். (அல்குர்ஆன் 8:11)
இங்கு பத்ருப் போரில் இறை நம்பிக்கை யாளர்களுக்குத் தான் புரிந்த அருட் கொடைகளை உயர்ந்தோனாகிய அல் லாஹ் நினைவூட்டுகின்றான் . அவர்களுக்கு மன அமைதியை அளிக்கும் பொருட்டு பத்ருப் போர் முனையில் சிற்றுறக்கத்தை அவன் உண்டாக்கினான். அவ்விடத்தில் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் தமது அணியினரின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்ததனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்த பதற்றத்தை அந்த உறக்கத்தின் மூலம் இறைவன் தணித்தான்.
அலி(ரழி) அவர்கள் கூறியதாவது: பத்ருப் போர் நடந்த நாளில் எங்களிடையே குதிரை வீரர் என்று மிக்தாத்(ரழி) அவர் களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை அன்றைய தினம் எங்களில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் உறங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன் நபியவர்கள் மட்டும் ஒரு மரத் திற்குக் கீழே விடிய விடிய அழுது கொண்டும் தொழுது கொண்டும் இருந்தார்கள். (முஸ்னது அஹ்மத், முஸ்னது அபீய அலா, தஃப்சீர் இப்னு கஸீர் : 4:37-45)
கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறியதாவது : சிற்றுறக்கம் (நூஆஸ்) என்பது தலையில் மன அமைதிக்காக ஏற்படுவதாகும். ஆழ்ந்த உறக்கம் நவ்ம் என்பது உள்ளத்தில் ஏற்படுவதாகும். (தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் 4:37-45) ஆக இறை நம்பிக்கையாளர்கள் கடுமையான சோதனை யில் இருந்தபோது அவர்களது உள்ளம் நிம்மதியும் அமைதியும் அடைய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் மறைமுக உதவியால் அவர்களை இந்தச் சிற்றுறக்கம் தழுவியிருக்கிறது. அந்த வகையில் இது இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் செய்த அருளும் கருணையும் அவர்கள் மீது அவன் பொழிந்த அருட்கொடையும் ஆகும் என்றே சொல்ல வேண்டும். (தஃப்சீர் இப்னு கஸீர் : 4:37-45)
இதனால்தான் பத்ருப் போர் நடந்த அன்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தோழர் அபூபக்கர்(ரழி) அவர்களுடன் ஒரு குடிலில் இருந்தார்கள் அப்போது இருவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைச் சிற்றுறக்கம் தழுவியது. பின்னர் புன்னகைத்தவாறு விழித்த நபி(ஸல்) அவர்கள் “அபூ பக்கரே! ஒரு நற்செய்தி இதோ ஜிப்ரீல்(அலை) அவர்கள் தமது குதிரையின் முன்பற்களில் புழுதி படிய அதை ஒட்டிச் சென்றுகொண்டு இருக்கிறார் என்று கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் அந்தப் படையினர் தோற்கடிக்கப் படுவார்கள். அவர்கள் புறமுதுகிட்டு ஓடு வார்கள். (54:45) என்ற வசனத்தை ஓதியவாறு அந்தக் குடிலில் இருந்து வெளியேறினார்கள். (தாரீகுத் தபரீ, சீரத் இப்னு ஹிஷாம், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:37-45)
அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், உறக்கத்தை இளைப்பாறுதலாக வும் ஆக்கியிருக்கின்றான். இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் : 25:47) அதாவது உறக்கம் இயக்கத்தை நிறுத்தி உடலுக்கு ஓய்வை, உள்ளத்திற்கு அமைதியை அளிக்கிறது. அதிக இயக்கத்தின் காரணத்தால் உடலுறுப்புகள் களைப்புறும் இரவு வந்துபொழுது அடங்கிவிட்டால் உறுப்புகளும் அடங்கிவிடும். ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது உடலுக்கும், உள்ளத்திற்கும், உயிருக்கும் சுகமளிக்கும். அமைதியான உறக்கம் தழுவிக் கொள்ளும். (தஃப்சீர் இப்னு கஸீர் : 6:487-489)
மேலும், நாம் உங்களுடைய தூக்கத்தை (உங்களுக்கு இளைப்பாறுதலாகவும், மனதிற்கு) அமைதியளிக்கக்கூடியதாக(வும்) ஆக்கியிருக்கின்றோம். (அல்குர்ஆன் 78:9) அதாவது, நீங்கள் ஓடியாடி இயங்குவதை நிறுத்தக் கூடியதாக உறக்கத்தை ஆக்கினோம் என்று பொருள். அதன் நோக்கம் பகல் நேரங்களில் பொருளாதாரத் தேவை களில் முயன்று ஈடுபட்டீர்களே! ஓடியாடி உழைத்தீர்களே! அதிலிருந்து இரவில் உறங்கி ஓய்வு கிடைத்திட வேண்டும். அதனால் மன அமைதி கிடைத்திட வேண்டும் என்பதே ஆகும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 10:3-10)