நாளை உச்சியில் கணக்கிடும் ஹிஜிரி கமிட்டி காலண்டர்!
S.H. அப்துர் ரஹ்மான்
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கி.பி. 1998ல் நாகர்கோவில் நாஸர் அவர்களால் அனுப்பப்பட்ட அறிவியல் அறிஞர் அலி மணிக்பான் அவர்களின் தொடர் முயற்சியால் அந்நஜாத்தில் ஹிஜிரி கமிட்டி காலண்டர் அறிமுகப்படுத்தியதில் இருந்து ஜமாத்தில் முஸ்லிமீனை சேர்ந்த நாம் அனைவரும் 20 வருடங்களுக்கு மேலாக ஹிஜிரி கமீட்டியின் காலண்டரை பின்பற்றி வருகின்றோம்.
அதன்படிஇஸ்லாமிய மாதங்களை கடைப்பிடித்து நோன்புகளும் வைத்து வருகின்றோம். அது தொடர்பான கமீட்டி வெளியீடுகளை படித்தும் வந்தோம்.
கமிட்டி காலண்டரை பின்பற்றியும் பிரச்சாரமும் செய்து வந்த படித்த அறிவியல் அறிந்த சிலர் இதில் இருந்து விலகிசென்றனர். விசாரித்தபோது இது தவறான கணக்கீட்டில் உள்ளது. அது உங்களுக்கு புரியும் போது நீங்களும் விலகிவிடுவீர்கள் என்று கூறி சென்றனர். ஆனால் அப்போது அது எங்களுக்கு புரியவில்லை.
அமீர் அபூ அப்தில்லாஹ்வின் மரணத்திற்கு பின் (அல்லாஹ் அவரை பொருந்தி கொள்வானாக)காலண்டர் போடுவதற்காக அதன் கணக்கீடுகளை சரிபார்க்கும் போது கணக்கீடு லண்டனை முன் நோக்கியதாகவும் நாளின் ஆரம்பம் நள்ளிரவு கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ள UTC என்ற உலக நேரத்தை கொண்டு கணக்கிட்டு இருப்பது தெரிய வந்தது.
UTC என்னும் உலக நேரம் குறித்து அறிந்துகொள்ள இணையதளத்தை நாடியபோது ஆங்கிலேயன் கட்டமைத்த உலக நேரத்தின் கட்டமைப்பு ஆங்கில தேதிக் கோட்டின் உச்சி முதல் உச்சி வரையாலானது ஒரு நாள் என்ற விளக்கம் கிடைத்தது.
எதற்கு இந்த அமைப்பு என்று பார்த்த போது ஆங்கிலேயர் உலகின் மையமாக அமைத்த லண்டன் கிரின்விட்ச் நள்ளிரவில் இருந்து மறு நள்ளிரவு வரை உள்ளது ஒரு நாள் என்ற கணக்கீட்டிற்காக என்று தெரிய வந்தது.
ஆங்கில தேதிக்கோடு IDL எப்படி கட்டமைக்கப்பட்டது என்று அதன் வரலாற்றை பார்த்தபோது அதில் அதிர்ச்சி அடையும்படி ரஷ்யாவுடன் வெள்ளிக்கிழமையில் இருந்த அலாஸ்கா ஒரு கிழமை குறைக்கப்பட்டு வியாழக்கிழமையில் உள்ள அமெரிக் காவுடன் இணைக்கப்பட்டு அதன் பின்பு தான் ஆங்கிலேயர் தேதிக்கோடு போடப்பட்டு உள்ளது என்பது தெரியவந்தது. இதன் மூலம் தான் இயற்கை மையமாக இருந்த மக்கா 1867ல் அலாஸ்கா இடமாற்றம் மூலம் லண்டன் உலகின் மையப்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த தகவல்கள் தெரிந்துகொள்ள ஹிஸ்டரிக் ஆல்டரேசன் ஆப் டேட் லைன் (Historic Alterations of Date Line) என்ற தேடல் மூலம் இணையதளத்தில் பார்வை இடலாம். அலாஸ்காவில் கிழமை மாற்றம் செய்தபின் ஆங்கிலேயன் போட்ட IDL என்ற உலக தேதிக்கோட்டையும், லண்டனை முன்நோக்கி நாளின் ஆரம்பம் நள்ளிரவை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்ட UTC என்ற உலக நேரத்தையும் எப்படி இஸ்லாமிய அடிப்படையாக ஏற்று, அதனை வைத்து ஆங்கில அடிப்படையில் கணக்கிட்ட ஹிஜிரி காலண்டரை ஏற்க முடியாது என்று முடிவு செய்தோம்.
எனவே மக்காவை முன்நோக்கி நாளின் ஆரம்பம் ஃபஜ்ரை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்ட IUT என்ற இஸ்லாமிய உலக நேரத்தையும் அடிப்படையாக வைத்துக் கணக்கிட கமிட்டியிடம் வேண்டுகோள் வைத்தோம். அவ்வாறு போட முடியாது, போட்டால் சில மாதம் 31 நாள் வந்து விடும். தற்போதுதான் மக்கள் காலண்டர் கான்செப்ட்டை ஏற்க ஆரம்பித்து உள்ளனர். இதுகுறித்து பேசினால் விரண்டு ஓடி விடுவார்கள் என்று கமிட்டியினர் சமாதானம் கூறினார்கள்.
ஆங்கிலேயன் செய்த தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? என்று கேட்டபோது முடிந்தால் 5 வருட காலண்டரை நீங்கள் கூறும் அடிப்படையில் தயாரித்து காட்டுங் கள் என்று கமீட்டி கேட்டது. நாம் அதனையும் தயாரித்து தந்தோம்.
கமிட்டி அதை எந்தக் காரணமும் கூறாமல் அதில் எந்த தவறுகளையும் சுட்டி காட்டாமல் ஏற்க மறுத்துவிட்டது உடன் நமக்குள் ஆலோசனை கூட்டம் நடத்தி ஜமாத்தில் முஸ்லிமீன் சார்பாக புதிய காலண்டர் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அது ஹிஜ்ரி 1442ல் வெளியானது.
ஹிஜ்ரி கமிட்டி காலண்டரில் உள்ள தவறுகள்:
- தேதிக் கோட்டில் உள்ளவர்கள் சங்கமம் நிகழும் முன் சங்கம தினத்திலேயே மாதத்தை ஆரம்பிக்கும் தவறு நிகழ்கிறது.
- நபி(ஸல்) அவர்கள் வெள்ளை நாள் 13,14,15 என்று கூறியிருக்க இந்த காலண்டரில் 16ம் நாளில் வெள்ளை நாள் 14UT மேல் சங்கமம் நிகழும் மாதங்களில் வருகிறது.
- ஹஜ்ஜத்துல் விதா அரஃபா நாள் வெள்ளிக்கிழமையில் நிகழ்ந்ததாக ஹதீத்கள் பல இருக்க இவர்கள் காலண்டர்படி வியாழன் கிழமையில் வருகிறது. இவை அனைத்தும் மக்காவை முன்னோக்கி பஜ்ரில் இருந்து ஆரம்பம் ஆகும் IUTஐ பயன்படுத்தி கணக்கிடும்போது இந்த தவறுகள் வருவது இல்லை.
பூமியில் 12UTC ஆகும்போதே புதிய நாள் ஆங்கில தேதிக்கோடு பிஜியில் புதிய நாள் பிறந்துவிடுகிறது. ஆனால் பலரும் 24UTC முடியும்போதுதான் புதிய நாள் பிறப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த மக்களின் அறியாமை கமிட்டியினருக்கு நல்ல வாய்ப்பாக ஆகிவிட்டது. 0UTCல் நாள் ஆரம்பித்து 24UTCல் முடிவதாக கூறித் திரிகின்றனர்.
ஆங்கில உலக நேரம் UTC என்பது லண்டனை மையமாக வைத்து அதை முன்னோக்கி ஆங்கில தேதிக்கோட்டின் உச்சி முதல் உச்சி வரையிலான நேரம் 0 UTC முதல் 24UTC வரை.
இஸ்லாமிய உலக நேரம் IUT என்பது மக்காவை மையமாக வைத்து அதை முன்னோக்கி இயற்கை தேதிக்கோட்டின் ஃபஜ்ர் முதல் ஃபஜ்ர் வரையி லான நேரம் 0IUT முதல் 24IUT வரை.
இதில் எது இஸ்லாமிய அடிப்படை என்று நீங்களே சிந்தித்து முடிவு எடுங்கள்.
ஆங்கில IUTல் கிப்லா மாறுவதாக கமிட்டி சொல்லி வந்தது அவர்கள் சொன்னபடி மாறவில்லை என்பதும் நிரூபணமானது. இவ்வளவு பிழை இருந்தும், இதற்கு மேலும் கமிட்டி காலண்டரை பின்பற்றுபவர்கள், தங்களை மாற்றிக் கொள்வது நல்லது; சரியானதை அடைந்து கொள்ள இறைவன் அருள்புரிவானாக.