அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
- மனிதன் எதில் சூழ்ச்சி செய்கிறான் என அல்லாஹ் கூறுகிறான்?
அல்குர்ஆனின் வசனங்களில். அல்குர்ஆன் 10:21. - அல்லாஹ் யாருக்கு உரிமையை வழங்க கூறுகிறான்?
உறவினர், வறியோர், வழிப்போக்கர். அல்குர்ஆன் 17:26 - அநாதைகளின் சொத்தை எதுவரை நெருங்க வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்?
பருவமடையும் வரை நல்லவிதமாகவே அன்றி நெருங்காதீர்கள். அல்குர்ஆன் 17:34 - வானத்தில் கோள்களை எதற்காக அமைத்தேன் என அல்லாஹ் கூறுகிறான்?
பார்ப்போருக்கு அலங்காரமாக தெரிவதற்கு. அல்குர்ஆன் 15:16 - லஃனத் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
சாபம். அல்குர்ஆன் 2:89 - எதனை செலவு செய்யுமாறு அல்லாஹ் கூறுகிறான்?
நல்லவற்றையே. அல்குர்ஆன் 2:267 - ஸாலிஹீன்கள் என்றால் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
நல்லடியார்கள். அல்குர்ஆன் 3:114 - பஹீரா என்றால் எது என்று அல்லாஹ் கூறுகிறான்?
காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம். அல்குர்ஆன் 5:103 - நம்மைச் சார்ந்தவனில்லை என்று யாரை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
துன்பத்தின் காரணமாக கன்னத்தில் அறைந்து கொள்பவன். அப்துல்லாஹ் (ரழி), புகாரி. 1297 - ஜனாஸாவைக் கண்டால் என்ன செய்ய வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களை கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள். ஆமிர் இப்னு ரபிஆ(ரழி), புகாரி: 1307, 1308 - உலக வாழ்வின் சுகப் பொருள்கள் எது என்று அல்லாஹ் கூறுகிறான்?
பெண்கள், ஆண் மக்கள், தங்கம், வெள்ளியின் பெரும் குவியல்கள். அல்குர்ஆன் 3:14 - அஸா என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
கைத்தடி. அல்குர்ஆன் 7:117 - அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்பவருக்கு எதை உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்?
நாயை உதாரணமாக கூறுகிறான். அல்குர்ஆன் 7:176 - துணைவியை எதற்காக படைத்தான் என அல்லாஹ் கூறுகிறான்?
கணவன் அமைதி பெற. அல்குர்ஆன் 7:189 - தபூக் போருக்கு செல்லாதவர்களிடம் எதனை கூறும்படி நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கூறினான்?
இம்மையின் உஷ்ணத்தை விட நரக நெருப்பின் உஷ்ணம் அதிகம். அல்குர்ஆன் 9:81 - அல்லாஹ்விடம் தோழர்களில் சிறந்தவன் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தனது தோழனிடத்தில் சிறந்தவனே. திர்மிதி 1944 - ஸூர் ஊதப்படும் நாளில் குற்றவாளிகளின் கண்கள் எவ்வாறு இருக்கும் என அல்லாஹ் கூறுகிறான்.
நீலம் பூத்த கண்களாக இருப்பர். அல்குர்ஆன் 20:102 - ஸூஹுப் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
ஏடு(வேதம்) அல்குர்ஆன் 53:36 - ´ஃரா என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
நட்சத்திரம் (கோள்) அல்குர்ஆன் 53:49 - வகீல் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
பொறுப்பாளர். அல்குர்ஆன் 17:54