அறுபது மாதமும் சரியானது!

in 2023 பிப்ரவரி

தலையங்கம்!

அறுபது மாதமும் சரியானது!

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

உங்கள் மீது உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.

கிபி.2000க்கு முன் சர்வதேச பிறை நிலைப்பாட்டில் இருந்த நாம் 2000ல் ஹிஜிரி கமீட்டியின் கணக்கீட்டு காலண்டரை பின்பற்றினோம். 2018ல் அதன் கணக்கீடு லண்டனை மையப்படுத்தி இருப்பதும், உச்சியை நாளின் ஆரம்பமாக கொண்டு இருப்பதும் தெரிந்து ஹிஜிரி கமீட்டியில் இருந்து விலகினோம். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்லாமிய அடிப்படையில் இயற்கை தேதிக்கோட்டின் பஜ்ரில் இருந்து கணக்கிட்டு 5 வருட காலண்டர் கணக்கிட்டு வெளியிட்டோம். அது சவுதி யில் உம்முல் குராவுடன் 60 மாதத்தில் ஒரு மாதம் தவிர மீது 59 மாதமும் அனைத்தும் பொருந்தி சரியாக இருந்தது. ஒருமாதம் மட்டும் ஒரு நாள் உம்முல்குறா பிந்தியது. அது சென்ற 6வது மாதமாகிய ஜ.ஆகிர் மாதம். அதிக மக்காவில் சூரியன் மறையும்போது சந்திரனும் சேர்ந்து மறைந்து விடுகிறது. சங்கமம் முடிந்து சூரியனும், சந்திரனும் விலகும் முன் மாதம் ஆரம்பம் ஆகிவிடு கிறது. சூரியன் முதலில் மறைந்து பின் சந்திரன் மறைந்தால்தான் சூரியனை பின் தொடர்ந்து சந்திரன் மாத முதல் நாளில் உதயம் ஆகும். அதுதான் மாத முதற் நாளை அடையாளப்படுத்தும்.

நபி(ஸல்) காலத்தில் நபி(ஸல்) மக்காவில் வியாழன் மாலை 7 மணிக்கு பிறை பார்க்கும்போது எதிரே உள்ள இயற்கை தேதிக்கோடு வெள்ளிக்கிழமை காலை 7 மணியில் இருக்கும். இதுதான் உலகின் இயற்கை அமைப்பு. ஆனால் இப்போது லண்டன் மையமாகவும் ஆங்கில தேதிக்கோடு அதன் எதிரிலிலும் அமைந்துள் ளது. இதனை புரிந்துகொள்ள இப்போது லண்டன் நேரப்படி வியாழன் மாலை 7 மணியாக இருக்கும்போது ஆங்கில தேதிக்கோடு பிஜியில், வெள்ளி காலை 7 மணியில் இருக்கும். இதை உலக நேர கணக்கீடு கொண்டு சரிபார்க்கலாம்.

இதர அமைப்புப்படி சூரியன் மறைந்தபின் சந்திரன் வானில் இருக்கும் முதல் காட்சியைப் பார்த்து உறுதி செய்வதற்கும் சாட்சியாக உள்ளது.

உம்முல்குரா இதனை சூரியன் மறைந்தபின் சந்திரன் மறைய வேண்டும் என்ற கிரிட்டீரியாவை பயன்படுத்தி சரிசெய்கிறது. இது சரியானதுதான். ஜ.முஸ்லிம் காலண்டரில் 14Uவீளீ கிரிட்டீரியா உடன் உலகின் மையப் பகுதியில் சூரியன் மறைந்த பின் சந்திரன் மறையவேண்டும் என்ற கிரிட்டீரியாவை சேர்த்ததால் எல்லா மாதங்களும் உம்முல்குராவுடன் ஒத்ததாக ஆகிவிடும்.

பூமியின் மையப்பகுதி ஒரு முனை யில் அந்திப்பொழுதும் நாளை ஆரம்பிக்கும் மறுமுனையில் பஜ்ரும் இருக்கும் நிலையில் புதிய கிழமை ஆரம்பம் ஆகிறது.

ஜ.முஸ்லிமீன் காலண்டரில் 14UTC கிரிட்டீரியாவுடன் சூரியன் மறைந்த பின் சந்திரன் மறைய வேண்டும் என்பதை மாதம் பிறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் கிரிட்டீரியாவை சேர்த்தால் ஜ.முஸ்லிமீன் காலண்டர் உம்முல் குராவை ஒத்த கணக்கீடாக ஆகிவிடுகிறது. அனைத்து மாதமும் உம்முல் குராவை ஒத்ததாக ஆகிவிடுகிறது.

Previous post:

Next post: