நடுநிலையான சமுதாயம்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை
மனிதர்களில் சில மதியீனர்கள், ஏற்கனவே (முஸ்லிம்கள் முன்னோக்கித் தொழுது கொண்டு) இருந்த அவர்களது “கிப்லாவிலிருந்து (வேறு திசைக்கு) அவர்களைத் திருப்பியது எது?’ என்று கேட்பார்கள். “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடுபவரை அவன் நேர்வழியில் செலுத்துவான்’ என்று (நபியே!) கூறுவீராக! இவ்வாறே உங்களை நாம் (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். (ஏனெனில்) நீங்கள் மக்களுக்குச் சான்று பகர்வோராகவும், (நமது தூதர்) உங்களுக்குச் சான்று பகருபவராகவும் திகழ வேண்டும் என்பதே இதற்கு காரணம் ஆகும். அல்குர்ஆன்: 2:142,143,22:78) இங்கு “நடுநிலைச் சமுதாயம்’ என்பதைக் குறிக்க “உம்மத்தன் வஸ(த்) தன்’ எனும் சொற்றொடர் மூலத்தில் ஆளப் பெற்றுள்ளது. இதற்கு “நடுநிலைச் சமுதாயம்’ என்பதே சொற்பொருளாகும். (தஃப்சீர் இப்னு கஸீர் : 1:467-478) எனவே,
இறை நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செயல்படுவோராக வும், நியாயத்தின் சாட்சியாளராகவும், ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தார் மீது(உங்க ளுக்கு)ள்ள பகை(யானது அவர்களுக்கு) நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம். (எல்லோரிடமும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகவும் உகந்ததாகும். அல்லாஹ்வை(யே) அஞ்சுங்கள். நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான். (5:8) அதாவது, மக்களுக்காகவோ விளம்பரத்திற்காகவோ அல்லாமல் அல்லாஹ்வுக்காக உண்மையின்படி செயல்படுவோராக ஆகிவிடுங்கள். உண்மையான நியாயத்திற்குச் சாட்சியம் கூறுவோராக இருங்கள். அசத்தியமான அநியாயத்திற்கு சாட்சியம் கூறிவிடாதீர்கள். நண்பராக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும் அனைவரிடமும் நீதியோடுதான் நடந்து கொள்ள வேண்டும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 3:92-99)
நீங்கள் பேசினால் (அல்லது எழுதினால்) நியாயத்தையே பேசுங்கள். (அல்லது எழுதுங்கள்) உறவினராக இருந்தாலும் சரி(யே). இறை(வனுக்கு கொடுத்த) வாக் கைக் காப்பாற்றுங்கள். இதையே (ஏக இறைவனாகிய) அவன் உங்களுக்கு அறிவுரையாகக் கூறுகின்றான். (இதனால்) நீங்கள் படிப்பினை பெறலாம். (6:152) அதாவது உறவினராக இருந்தாலும் சரி! அந்நியராக இருந்தாலும் சரி! பேச்சிலும், எழுத்திலும், செயலிலும், நீதியோடு நடந்துகொள்ள வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடு கின்றான். அது எல்லா நேரத்திலும், எல்லா நிலையிலும், நியாயமாகவே நடந்துகொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் வலியுறுத்து கின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர்: 3:655-658) இப்போது வியத்திற்கு வருவோம்.
நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங் களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். வானங்களையும், பூமியையும், அல்லாஹ் படைத்த நாளிலேயே அவனது பதிவேட்டில் (இவ்வாறே) இருந்தது. அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இதுவே சீரான மார்க்கமாகும். (9:36) என்று குர்ஆன் போகின்றது. மேற்கூறிய பன்னிரண்டு மாதங்களின் நொடிப்பொழுதும், மணித்துளிகளும், நாட்களும், வாரங்களும், பிரபஞ்ச அசைவுகளின் இறை நியதிகளுக்கு ஏற்ப சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களின் துணை கொண்டே கணக்கிடப்படல் வேண்டும். ஏனெனில்;
அவனே சூரியனை ஒளிவீசக் கூடியதாகவும், சந்திரனை ஒளியாகவும் ஆக்கி உள் ளான். நீங்கள் (பல) ஆண்டுகளின் எண்ணிக் கையும் (அதற்கான மாதங்களின்) கணக்கை யும் அறிந்து கொள்வதற்காக அதற்குப் பல படித்தரங்களை அவன் ஏற்படுத்தி உள்ளான். இவற்றை அல்லாஹ் தகுந்த காரணத்துடன் தான் படைத்தான். (10:5) ஆக;
சூரியன் மூலம் நாட்களும், சந்திரன் மூலம் மாதங்களும், ஆண்டுகளும் அறியப்படுகின்றன. சிடேரியல் மாதம் (SIDEREAL MONTH) அல்லது (SOLAR SYSTEM) என்பது நுஜூமிய்யா எனும் மார்க்கம் தடை செய்த நட்சத்திரக் கணிப்பின் அடிப்படையில் கி.பி.1582, அளவில் பதிமூன்றாவது கிறிஸ் தவ போப் ஆண்டவர் “கிரகரீ’ என்பவரால் வரையறுக்கப்பட்டு இஸ்லாத்திற்கு முற்றி லும் முரணான கிறிஸ்தவர்களின் கி.மு. கி.பி. என்ற ஈசவி! ஆண்டு கணக்கின் அடிப் படையில் தயாரிக்கப்பட்ட சூரியக் காலண் டர் கணக்கீட்டு முறையானது மூன்று கோள்களில் ஒன்றாகிய சந்திரன் முற்று முழு தாக விடுபட்டு வருகிறது. காரணம் சூரியக் கணக்கிற்கு சந்திரன் தேவையற்றதாக ஆகி விடுகின்றது. அதற்கு சுய ஒளி இல்லை என்ப தனாலாகும். அதன் காரணமாக சூரியன், பூமி ஆகிய இரண்டு கிரகங்கள் மாத்திரமே; சூரியக் கணக்கிற்காகக் கணக்கிடுவதற்கு உபயோகப்படுத்துவதனால் துல்லியத்தை இழந்து நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நாளைக் கூட்டுவதும், நூற்றி இருபத்தி ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நாளைக் குறைக்க வேண்டியும் ஏற்படு கிறது. (சூரியனுடனான) இரவையும், பகலையும் அல்லாஹ்வே (துல்லியமான) அளவாகக் கணக்கிடுகின்றான். அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள். (73:20) என்றே அல்லாஹ்வும் சொல்கின்றான்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களின் துணை கொண்டு கணக்கிடப்படும் சந்திரக் காலண்டர் கணக்கீடானது பல நூறு ஆயிரம் ஆண்டுகளானாலும் கூடுதல், குறைவு ஏற்படுவதில்லை என்றே இன்றைய அறிவியல் உலகம் சான்று கூறுகின்றது. அதற்கேற்ப,
இன்றளவும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்காத; மேற்கத்திய நாடுகளின் முடியும் இறுதிப் பகுதியையும் மற்றும் கிழக்கத்தைய நாடுகளின் ஆரம்பப் பகுதியையும் பிரிக்கும்படியாக; பசிபிக் பெருங்கடலில் இயற்கையாகவே ஏக இறைவனால் போடப்பட்டுள்ள தேதிக்கோட்டை அண்மைக் காலத்து மனிதன்தான் ஆய்வுகள் பல செய்து கண்டுபிடித்தான் என்பது என்னவோ உண்மைதான். மேலும், அதில் சிறு மாற்றம் செய்யாவிட்டான்.
அதற்கும் பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகச் சுற்றுப் பயணம் மேற்கண்ட முழு உலகையும் ஆண்ட மன்னர் “துல்கர்னைன் இஸ்க்கந்தர்’ தேதிக்கோட்டின் அவ் வழியே சென்றதாக குர்ஆன் கூறுகின்றது. அத்துடன் அங்கு, திகதியும், நாளும், கிழமை யும், வாரமும், உலக முஸ்லிம்களின் ஜும்ஆத் தொழுகையும், மாறுவது அல்லாஹ் இந்த மனித சமூகத்திற்கு அளித்துள்ள மாபெரும் அத்தாட்சியுமாகும். இங்கு மன்னர் “துல்கர்னைன் இஸ்க்கந்தர்’ பற்றிக் குர்ஆன் பேசும்போது;
எனவே அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார் (18:85) என்பதாக இறைவன் தெரிவிக்கின்றான். இங்கு “வழி’ என்பதைக் குறிக்க “சபப்’ எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இதனைக் குறித்து;
இது (குறிப்பிட்டதொரு) நிலையத்தைக் குறிக்கும் என்பதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும்,
கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையிலான (தேதிக் கோட்டுப்) பாதையையும், (அதன்) நிலையத்தையும் குறிக்கும் என்பதாக முஜாஹித்(ரஹ்) அவர்களும்,
பூமியிலுள்ள வசிப்பிடங்களையும் (தேதிக்கோட்டில்) அடையாளச் சின்னங்களையும் தேடிச் சென்றார் என்பதாக கத்தாதா(ரஹ்) அவர்களும்,
(தேதிக்கோட்டின்) அடையாளம் என்று மய்தர்(ரஹ்) அவர்களும்,
முன்பு இருந்த (தேதிக்கோட்டின்) சின்னங்கள் மற்றும் சுவடுகள் என்பதாக சயீத்பின் ஜுபைர்(ரஹ்) அவர்களும், பொருள் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர், 5:510)
ஆக 1440, ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து பரிசுத்தக் குர்ஆன் விரிவுரையில் மிகவும் தேர்ச்சி பெற்று “றயீஸுல் முஃபஸ் ஸிரீன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற; நபித் தோழர் இப்னு அப்பாஸ்(ரழி) உட்பட; அவர்களைத் தோழமையாகக் கொண்ட தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் ஆகிய ஏனைய அறிஞர்களும் தடய விபரமில் லாமல் தேதிக்கோடு குறித்து இவ்வாறு தெளிவாகச் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. நிச்சயமாக நாம் (துல்கர்னைன் இஸ்க்கந்தராகிய) அவருக்குப் பூமியில் (முழுவதும் ஆட்சி, அதிகாரம் செய்ய) இடம் அளித்தோம். மேலும் அவருக்கு ஒவ் வொரு பொருட்களையும் (அதற்கான இடங்களையும) அடைவதற்கான வழியை நாம் வழங்கி இருந்தோம். (18:84)
அவர் சூரியன் மறையும் இடத்தை அடைந்தபோது அது சேற்று நீரில் மறைந்து கொண்டிருப்பதைக் கண்டார். (18:86) இறுதியில் அவர் சூரியன் உதிக்கும் இடத்தை அடைந்தபோது (வேறு) ஒரு சமூகத்தார் மீது அது உதிப்பதைக் கண்டார். (18:90) ஆக அவர் சூரியன் உதயமாகும் இடங்களையும் அஸ்தமிக்கும் இடங்களையும் சென்ற டைந்த காரணத்தினால்தான், “துல்கர்னைன்’ இரு முனைகள் உடையவர். எனும் பெயர் பெற்றார். (தஃப்ஸீர் தபரீ, இஃப்ஸீர் இப்னு கஸீர் 5:507) எனவே;
உலக முஸ்லிம்களுக்கென்று அல்லாஹ் ஏற்படுத்தித் தந்த கிப்லாவிற்கு முன்னர் சூரியன் உதிக்கும் முதல் பகுதியாகவும், கிப்லாவிற்குப் பின்னர் சூரியன் மறையும் இறுதிப் பகுதியாகவும், அவ்விரு பகுதிகளும் சந்திக் கும் சரியான இடமாகவும், இந்த தேதிக் கோட்டுப் பகுதிதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அந்த இடத்தைக் குறிப்பிட்டு உயர்ந்தோன் அல்லாஹ் நெறிநூலான அல்குர்ஆனில், இரண்டு கிழக்கு களின், இரண்டு மேற்குகளின், இறைவன் அல்லாஹ்தான். 55:17 என்று குறிப்பிடுகின்றான்.
மேற்குறிப்பிட்ட இந்த இறை வசனம் எவ்வாறு அந்த தேதிக்கோடு அமைந்துள்ள இடத்திற்குப் பொருந்தும்? என்ற கேள்வி எழுவது இயல்பானதே; எனினும்;
பூமியின் நிலவியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு கிழக்கு, ஒரு மேற்கு, என்ற அடிப்படையிலேயே இரு திசைகள் இருப்பதாகத்தான் நாம் படித்துள்ளோம். இருப்பினும், இரு கிழக்குகளுக்கும், இரு மேற்குகளுக்கும், இறைவன் அல்லாஹ்தான் ரப்பு, (55:17) என்று அல்குர்ஆன் கூறுகின் றது. இக்கூற்றானது; பூமியில் ஏதேனும் ஒரு இடத்தில் இரண்டு கிழக்குத் திசைகளும், இரண்டு மேற்குத் திசைகளும், சங்கமித்தால் தான் மேற்படி இறை வசனத்திற்கு நேரடிப் பொருள் இருப்பதாகப் பொருத்தமாக அமையும். இதற்கான தெளிவான விடை குறிப்பாக; இந்த தேதிக் கோட்டுப் பகுதி யில் மாத்திரம்தான் உள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்வதனால்,
அந்த தேதிக்கோட்டுப் பகுதியின் அருகாமையில் வாழும் மக்களில் ஒரு சாரார் ஒரு கிழமையிலும் மற்றொரு சாரார் வேறொரு கிழமையிலும் இருப்பார்கள். அதாவது ஒரு சாராருக்கு வியாழக்கிழமைக்குரிய சூரியன் அவர்களது கிழக்கில் உதிப்பதையும், மற்றொரு சாராருக்கு வெள்ளிக் கிழமைக்குரிய சூரியன் அவர்களது அதே கிழக்குத் திசையில் உதிப்பதையும் காணலாம். அங்குதான் ஒரு சாராருக்கு வெள்ளிக்கிழமைக்குரிய ஜும்ஆத் தொழுகையும், ஒரு சாராருக்கு வியாழக்கிழமைக்குரிய ளுஹர் தொழுகையும் அருகருகே நடைபெறுகின்றன. இவர்கள் அருகருகே இருந்தாலும் இரு தரப்பாருக்கும் 24 மணி நேரங்கள் வித்தியாசம் உண்டு. அந்த இரு நாட்டவர்களும் ஒரே சூரியனுக்குக் கீழ் அருகருகே வசித்தாலும் இரண்டு வெவ்வேறு நாட்களுக்குரிய சூரியனின் உதயத்தையும், மறைவையும் அடைந்தவர்களாவர். இதனையே “ரப்புல் மஷ்ரிக்கைனி வரப்புல் மஃரிபைன். (55:17) என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகின்றான். மேலும்,
இந்த தேதிக்கோட்டை மனிதன் கண்டுபிடிப்பதற்காக, அளவற்ற அருளாள னாகிய அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்றாகிய “ஹாதி’ வழிகாட்டுபவன். (22:54, 25:31) என்றும் மற்றும் ஒன்றான, “நஸீர்’ உதவுபவன். (2:107,120, 4:75,123, 173, 8:40, 9:116, 22:78. 29:22, 33:17, 42:31, 25:31) என்னும் சிறப்புத் திருநாமங்களுக்கு அமைவாக, அவனது வழிகாட்டல், கனவு, அகத்தூண்டல், உள்ளுணர்வு, புறத் தூண்டல் ஆகிய துணை கொண்டு மனிதன் அதனைக் கண்டுபிடித்தான், எனினும்;
“ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதைப் புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்’ எனும் தலைப்பின் கீழ்; பாகம் நான்கில்; “இஸ்லாத்தை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்கிய நேர மண்டல மாற்றங்கள், எனும் குறுந்தலைப் பின் கீழ் ஹிஜ்ரிக் கமிட்டியினர் வெளியிட்ட ஆக்கத்தில்;
அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கம் தீனுல் இஸ்லாம் மற்ற மார்க்கங்களை விட மேலோங்கி விடக்கூடாது என்பதிலும் அல்குர்ஆனின் வழிகாட்டல்படி முஸ்லிம்கள் சந்திர நாட்காட்டியை தயாரித்து உலகை வழிநடத்திவிடக்கூடாது என்பதற்காகவும் நேர்த்தியான பல சதித்திட்டங்களை தீட்டப்பட்டுள்ளன. இஸ்லாத்தை எதிர்த்தும் வெறுத்தும் வரும் அத்தீய சக்திகளின் செயல்பாடுகளை நமது முஸ்லிம் உம்மத் இந்த நவீன யுகத்தில் கூட உணராமல் வாழ்ந்து வருவது வேதனையிலும் வேதனை.
இன்று இஸ்லாத்தை எதிர்ப்போர் அதில் பல குழப்பங்களை விளைவித்துள்ளனர். உலகத் தேதிக்கோடு முஸ்லிம்களால் தான் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும், முஸ்லிம்களின் இறைவணக்கமான தொழுகையும், முஸ்லிம்களின் கிப்லாவையும் மையப்படுத்தியே கிழமை மாற்றம் நடைபெறுவதையும் மறைத்து வரலாறு களில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து விட்டனர்.
1867ல் அலாஸ்காவை தேதிக்கோட்டை தாண்டி கிழக்கில் உள்ள அமெரிக்காவுடன் சேர்த்தனர் ஒரு நாள் குறைப்பு செய்தனர்.
கடந்த 1995ஆம் ஆண்டுவாக்கில் சர்வ தேசத் தேதிக்கோட்டிற்கு அருகாமையி லுள்ள “கிரிபாட்டி தீவுகளில் (KIRIBATI ISLANDS) சிலவற்றை தேதிக்கோட்டைத் தாண்டி கிழக்குப் பகுதிகளுக்கு முன்னதாக செல்லும்படி மாற்றியமைக்கப்பட்டது. காரணம் கடந்த 2000ஆம் ஆண்டு (millennium) துவக்க நாளின் சூரியன் எங்கள் நாட்டில்தான் முதலில் உதிக்கிறது என்று கூறி சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்கான நடவடிக்கையாம். இந்த பெய ரில் கிரிபாட்டி தீவுகளை 24 மணி நேரங்கள் அளவுள்ள (ஒருநாள்) வித்தியாசத்தில் இட மாற்றம் செய்துவிட்டனர்.
இதனால் பிற மதத்தினர்களுக்கு வழிபாட்டு ரீதியான பாதிப்புகள் இல்லை. ஆனால் முஸ்லிம்களுக்குப் பாதிப்புகள் இருக்கின்றன. காரணம் அங்குள்ள முஸ்லிம்கள் வியாழக்கிழமை அன்று வெள்ளிக்கிழமை என்று கருதி ஜும்ஆ தொழும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய குழப்பத்திற்கு யார் காரணம்? தீர்வு என்ன? என்பதைக் கூட சிந்திக்காமல் இந்த முஸ்லிம் உம்மத் பாராமுகமாகவே உள்ளது.
“இன்று நஸராக்கள் அவர்களுடைய கிப்லாவாக (MERIDIAN) லண்டன் கிரீன்வீச் பகுதியை வைத்திருப்பதால் உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரிய உச்சத்தில் இருக் கும்போது அந்த லண்டன் கிரீன்விச் பகுதியானது உள்நாட்டு நேரம் இரவு 12 மணியாக இருக்கும். எனவே இஸ்லாத்தை எதிர்ப் போர் அவர்களுடைய கிப்லாவாக (MERIDIAN) லண்டன் கிரீன்விச் பகுதியை மையப்படுத்தி அவர்களுடைய கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில் இரவு 12 மணிக்கு தேதியையும், கிழமையையும் மாற்றி வருவதைப் பார்க்கலாம்.
இவ்வுலகத்தின் பெரும் பகுதியை தனது காலனி (அடிமை) ஆதிக்கத்திற்குள் வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாட்சியைப் பற்றி வரலாற்று ஆசிரியர் கள் குறிப்பிடும்போது “சூரியன் மறையாத அரசாட்சி’ என்பர். (அந்தளவு இப்பூமியில் பெரும் பரப்பளவு நிலத்தை ஆண்டவர் களே பிரிட்டிஷார் என்னும் ஆங்கிலேயர் கள்) ஆங்கிலேயர்கள், அவர்கள் தங்களது நாட்டிலுள்ள கிரீன்விச் (GREENWICH) நகரை மையமாக (கிப்லாவாக)க் கொண்டு தயாரிக்கப்பட்ட கிரிகோரியன் நாட்காட் டியை தங்கள் ஆதிக்கத்திலுள்ள அத்தனை நாடுகளில் மிக எளிதாகத் திணித்து விட்டனர்.
இஸ்லாம் காட்டித்தந்த நாட்காட்டி முறைகளை ஆய்வு செய்து அதற்கு எதிராக அவர்கள் கிரிகோரியன் காலண்டர் என்ற கற்பனை நாட்காட்டியை தயாரித்து உலகை ஏமாற்றியதோடு அல்லாமல் அவர்களுடைய கிப்லாவை உலகில் உள்ள அனைவரும் பின்பற்றும்படி செய்துவிட்டதின் சூழ்ச்சிகளை நம்மில் எத்தனை பேர் ஆராய்ந்து அறிந்து உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்?
நஸராக்களின் கிப்லாவை உலகமே பின்பற்றி அவரவர்கள் தத்தமது நாடுகளில் இரவு 12 மணிக்கு ஒவ்வொரு நாளும், கிழமையையும், தேதியையும் மாற்றி வரு கின்றார்கள். உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரிய உச்சத்தில் வரும்போது இந்தி யாவின் பகுதி அதிகாலை 5.30 மணியாக இருக்கும். ஆனால் இந்தியாவில் வசிப்பவர் களின் கடிகாரங்கள் அனைத்தும் 6.30 மணி நேரத்திற்கு முன்னதாகவே (இஸ்லாமிய மார்க்கத்தை எதிர்ப்போர் உருவாக்கியுள்ள கிப்லாவின் நேரத்தைப் பின்பற்றி) இந்திய நேரம் இரவு 12 மணிக்கே தேதி மாறிவிடு கிறது. இது நம்மில் எத்தனை பேர் உணர்ந் துள்ளனர்?
என்றெல்லாம் ஹிஜ்ரிக் கமிட்டியினர் எழுதிய அடிப்படையிலும்; ஏக இறைவ னால் இயற்கையாகவே போடப்பட்ட இயற்கை தேதிக்கோட்டை நஸராக்கள் சிதைத்து அதன் தூய்மையைக் கெடுத்த காரணத்தினாலும்,
ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப் பட்டாலும் (தொழுகையின் போது) உமது முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக் கமே திருப்பிக் கொள்வீராக; நிச்சயமாக இது தான் உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை, அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பாராமுகமாக இல்லை. (அல்குர்ஆன் 2:149)
ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப் பட்டாலும் (தொழுகையின் போது) உமது முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக் கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங் களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ் சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத் களை (அருட்கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர் வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ் சாது, எனக்கே அஞ்சுங்கள், அல்குர்ஆன்: 2:150) என்பதாக தொழுகையின்போது புனித கஃஅபாவேயே முன்னோக்க வேண் டும் என்பதாகவும்;
இந்த வேதத்தை-அபிவிருத்தி நிறைந்த தாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத் துள்ளோம். (இதைக்கொண்டு) நீர் (நகரங் களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களை யும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்) எவர்கள் மறுமையை நம்புகி றார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள். (அல்குர்ஆன் 6:92) நகரங்களின் தாய் நகரம் என்பதனாலும்;
அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும்) அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி மொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீ அறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும், ஒரு கூட்டம் நரகத்திலும் இருக்கும். (அல்குர்ஆன் 42:7) முதலில் அதனைச் சுற்றியுள்ளவர் களுக்கும் என்றெல்லாம் புனித கஃபாவைக் குறித்து அல்லாஹ் சிலாகித்துக் கூறிய அடிப் படையிலும், கிழக்கிலும், மேற்கிலும் இடையில் இருப்பது கிப்லா, (திர்மிதி, இப்னு மாஜா, 1064) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்தும்;
ஓரிறைப் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்த மக்காவின் இறை மறுப் பாளர்களான குறை´யர்கள், யூதர்கள், கேட்கச் சொன்ன குதர்க்கமான சில கேள்விகளில் கிழக்கு மேற்காக இந்த பூமி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அந்த மனிதர் தொடர்பான தகவல் என்ன? என்று கேள்வி கேட்டபோது அவ்விஷயத்தை ஏக இறைவன் வஹியாக அறிவித்தது மாத்திரம் அல்ல அவ்விசயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவன் ஒரு சந்தர்ப் பத்தில் முன்னால் எடுத்துக் காண்பித்தான். அவ்விசயத்தில் நின்றவாறு கிழக்குத்திசை முழுவதையும் மேற்குத்திசை முழுவதையும் நபியவர்கள் பார்த்தார்கள். தேதிக் கோடா கிய அப்பிரதேசத்தில் நின்றால் மாத்திரமே! கிழக்குத்திசை முழுவதையும் மேற்குத்திசை முழுவதையும் பார்க்க முடியும். (இப்னு அப்பாஸ்(ரழி) அலீ(ரழி), தப்ரானீ, தஃப்ஸீர் தபரீ, முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 472, பாகம் 5, பக்கம் 370-543)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒருநாள்) அல்லாஹ் பூமி முழுவதையும் எனக்கு (எடுத்து)க் காட்டி னான். அப்போது பூமியின் கிழக்குப் பகுதிகளையும், மேற்குப் பகுதிகளையும், நான் பார்த்தேன். என் அருகே காட்டப்பட்ட பகுதிகள் வரை எனது சமுதாயத்தவர்களின் ஆட்சி விரிவடையும் என்று சொன்னார்கள். (அலீ பின் அபீதாலிப்(ரழி) தப்ரானீ, முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 472) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது போன்றே தேதிக்கோட்டிற்கு அருகாமையில் உள்ள கிரிபாட்டி தீவுகள் சிலவற்றில் இப்போது முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதே. ஆக இறைவனால் இயற்கையாகப் போடப்பட்ட தேதிக் கோடு குறித்து “யஃஜூஜ் மஃஜூஜ்’ காலத்தில் நடந்த சம்பவத்தை 1444, ஆண்டு களுக்கு முன்னரே ஏகனாகிய இறைவன் அறிவித்தான்.
(நபியே!) கூறுவீராக! இவ்வாறே உங் களை நாம் (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலை யான சமுதாயமாக ஆக்கினோம். (ஏனெனில்) நீங்கள் மக்களுக்குச் சான்று பகர்வோ ராகவும், (நமது தூதர்) உங்களுக்குச் சான்று பகருபவராகவும் திகழ வேண்டும் என்பதே இதற்குக் காரணம் ஆகும். (2:142,143, 22:78)
தேதிக்கோட்டுப் பகுதியில் தினமும் சூரியன் 90 டிகிரி கோணமான நடு உச்சிப் பொழுதில் வரும்போது அன்றைய நாளை ஆரம்பிப்பது என்பது பொருத்தமானதாக இல்லை. மேலும்;
உலக முஸ்லிம்கள் தொழுகைக்காக புனித மக்காவிலுள்ள கஃஅபாவின் பக்கம் (கிப்லாவிற்காக) முகம் திருப்புங்கள். (2:149, 150,143,144,145,6:92,42:7,10:87) என்ற அல்லாஹ்வின் ஆணைக்கு ஏற்ப கிப்லாவை இலக்காகக் கொண்டு அதனை மையப்படுத் தித் தொழுதிட வேண்டும். அவரவர்களது நாட்டில், நகரில், கிராமத்தில், பள்ளிவாசல் களைப் பொறுத்தவரையில் “நேர்கோட்டில்’ நேர்வரிசைகளில், நின்று தொழுதாலும், உலகளாவிய ரீதியில் அதனைப் பார்க்கும்போது அது நேர்கோடாக, நேர் வரிசையாக இல்லை மாறாகப் புனித கஃஅபாவின் வளாகத்திலிருந்தே அதனை நோக்கும் திசையா னது; “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை. (2:142) மேலும், கிழக்கும் மற்றும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே நீங்கள் (தொழுகைக்காக) எங்கு திரும்பினா லும், அங்கே அல்லாஹ்வின் (சங்கையான) முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக்க அறிந்தவன். (2:115) என்று அல்லாஹ் சொல்வதற்கு ஏற்ப, தென் மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வட கிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, என எல்லாத் திசைகளிலிருந்தும் புனித கஃபாவை முன்னோக்கித் தொழுவதால் அந்தப் புனித இடத்திலிருந்தே சஃப்புகள் வட்ட வளைவானதாகவே ஆரம்பிக்கிறது. இவ்வாறு;
புனித கஃபாவின் வளாகத்தில் ஆரம் பிக்கும் அந்த சிறிய வட்ட வளையமானது உலகளாவிய ரீதியில் பெரிது பெரிதாக விரிந்து உலகின் பாதி எல்லையைக் கடந்த பின்னர் பெரிதாக இருந்த வளையமானது சிறிது சிறிதாக மாறி இறுதியில் சிறிய வட்ட வளையமாக, கஃபாவிற்கு நேர் எதிர் முனை எனும் ஆன்டிபோடு-ANTIPODE”ட்டை அடைகின்றது. அவ்வாறு அடையும்போது புனித ஹரம் சரீஃபில் கஃபாவை முன் னோக்கியவர்களாக ஆரம்பித்த சிறிய வட்ட வளையமானது. அலாஸ்காவிற்கும், கனடாவிற்கும் இடையே W140.1738 ரேகையில் இருக்கும் இடத்தில் பூமியின் மறுபக்க மையப் பகுதியை- ANTIPODEட்டை முதுகிற்குப் பின்னால் கொண்டவர்களாக சிறு வட்ட வளையமாக அங்கே நின்று முஸ்லிம்கள் தொழுகின்றார்கள் என்பதே அறிவியல் ரீதியான உண்மையாகும். மாறாக சர்வதேச தேதிக்கோட்டைத் தமது பின்புறமாக வைத்து எதிரும் புதிருமாக தொழுகின்றார்கள் என்பதானது அடிப்படையற்றதும், அறிவியலுக்குப் பொருந்தாததும், தவறானதும் ஆகும். நாமும் விபரமில் லாமல் அவ்வாறே நம்பியும், எழுதியும் வந் தோம். அல்லாஹ் மன்னிப்பானாக! அடுத்து,
சில மாதத்தில் ஒரு நாளைக் காண வில்லை. இதனால்,
சில மாதங்கள் முழுமையாக நிறை வடையவில்லை. இதனால் சில பிரதேசங்களில் சங்கமம் நடைபெறுவதற்கு முன்னரே மாதம் ஆரம்பிக்கப்படுகிறது. இதனால்;
உலகில் சில நாடுகளில், சில பிரதேசங் களில் உள்ள முஸ்லிம்கள், மாதம் ஆரம்பிப்பதற்கு முன்னரே நோன்பை ஆரம்பித்து விடுகின்றார்கள். பெருநாளைக் கொண் டாடி விடுகின்றார்கள். இதனால்;
சில மாதங்களில் முதலாவது பிறையைக் காட்டமுடியவில்லை. இதனால்;
ஹிஜ்ரிக் கமிட்டியின் காலண்டர் பிரகாரம் பின்னோக்கிக் கணக்கிட்டால் ஹதீஃதுக்கு முரணாக அரஃபாவுடைய நாள் வியாழக்கிழமை வருகிறது.
ஹதீதுக்கு முரணாகப் பிறை பதினாறிலும் முழு நிலவு ஏற்படுகிறது.
நஸராக்களின் கிப்லாவாகிய லண்டனை மையமாக வைத்து தேதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நஸராக்களின் கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையிலேயே ஹிஜ்ரிக் காலண்டரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத் தேதிக்கோட்டில் தொழுப வர்களின் முதுகுகள் சங்கமிக்கவில்லை.
இயற்கையாக தேதிக்கோடு அமையப் பெற்றிருந்த இடத்தின் ஃபஜ்ரிலிருந்தே உலக நேரம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வாக அமையும். மேலும் இத்தகைய குறைபாடுகளற்ற சர்வதேச-UNIVERSEL காலண்டர் சாத்தியமாகும் என்பதே எமது அபிப்பிராயமும் ஆகும்.