படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறுதி இறைநூலை!
ஷரஹ் அலி, உடன்குடி.
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டா கட்டும்.
(படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும்.
அந்த ஒரே இறைவனின் பெயரால்….
தீமைக்குத் துணை போகாதீர்!
நன்மைக்கும், இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் ஒத்துழையுங்கள். பாவத்துக்கும், வரம்பு மீறிய செயலுக்கும் துணை போய்விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள், அல்லாஹ் தண்டனை வழங்குவதில் கடுமையானவன் ஆவான். (இறைநூல்: 5:2)
இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் :
உன் சகோதரன் அநீதி இழைத்தவ னாக இருந்தாலும், அநீதி இழைக்கப்பட் டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவிசெய்! என்று கூறினார்கள். அப் போது அல்லாஹ்வின் தூதரே! இதோ அநீதி இழைக்கப்பட்டவனுக்கு நான் உதவி செய்கிறேன். இது சரி. ஆனால், அவன் அநீதி இழைத்தவனாக இருக்கும் போது நான் எவ்வாறு அவனுக்கு உதவி செய்ய முடியும்? என்று இறுதி இறைத் தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர் கள் அவனை அநீதி இழைக்கவிடாமல் தடுப்பாயாக! இதுவே அவனுக்கு நீ செய் யும் உதவியாகும் என்று கூறினார்கள். அனஸ்(ரழி) புகாரி : 2444, 6952, சுனன் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.
இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
நன்மைக்கு வழிகாட்டுபவர், அந்த நன்மையைச் செய்தவரைப் போன்றவர் ஆவார். அனஸ்(ரழி), முஸ்னத் அஹ்மத், திர்மிதி, தாரிமீ.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்கமாட்டான். அவனை பிறரது அநீதிக்கு ஆளாகும்படி கைவிட்டு விடவும்மாட்டான்.
எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்தால், அவரது தேவையை அல்லாஹ் நிறைவு செய்வான்.
எவர் ஒரு முஸ்லிமீன் ஒரு துன் பத்தை நீக்குகின்றாரோ அவருக்கு அல் லாஹ் கியாமத் நாளில் அவருடைய துன் பங்களில் ஒரு துன்பத்தை நீக்குவான்.
எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை கியாமத் நாளில் அல்லாஹ் மறைக்கின் றான். அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), புகாரி:2442
எவன் ஒருவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ செய்துவிட்டு, பின்பு அதனை ஒரு தவறையும் அல்லது பாவத்தையும் செய்யாதவர் மீது சாட்டி விடுகிறானோ அவன்
நிச்சயமாக அவ தூறையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்துகொள்கிறான். (இறைநூல் :4:113)
நன்மைக்கு கூலி நன்மையைத் தவிர வேறு கூலி உண்டா? (இறைநூல் 55:60)