அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
- யாரை விசாரணை செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?
யாருக்கு தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களை. அல்குர்ஆன் 7:6
- யார்வெற்றியாளர்கள்எனஅல்லாஹ்கூறுகிறான்?
நன்மையின் எடை கனமாக இருப்பவர்கள். அல்குர்ஆன் 7:8
- ஷைத்தான் யாருடைய நண்பன் என அல்லாஹ் கூறுகிறான்?
நம்பிக்கையில்லாதவரின் நண்பன். அல்குர்ஆன் 7:27
- யாரை நான் நேசிப்பதில்லை என அல்லாஹ் கூறுகிறான்?
அளவுகடந்து விரயம் செய்பவர்களை. அல்குர்ஆன் 7:31
- பயபக்தி கொண்டு திருந்தியவர்களுக்கு எது இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?
அச்சமும் இல்லை, துக்கமும் இல்லை. அல்குர்ஆன் 7:35
- காஃபிர்களுக்கு எது இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?
பாவமன்னிப்பு. அல்குர்ஆன் 4:18
- யாரை தொழுகைக்கு நெருங்காதீர்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
போதையில் இருப்பவர்களை. அல்குர்ஆன் 4:43
- முஃமின்கள் என்ன செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியவேண்டும். அல்குர்ஆன் 8:1
- அல்குர்ஆன் எத்தனை முறைகளின்கீழ் இறங்கியதாக நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்?
ஏழு முறைகளின் கீழ். உமர்(ரழி), புகாரி:2419
- யாருடைய வீடுகளை எரித்துவிட நினைத்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்?
கூட்டுத்தொழுகைக்கு வராதவர்களின் வீடுகள். அபூஹுரைரா(ரழி), புகாரி: 2420
- நபி(ஸல்) அவர்கள் எதற்காக தமது மேலாடையை மாற்றிப் போட்டார்?
மழைக்காக துஆ செய்யும்போது. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரழி), புகாரி:1011
- இறப்பின் நெருக்கத்தில் இருப்பவர்களி டம் எதை நினைவுபடுத்த நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
“லா இலாஹா இல்லல்லாஹ்” அபூசயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம்: 1672
- உங்கள்சப்தங்களையாருடையசப்தத்திற்கும்மேலாகஉயர்த்தஅல்லாஹ்தடைசெய்தான்?
நபியின் சப்தத்திற்கு. அல்குர்ஆன் 49:2 - அல்லாஹ்வின் தூதரிடத்தில் தமது சப்தங்களை தாழ்த்திக் கொள்பவரின் நிலை என்ன?
அவர்களது உள்ளங்களை பரிசுத்தமாக்கப்பட்டவர்கள். அல்குர்ஆன் 49:3
- இந்த மார்க்கம் எதுவரை வலிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள்?
குறையராக இருக்கும் 12 ஆட்சித் தலைவர்கள் வரை. முஸ்லிம்: 3721 - தெளிவாகப் பேச இயலாதவர் என யாரை பிர்அவ்ன் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்?
மூஸா (அலை). அல்குர்ஆன் 43:52
- ஞானத்தை கொண்டு வந்திருப்பதாக எந்த நபி கூறினார்?
ஈஸா நபி. அல்குர்ஆன் 43:63
- நீங்கள் செய்யாததை கூறுவது அல்லாஹ்விடம் எப்படி இருக்கிறது.
பெரிதும் வெறுப்புடையதாக. அல்குர்ஆன் 61:3
- ஆது கூட்டத்தார் எதைக் கொண்டு அழிக்கப்பட்டனர்?
வேகமாக சுழன்று அடிக்கும் கொடுங் காற்றால். அல்குர்ஆன் 69:6
- மனிதனை எந்த நிலையிலிருந்து படைத்த தாக அல்லாஹ் கூறுகிறான்?
மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்ததாக. அல்குர்ஆன் 96:2