அழைப்புப் பணி செய்வதென்பது அல்லாஹ்வின் சிபத்தாகும்!
அபூ இஸ்ஸத், இலங்கை
பரிசுத்த குர்ஆனில் சுமார் ஆயிரம் வசனங்கள், நன்மையை ஏவுவது தொடர்பாகவும், சுமார் ஆயிரம் வசனங் களை தீமையைத் தடுப்பது தொடர் பாகவும், வந்துள்ள நன்மையைக் கொண்டு ஏவி, தீமையை விட்டும் தடுத்து, நரகத்தைப் பற்றி எச்சரித்து, சொர்க்கத்தின் பக்கமாக வாருங்கள் என்று அழைப்புக் கொடுக்கும் சிபத்து அல்லாஹ்வைச் சார்ந்ததாகும். ஆக,
அல்லாஹ்வும் “தாயீ‘ ஆக பெரும் அழைப்பாளனாக இருக்கின்றான் எனவே அழைப்புப் பணி செய்வதென் பது அல்லாஹ்வின் சிபத்தாகும்:
(என்றென்றும் நிரந்தரமான) சாந்தி யின் வீடாகிய (சுவனலோகத்தின் அமைதி இல்லமாகிய–தாருஸ்ஸலாம் பக்கம்) அல்லாஹ் அழைக்கின்றான். (10:25) சொர்க்கத்திற்கு அமைதி இல்லம்–தாருஸ்ஸலாம் எனும் பெயரையும் அல்லாஹ் சூட்டுகின்றான். அதாவது சோதனைகள், குறைகள், துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், கவலைகள், நோய்கள் ஆகியவற்றிலிருந்து நிரந்தர மாகப் பாதுகாக்கப்பட்ட அமைதியான இல்லமாகும், சொர்க்கம் அதையே அல்லாஹ் உங்களை அமைதி இல்லத் திற்கு அழைக்கின்றான். (தஃபசீர் இப்னு கஸீர்: 4:49-493)
அல்லாஹ்வோ தனது கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கின்றான்:
(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை, அவர்கள் நம்பிக்கை கொள் ளும் வரை, நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள், இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக் கூடியவளாக இருந்தபோதிலும், அவளை விட முஃமி னான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணை வைக்கும் ஆண்களுக்கு, அவர்கள் நம்பிக்கை கொள்ளும்வரை (முஃமினான பெண்களு டன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர் கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனை விட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர் கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.
ஆனால் அல்லாஹ்வோ தனது கிருபை யால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கின்றான். (மேலும்), மனி தர்கள் படிப்பினை பெறுவதற்காகத் தனது வசனங்களை அவன் தெளிவாக விளங்கு கின்றான். (அல்குர்ஆன் 2:221) இணை கற் பிக்கும் பெண்கள், இணை கற்பிக்கும் ஆண் கள் ஆகியோர் நரகத்திற்கு அழைக்கின்றார் கள். அதாவது அத்தகையோருடன் நெருக்க மாகக் கலந்துறவாடுவது இவ்வுலகத்தின் மீது மோகம் கொள்வதற்கும், மறுமையை விட இவ்வுலகத்திற்கு முன்னுரிமை வழங்கு வதற்கும் தூண்டு கோலாக அமைந்துவிடும். இதன் முடிவு மிக மோசமானதாகவே இருக் கும். ஆனால் அல்லாஹ்வோ தனது கிருபை யால் மார்க்கத்தின் மூலம் சுவர்க்கத்தின் பக் கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக் கிறான். (தஃப்சீர் இப்னு கஸீர்1:694-698)
தமது இறைவனுடைய அழைப்புக்குப் பதிலளிப் போருக்கு நல்ல பிரதிபலன் கிடைக்கும் :
தமது இறைவனு(டைய அழைப் பு)க்குப் பதிலளிப்போருக்கு (நல்ல) பிரதி பலன் கிடைக்கும். “அவனு(டைய அழைப் பு)க்குப் பதிலளிக்காதோர்‘ இந்தப் பூமியி லுள்ள (செல்வங்கள்) அனைத்தும் அதனு டன் அதைப் போன்ற இன்னொரு மடங் கும் தமக்கு இருந்தாலும் அதை ஈடாகக் கொடுத்து விடுவார்கள் (ஆனாலும்) அவர்க ளுக்குக் கடுமையான விசாரணை உண்டு. அவர்களது புகலிடம் நரகமே! தங்குமிடங் களில் அது மிகவும் மோசமானது (13:18) தமது இறைவனு(டைய அழைப்பு)க்குப் பதிலளிப்போருக்கு அதாவது அல்லாஹ் வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து அவ னுடைய ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு அவன் கூறும் கடந்த காலம் மற்றும் எதிர் காலம் பற்றிய செய்திகளை உண்மையயன நம்பியவர்களுக்குப் பிரதிபலன் அதாவது நற்கூலி கிடைக் கும். (தஃப்சீர் இப்னு கஸீர் : 4:881-883, 18:88, 10:26)
அவனுடைய அழைப்புக்குப் பதிலளிக்கா தோருக்குக் கடுமையான விசாரணை உண்டு :
அவனு(டைய அழைப்பு)க்குப் பதில ளிக்காதோர் (13:18) அதாவது அல்லாஹ் வுக்குக் கீழ்ப்படியாதோர். இந்தப் பூமியி லுள்ள செல்வங்கள் அனைத்தும் அதனுடன் அதைப் போன்ற இன்னொரு மடங்கு நிரம்ப பொன்னும் அதைப் போன்ற இன் னொரு மடங்கும் தமக்கு இருந்து அது போல மறு உலகிலும் இருந்தாலும் அதை அனைத்தையும் அல்லாஹ் வழங்கும் வேத னையிலிருந்து தப்பிப்பதற்காக ஈடாகக் கொடுத்துவிடுவார்கள். ஆனாலும் அவர் களிடமிருந்து அது ஏற்கப்படாது. ஏனெ னில் உயர்ந்தோன் அல்லாஹ் மறுமை நாளில் அவர்களிட மிருந்து எந்த இழப்பீட்டையும், பரிகாரத்தையும், ஏற்கமாட்டான் மாறாக அவர்களுக்குக் கடுமையான விசாரணை உண்டு. அதாவது மறு உலகில் சிறிய மற்றும் பெரிய, அற்பமான மற்றும் பிரம் மாண்டமான ஒவ்வொரு செயல் குறித்தும் அவர்கள் துருவித் துருவி விசாரிக்கப்படு வார்கள் எவர் துருவித் துருவி விசாரிக்கப் படுவாரோ அவர் வேதனையிலிருந்து தப்பவே முடியாது. (தஃப்சீர் இப்னு கஸீர்: 4:881-883)
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் பாவ மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் நீங்கள் விரைந்து செல்லுங்கள்:
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் பாவமன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அதன் அகலம் வானங்கள் மற்றும் பூமி(யின் அகலம்) ஆகும். அது இறை யச்சமுடையோருக்காகத் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. (3:133)