தலையங்கம் :
இயக்க போதையில் இஸ்லாமிய இளைஞர்கள்!
இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் ஏதாவது ஒரு இயக்க போதையில் வீழ்ந்து விடாமல் அவர்களை சத்திய இஸ்லாத்தில் நிலைபெறச் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். தற்போது உள்ள கால சூழலில் குழப்பமான இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல இயக்கங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு அழகிய வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டு மக்களை அழைக்கிறார்கள்.
ஆனால் அப்படி அவர்களைப் பின்பற்றி செல்லும்பொழுது தனது இயக்கத்தின் அடிமைகளாக அந்த இளைஞர்களை மாற்றுகிறார்கள். அல்லாஹ்வுடைய வேதம் அல்லாஹ்வுடைய தூதர் வழிகாட்டுதல்களை விடுத்து இயக்க தலைவரின் சொந்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இறைத்தூதரை விட இயக்க தலைமையை நேசிக்கும் அளவிற்கு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். ஏதாவது ஒன்றுமில்லாத ஒரு பதவியை பெரிதாக காட்டி தலைவர் இளைஞர் அணி செயலாளர் என்றெல்லாம் இல்லாத ஒன்றை உருவாக்கி அல்லது நாங்களும் சமூக சேவை செய்கிறோம் என்ற பெயரில் சமூக சேவகர்களாக தன்னை முகநூலில் பகிர்ந்து கொள்வதற்காகவும் எப்படியோ ஒரு வகையில் இயக்கங்கள் அனைத்தும் இளைஞர் களுக்கு வலை விரித்துள்ளன.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர் \கள் முன்பே எச்சரித்துள்ளார்கள். ஒரு காலம் வரும் அந்த காலத்தில் நரகத்தின் வாயில்களில் நின்றுகொண்டு அழைப்பாளர்கள் அழைப்பார்கள். அவர்களைப் பின்பற்றிச் சென்றால் நரகத்தில் தள்ளி விடுவார்கள் என்று இன்று நடக்கும் இயக்க ஆள் பிடிப்புக்கு மிகவும் பொருந்தி போகின்ற இந்த நபி மொழியை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு நரகத்திலிருந்து ஒவ்வொரு இளைஞனும் தப்பிக்க வேண்டும்.
சமுதாய பற்று என்பார்கள். இந்த சமுதாயத்தை உன்னை விட்டால் யார் பாதுகாப்பார்கள் என்பார்கள், யார் போராடுவார்கள் என்பார்கள், அடக்குமுறைக்கு எதிராக என்பார்கள், பள்ளி வாசலை மீட்பதற்கு என்பார்கள், மதரசா வெள்ளி விழா என்பார்கள், பித்அத் ஒழிப்பு மாநாடு என்பார்கள், சிர்க் ஒழிப்பு மாநாடு என்பார்கள், சீர்திருத்தம் என்று சொல்லி சமூகத்தை கெடுப்பார்கள், ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம் என்பார்கள். ஆர்ப்பறிக்கும் நரகின் பக்கம் அழைப்பார்கள் எச்சரிக்கை! ஆனால் இது அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைகளில் இருந்து எவ் வளவு தூரம் என்று சிந்திக்க விடமாட் டார்கள்.
எச்சரிக்கை! சமுதாய இளைஞர்களை முஸ்லிம் பெரியோர்களே, தாய் மார்களே, சகோதர சகோதரிகளே! பிரி வினை இறைக் கட்டளைக்கு மாறுபாடு வதாகும். எல்லா ஊர்களிலும் நம் முன் னோர்களால் ஏற்படுத்தப்பட்ட முஸ் லிம் ஜமாஅத் கட்டமைப்பு உள்ளது. அந்தக் கட்டமைப்பில் சில குறைபாடுகள் உள்ளன. அதை சரி செய்து இறைத் தூதரின் வழியை பின்பற்றி ஒரே கூட்ட மாக ஒரே ஜமாஅத்தாக இயக்கங்களை விட்டு எல்லாம் வெளியேறி தீனை நிலைநாட்ட வேண்டும் என்ற சிந்தனையோடு ஒவ்வொருவரும் உளமாற செயல்பட்டால் இன்றைய உலக குழப்பங்களில் இருந்து தப்பித்து நரக நெருப்பில் இருந் தும் தப்பித்து சுவனத்தை அடைவோம்.