எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி, பின்னர் அதில் உறுதியாக இருந்தோரின் சிறப்புகள்
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
(எனினும்) நிச்சயமாக எங்கள் இரட் சகன் அல்லாஹ்தான் என்று கூறி, பின்னர், (அதன்மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார் களே அத்தகையோர் அவர்களின் மீது மலக்கு(கள் எனும் வானவர்)கள் (மரண வேளையில்) இறங்கி (அவர்கள் செல்ல இருக்கும் மறுமையைப் பற்றி) நீங்கள் அஞ்சாதீர்கள், பயப்படாதீர்கள், (நீங்கள் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகம் யாவற்றையும் பற்றி) கவலையும்படாதீர்கள். நீங்கள் வாக்களிக் கப்பட்டுக் கொண்டிருந்தீர்களே, அத்தகைய சுவனபதியைக் கொண்டு நன்மாராயம் பெறுங்கள் எனக் கூறுவார்கள். (அல்குர் ஆன் 41:30) இதில்,
நிலைத்திருத்தல் என்பது எதில்? எவ்வாறு?
நிச்சயமாக யார் இரட்சகன் அல்லாஹ் தான் என்று கூறி பின்னர் அதிலேயே உறுதி யாக நிலைத்திருந்தார்களோ அவர்களிடம் வானவர்கள் வருவார்கள். அதாவது தூய்மையான இறை நம்பிக்கை கொண்டு அமல்களை அல்லாஹ்வுக்காக என்று மட்டும் யார் செலுத்துகின்றார்களோ அவர் களுக்கு அல்லாஹ் வகுத்தளித்த நெறிமுறை யின்படி யார் அவனை மட்டும் வழிபடுகின் றார்களோ அவர்களிடம் வானவர்கள் வரு வார்கள் என்று பொருள்.
அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் அறிவித்ததாக ஹாஃபிவ் அபூ யஅலா அல் மெளஸலி(ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இன்னல்லதீன காலூ ரப்புனல்லாஹு ஸும்மஸ்த காமூ எனும் (41:30)ஆவது வச னத்தை எங்களிடம் ஓதிக் காண்பித்தார்கள் அப்போது கூறினார்கள் மக்களில் சிலர். எங் கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறு கின்றனர். பின்னர் (ஆனாலும்) அவர்களில் பெரும்பாலானவர்கள் அவனை மறுத்து விடுகிறார்கள். (எனினும்) மரணம் வரையி லும் யார் இவ்வாறு கூறுகின்றாரோ அவர் நிச்சயமாக அதிலேயே நிலைத்தவர் ஆகி விட்டார். (திர்மிதி : 3173, நஸாயீ, முஸ்னது அல்பஸ்ஸார், தஃபஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 130-132)
ஸஈத் பின் இம்ரான்(ரழி) அவர்கள் கூறியதாவது: இன்னல்லதன காலூ ரப்புனல்லாஹு ஸும்மஸ்த காமூ எனும் (41:30)ஆவது வசனத் தொடரை அபூபக்கர் (ரழி) அவர்களிடம் ஓதிக்காட்டினேன். (அப்போது) அபூ பக்கர்(ரழி) அவர்கள் கூறி னார்கள். இவர்கள் யார் எனில் அல்லாஹ் வுக்கு எதனையும் இணை வைக்காமல் (இறுதி வரை) வாழ்ந்தவர்கள் ஆவர். (தஃப்ஸீர் தபரீ, அபூதாவூத் பாடம் உலகப் பற்றின்மை, தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 8, பக்கம்130-132)
இக்ரிமா(ரஹ்) அவர்கள் கூறியதாவது: வளமும், உயர்வும் மிக்க அல்லாஹ்வின் இறைநெறிநூலில் எந்த வசனம் மிகவும் சுலபமானது? என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், இன்னல்லதீன காலூ ரப்புனல் லாஹு ஸும்மஸ்த காமூ எனும் (41:30) ஆவது வசனத்தில், நிச்சயமாக யார் எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சியம் அளிப்பதில்) நிலைத்திருந்தார் களோ எனும் இந்த வசனத்தை ஓதினார்கள்.
இமாம் ஸுஹ்ரி(ரஹ்) அவர்கள் கூறிய தாவது: உமர்(ரழி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் நின்று கொண்டு இந்த (41:30) வசனத்தை ஓதினார்கள். பிறகு கூறினார் கள். அதிலேயே நிலைத்திருந்தார்கள் என்ப தன் பொருளாவது, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வை வணங்குவதி லேயே அவனுக்கு முற்றிலும் அடிபணிவதி லேயே அவர்கள் தொடர்ந்து நீடிக்கின்றார் கள். குள்ளநரிகள் நழுவுவதைப் போன்று அவர்கள் நழுவி விடவில்லை என்பதாகும். (முஸ்னத் அஹ்மத் பாடம், உலகப் பற்றின்மை, இப்னுல் முபாரக் பாடம் உலகப் பற்றின்மை, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 131)
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறி னார்கள்: பின்னர் (அதிலேயே) நிலைத் திருந்தார்கள் என்பதன் பொருள் ஓரிறைக் கடமைகளை நிறைவேற்றுவதில் நிலைத் திருந்தார்கள் என்பதாகும். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்8, பக்கம் 131) அபுல் ஆலியா(ரஹ்) அவர்கள் கூறியதாவது: பின்னர் (அதிலேயே) நிலைத்திருந்தார்கள் என்பதன் பொருள் வணக்க வழிபாட்டை யும், செயல்பாட்டையும் ஏகனாகிய அவ னுக்கு மட்டுமே உரித்தாக்கினார்கள் என்ப தாகும். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 132) இதனாலேயே,
ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) அவர்கள் இவ் வாறு பிரார்த்தனை செய்பவர்களாக இருந் தார்கள். யா அல்லாஹ்! நீ தான் எங்கள் இறைவன். (இறுதி நேரம் வரை நேர்வழி யில்) நிலைத்திருக்கும் பாக்கியத்தை எங்க ளுக்கு வழங்குவாயாக! (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 132) அல்லாஹ்தான் எனது இறைவன், அந்த அல்லாஹ்வின் மீதே நான் முழு நம்பிக்கை கொண்டேன் என்று கூறி அதிலேயே உறுதியாக, நிலைத்திருப் பீராக என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபி (ரழி), முஸ்லிம் : 62, திர்மிதி 2343, இப்னு மாஜா, முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 132) மேலும்,
வானவர்கள் நற்செய்தி கூறுவது :
நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல் லாஹ்தான் என்று கூறி பின்னர், (அதன்மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களே அத் தகையோர் அவர்களின் மீது மலக்கு(கள் எனும் வானவர்)கள் (மரண வேளையில்) இறங்கி (செல்ல இருக்கும் மறுமையைப் பற்றி) நீங்கள் அஞ்சாதீர்கள், பயப்படாதீர் கள், (நீங்கள் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகம் யாவற்றை யும் பற்றி) கவலையும் படாதீர்கள். நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தீர்களே, அத்தகைய சுவனபதியைக் கொண்டு நன் மாராயம் பெறுங்கள் எனக் கூறுவார்கள். அல்குர்ஆன் 41:30) இதற்கு,
முஜாஹித்(ரஹ்) அவர்களும், இஸ்மா யீல் சுத்தீ(ரஹ்) அவர்களும், கூறும் விளக்கம் என்னவெனில், (அஞ்சாதீர்கள், கவலைப் படாதீர்கள்) என்று கூறியவர்களாக மரணத் தின் பொழுது வானவர்கள் வருவார்கள். நீங்கள் அஞ்சாதீர்கள் என்றால், நீங்கள் முன் கூட்டியே நல் அமல்கள் செய்து அனுப்பி யுள்ள மறுமைக்கான விவகாரங்களைக் குறித்து அஞ்சாதீர்கள் என்று பொருள். கவலைப்படாதீர்கள் என்றால் பிள்ளைகள், குடும்பத்தினர்கள், சொத்துக்கள், அல்லது கடன்கள் எனும் உலகம் தொடர்பான விவ காரங்களில் எவற்றையயல்லாம் நீங்கள் விட்டுவிட்டு வந்திருக்கின்றீர்களோ அவற் றைக் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள். அவ்விவகாரங்களில் நாங்கள் உங்களுக்குப் பிரதிநிதிகளாக இருப்போம் என்று பொருள்.
உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த சுவனத்தை (ப் பற்றி நற்செய்தியைக்) கொண்டு மகிழ்ந்திருங்கள் (41:30) இறை நம்பிக்கையாளரின் உயிரை நோக்கி (அவ ரது மரணத்தின் போது வந்த) வானவர்கள் கூறுவார்கள். தூய உடலில் உள்ள தூய உயிரே! நீ வெளியே வா! நீ (இதுவரை இவ் வுடலை) வளப்படுத்திக் கொண்டிருந்தாய். (இப்பொழுது) நல்லருளையும், நறுமணத் தையும் நோக்கி, சினம் கொள்ளாத இறை வனை நோக்கி நீ வெளிக்கிளம்பு என்று வானவர்கள் கூறுவார்கள் என்று அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பராஉபின் ஆஸிப்(ரழி) முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 133) நல்லடியாரின் மரணத்தின் பொழுதும், அவ ரது மண்ணறையில் இருக்கும் பொழுதும், (மறுமையில்) அவர் எழுப்பப்படும் நேரத் திலும் வானவர்கள் அவருக்கு நற்செய்தி சொல்வார்கள். (ஜைத் பின் அஸ்லம் (ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 133)
நாங்கள் இவ்வுலக வாழ்விலும், உங்க ளின் பாதுகாவலர்களாக இருந்தோம். மறுமையிலும் (உங்களுக்குப் பாதுகாவலர் களாக, உதவியாளர்களாக, இருப்போம்) அ(ச்சுவனத்)தில் உங்கள் மனம் விரும்பி யவை உங்களுக்குண்டு. இன்னும், அதில் நீங்கள் தேடுகின்றவை உங்களுக்குண்டு. (மேலும் பாவங்களை) மிகவும் மன்னிப் பவனான பெருங் கிருபையுடையோனிட மிருந்துள்ள விருந்தாக (இது உங்களுக் குண்டு என்றும் வானவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:31)
அதாவது : உலக வாழ்க்கையில் உங்க ளுக்கு இணை பிரியாத நண்பர்களாக இருந் தோம். அல்லாஹ்வின் கட்டளைப்படி உங் களைச் செம்மைப்படுத்திக் கொண்டும் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிக் கொண்டும் உங்களைப் பாதுகாத்துக் கொண்டும் இருந் தோம். இவ்வாறே மறுமையிலும் நாங்கள் உங்களுடனேயே இருப்போம். மண்ணறை யிலும், எக்காலம் ஊதப்படும் பொழுதும், விரக்தியை அகற்றி உங்களுக்கு ஆறுதலை, அமைதியை, அளிப்பவர்களாக இருப்போம்.
உங்கள் மனம் விரும்புகின்றவை அனைத்தும் உங்களுக்கு அங்கே கிடைக் கும் (41:31). அதாவது எவற்றையயல்லாம் உங்களுடைய மனங்கள் விரும்புமோ, எவற்றின் மூலம் உங்களுடைய கண்கள் குளிர்ச்சி அடையுமோ அவற்றில் இருந்து நீங்கள் தேர்வு செய்யும் அனைத்தும் சுவனத் தில் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட் பவை அனைத்தும் உங்களுக்கு அங்கே கிடைக்கும் (41:31). அதாவது எவற்றை எப் பொழுது நீங்கள் கேட்டாலும் அவற்றைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் தேர்ந் தெடுப்பதைப் போன்றே உங்கள் முன்னி லையில் அவையயல்லாம் ஆஜராகி இருக்கும் என்று வானவர்கள் கூறுவார்கள். மேலும் இவையயல்லாம்,
மிகவும் மன்னிப்போனும், மிகுந்த கிருபையுடையோனுமாகிய (இறை)வனி டமிருந்து (உங்களுக்குக்) கிடைக்கும் உப சரிப்பாகும் (41:32) அதாவது விருந்தும், உபசரிப்பும், அருள் வழங்கலும் ஆகும். மன்னிப்பாளன் என்றால் உங்களுடைய பாவங்களை மன்னிப்பவன் என்று பொருள். மிகுந்த கிருபையாளன் என்றால் பாவங்களை மன்னித்து, அவற்றை மறைத்த வகையில் கிருபை புரிந்து பரிவுகாட்டிய வகையில் உங்களுக்குக் கிருபை பொழிந்த வன் ஆவான்.