ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : மனிதர்களைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் மலக்குகளிடம் கூறும் பொழுது, அல்லாஹ் அவர்களிடம் கருத்து எதுவுமே கேட்காத நிலையில் மலக்குகள் அல்லாஹ்வுக்குக் கருத்துக் கூறுகிறார்கள். எனவே அவர்களை அடக்கும்விதமாக, அல்லாஹ், “நீங்கள் அறியாததை நான் அறி வேன்‘ என்று கூறுகிறான். அல்லாஹ் கூறி யதை மறுபேச்சு இல்லாமல் நிறைவேற்றும் மலக்குகள் இப்படிக் கருத்துக் கூறுகிறார் களே! கருத்துச் சுதந்திரத்தை அல்லாஹ் மலக்குகளுக்கு வழங்கி உள்ளானா? இதன் முழு விளக்கம் தரவும். முஹம்மது மொய்னுதீன்.
பதில் : தங்கள் வினாவிற்கு விடை காணும் முன்பாக, சில வியங்களைத் தெளிவு படுத்திக் கொள்வோம். மனிதர்களாகட்டும், மலக்குகளாகட்டும், யாராயிருந்தாலும் அல் லாஹ் அறிவித்துத் தந்தால்தான், எவரும் எதையும் அறிந்துகொள்ளமுடியும். “அவன் நாட்டமின்றி அவன் ஞானத்திலிருந்து எவ ரும் எதனையும் அறிந்து கொள்ள முடியாது‘ (அல்குர்ஆன் 2:255 ஆயத்துல் குர்ஸீயில் ஒரு பகுதி). எல்லாப் பொருட்களின் பெயர் களை ஆதம்(அலை) அவர்களுக்கு அல் லாஹ் கற்றுக் கொடுத்ததால், ஆதம் (அலை) அவர்கள் அவற்றின் பெயர்களை விவரித் தார்கள். மலக்குகளுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்காததால் மலக்குகளால் பெயர் களைக் கூறமுடியவில்லை.
“இன்னும் (அல்லாஹ்) எல்லாப் பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக் குக் கற்றுக் கொடுத்தான்‘ அல்குர்ஆன் 2:31
“ஆதமே! அப்பொருட்களின் பெயர் களை அவர்களுக்கு விவரிப்பீராக! என்று (இறைவன்) சொன்னான். அவர் அப்பெயர் களை விவரித்தார்‘ அல்குர்ஆன் 2:33
மலக்குகளுக்கு அல்லாஹ் பெயர் களைக் கற்றுக் கொடுக்காததால், மலக்கு களால் பெயர்களைக் கூறமுடியவில்லை என்பதை திருமறையின் 2:31,32 வசனங்களி லிருந்து அறிய முடிகிறது.
தாங்கள் வினா எழுப்பிய 2:30 இறை வசனத்தை இப்போது காண்போம்.
“இன்னும், உம் இறைவன் வானவர் களை நோக்கி, “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) அமைக்கப் போகிறேன்‘ என்று கூறியபோது, அவர்கள், “குழப்பத்தை உண்டாக்கி இரத்தம் சிந்துவோரையா நீ அதில் அமைக்கப் போகிறாய்? இன்னும் நாங்களோ, உன் புகழ் ஓதியவர்களாக, உன்னைத் துதித்து உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்.’ அதற்கு இறைவன், “நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்‘ எனக் கூறினான்.’ அல்குர்ஆன் 2:30
பூமியில் குழப்பம் உண்டாக்கி, இரத் தம் சிந்துவது மனிதர்களின் தன்மைகளுள் உள்ளவை என்ற சரியான எண்ணம், மனிதர்கள் படைக்கப்படுவதற்கு முன்பே, மலக்குகளுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் மலக்குகள் கருத்துக் கூறுகிறார்கள்.
மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே மலக்குகளுக்கு இந்த எண்ணம் எப்படி ஏற் பட்டது? மேலே காட்டியுள்ள ஆயத்துல் குர்ஸி(2:255) வசனத்தின் பிரகாரம், இறை வன் ஏற்கனவே அறிவித்துத் தந்திருந்தால் மட்டுமே. மலக்குகள் இப்படியான கருத் தைக் கூறியிருக்க முடியும். ஆகவே மனிதர் களைப் பற்றி இறைவன் மலக்குகளுக்கு ஏற் கனவே கற்றுக் கொடுத்துள்ளதால்தான் மலக்குகள் கருத்துக் கூறியிருக்கிறார்கள். சுயமாக நாம் இம்முடிவிற்கு வரவில்லை. மேலேயுள்ள 2:255 வசனப்பகுதியே இதற்கு அடிப்படை. மேலும் 2:32 வசனத்தில் மலக் குகளே அவ்வாறு கூறுவதைப் பாருங்கள்.
“அவர்(மலக்கு)கள், (இறைவா!) நீயே பரிசுத்தமானவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர எதைப்பற்றியும் எங்க ளுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகம் மிக்கவன் எனக் கூறினார்கள்.’ அல்குர்ஆன் 2:32
எனவே மலக்குகள் மனிதர்களைப் பற் றிய கருத்துக் கூறியதில் ஆச்சரியமில்லை. தங்களுக்குத் தெரிந்ததைத் தான் கேட்டுள் ளார்கள். “அல்லாஹ்வைப் புகழ்ந்தவர் களாக, துதித்தவர்களாக, அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மையைப் போற்றியவர் களாக தாங்கள் இருக்கும்போது, மனிதர் களை எதற்காகப் படைக்க வேண்டும்?’ என் பதுதான் மலக்குகளின் ஆதங்கம்.
மனிதர்களை எதற்காக அல்லாஹ் படைக்கப் போகிறான் என்பது. அல்லாஹ் மலக்குகளுக்கு அறிவித்துத் தராத வியம். எனவேதான், “மனிதர்களை எதற்காகப் படைக்கப் போகிறாய்?’ என வினவிய மலக் குகளிடம், “நீங்கள் அறியாதவற்றையயல் லாம் நிச்சயமாக நான் அறிவேன்‘ என அல் லாஹ் பதிலளிக்கிறான்; அல்லாஹ் அறிவித் துத் தராத வியங்களிலும், சிந்தனை செய்து மலக்குகள் வினை எழுப்பியுள்ளார் கள். சிந்திக்கும் திறன் மலக்குகளுக்கு உண்டு என்பதையும் இதிலிருந்து அறிய முடிகிறது.
இப்போது தங்களின் வினாவிற்கு வருவோம்.
அல்லாஹ் கூறுவதற்கு மறுபேச்சு இல் லாமல் நிறைவேற்றும் மலக்குகள் இப்படிக் கருத்துக் கூறுகிறார்களே என்பதுதான் தங்க ளின் வினா. அதுமட்டுமல்ல தங்களுக்குள் ளேயுள்ள ஆச்சரியமும் கூட இது.
மலக்குகள் மறு பேச்சு பேசாதவர்கள் என்ற முடிவிற்கு வந்த தாங்கள், இப்படிப் பட்ட முடிவிற்கு எப்படி வந்தீர்கள்? அல் லாஹ் திருமறையில் அது போன்று எதையும் அறிவித்திருக்கவும் இல்லை. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் அதுபோன்று எதையும் தெரிவிக்கவும் இல்லை, மலக்குகள் சிந்திக் கும் திறனற்றவர்கள்,மறுபேச்சு பேசாதவர் கள் என்ற தவறான எண்ணம் பலரிடம் இருப்பதற்குக் காரணம். காலம் காலமாக மக்கள் இப்படியான கருத்துக்களால் போதிக்கப்பட்டு வருவதன் விளைவே இது. உண்மை அதுவல்ல.
தாங்கள் எடுத்துக்காட்டிய 2:30 இறை வசனமே இதற்குப் போதிய சான்றாக அமைந்துள்ளது. மலக்குகள் தங்களின் கருத் தைக் கூறுகிறார்கள்; அவர்கள் சிந்தித்து வினா எழுப்பியதில் இறைவன் அந்த வினா விற்கு பதிலளிக்கவும் செய்கிறான். இறைவ னின் பதிலைக் கேட்ட மலக்குகள் தங்களின் தவறை உணர்ந்து இறைவனைப் புகழ்கின் றனர். (2:32)
கருத்து சுதந்திரத்தை இறைவன் மலக் குகளுக்கு மட்டும் அளிக்கவில்லை. ஜின் இனத்தைச் சார்ந்த இப்லீஸ் (அல்குர்ஆன் 18:50) ஆதமுக்கு சுஜூது செய்யும்படியான அல்லாஹ்வின் கட்டளையை மறுத்ததோ டல்லாமல் அவன் சுஜூது செய்யாததற் கான காரணங்களை கூற அல்லாஹ் சுதந்தி ரம் வழங்கியிருப்பதை 7:12, 15:33 என இன் னும் சில வசனங்களிலும் அறியமுடிகிறது.
அது மட்டுமா? பாவம் செய்த பாவி ஒருவர் மறுமையில் தனது பாவத்தை நிரூ பிக்க முடியுமா? என அல்லாஹ்விடமே கேட்டு வாதாடி தோற்றுப்போகும் பரிதாப நிலையை ஹதீத்களில் பார்க்கவும் முடிகிறது.
சுதந்திரத்தை அல்லாஹ் வாரியே வழங்கியிருக்கிறான். அதைத் தவறாகப் பயன்படுத்துவது இப்லீஸின் வேலை யாகும்.
ஐயம் : தொழுகையின் அத்தஹிய்யாத்தில் இறுதியில் இரண்டு சலாம் கொடுத்து தொழுகையை நிறைவுசெய்கிறோம். சலாம் யாருக்குக் கொடுக்கப்படுகிறது? ஃபைரோஸ் கான்
தெளிவு : ஹதீத்: “தொழுகையின் இறுதியில் உங்களின் இமாம்களுக்கும், ஒருவர் மற்ற வர்களுக்கும் சலாம் கூறிக்கொள்ள வேண் டும்‘ என்றும் நபி(ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். (ஒரு அறிவிப்பு) “நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்க மான (முகர்ரமான) மலக்குகளுக்கும், மற் றும் முஃமின்களுக்கும் சலாம் கூறுவார்கள். (மற்றோர் அறிவிப்பு) அறிவிப்பவர்: ஸமூரத்து பின் ஜுன்துப், நூல்கள்: அஹ்மத், ஹாக்கிம், ஃபஜ்ஜார்.
ஐயம் : ஸஜ்தா ஆயத்துக்களை ஓதினாலோ அல்லது ஓதக் கேட்டாலோ ஸஜ்தா செய்கி ரோமே. அந்த ஸஜ்தாவில் எதையும் ஓத வேண்டுமா? அல்லது சுப்ஹான ரப்பியல் அஃலா மட்டும் 3 தடவை தொழுகையில் ஓதுவது போல ஓதவேண்டுமா? அபூபக்கர் சித்திக்
தெளிவு : நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா ஆயத் துக்களை ஓதி ஸஜ்தா செய்யும்போது, ஸஜ்தாவில், “ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலக்கஹு வ ஸவ்வரஹு, வ க்க ஸம்அஹு, வ பஸரஹு, பிஹவ்லிஹு, வகுவ்வத்திஹு ஃபதபாரக்கல்லாஹு அஹ்சனுல் காலிக்கீன்‘ என்று ஓதுவார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் கள்: திர்மிதி, அபூதாவூது, தாரகுத்னீ, பைஹகீ, ஹாக்கிம்.
பொருள் : ஆக்கும் திறன், அழிக்கும் திறன் ஆகியவற்றால் சுயமாக எனது முகத்தைப் படைத்து உருவாக்கியவனுக்கு, அது அடி பணிந்து விட்டது. மேலும் கேட்கும் சக்தி யையும், பார்க்கும் சக்தியையும் அவனே அதில் ஏற்படுத்தினான். மேலும் அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன், மிக அழகான படைப்பாளன்.