ஒரே அமீர்! ஒரே ஜமாஅத்! என்பது மட்டுமே நமது நோக்கம்!
அஹமது இப்ராஹிம்
ஒரே நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே அதேபோன்று ஒரே அமீர், ஒரே ஜமாஅத் என்பது மட்டுமே நமது நோக்கம்.
உலகளாவிய முஸ்லிம்கள் எவரும் உண்மையான கிலாஃபத் ஆட்சியின் கீழ் இல்லை.
உலகில் நிராகரிப்பாளர்களும் முஸ்லிம் களும் ஆகிய இரண்டு சாரார்களும்தான் ஆட்சியில் இருக்கின்றனர்.
நிராகரிக்கும் அதோடு கொடுங்கோல் ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட ஆட்சியாளர்களின் கீழ் எப்படி வாழ வேண் டும் என்ற முன்மாதிரியை நபி(ஸல்) அவர் கள் காட்டித் தரவில்லை என்று மார்க்கத்தை நன்கு அறிந்தவர்களே நினைக்கும் அள வுக்கு பயங்கரவாத பாஜக ஆட்சியாளர் களின் அத்துமீறல்கள் எல்லைமீறிச் செல் கின்றன.
ஆம்! இதுபோன்ற அத்துமீறலான ஆதிக்கத்தினரின் கீழ் நபி(ஸல்) அவர்களும் சத்திய ஸஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார் கள் என்பதற்கு அவர்கள் வாழ்ந்த மக்கா வின் பதிமூன்று வருட வாழ்க்கையில் நமக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கவே இருக்கிறது.
இதோ அந்த ஆதாரம் :
கப்பாப் இப்னு அல் அரத்(ரழி) அறிவித்தார்:
இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்க ளுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங் களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத் துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக் காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலைமீது வைக்கப் பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை (பழுக்கக் காய்ச்சிய) இரும் புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம் பையும் சென்றடைந்துவிடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணை யாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழு மைப்படுத்தப்படும் எந்த அளவிற்கென் றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆ‘ விலிருந்து “ஹளர மவ்த்‘ வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் வியத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள்தான் (கொடுமை தாளா மல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள் என்று கூறினார்கள். புகாரி: 3612, அத்தியா யம்: 61, நபி(ஸல்) அவர்களின் சிறப்புகள்:
இத்தகைய அரிய உபதேசத்தை நமக் களித்த நபி(ஸல்) அவர்கள் உபதேசப்படி பொறுமையாகவும் சகிப்புத்தன்மையுடன் முஸ்லிம்களாகிய நாம் நமது இந்தியாவில் வாழ்வோமேயானால் நபி(ஸல்) அவர்களுக் கும், நபித்தோழர்களுக்கும் மதீனாவில் ஆட்சி அதிகாரம், எல்லாம் வல்ல அல்லாஹ் வினால் வழங்கப்பட்டது போன்று நமக்கும் இன்ஷா அல்லாஹ்! வழங்குவான்.
ஆனால் ஒரே ஒரு நிபந்தனை :
இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இறைவன் அல்லாஹ்! ஒரே நபி முஹம்மத்(ஸல்) அவர்களை மட்டுமே பின் பற்றுவோம். ஒரே அமீர், மத்ஹபுகள் மற்றும் இயக்கப் பிரிவுகளற்ற ஒரே சமுதாயம், ஒரே நாளில் ரமழான் நோன்பு, ஒரே நாளில் பெருநாள் என்ற ஒரே பிறை என்ற நிலைக்கு வருவதுதான் அந்த நிபந்தனை.
நடக்குமா:
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நற்செயல்கல் புரிகிறார் களோ அவர்களை, அவர்களுக்கு முன்னி ருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக் கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியா ளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சய மாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களு டைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என் னோடு (எதையும், எவரையும்) இணைக்க வைக்காது. அவர்கள் என்னையே வணங்கு வார்கள்;’ இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அல்குர்ஆன் : 24:55)