சந்திர காலண்டர்!
அஹமது இப்ராஹீம் 1400 ஆண்டுகளுக்கு முன் ஃபஜ்ர் தொழுகை நேரம் அறிய கிழக்கு வெளுக் கின்றதா என வானத்தை நபி(ஸல்) அவர்கள் பார்த்து அறிந்து தொழுதார்கள். கிழக்கு வெளுக்கு முன் ஸஹர் சாப்பிட்டார்கள்! வானத்தில் சூரியன் மறையும்போது நோன்பு திறந்தார்கள்.
பள்ளிவாசல் முற்றத்தில் ஒரு குச்சு ஒன்று நட்டி அதன் நிழல் சாய்வதைப் பார்த்து ளுஹர் அஸர் தொழுதார்கள்.
அருமைத் தம்பி அவர்களே!
இப்படிப்பட்ட நபிவழியை விட்டு விட்டு கடிகாரத்தைப் பார்த்து தொழுவதும் நோன் பில் ஸஹர் சாப்பிடுவதும் மீண்டும் கடிகாரத் தைப் பார்த்து நோன்பு திறப்பதும் சரிதானா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
உண்மையில் சரிதான்!
காரணம் சூரிய சந்திரன் உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவை உலகம் தோன்றிய காலம் முதல் ஒரு நொடி கூட முன்பின் இல்லாமல் சுழல்வதால்தான் அவ்விதம் நடைபெறுகின்றது.
அதே அடிப்படையில் தான் சந்திரன் உதயம் அஸ்தம் மூலம் நாட்கள் மிகத் துல்லியமாக நவீன உபகரணங்கள் மூலம் கணக்கிடப்பட்டு நபிவழிக்கு முரணில்லாமல் நபிவழியின் அடிப் படையில் அமல் செய்கின்றோம்.
இதைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நெறிநூலான அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்!
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ண யிக்கப்பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (அல்குர்ஆன் 55:5)
பிறை பார்த்து நோன்பு பிடியுங்கள் என்ற ஹதீஃதில் ருஃயத்திஹி மற்றும் தரவுல் ஹிலால் போன்ற அரபிப் பதங்கள் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் பார்த்தல் கணக்கிடுதல் போன்ற பல பொருள்களை உள்ளடக்கியதாக உள்ளன.
அதேபோல் நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள் என்ற ஹதீஃதில் தொழக்கண்ட வாறே என்ற வார்த்தைக்கு அரபியில் “ஸல்லு கமா ர அய்துமூனி‘ என்ற அரபிப்பதம் இடம் பெற்றுள்ளது.
இந்த ர அய்துமூனி என்ற வார்த்தையில் ருஃயத் என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. இதன்படி நபி(ஸல்) அவர்கள் சூரியனின் நிழலை கண்ணால் கண்டு அதனடிப்படையில் தங்கள் அமலை அமைத்துக் கொண்டார்கள்.
அதேபோல் நீங்களும் சூரியனின் நிழலைப் பார்த்து தொழுவதற்கு பள்ளிவாசல்களின் முற் றத்தில் ஒரு குச்சியை நட்டி அதன் நிழலைப் பார்த்து நேரத்தைக் கணித்தல்லவா தொழ வேண்டும்.
மாறாக கடிகாரத்தை அதுவும் டிஜிட்டல் கடிகாரத்தை வைத்துக் கொண்டல்லவா தொழுகின்றீர்கள். அதேபோல்தான் நபி(ஸல்) அவர்களின் இந்த செயலுக்கு சற்றும் மாற்றமில் லாமல் அதே முறையில் அமல் செய்வதற்கு கடி காரத்தையும் கம்ப்யூட்டர் ஸேட்டிலைட் போன்ற உபகரணங்கள் மூலம் நோன்பு தொழுகை போன்ற அமல்களை மிகத் துல்லிய மாகக் கணக்கிட்டு அமல் செய்கின்றோம்!
எனவே நபிவழியின் அடிப்படையில் கடிகாரம் பார்த்து தொழுவதும், கடிகாரம் பார்த்து ஸஹர் சாப்பிடுவதும், கடிகாரம் பார்த்து நோன்பு திறப்பதும் எப்படி சரியாகுமோ அப்படியேதான் சந்திர காலண்டர் அமைத்து அதன்படி துல்லியமான நாளில் நோன்பு வைப் பதும் சரியானதேயாகும். வானத்தில் போய் பிறையைத் தேட வேண்டிய அவசியம் தற் போது தேவையே இல்லை!