முஸ்லிம்கள் யாரை பின்பற்றவேண்டும்?
இந்துக்கள் தங்களது சமய சாமியார் களையும் கிறித்தவர்கள் தங்கள் பாதிரிமார் களையும் பின்பற்றுவதைப் போன்று முஸ்லிம்களும் சம்பளத்திற்காக மார்க்கப் பணியாற்றும் மவ்லவிமார்களைத்தான் பின் பற்ற வேண்டுமா என்பது பற்றி திருகுர்ஆன் என்ன உத்திரவிடுகிறது என்பது பற்றி ஆய்வு செய்யும் பதிவு இது:
அல்குர்ஆன் 36:21 வசனம் தங்களைப் போன்ற அப்பாவிகளுக்காகவே எல்லாம் வல்ல அல்லாஹ்வால் இறக்கப்பட்டுள்ளது என்பதை ஞாபகம் ஊட்டுகின்றோம்.
உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்: இன் னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள் (என்றும் அவர் கூறினார்) அல்குர்ஆன் 36:21
கூலிக்காக மார்க்கப்பணி செய்யும் தவ்ஹீத், தரீக்கா மற்றும் மத்ஹபு மவ்லவி கள் நேர்வழியில் இல்லை என்பதை அல் லாஹ்வே கூறுகின்றான்.
எனவே நேர்வழிக்கு உத்திரவாதம் உறுதி செய்யப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்று வோம்! இம்மை மறுமை வெற்றி பெறுவோம்!!
நபி வழியே! நம் வழி!!
இம்மை மறுமை ஈடேற்றம் நபி(ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றுதலில் தான் அடங்கியுள்ளது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
மற்றபடி மனிதப் புனிதர்களான நபித் தோழர்களின் ஈமானை எடை போடும் அவசியம் நமக்கில்லை.
நமக்குத் தேவையில்லை!
நபித் தோழர்களைப் பற்றி எல்லாம்வல்ல அல்லாஹ் நம்மிடம் விசாரிக்கப் போவதுமில்லை!
ஆதாரம் :
அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட் டது. அவர்கள் சம்பாதித்தவை அவர் களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:134)
ஏனெனில் நபித்தோழர்கள் என்ற வாச லின் வழியாக புரோகிதர்களான மவ்லவி கள் மார்க்கத்தின் ஆதிக்கவாதிகளாக உள்ளே நுழைந்து தூய மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தை வெறும் வெற்று வேதாந்தம் பேசும் மதமாக ஆக்கத் துடியாய் துடிக்கின்றனர்.
இதற்காகத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப் பதை விட நபித்தோழர்கள், இமாம்கள் போன்ற மனிதர்களில் சிறந்த நல்லடியார் களை அவதார நாயகர்களாக்க ஸலஃபுகள் படாதபாடு படுத்துகின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்நிலையிலும் எந்தப் பிரச்சனை களுக்கும் தீர்வு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் நுபுவ்வத்துடைய 23 ஆண்டு கால வாழ்க்கைக்குள் அடக்கம் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு அதன் படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பாக்கியத்தை எல்லாம் வல்ல அல் லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் வானாக! ஆமீன்!