ரமழான் இரவுத் தொழுகை!
K.M.H. அபூ அப்தில்லாஹ்
மவ்லவிகளால் “தராவீஹ்‘ என்று அறி முகப்படுத்தப்படும் ரமழான் இரவுத் தொழுகை, நபி(ஸல்) அவர்களால் தொழுது காட்டப்பட்டதும், உமர்(ரழி) அவர்கள் பிந்திய இரவில் தொழுததும், முந்திய இர வில் முஸ்லிம்கள் ஜமாஅத்தாகத் தொழக் கட்டளையிட்டதும் 8+3=11 ரகாஅத்துகள் மட்டுமே என்பதற்கு மறுக்க முடியாத ஆதா ரங்களை அந்நஜாத், 1986லிருந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது. அதை மறுத்து இந்த மவ்லவிகள் இதுவரை ஆதாரப்பூர்வமான எந்த ஹதீதையும் தர வில்லை. அதற்கு மாறாக மழுப்பலான, பொது மக்களைத் திசைத் திருப்பும் தந்திர மான பதில்களைத் தந்து வருவதாகப் பல முறை தெளிவுப்படுத்தி விட்டோம்.
நபி(ஸல்) அவர்களும் ரமழான் இரவுத் தொழுகை 20+3 தொழுததில்லை. உமர் (ரழி) அவர்களும் 20+3 தொழுததுமில்லை; மக்களுக்குத் தொழக் கட்டளையிட்டது மில்லை என்பதே உண்மையாகும். நபி (ஸல்) அவர்கள் மீதும், உமர்(ரழி), அவர்கள் மீதும் துணிந்து பொய் சொல்கிறவர்கள் மட் டுமே இவ்வாறு 20+3 தொழுதுள்ளார்கள் என்று கூறமுடியும். அவர்களுக்குரிய ஒரே ஒரு ஆதாரம் “உமர்(ரழி) அவர்களின் காலத் தில் மக்கள் 20 ரகாஅத்துகள் தொழுதார்கள்‘ என்று ஸாயிப் இப்னு யஸீத் அறிவிக்கும் செய்தி மட்டுமே. உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் தொழுததை உமர்(ரழி) அவர்களோடு சம்பந்தப்படுத்தி இந்த மவ் லவிகள் கூறி வருவது எதுபோல் இருக்கிற தென்றால், நபி(ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலையை வணங்கிக் கொண்டிருந் தார்கள் என்று கூறி சிலை வணக்கத்தை நியாயப்படுத்துவது போல் இருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் எப்படி சிலை வணக்கத் தைத் தடுத்து ஒரே இறைவனை வணங்க கட்டளையிட்டார்களோ அதேபோல், உமர்(ரழி) அவர்கள் மக்கள் 20+3 தொழுது கொண்டிருந்ததைத் தடுத்து 8+3 தொழக் கட்டளையிட்டுள்ளார்கள் என்று விளங்கும் வகையில், உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு சுஃபு(ரழி), தமீமுத்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும் கட்டளையிட்ட செய்தி அதே ஸாயிப் இப்னு யஸீதால் அறிவிக்கப்பட்டதை இமாம் மாலிக்(ரஹ்) தனது முஅத்தாவிலும் (பக்.58) இமாம் முஹமது இப்னு நஸீர்(ரஹ்) அவர்கள் தனது கியாமுல்லைலிலும் (பக்.91) பதிவு செய்துள்ளார்கள்.
இது தஹாவீ பாகம் 1, பக்.173னிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஹ் மஆனில் ஆதார் பாகம் 2, பக். 293னிலும் பதியப் பட்டுள்ளது.
மக்கள் 20+3 ரகாஅத் தொழுதார்கள். அதைத் தடுத்து உமர்(ரழி) அவர்கள் 8+3 தொழக் கட்டளையிட்டார்கள் என்பதே உண்மையாகும். இந்த இரு செய்திகளும் ஒரே நபரான ஸாயிப் இப்னு யஸீதால் அறி விக்கப்பட்டிருப்பதே உமர்(ரழி) அவர்கள் மக்கள் 20+3 தொழுததைக் கண்டித்து 8+3 தொழக் கட்டளையிட்டதை குன்றிலிட்ட தீபம் போல் விளக்குகிறது.
அது மட்டுமல்ல, நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையாக 8+3 தொழ வைத்ததை ஜாபிர்(ரழி) அறிவித்து இப்னு ஹஸைமா பாகம் 2, பக். 138ல் பதிவாகி யுள்ளது.
உபை இப்னு கஃப்(ரழி) ரமழான் இரவில் பெண்களுக்கு 8+3 தொழ வைத் ததை நபி(ஸல்) அவர்களிடம் அறிவித்த போது நபி(ஸல்) அவர்கள் அதை மெளன மாக ஏற்றுக் கொண்டார்கள் என்ற அறிவிப்பு முஸ்னது அபூயஃலாவில் பக். 155ல் காணப்படுகிறது. இந்த ஹதீதை காலஞ்சென்ற தப்லீக் அமீர் ஹஜ்ரத்ஜீ மவ் லவி யூசுப் சாஹிப் தனது ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்3, பக்.167ல் குறிப்பிட்டி ருக்கிறார்கள். தப்லீக் தஃலீம் தொகுப்புக் களை தொகுத்த மவ்லவி ஜகரிய்யா சாஹிப் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் முஅத்தா வின் விரிவுரையான தனது அவ் ஜஸுல் மஸாலிக் என்ற நூலின் பாகம் 1, பக்.39ல் ரமழான் இரவுத் தொழுகை 20 ரகாஅத்து கள் என்பதற்கு ஆதாரம் இல்லை; அறிஞர் கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கருத்தில் எழுதியுள்ளார்.
இப்படி சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் அவர்களே ஏற்று கொண்டுள்ள நூல்களிலி ருந்தே ரமழான் இரவுத் தொழுகை 8+3 மட் டுமே 20+3 இல்லவே இல்லை என்பதற்குப் பல ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறோம். அப்படி இருந்தும் மீண்டும் மீண்டும் அவர் கள் பழைய பல்லவியையே பாடிக் கொண் டிருப்பது மக்களை அறிந்த நிலையில்தான் அவர்கள் ஏமாற்றி வருகிறார்கள் என்றே நம்மால் விளங்க முடிகிறது.
ரமழானிலும் ரமழான் அல்லாத காலத் திலும் நபி(ஸல்) அவர்கள் 8+3க்கு மேல் தொழுததே இல்லை என்று ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீத் சுமார் 14 ஹதீத் நூல்களில் காணப்படுகிறது. இந்த ஹதீத் தஹஜ்ஜுத் பற்றியது; ரமழான் இர வுத் தொழுகை பற்றியதல்ல என்ற தோர ணையில் பொதக்குடி நோட்டீஸ் சரடு விடு கிறது. மக்கள் அன்று போல் இன்றும் சிந்திக் கத் தெரியாத மூடர்களாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு மக்களின் காது களில் பூ சுற்ற முனைந்திருக்கிறார்கள். கேள்வி கேட்டவர் நபி(ஸல்) அவர்களின் ரமழான் இரவுத் தொழுகை எப்படி இருந் தது என்று அதன் தரத்தைப் பற்றிக் கேட்க அதாவது ரகாஅத்துகளின் எண்ணிக்கை யைப் பற்றிக் கேட்காத நிலையில், எண்ணிக் கையை வலியுறுத்தி, ஆயிஷா(ரழி) அவர் கள் ரமழானிலும் ரமழான் அல்லாத காலத் திலும் 8+3க்கு மேல் நபி(ஸல்) அவர்கள் தொழுததே இல்லை என்று அதன் எண் ணிக்கையை அவ்வளவு அழுத்தமாகச் சொல்லியிருப்பதிலிருந்தே, அன்றைய மக்க ளின் நடைமுறையை மறுத்துக் கூறியிருக்கி றார்கள் என்பது குன்றிலிட்ட தீபம் போல் விளங்குகிறது. மக்கள் பலவிதமாகத் தொழு ததை, அதாவது அப்பிரசுரத்தில் குறிப்பிட் டிருப்பது போல் 20,36 என்று தொழுததைக் கண்டித்தே ஆயிஷா(ரழி) அவ்வாறு கூறி யிருக்கிறார்கள். இந்த ஹதீதுக்கு அவர்கள் தராவீஹ் வேறு தஹஜ்ஜுத் வேறு என்று சப் பைக் கட்டுக் கட்டி இருப்பது அறிவீனமான ஒரு செயலாகும். அவர்களே ஏற்றுக் கொண் டிருக்கும் அறிஞர்களில்
1. அல்லாமா அஹ்மதிப்னு முஹம்மது கதீப் கஸ்தலானி(ரஹ்), புகாரி விரிவுரை: பாகம்:1, பக்.267லும்,
2. அல்லாமா ஹாபிழ் அஹ்மது அலீ ஹனபீ சஹ்ரன்பூரி(ரஹ்) புகாரி விரிவுரை பாகம்: 1, பக்.154லும்,
3. அல்லாமா ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 4, பக். 254லும்
4. அல்லாமா அன்வர்ஷா கஷ்மீரி (ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 3, பக்420லும்,
5. முல்லா அலீகாரி(ரஹ்) மிர்காத் ஹா´யா மிஷ்காத் பாகம் 1, பக்கம்115லும்
இன்னும் பல அறிஞர்களும் மேற்படி ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீத் ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்) பற் றியதே என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.
மேலும் இந்த ஹதீதை ரமழான் இர வுத் தொழுகை (தராவீஹ்) என்ற பாடத்தில் அவர்கள் அனைவரும் எடுத்து எழுதி இருப் பது குறிப்பிடத்தக்கது. இதுவே அந்த ஹதீத் ரமழான் இரவுத் தொழுகை அதாவது தரா வீஹ் பற்றியது என்பதை உறுதிப்படுத்து கிறது. தேவ்பந்த் அரபி மதரஸா ஸ்தாபகர் அல்லாமா முஹம்மது காஸிம் நானுத்தவி அவர்கள் “அறிவுடையவர்களிடம் ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்) தஹஜ்ஜுத் இரண்டும் ஒன்றுதான்‘ என்று தனது பைஜுல் காஸிமிய்யா பக்.13ல் குறிப்பிட்டி ருக்கிறார்கள். ஆக தராவீஹ் வேறு, தஹஜ் ஜுத் வேறு என்று வாதிடுகிறவர்கள் குறை மதி படைத்தவர்களே என்று சொல்லாமல், சொல்லி இருக்கிறார் தேவ்பந்த் மதரஸா ஸ்தாபகர். ஆம்! நிச்சயம் அவர்கள் அறிவில் மிகமிகக் குறைந்தவர்களாகவே இருக்க முடியும். காரணம் நபி(ஸல்) அவர்கள் முன்னிரவில் தராவீஹ் 20 தொழுது, பின்னி ரவில் தஹஜ்ஜுத் 8 ரகாஅத் தொழுபவர் களாக இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் வித்ரு 3 ரகாஅத்தை பின்னிரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்குப் பிறகே தொழுதிருக்க முடி யும். மற்றபடி முன்னிரவில் தராவீஹ்க்குப், பிறகு வித்ரு 3 ரகாஅத் தொழுதுவிட்டு, பின் னிரவிலும் தஹஜ்ஜுத்திற்குப் பிறகு 3 ரகா அத் வித்ரு தொழுபவர்களாக அதாவது ஒரே நாளில் இரண்டு முறை வித்ரு தொழு பவர்களாக ஒருபோதும் இருந்திருக்க முடி யாது. எனவே இன்று இந்த மத்ஹபு மவ்லவி கள் தராவீஹ் 20 தொழுதுவிட்டு உடன் வித்ரு 3 ரகாஅத் தொழுவது கொண்டே அவர்கள் தங்கள் வாதத்தில் பொய்யர்கள் என்பதற்கு அவர்களே ஆதாரமாகத் திகழு கிறார்கள். வேறு ஆதாரம் தேடிப் போக வேண்டியதில்லை.
நபி(ஸல்) அவர்கள் இரவுகளின் முற் பகுதியில் தராவீஹ் 20+3 ரகாஅத்துகளும், பின்னிரவில் தஹஜ்ஜுத் 8+3 ரகாஅத்களும் ஆக மொத்தம் 34 ரகாஅத்கள் தொழுதிருந் தால் ஆயிஷா(ரழி) அவர்கள் ஒருபோதும் ரமழானிலும், அதல்லாத காலத்திலும் 8+3=11 ரகாஅத்துக்களுக்கு அதிகமாக தொழுததே இல்லை என்று அழுத்தம் திருத் தமாக அறிவித்திருக்க முடியாது. எனவே நபி(ஸல்) அவர்கள் தராவீஹ் தனியாக 20+3 ரகாஅத்களும், தஹஜ்ஜுத் 8+3 ரகாஅத்து களும் தொழுதார்கள் என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்று இட் டுக் கட்டிப் பொய் கூறுகிறார்கள் என்பதே வெட்ட வெளிச்சமாகிறது. நபி(ஸல்) அவர் கள் மீது இட்டுக் கட்டிப் பொய் கூறுகிறவர் கள் தங்களின் இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்ளட்டும் என்ற நபி(ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கையை இவர்கள் பயந்து கொள்வார்களாக.
அதிக ரகாஅத்துகள் தொழுதால் நன்மைதானே என்று இந்த மவ்லவிகள் மயக்குகிறார்கள். அதிகம் தொழுதால் நன்மைதானே என்று லுஹர் 8 ரகாஅத் தொழ முடியுமா? மஃரிபு 6 ரகாஅத் தொழ முடியுமா? பர்ழான தொழுகைகளை அதிகப்படுத்த முடியுமா? நன்மைதானே என்று சொல்ல முடியுமா? என்று கேட்டால் முடியாது என்று அவர்களும் சொல்லி விடுவார்கள். எப்படி பர்ழை–கடமையை அதி கப்படுத்த முடியாதோ, அதேபோல் சுன்னத்தை நபியின் நடைமுறையையும் நன்மை தானே என்று அதிகப்படுத்த முடியாது. நஃபிலாக தனிப்பட்ட முறையில் தனித்தனியாகத் தொழுதால் அதற்கு மார்க் கத்தில் தடையில்லை என்று வேண்டு மானால் சொல்லலாம். இங்கும் அவர்கள் தங்களின் மனைவி, மக்கள், தங்களின் உடல் போன்றவற்றிற்குரிய கடமைகளைப் பாழ் படுத்தாத நிலையில் மட்டுமே நஃபில் தொழ முடியும்.
எனவே அன்பு சகோதர சகோதரிகளே இந்த சுயநல மவ்லவிகளின் மயக்கும் பேச் சில் மயங்காமல் உண்மையை நடுநிலை யோடு கண்டறிந்து ரமழான் இரவுகளில் 8+3 மட்டுமே தொழுது நபி(ஸல்) அவர் களின் அசலான சுன்னத்தை–வழிமுறை யைப் பின்பற்றி அல்லாஹ்வின் பொருத்தம் பெற முன்வர வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.