அன்று அல்லாஹ்வுடைய பள்ளி! இன்று சுன்னத்வல் ஜமாஅத் பள்ளி!

in 2023 மே

அன்று அல்லாஹ்வுடைய பள்ளி! 

இன்று சுன்னத்வல் ஜமாஅத் பள்ளி!
அபூ உவைஸ்

ஹஜ்ரத்மார்களை கண்மூடி பின்பற்றி அவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இருக்கும் எனது அருமை சமுதாயத்தவர் களே!

என்று உண்மையை உணரப் போகிறீர் கள்? அன்று அல்லாஹ்வின் இல்லமாம் பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது. ஒருமித்த குரலில் இறை இல்லம் தகர்க்கப் படுகிறது என நாம் அனைவரும் ஆர்ப்பரித் தோம். இன்னுயிர் பல ஈந்தோம். எனினும் ஒரே இறைவனை மட்டும் வணங்கக் கட்டப்பட்ட வல்ல அல்லாஹ்வின் பள்ளி வாசல் தரைமட்டமாக்கப்பட்டு பல தெய்வ வணக்கக்காரர்கள் உள்ளே நுழைந் தனர். பல சிலைகளை உள்ளே நிறுவினர். இது  நாம்  கண்ட  கடந்த  கால  நிகழ்ச்சி.

இன்று அல்லாஹ்வின் பள்ளிகளை சுன்னத்வல் ஜமாஅத் பள்ளி என மாற்றி நம்மை போர்டுகளையும் மாட்டி வைத்து, தங்களது வியாபார ஸ்தலங்களாக நிலை நாட்ட முற்படுவதையும் கண்மூடி ஏற்று கொண்டு இருக்கின்றோம். பிற்காலத்தில் நமது சமுதாய உலமாக்கள் மார்க்கத்தை வியாபாரமாக்கி கூலிக்கு மார்க்கப் பணி புரி வார்கள் என்பதை முன்பே அறிந்த அல்லாஹ் மிகத் தெளிவாக எச்சரிப்பதைப் பாருங்கள். “உங்களிடம் ஒரு கூலியும் கேட் காத இவர்களைப் பின்பற்றுங்கள்சூரா யாஸீன்  வசனம் 21.

இன்னும் இதுபோன்ற பன்னிரெண் டுக்கும் மேற்பட்ட வசனங்கள் மார்க்கப் பணிக்கு கூலி வாங்கக் கூடாது என எச்சரிக் கின்றன. மேலும் நாம் உயிரினும் மேலாக போற்றும் நபி(ஸல்) அவர்களின் கடுமை யான  எச்சரிக்கையைப்  பாருங்கள்.

நிச்சயமாக உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள், நபிமார்கள் தீனாருக்கோ, திர்ஹ முக்கோ வாரிசாக மாட்டார்கள்‘. அறிவிப்ப வர்: அபூதர்தாஹ்(ரழி) நூல் : அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னு மாஜ்ஜா, அஹ்மத், இப்னு ஹிப்பான், பைஹகி, ஹாக்கிம், அபூ யஃலா, தப்ரானீ போன்ற ஹதீத் கிரந்தங் களில் இச்செய்தி இடம் பெற்று உள்ளன. (தீனார், திர்ஹம் அக்கால அரபு நாட்டு நாணயங்கள்)

மேற்சொன்ன உண்மையான அறிவிப் பில் நாம் எல்லாம் நம்பும் ஹழரத்துகள் (சன்னிதானங்கள்) தங்களுக்குச் சாதகமான முதல் பாதியை சொல்லி பாதகமான பிற் பகுதியை மறைத்து விடுகின்றனர். இமாம் களை பின்பற்றுவதற்கும், அதன் தொடராக விளம்பரப் பலகைகளை பள்ளியில் மாட்டி வைப்பதற்கும்  வசதியாக,

நம்பிக்கை கொண்டோர்களே! அல் லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக் கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விசயத்தில் பிணக்கு ஏற்படுமானால், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரி டமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் உங்களுக்கு சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் என்ற (அல்குர்ஆன் 4:59) வசனத் தையும் பாதி கூறி மீதியை மறைப்பார்கள். மேலும் தங்களது இயக்கத்தை நிலைநிறுத்த நினைக்கும் புரோகித கும்பல் அனைத்து பிரிவுகளையும் கண்டிக்கும் குர்ஆன் வச னங்களையும், ஹதீத்களையும் திரித்து மக் களை மூளை சலவை செய்வார்கள். இவர் களது முக்கிய வேலையே சத்தியத்தை மக் களை விட்டும் மறைத்து உலகாதாய பொருள்களை  ஈட்டுவதுதான். 

இந்த ஹஜ்ரத்மார்களை எச்சரிக்கும் விதமாக வல்ல அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறுகிறார்கள்.

எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல்லாஹ்விடம் கேட்கட்டும் வருங்காலத் தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடம் கூலி கேட்பவர்கள் தோன்றுவார்கள். நூல்: திர்மதி, அஹ்மத்.

குர்ஆனை ஓதுங்கள்; அதன்மூலம் பொருள் திரட்டவோ, சாப்பிடவோ செய் யாதீர்கள். நூல்:அஹ்மத், தப்ரானி, தஹாவி இப்னு அஸாகிர்.

மேலும் வல்ல அல்லாஹ்வும் இவர் களை  குறித்தே  எச்சரிக்கை  செய்கிறான்.

என் திருவசனங்களைச் சொற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். இன்னும் எனக்கே அஞ்சுவீர்களாக! நீங்கள் அறிந்து கொண்ட உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும்  செய்யாதீர்கள். (அல்குர்ஆன்: 2:41,42)

இந்த குர்ஆன் வசனங்களை காணும் எனது அருமை சமுதாயமே வல்ல அல்லாஹ் கொடுத்த அறிவை கொண்டு சிந்திக்க வேண்டாமா?

அன்று அல்லாஹ்வுடைய பள்ளி என்று புரோகிதர்கள் நம்மை கூறச் செய்து தங்களது வியாபார ஸ்தலத்தைப் பாதுகாக்க செய்தார்கள். இன்று சுன்னத்வல் ஜமாஅத், முஜாஹித், அஹ்லே ஹதீத், மூபுஞக்ஷி, தவ்ஹீது இப்படி இயக்கங்களின் பள்ளிகள் என்று கூறி தங்கள் வியாபாரத்திற்கு தடையாக வருபவர்களை உண்மை மார்க்கம் போதிப் பவர்களை பள்ளிக்கு வர, பேச, தடை செய் கிறார்கள். இதை முஸ்லிம்கள் புரிய  முடிய வில்லையா?

அன்புள்ள ஆலிம்சாக்களே! அவர் களை கண்மூடி பின்பற்றும் சகோதர, சகோதரிகளே! இந்த இறை எச்சரிக்கையை ஊன்றிக்  கவனியுங்கள்.

அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல் லாஹ்வின் பெயரைச் சொல்லி துதிப்பதை தடுத்து அவற்றை பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியுமா? இத்தகையோர் அச்சமின்றி பள்ளி வாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்(உலக) வாழ்வில், இழிவுதான்; மேலும், இவர் களுக்கு மறுமையில் கடுமையான வேதனை உண்டு.    (அல்குர்ஆன் 2:114)

மேலும் நம்மில் 90% மக்கள் ஹழரத்து கள் இருந்தால் தான் இஸ்லாம் மார்க்கம் இருக்கும் எனவும்; மார்க்கம் இருக்க வேண்டுமானால் ஹழரத்துகள் இருந்தாக வேண்டியது அவசியம் எனவும், முழுமை யாக நம்பியுள்ளார்கள். நம்மை அந்த அள வுக்கு நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள் இந்த  ஆலிம்சாக்கள்.

நாம் இவ்வாறு ஏமாந்து சோடை போனதற்குக் காரணம் ஹஜ்ரத்துக்களை கண்மூடி பின்பற்றி அவர்கள் சொல்லுவ தெல்லாம் வேதம் என்று நம்பியதேயாகும்.

வல்ல அல்லாஹ்நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் வேதஞானம் பெற் றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்எனக் கூறுகிறான். (அல்குர்ஆன்16:430) இவ் வாறு சொன்ன அல்லாஹ் சொல்வதை யயல்லாம் சரியயன தலையாட்டிக் கொண்டு பின்பற்றச் சொல்லவில்லை. அவர்கள் சொல்லை, நல்லுபதேசத்தை செவியேற்று அதிலே அழகானதை பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்த கையவர்களைத்தான்; இவர்கள் தான் நல்ல றிவுடையவர்கள். (அல்குர்ஆன் 29:18) என மிக தெளிவாகக் கூறிவிட்டான். திட்ட மான ஞானமில்லாதவற்றைப் பின்பற்ற வேண்டாம்  என்றும்  கூறுகிறான்.   (அல்குர்ஆன் 17:36)

முஸ்லிம்களே சிந்திக்க வேண்டாமா? ஆலிம், அவாம் பிரிவோ, இஸ்லாமிய பிரிவோ, மற்ற இயக்க பிரிவுகளோ இஸ் லாத்தில் இல்லை என்பதும் நமக்குத் தெரி யாது. மேலும் ஹஜ்ரத்துகள் (சன்னிதானங் கள்) இஸ்லாத்தில் இல்லையயன்பதும் இவர்கள் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப் பவர்கள் என்பதும் நம்மில் பலருக்கு தெரி யாது. இது பற்றி ஹஜ்ரத்துகளே மக்களை அறியவிடுவதில்லை. பூம், பூம் மாடு மாதிரி தலையாட்டும் ஒரு கூட்டத்தை ஒவ்வொரு இயக்கத்தாரும், அவர்களைச் சார்ந்த புரோ கிதர்களும் தயார் செய்து அவர்கள் மூலம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. இதனா லேயே ஹஜ்ரத்துகள்அல்அவாம் கல்அன் ஆம்என்று மவ்லவி அல்லாதவர்களை ஆடு, மாடுகளை போன்றவர்கள் என்று கூறுகின்ற னரோ?

அன்பு சமுதாயத்தவர்களே! இவ் வுண்மைகளை நாம் தெளிவாக அறிய நாம் ஏற்றுக்கொண்ட குர்ஆனையும், நாம் உயிரி னும் மேலாக போற்றும் நபியவர்களின் வழியையும் அறிய முற்பட வேண்டும். அல் லாஹ்வின் அளப்பெரிய உதவியால் இவை கள் நம் தாய் மொழிகளிலேயே வெளி வந்து விட்டன.

பூசாரிகளை நம்பியது போதும்; புறப்படுங் கள் உண்மை மார்க்கம் அறிய!

உயிருள்ள மக்கள் வாழ்வதற்கு வழி காட்ட வந்த குர்ஆனை கத்தம், பாதிஹா பேரால் செத்தவர்களுக்கு ஓத வைத்து காசுகள் பறித்து இவ்வுலகில் நம்மை மடையர்களாக்கி மறுமையில் நரகில் தள்ள வைப்பதும்  இப்பூசாரிகளே!

பூசாரிகளை இனியும் நம்பவேண்டாம். இறைவனும் இறைத்தூதர்(ஸல்) அவர் களும் கூறியது போல் கூலி வாங்காமல் மார்க்கப் பணி புரியும் அல்லாஹ் கூறும் உண்மை ஆலிம்களை உருவாக்க பாடுபடு வோம்.  இன்ஷா அல்லாஹ்!

அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோ ரெல்லாம் ஆலிம்கள் (அல்குர்ஆன் 35:28) அல்லாஹ்வின் நல்லடியார்களே எவனொரு வன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்களை மூடிக் கொள்வானோ அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற் படுத்தி விடுகிறோம்; அவன் இவனுடைய நெருங்கிய  நண்பனாகி  விடுகிறான்.    (அல்குர்ஆன் 43:36)

இன்னும் (அந்த ஷைத்தான்கள்) அவர் களை நேரான பாதையில் இருந்து தடுத்து விடுகின்றனர். ஆனால் தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர் கள்  எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.    (அல்குர்ஆன் 43:37)

எதுவரையயல்லாம் இறுதியாக அத்த கையவன் நம்மிடம் வரும்போது, (தன்னை கெடுத்தவனிடம் கூறுவான்) ! எனக் கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்கு திசைக்கும் இடையே யுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே; (எங்களை வழிகெடுத்த) இந்த நண்பன் மிக வும் கெட்டவன் (என்று கூறுவான்) என வல்ல அல்லாஹ் தனது திருமறையில் திட்ட வட்டமாகக் கூறுவதை திடமாக நம்புங்கள்.  (அல்குர்ஆன் 43:38)

Previous post:

Next post: