சோதனைகளின் நோக்கங்கள்!
அபூ இஸ்ஸத், இலங்கை
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதற்காகவே இருக்கிறது; “பரீட்சைக் காக‘ கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர் கள். (21:35) பிறந்தவன் ஒருநாள் இறக்கத் தான் வேண்டும் இந்த பொது விதியிலிருந்து யாருக்கும் விதிவிலக்கு இல்லை இடைப்பட்ட காலத்தில் “பரீட்சைக்காக‘ சோதனைகள் உண்டு; இதுகுறித்து இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்கள் பின்வரும் கவிதை வரிகளை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார்கள்.
எனது இறப்பைச் சிலர் எதிர்பார்க்கின் றார்கள்; நான் இறப்பேன். ஆனால் அது எனக்கே உரிய ஒற்றையடிப் பாதையல்ல நடந்ததோ ஒன்று, அவன் நாடுவதோ வேறொன்று நண்பா! அவனிடம் சொல்லிவிடு! தயாராயிரு! இது போன்றதொரு தருணத்திற்கு அது வந்தே தீரும். (தரஃபா பின் அல்அபத், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 5, பக்கம் 854-856) இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தீமைகள் மூலம் சோதித்து பொறுமை கொள்கின்றீர்களா? என்பதையும் நன்மைகள் மூலம் சோதித்து பொறுமை கொள்கின்றீர்களா? என்பதையும் நன்மைகள் மூலம் சோதித்து நன்றி பாராட்டுகின்றீர்களா? என்பதையும் பரிசோதனை செய்யப்படும்.
சோதிப்பதற்காக :
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். அச்சமயம் உஹது களத்தில் பகை வர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் உங்களுக்கிடப்பட்ட இறைத்தூதரின் உத்தரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய வெற்றியை அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்த ரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார் கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள். பின்னர், உங்களைச் “சோதிப்பதற்காகவே” அவ் வெதிரிகளை விட்டு உங்களைப் பின்னடையுமாறு திரும்பினான். நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனா கவே இருக்கின்றான். (3:152)
“கிடைக்கவேண்டியது தவறி விட்டாலோ, சோதனைகள் ஏற்பட்டாலோ, சோர்வும், கவலையும், அடையாது பொறு மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக”
நினைவு கூறுங்கள்! உஹது களத்தில் உங்கள் பின்னால் இருந்து இறைத்தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக்கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே இவ்வாறு இறைத் தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின் பலனாக இறைவன் துக்கத்தின் மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறிவிட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் சோர்வும், கவலையும் அடையாது பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான். (3:153)
“நெஞ்சங்களில் உள்ளவற்றை சோதிப் பதற்காகவும்‘ நெஞ்சங்களில் உள்ளவற்றை சுத்தப்படுத்துவதற்காகவும்‘
பிறகு, அத்துக்கத்திற்குப் பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்தி ரையை இறக்கி வைத்தான்; உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண் டது; மற்றொரு கூட்டத்தினரோ அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டுபண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; அதனால் அவர்கள் கூறினார்கள்; இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா? என்று, அதற்கு “நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது‘ என்று நபியே! நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தமது நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்; அவர்கள் தமக்குள் கூறிக் கொள்ளுகின்றார்கள். இக் காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்கமாட்டோம்; நீங்கள் உங்கள் வீடு களில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் தனது கொலைக்களங்களுக்கு மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்! என்று நபியே! நீர் கூறும் இவ்வாறு ஏற்பட்டது உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அகற்றிச் சுத்தப்படுத்துவதற்காகவும் ஆகும். இன்னும் அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன். (3:154)
“”இவ்வுலகை விரும்புகின்றாரா அல்லது மறு உலகை விரும்புகின்றாரா என்பதை சோதிப்பதற்காக”
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; அச்சமயம் உஹது களத்தில் பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்துவிடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் உங்களுக் கிடப்பட்ட உத்தரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய வெற்றியை அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கின்றார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள். பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளை விட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான். நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழி வோனாகவே இருக்கின்றான். (3:152)
“தமக்கு வழங்கிய மார்க்கச் சட்டங்களை எவ்வாறு கடைப்பிடிக்கின்றார்கள் என்று சோதிப்பதற்காக”
மேலும் நபியே! முற்றிலும் உண்மை யைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம். இது தனக்கு முன்னிருந்த ஒவ்வொரு வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த சட்ட திட்டத்தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக! உமக்கு வந்த உண்மையை விட்டும் விலகி அவர்களுடைய மனோ இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதா யத்தவராக ஆக்கியிருக்கலாம். ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் “”சோதிப்பதற்காகவே“” இவ்வாறு செய்திருக்கிறான். எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கின்றது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அதன் உண்மையினை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான். (5:48) அதாவது,
அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள் அனைவரும் ஓரிறைக் கோட்பாட்டில் ஒத்திருந்த அதே வேளையில் பலதரப்பட்ட நடைமுறைச் சட்டங்களைக் கொண்டிருந்தார்கள். அனுமதிக்கப்பட்டவை, தடை செய்யப்பட்டவை ஆகிய நடைமுறைச் சட்டங்களில் சமுதாயத்திற்குச் சமுதாயம் வேறுபாடு கொண்டிருந்தது ஒரு மார்க்கத் தில் தடை செய்யப்பட்ட ஒன்று மற்றொரு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது சட்டத் திலுள்ள கடினத்திலும் ஏற்றத்தாழ்வு இருந்தது ஒரு சமுதாயத்தாரின் சட்டத்தில் இறுக் கம் இருந்தது என்றால் மற்றொரு சமுதாயத தாரின் சட்டத்தில் அது தளர்த்தப்பட்டது அதன் காரணமும் தத்துவமும் இறைவ னுக்கே நன்கு தெரியும், எனினும் அவர வரது சட்டத்தில் எவ்வாறு செயல்படுகின் றார்கள் என்று பார்ப்பதற்காக சோதிக்கப் படும். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 206-215)
“செல்வத்திலும், வறுமையிலும், எவ்வாறு செயல்படுகின்றார்கள் என்பதை அறிவதற்காக”
அவன் தான் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்க ளுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் “”சோதிப்பதற்காகவே” , உங்களில் சிலரைச் சிலரை விடப் பதவிகளில் உயர்த்தினான். நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானாவன். மேலும் அவன் உங்க ளுக்கு அளித்துள்ள அருட்கொடைகளில் உங்களைச் சோதிப்பதற்காகவே சிலரை விடச் சிலரை உயர்த்தினான் செல்வந்தரை அவரது செல்வத்தால் சோதித்து, வறிய வரை வறுமையால் சோதித்து விசாரிப்பான். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கின் றான். எனவே உலக வியத்தில் எச்சரிக்கையாக இருங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூசயீத் அல்குத்ரீ(ரழி) முஸ்லிம், இப்னு மாஜா, தஃப்ஸீர் இப்னுகஸீர் பாகம் 3, பக்கம் 689-692)
முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காக :
பத்ரு போரில் எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல. அல்லாஹ்தான் அவர்களை வெட்டினான். பகைவர்கள் மீது மண்ணை நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை. அல்லாஹ்தான் எறிந்தான். முஃமின்களை அழகான முறையில் “சோதிப்பதற்காகவே” அல்லாஹ் இவ்வாறு செய்தான்.
நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், எல்லாம் அறிபவனாகவும் இருக்கின்றான். (8:17)
அழகிய செயலுடையவர் யார் என்று சோதிப்பதற்காக :
மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (அல்குர்ஆன் 18:7)
“குகையில் தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக”
பின்பு அக்குகையில் தங்கியிருந்த இரு பிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் குகையில் தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (18:12)
இறை மறுப்பாளர்களை சோதிப்பதற்காக:
இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பம் அனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் சொகுசான வாழ்க்கை வசதிகளின் பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; இவையயல் லாம் இறை நிராகரிப்பாளர்களான அவர் களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத் துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங் களாகும். உமது இறைவன் மறுமையில் உமக்கு வழங்கவிருப்பது சிறந்ததும் நிலை யானதும் ஆகும். (அல்குர்ஆன் 20:13)
நன்றியறிதலுடன் இருக்கின்றோமா அல் லது மாறு செய்கின்றோமா என்று சோதிப் பதற்காக :
இறை வேதத்தில் ஞானத்தைப் பெற்றி ருந்த ஒருவர்: “”உங்களுடைய கண்ணை மூடித் திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன் என்று கூறி னார். அவர் சொன்னவாறே அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும், “இது என்னுடைய இறைவனின் அருட் கொடை யாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின் றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று இறைவன் என்னைச் சோதிப்பதற்காகவும், எவன் ஒருவன் இறைவனுக்கு நன்றி செலுத் துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே நன்மையாவும், மேலும், எவன் நன்றி மறந்து மாறு செய்கின்றானோ அது அவனுக்கே இழப்பாகும், ஏனெனில் என் இறைவன், எவரிடத்தும் தேவைப்படாத வனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவ னாகவும் இருக்கின்றான்‘ என்று சுலைமான் கூறினார். (அல்குர்ஆன் 27:40)
________________________________________