பிறந்தநாள் விழா! புத்தாண்டு விழா!
ஐய்யம்பேட்டை நஜ்முதீன்
2023ம் புத்தாண்டு தொடங்கி 3 மாதங் கள் கடந்துவிட்டது, அதுபோல் ஹிஜ்ரி 1444ம் ஆண்டு முடிந்து இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டு வர இன்னும் 3 மாதங்களே உள்ளன.
புத்தாண்டையும், பிறந்த நாளையும் உலகம் முழுவதும் பெரும்பாலோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதையும், அன்றைய தினம் பல ஆயிரம் கோடி செலவு செய்வதையும் பார்க்கின்றோம்.
உண்மையிலேயே இது மகிழ்ச்சியான நாளா?
சுமார் 1990ஆம் ஆண்டு வரை எதையும் இலகுவாக கடந்து போவது என்பது மனித இயல்பில் இல்லாமல் இருந்தது. 2000மாவது ஆண்டுக்கு பிறகு டி.வி. மற்றும் அனைத்து வகையான ஊடகங்களின் (னிசிம்ணூபு) வளர்ச்சி யால் எல்லாவற்றையும் கடந்து போவது என் பது இயல்பாகிவிட்டது. இது உலக வியங் களில் மட்டுமல்ல, மார்க்க வியத்திலும் அவ்வாறே ஆகிவிட்டது.
எவ்வாறுயயனில் புது, புதுப் பெயரில் பல புதிய தலைவர்கள் பல்வேறு பெயரில் அமைப்புக்கள், இயக்கங்களை உருவாக்கி தங் களுடைய கருத்துக்களை மக்களிடையே கொண்டு சென்றனர். அவ்வாறு கொண்டு செல்வதற்கு குர்ஆனின் மொழிபெயர்ப்புக் களையும் பயன்படுத்திக் கொண்டனர்.
குர்ஆனின் மொழியாக்கம் கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருந்த மக்களிடையே குர்ஆனின் மொழியாக்கமே பல பிரிவுகளை உண்டாக்கிவிட்டது. ஒவ்வொருவரும் தங்கள் மொழியாக்கமே சரியயன வாதிட ஆரம்பித்து இன்று சமுதாயத்தில் பல பிரிவுகளை உருவாக்கிவிட்டனர். எல்லா வற்றையும் கடந்து போவது போல் குர்ஆனின் மொழியாக்கத்தையும் படித்துவிட்டு முஸ்லிம் சமுதாயம் கடந்துபோய் வருகிறது, மற்றும் பல்வேறு பிரிவுகளாக பிரிந்தும் விட்டது.
“குர்ஆனைப் பற்றி பிடித்துக் கொள் ளுங்கள், நீங்கள் வழிதவறமாட்டீர்கள்”
என்று குர்ஆன் வசனத்திற்கு மொழி யாக்கம் செய்துவிட்டு குர்ஆனை வைத்தே, மக்களை பிரித்துவிட்டார்கள், எவ்வளவு வேதனைக்குரிய விசயம். அதுமட்டுமல்ல சில மொழி பெயர்ப்பாளர்கள் நன்றாக பொருள் விளங்கக் கூடிய சில வசனங்களில் தங்களுடைய கொள்கை கருத்தை திணித்தார்கள். இன்னும் சில மொழி பெயர்ப்பாளர்கள் குர்ஆனை முழுமையாக விளங்க முடியாது என்ற கருத்தையும் திணித்தார்கள். இன்னும் சிலர் ஹதீதுகளின் பெயரால் பல்வேறு விதமான கருத்துக்களையும் கூறியுள்ளார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக பல வசனங் களை குறிப்பிட முடியும். இருப்பினும் ஒரே ஒரு மிக முக்கியமான வசனத்தை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
இந்த வசனத்திற்குரிய பொருளை தவறாக குறிப்பிட்டு அறிவாளியாக இருக்க வேண்டி மக்களை அறிவிலிகளாக மாற்றி விட்டார்கள். பெரும்பாலோர் இதை சரி என நினைத்து ஒவ்வொரு ஆண்டும் தவறு செய்கிறார்கள். இது யூதர்கள், கிறிஸ்தவர்களின் சூழ்ச்சியும் கூட, அல்லாஹ் குர்ஆனில் 13வது அத்தியாயம் 41ம் வசனத்தில் “இந்த பூமியை நாம் குறைத்துக் கொண்டு வருகி றோம், நீங்கள் காணவில்லையா? என்று கூறுகிறான்.
ஆனால் மொழியாக்கம் என்ற பெயரில் ஒவ்வொருவரும் எவ்வாறு மொழி பெயர்த் துள்ளார்கள், எத்தகைய விளக்கத்தை தந்துள்ளார்கள் என்பதை காண பல்வேறு மொழி பெயர்ப்புகளில் இடம் பெற்றதை உதாரணத்திற்கு இங்கே பட்டியலிட்டுள்ளேன்.
1. பூமியை அதன் அருகிலிருந்து நாம் (படிப்படியாக) குறைத்து வருகிறோம் என் பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஜான் டிரஸ்ட்
2. பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்ச யமாக நாம்(படிப்படியாக) அவர்கள் காண வில்லையா? அல்லாஹ் தீர்ப்பளிப்பான், அவ னுடைய தீர்ப்பை தடை செய்யக்கூடியவர் எவருமில்லை. இன்னும் அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகத் தீவிரமானவன்.
சவுதி அரசு மொழியாக்கம்
3. நிச்சயாக நாம் இந்த பூமியில் வந்து கொண்டிருக்கிறோம் என்பதையும், அதன் சுற்றளவை நாற்புரங்களிலிருந்தும் குறைத் துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா? ணூ.ய்.வீ. குர்ஆன்
4. நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறங்களிலிருந்து (பரவியுள்ள குப்ரை) சிறுகச் சிறுக நாம் குறைத்துக்கொண்டு வருவதை அவர்கள் காணவில்லையா?
மேலும் அல்லாஹ் தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பைத் தடை செய்பவன் எவனுமில்லை. மேலும் அவன் கணக்கு கேட்பதில் தீவிரமானவன். பஷாரத் பப்ளிர்ஸ், குர்ஆன் மொழிபெயர்ப்பு
5. “A-walam ya-raw” anna ha”til”-[zanan-qusuhaa min atraa – fihaa? Wallaahu yahkumu laa my aqqiba li-Hukmith wa. Huwa Sarii-ul-hisaab,
I Hamaara zimma kya unhein hahi soojhta ke, hum her taraf se unbi aabaadi ghataata hai uska hukm peechhe dacline waala. Kenahi aurusey hisaat lete der hahi lagti. (The holy quraan: ADABI DUNIYA, 11, Matia Mahal, Jama Masjid, Delhi-6. Edition: 2014)
6. நாம் பூமிக்கு வந்து, அதன் விளிம்பு களிலிருந்து அதனைக் குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் காணவில்லை? அல் லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை மாற்றுபவர் யாருமில்லை. அவன் விரைந்து கணக்கெடுப்பான். மொழி பெயர்ப்பு
7. அவர்கள் வசித்திருக்கும் பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் படிப் படியாக குறைத்து வருவதை அவர்கள் காண வில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்க கூடிய வன், அவனுடைய தீர்ப்பைத் தடைசெய்யக் கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகச் சுறுசுறுப்பானவன். ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி. (தாருல்ஹீதா) மொழிபெயர்ப்பு.
மேற்கண்ட வசனத்தில் நாம் பூமியை குறைத்து கொண்டு வருகிறோம். நீங்கள் காணவில்லையா? என்று அல்லாஹ் கேட்கி றான். எது ஒன்றையும் காணமுடிந்தால் தான் காணவில்லையா? என்று கேட்க முடியும். காண முடியாத எது ஒன்றையும் காணவில் லையா என்று அல்லாஹ் கேட்கமாட்டான்.
வானம், பூமி, மனித வர்க்கம் மற்றும் அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்தின் தோற்றமும், முடிவும் அல்லாஹ்வால் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதற்கு மாற்ற மாக எது ஒன்றும் கூடவோ, குறையவோ ஆகாது. இந்த பூமியின் முடிவு நாளையும் தீர்மானம் செய்துவிட்டு தான் குறைத்துக் கொண்டு வருகிறோம் என்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் சொன்னதற்கு மாற்றமாக மொழி பெயர்ப்பாளர்கள் தங்கள் அறிவுக்கு தோன்றியதை எல்லாம் மொழி பெயர்த்துள் ளார்கள். இன்னும் சிலர் இது பொருள் விளங்கமுடியாத வசனம் என இதை குறிப் பிட்டு கடந்து போய் விட்டார்கள்.
குர்ஆனை பொருத்தவரை சிந்திக்காமல் படிப்பதையோ, அல்லது சில வசனங்களை மட்டும் சிந்தித்தால் போதும் என்பதாக அல்லாஹ் குர்ஆனில் எங்கும் கூறவில்லை.
மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகவே நாம் இதை அருளினோம் என்று குர்ஆன் கூறுகிறது. மேலும் குர்ஆனை படிக்க வேண்டும், பரப்ப வேண்டும், சிந்தித்து பின் பற்ற வேண்டும் என்பதே குர்ஆனின் நோக்கம்.
எனவே மேற்கண்ட வசனப்படி இந்த பூமியின் வாழ்நாளில் ஒரு ஆண்டு குறைத்து விட்டது என்பதே எனது புரிதல். அதுபோல் பிறந்த மனிதனின் வாழ்நாளில் ஒரு ஆண்டு குறைந்துவிட்டது என்பதே சரியானதாகும். பொதுவாக எது ஒன்றும் கூடினால் தான் சந்தோசம் அடைய முடியும், குறைந்ததற்கு சந்தோசம் அடைய முடியாது.
மனித இயல்புக்கு மாற்றமாக அறிவிளித்தனமாக ஒரு வருடம் (பூமியின் வாழ்நாள்) குறைந்ததற்கு சந்தோசப்படுகிறார்கள். இது ஆச்சரியமான விசயம்.
எனவே இதனை நபி(ஸல்) காட்டித்தராத செயல்களை தவிர்த்து இஸ்லாம் காட்டித் தந்த அந்த வழியில் நடப்போம்.