பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்!!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
2023 மார்ச் தொடர்ச்சி…
அய்யாமுல் யபீழ் எனும் 13,14,15 ஆகிய (நிலவு பிரகாசிக்கும் வெள்ளை) நாட் களில் நோன்பு வைக்குமாறு எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : கதாதா இப்னு மில்ஹான்(ரழி) ரியாளுஸ் ஸாலிஹீன் 1263, அபூதாவூத்:2449) மேலும்,
அல்லாஹ்வின் “”அய்யாமுல் யபீழ் (எனப்படும் நிலவு பிரகாசிக்கும் 13,14,15 ஆகிய வெள்ளை நாட்களில்) நோன்புகளை விடமாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல் லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ரியாளுஸ்ஸாலிஹீன்: 1264, நஸயீ: 4:198-199) அடுத்து,
மாதத்தின் பெளர்ணமி எனும் முழு நிலவு தோன்றுவது 14ஆவது நாழில்தான்:
ஓர் இரவில் நாங்கள் நபி(ஸல்) அவர் களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்பொழுது அவர்கள் பதினான்காம் நாளின் (பெளர்ணமி) முழு நிலாவைக் கூர்ந்து நோக்கியபடி இந்த நிலாவை நீங்கள் நெருக் கடியின்றிக் காண்பது போல் உங்கள் இறை வனையும் (மறுமையில்) காண்பீர்கள் என்று கூறினார்கள். ஜரீர் பின் அப்தில்லாஹ்(ரழி) புகாரி: 4851) அடுத்து,
ஒவ்வொரு மாதத்திலும் 22ஆம் நாளில் தோன்றும் கடைசி கால் பகுதி பிறையின் நிலையாகிய (ஸிபுறீவீ ஞUபுயூவீசியூ) எனும் பிந்திய கால் பகுதிப் பிறை சரியாக அரைவட்ட வடிவில் சுபஹ் நேரம் தலைக்கு மேலே தெரியும்போது அம்மாதத்தில் எஞ்சியிருப் பது எட்டு நாளா, அல்லது ஏழு நாளா என்பது தெரியவரும்.
நாம் கத்ருடைய நாளைப் பற்றி நபியவர்களிடம் நினைவுபடுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன. மேலும் எட்டு நாட்கள் மீதும் உள்ளன என நாம் கூறினோம். (அதற்கவர்கள்) இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது எனக் கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தமதுகையில் 29 நாட்கள் வரை எண்ணினார்கள் பிறகு இன்றைய நாளில் அந்த கத்ருடைய நாளைத் தேடுங் கள் எனக் கூறினார்கள். இப்னு ஹுஸைமா 2024, பைஹகீ:8018, இப்னு ஹிப்பான்: 2588, மேலும்,
அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு அருகில் “லைலத்துல் கத்ர்‘ இரவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், (முழு வளையமாக வுள்ள “ஸஹன்‘ போன்ற பெரிய) “உணவுத் தட்டின் (சரி) பாதித் துண்டைப் போன்று நிலா தோன்றும் இரவே (லைலத்துல் கத்ரு டைய நாள்) ஆகும் என்பதை உங்களில் நினைவில் கொள்பவர் யார்? என்று கூறி னார்கள். (அபூ ஹுரைரா(ரழி) முஸ்லிம்: 2160, 2177 ஆகிய இரு அறிவிப்பாளர் தொடர்களில் இந்த ஹதீத் வந்துள்ளது) பள்ளிவாசலில் தங்குதல் (இஃதிகாஃப்) அத்தியாயம்:13, நோன்பு.
கண்ணுக்குத் தெரியக்கூடிய கடைசிப் படித் தரமான உர்ஜூனில் கதீம் சூரியனுக்கு முன்னரே உதிக்கும் :
இன்னும் (உலர்ந்து வளைந்த) பழைய பேரீததம் மட்டையைப் போல் ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஜில்களை (தங்குமிடங்களை படித்தரங்களை) ஏற்படுத்தி யிருக்கின்றோம். (அல்குர்ஆன் 36:39) அதாவது: “பழைய பேரீச்சை மரத்தின் காம்பு‘ என்பதைக் குறிக்க “அல்உர் ஜூனுல் கதீம்‘ எனும் சொற்றொடர் மூலத்தில் ஆளப்பட் டுள்ளது. இதில் “உர்ஜூன்‘ எனும் சொல் பேரீச்சை மரக் கிளையின் அடிப்பகுதியைக் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், “அல் உர்ஜூனுல் ககதீம்‘ என்பதற்கு “காய்ந்த பேரீச்சம் கிளை‘ என்பதாக முஜாஹித்(ரஹ்) அவர்களும், ஆக (முறுகக்) காய்ந்து வளைந்து நாட்பட்ட ஒரு பேரீச்சங்குலையின் தண்டேயே இச்சொற்றொடர் குறிக்கிறது என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் பொருள் கூறியுள்ளார்கள். பின்னர் இதற்குப் பிறகு அந்தச் சிந்திரனை அடுத்த மாதத்தின் தொடக் கத்தில் அல்லாஹ் புதிதாகப் பிறக்கச் செய் கின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர்:7:646-654) மேலும்,
சூரியன் மறைந்தவுடன் அதைச் சந்திரன் பின்தொடர்தல் என்பது மாதத்தின் முற்பகுதியில் ஆகும். மாதத்தின் பிற்பகுதியிலோ சூரியனைச் சந்திரன் முந்தி விடுகிறது என்று இப்னு ஜைத் (ரஹ்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர்: 91:1,2, குர்ஆன் வசனங்களின் விரிவுரையில், பாகம் 10:268-279) அடுத்து,
சிறிதாகத் தோன்றி, வளர்ந்து, பூரணமாகி, தேய்ந்து மெலிதாகி, மறைந்து போகும் பிறையின் தோற்றம் :
இன்னும் (உலர்ந்து வளைந்த) பழைய பேரீத்தம் மட்டையைப் போல் ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஜில்களை (தங்குமிடஹ்களை படித்தரங்களை) ஏற்படுத்தியிருக் கின்றோம். (அல்குர்ஆன் 36:39) பழைய பேரீச்சை மரத்தின் காம்பு என்பதைக் குறிக்க “அல்உர்ஜூனுல் கதீம்‘ எனும் சொற்றொடர் மூலத்தில் ஆளப்பட் டுள்ளது. இதில் “உர்ஜூன்‘ எனும் சொல் பேரீச்சை மரக் கிளையின் அடிப்பகுதியைக் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் “அல்உர்ஜூனுல் கதீம்‘ என்ப தற்கு “காய்ந்த பேரீச்சம் கிளை‘ என்பதாக முஜாஹித்(ரஹ்) அவர்களும், ஆக (முறுகக்) காய்ந்து வளைந்து நாட்பட்ட ஒரு பேரீச்சங்குலையின் தண்டையே இச் சொற் றொடர் குறிக்கிறது என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் பொருள் கூறியுள்ளார்கள். பின்னர் இதற்குப் பிறகு அந்தச் சந்திரனை அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் அல்லாஹ் புதிதாகப் பிறக்கச் செய்கின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:646-654) இதனால்தான்,
ஃபான் மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த நபியவர்கள்:
நபி(ஸல்) அவர்கள் வேறெதற்கும் (வேறெந்த மாத ஹிலாலுக்கும்) கொடுக்காத முக்கியத்துவத்தை “ஃபான் ஹிலா லுக்கு‘ கொடுப்பார்கள். பிறகு ரமழானுடைய அதை (ஹிலாலைக்) கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்கள் மீது மேகமூட்டம் ஏற்பட்டால், (ஃபானை) 30 நாட்களாக கணக்கிடுவார்கள். பிறகு நோன்பு நோற் பார்கள். (முஸ்னத் அஹ்மத்)
ஃபான் மாதப் பிறைகளைக் கணக்கிட்டு வந்த நபியவர்கள்:
ரமழானின் ஆரம்பத்தைச் சரியாக அறிந்து கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் ஷாஃபான் மாதத்தின் நாட்களை மட்டும் (குறிப்பாகக் கவனித்துக்) கணக்கிடக் கூடிய வர்களாக இருந்தார்கள் மற்ற மாதங்களின் நாட்களை அப்படிக் (குறிப்பாக அவர்கள்) கணக்கிடவில்லை. பின்னர் அவர்கள்மீது மறைக்கப்படும்போது அதை அவர்கள் முப் பதாவது நாள் என்று எண்ணிக் கொள்வார்கள். பிறகு (ரமழானில்) நோன்பு வைப்பார் கள். (ஆயிஷா(ரழி) அபூதாவூத்:1993, அஹ்மத்) என்றும்,
ஃபான் மாதப் பிறைகளைக் கவனித்துக் கணக்கிட்டு வரும்படி ஏவிய நபியவர்கள்:
ரமழானின் ஆரம்பத்தை(ச் சரியாக0 அறிந்துகொள்ள “ஃபான்‘ (மாதப்) பிறைகளைக் (கவனித்துக்) கணக்கிட்டு வாருங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதி:687, அஹ்மத்) என்றும்,
பொதுவாகப் பிறைகளைக் கவனித்து கணக் கிட்டு வரும்படி பிறருக்கு ஏவிய நபியவர்கள்:
பிறைகளைப்பார்த்து வாருங்கள் அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது அதை நீங்கள் முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இப்னு உமர்(ரழி) அவர்கள் புகாரி: 1823, முஸ்லிம்:2551, அஹ்மத்:9641) என்றும்,
பிறைகளைப் பார்த்து வாருங்கள் அவை உங்கள் மீது புலப்படாத போது எண் ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துங் கள். அபூஹுரைரா(ரழி) முஸ்லிம்:2567) என்றும்,
பிறைகளைப் பார்த்து வாருங்கள். அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். (இப்னு உமர் (ரழி) அவர்கள் புகாரி:1906, முஸ்லிம்:1865, இப்னு ஹுஸைமா) என்றும், அல்லாஹ் வும் அவனுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் குறிப்பாகவும் சொல்லியிருக் கின்ற அடிப்படையிலும்,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமழான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள், (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள், உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவித்தார். புகாரி: 1906, அத்தியாயம்: 30, நோன்பு.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகும். எனவே பிறை யைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள், உங்களுக்கு மேகமூட்டம் தென்படு மானால் முப்பது நாள்களாக எண்ணிக் கையை முழுமைப் படுத்துங்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவித் தார். புகாரி: 1907, அத்தியாயம்:30, நோன்பு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்: பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேகமூட்டம் தென்பட் டால் ஃபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப்படுத்துங்கள் என அபூ ஹுரைரா(ரழி), அறிவித்தார். புகாரி:1909, அத்தியாயம் : 30, நோன்பு
அவற்றின் காட்சியை அடிப்படை யாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே உங்கள் மீது புலப்படாத போது நீங்கள் எண்ணிக்கையை முப்பது நாட்க ளாக முழுமைப்படுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), அவர்கள். (அஹ்மத்: 9641)
இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறிய தாவது: நபி(ஸல்) அவர்கள், நாம் எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயம் (உம்மத்துன் உம்மிய்யா) ஆவோம். எழுதுவதை நாம் அறியமாட்டோம். (நட்சத்திரக்) கணிதத் தையும் நாம் அறியமாட்டோம். மாதம் என் பது (சில வேளைகளில்) இப்படியும், இப்படியும், இப்படியும் –அதாவது முப்பது நாட்களாகவும் இருக்கும் என்று கூறினார் கள். இந்த ஹதீத் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. மேற்கண்ட ஹதீத் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும். அதில் இரண்டாவது மாதத்தைக் குறிப்பிடு கையில், அதாவது முப்பது நாட்கள் எனும் விளக்கக் குறிப்பு இடம் பெறவில்லை. (முஸ்லிம்: 1970)
இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் ரமழான் பற்றிக் கூறுகையில் தம் இரு கைகளையும் (மூன்று தடவை) அடித்தவாறு மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான் என்று கூறினார்கள். (மூன்றாவது தடவையில் தமது பெருவிரலை மடக்கிக் கொண்டார்கள்) மேலும் பிறை பார்த்து நோன்பு நோருங்கள். பிறை பார்த்தே நோன்பை விடுங்கள், உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை முப்பது (நாட்கள்) ஆகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (முஸ்லிம் : 1959)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பிறை பார்த்ததும் நோன்பு நோறுங்கள். (மறு) பிறை பார்த்த தும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு மறைக்க மாட்டார். அந்த மாதத்தை (முப் பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள் ளுங்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்:1963)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறை பார்த்து நோன்பு வையுங்கள், (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (சஃபான் மாதத்தின்) எண்ணிக்கையை (முப்பது நாட்களாக) முழுமையாக்கிக் கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்:1973)
இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறியதா வது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட் களா(கவும் இருக்)கும் என்று கூறினார்கள். இந்த ஹதீதின் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான ஷிஅபா (ரஹ்) அவர்கள் இதைக் கூறு கையில், இரு கைகளையும் மூன்று முறை கோத்துக் காட்டி, மூன்றாவது தடவையில் பெருவிரலை மடித்துக் கொண்டார்கள். அறிவிப்பாளர்: உக்பா பின் ஹுரைஸ்(ரஹ்) அவர்கள், ஒரு மாதம் என்பது முப்பது நாட் களாகவும் என இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறி, தம்மிரு கைகளையும் மூன்று முறை கோத்துக் காட்டியதாகவே நான் கருதுகி றேன் என்று கூறினார்கள். (முஸ்லிம் : 1969)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைக் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள். எனவே உங்கள் மீது அது மறைந்து இருக்கும்போது முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று மேலும் ஜாபிர்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் மனைவிகளை விட்டும் ஒரு மாதம் பிரிந்து இருந்தார்கள். மேலும் 29, இருபத்தொன்பதாவது நாளில் இறங்கினார்கள். மேலும் நிச்சயமாக இந்த மாதம் 29, இருபத்தொன்பது நாட்களைக் கொண்டது என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) அவர்கள், (முஸ்னத் அஹ்மத்: 146:70)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மாதம் இருபத்தொன்பது நாட் களைக் கொண்டதே! அதை நீங்கள் கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள். உங்கள் மீது அது மறைக்கப்பட்டு இருந்தாலே தவிர. எனவே உங்கள் மீது அது மறைக்கப்படும் போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள் ளுங்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) அவர்கள், (முஸ்லிம் : 1865) மேலும்,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மாதம் இருபத்தொன்பது நாட் களைக் கொண்டதே! அதை நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள். மேலும் நீங்கள் அதை கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள். உங்கள் மீது அது மறைக்கப் பட்டு இருந்தாலே தவிர, எனவே உங்கள் மீது அது மறைக்கப்படும்போது அதை நீங் கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். (அறிவிப்ப வர்: இப்னு உமர்(ரழி) அவர்கள், இப்னு குஜை மாஹ்: 1790)
அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற் றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே உங்கள் மீது புலப்படாத போது நீங்கள் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழு மைப்படுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப் பவர்: அபூஹுரைரா(ரழி) அவர்கள். (அஹ்மத்: 9641)
அவற்றின் சாட்சியை அடிப்படையா கக் கொண்டே நோன்பு வையுங்கள். மேலும் அவற்றின் காட்சியை அடிப்படை யாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். உங்கள் மீது புலப்படாத போது நீங்கள் எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) அவர்கள். (முஸ்லிம்: 2567)