பொறுமையாளர்களின் சிறப்புக்கள்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் :
இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்ச யமாக அல்லாஹ் பொறுமையுடையவர் களுடன் இருக்கின்றான். 2:153,45 இந்த வசனங்களின் மூலம் சோதனைகளைத் தாங்கிக் கொள்வதற்கு ஏற்ற வழி! பொறு மையும், தொழுகையும் ஆகும் என்பதை அல்லாஹ் இங்கு விவரிக்கின்றான். அதனால்தான், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனையால் துக்கம், துயரம், ஏற்படுமானால் உடனே தொழுகைக்கு விரைந்து செல்வார்கள். (ஹுதைஃபா பின் அல்யமான்(ரழி) அபூ தாவூத், முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் :1, பக்கம்: 496-500)
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனு டைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; அவ் வாறு கொண்டால் கோழைகளாகி விடுவீர் கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; துன்பங் களைச் சகித்துக் கொண்டு நீங்கள் பொறு மையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின் றான். (குர்ஆன் 8:46)
நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக் கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல் லாஹ் அதனை உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். எனவே உங்களில் பொறுமை யும், சகிப்புத் தன்மையும் உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இரு நூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள். உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு அவர் களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள். ஏனெனில் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (8:66)
பின்னர், தாலூத் படைகளுடன் புறப் பட்டபோது அவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களை வழியில் ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான். யார் அதிலிருந்து நீர் அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர். தவிர, ஒரு சிறங்கைத் தண் ணீர் தவிர யார் அதில் நின்றும் அதிகமாக நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என் னைச் சார்ந்தவர் என்று கூறினார். அவர்க ளில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் அதிலிருந்து அதிகமாக நீர் அருந்தினார்கள். பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர் “ஜாலூத்துடனும் அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலு வில்லை‘ என்று கூறிவிட்டனர். ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப் போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத் தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார் கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர் களுடன் இருக்கின்றான் என்று கூறினார் கள். (2:249)
அல்லாஹ் நேசிக்கின்றான் :
மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்த னர். எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர் கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்துவிடவுமில்லை; எதிரிக ளுக்குப் பணிந்து விடவுமில்லை, அல்லாஹ் இத்தகைய பொறுமையாளர்களையே நேசிக்கின்றான். (3:146) உஹதுப் போரின் போது இறை நம்பிக்கையாளர்களின் உள் ளங்களில் ஏற்பட்ட காயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மேற்குறித்த வசனத்தை அல்லாஹ் அருளினான். எத்த னையோ நபிமார்கள் கொல்லப்பட்டுள்ள னர். அத்துடன் அவர்களுடைய தோழர் களிலும் கணிசமானவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். இதுவே இப்னு ஜரீர்(ரஹ்) அவர்கள் முடிவு செய்த பொருளாகும்.
பொறுமையாளர்களுக்கு நன்மாராயம் :
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச் சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர் கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பி னாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமை யுடையோருக்கு நபியே! நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)
ஆனால் இறை நம்பிக்கை கொண்டு பொறுமையுடன் நற்கருமங்கள் செய்வோ ருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் கொடுக்கப் பட்டுள்ளனர் உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக் கப்படும் போதெல்லாம் “இதுவே முன்ன ரும் நமக்கு உலகில் கொடுக்கப்பட்டிருக் கிறது என்று கூறுவார்கள். ஆனால் தோற் றத்தில் இது போன்றதுதான் அவர்களுக்கு உலகத்தில் கொடுக்கப்பட்டிருந்தன; இன் னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவி யரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள் (2:25)
காலத்தின் மீது சத்தியமாக; நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயி னும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலி ஹான நல்ல அமல்கள் செய்து, சத்தியத் தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உப தேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக் கிறார்களோ அவர்களைத் தவிர அவர்கள் நஷ்டத்திலில்லை. (103:1-3)
நிச்சயமாக அவர்களே நிரந்தர வெற்றி யாளர்கள் :
நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் அதற் குரிய நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்! (23:111)
இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன:
பொறுமை உடையோராகிய அவர் களுக்குத் துன்பம் ஏற்படும்போது, நிச்சய மாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள். இத்தகை யோர் மீதுதான் அவர்களுடைய இறை வனின் நல்லாசியும், நற்கிருபையும் உண் டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். 2:156,157)
இழந்ததை விடச் சிறந்தது கிடைக்கும் :
உம்மு சலமா(ரழி) அவர்கள் கூறியதா வது : ஒருநாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து எனது முதல் கணவ ரான அபூசலமா(ரழி) என்னிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வியத்தை நான் செவியுற்றேன்; அது எனக்கு மகிழ்ச்சி அளித் தது என்று கூறினார்கள். காரணம்;
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ் லிம்களில் எவருக்கேனும் ஒரு துன்பம் நேர்ந்து தமக்கேற்பட்ட அந்தத் துன்பத்தின் போது பொறுமை கொண்டவராக “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்‘ என்று கூறி அதைத் தொடர்ந்து “அல்லா ஹும் மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தி வக்லுஃப் லீ கைரம் மின்ஹா‘ இறைவா எனக்கேற்பட்ட இத்துன்பத்திலிருந்து என்னைக் காப்பாற்று வாயாக! இதற்கு மாற்றாக இதைவிடச் சிறந் ததை எனக்கு வழங்குவாயாக! என்று கூறி னால் அவருக்கு அது வழங்கப்படாமல் இருப்பதில்லை என்றார்கள்.
இதை எனது கணவர் அபூசலமாவிட மிருந்து மனனம் செய்துகொண்டேன். அதன் பின்னர் அபூசலமா(ரழி) அவர்கள் இறந்தபோது மேற்குறித்த நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் இறைவா! இத்துன் பத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக! இதற்கு மாற்றாக இதைவிடச் சிறந்ததை எனக்கு வழங்குவாயாக! என்று கூறினேன். பின்னர் “அபூ சலமாவைவிடச் சிறந்தவர் எங்கிருந்து எனக்குக் கிடைக்கப் போகிறார்?’ என்று எனக்குள் நானே கூறிக்கொண்டேன்.
எனது இத்தாக் காலம் முடிந்த போது ஒருநாள் நான் எனக்குரிய தோல் ஒன்றைப் பதனிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எனது இல்லத்திற்குள் நுழைவதற்கு என்னிடம் அனுமதி கோரினார்கள். உடனே தோல் பதனிடப் பயன்படும் கருவேல மரப் பட்டை ஒட்டியிருந்த எனது கைகளைக் கழுவிவிட்டு அவர்களுக்கு அனுமதியளித் தேன். ஈச்சநார்கள் அடைக்கப்பட்ட தோலாலான தலையணை ஒன்றை அவர் களுக்காக எடுத்துப் போட்டேன். அதன் மீது அமர்ந்த நபி (ஸல்) அவர்கள் தமக்காக என்னை என்னிடமே பெண் கேட்டார்கள்.
அவர்கள் பேசி முடித்தபோது “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு வாழ்க் கைப்பட எனக்கும் ஆசை இல்லாமலில்லை எனினும் நான் கடுமையான முன் கோபக் காரியாவேன் என்னிடமிருந்து அத்தகைய ஒன்றை நீங்கள் கண்டு அதன் மூலம் அல்லாஹ் என்னை வேதனை செய்துவிடு வானோ என்று அஞ்சுகிறேன் அது மட்டு மன்றி நான் முதுமையைத் தொட்டுவிட் டேன் அத்துடன் அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பப் பெண்ணாகவும் உள் ளேன் என்று கூறினேன். அதற்கு,
நீங்கள் குறிப்பிட்ட அந்த முன் கோபத்தை உம்மிடமிருந்து விரைவில் அல் லாஹ் போக்கிவிடுவான். அடுத்து நீங்கள் குறிப்பிட்ட முதுமை என்பது உமக்கு ஏற் பட்டதைப் போன்றே எனக்கும் ஏற்பட் டுள்ளது குடும்பத்தார் குறித்து நீங்கள் குறிப் பிட்டீர்கள் இனி உம்முடைய குடும்பத்தார் என்னுடைய குடும்பத்தாராவார் என்று நபியவர்கள் கூறினார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதருக்கு வாழ்க்கைப் படச் சம்மதம் தெரிவித்தேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உம்மு சலமா(ரழி) அவர்களை மணமுடித்தார்கள். அப்போது அல்லாஹ் அபூசலமாவுக்குப் பதிலாக அவரை விடச் சிறந்தவராகிய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை எனக்குக் கணவராக வழங்கி விட்டான் என்று உம்மு சலமா(ரழி) அவர் கள் கூறினார்கள். (முஸ்லிம், முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 1, பக்கம் : 500-505)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: துன்பத்தால் பீடிக்கப்பட்ட ஒரு முஸ்லிமான ஆணோ பெண்ணோ அந்தத் துன்பம் நேர்ந்து நெடிய காலம் ஆகி விட்டாலும் பொறுத்துக் கொண்டவராக அதை நினைவுகூர்ந்து புதிதாக அப்போது “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்‘ என்று கூறினால் அந்தத் துன்பம் அப்போதுதான் அவருக்கு நேர்ந்தது என்று அல்லாஹ் எடுத்துக்கொண்டு அது நேர்ந்த நாளில் அதற்குரிய நற்கூலி எவ்வளவோ அதைப் போன்ற அளவை அவருக்கு அல் லாஹ் அளிப்பான். (முஸ்னத் அஹ்மத், இப்னு மாஜா, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 1, பக்கம் 504) (இன்ஷா அல்லாஹ் தொடரும்)