வணக்கத்திற்குரியவன்… அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை! 

in 2023 ஜுன்

வணக்கத்திற்குரியவன்

அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை! 

அப்துல் ராஸிக் 

உலகத்தில் அல்லாஹ் மனிதனுடைய சிந்தனையில், மனிதனுடைய பார்வையில், அவன் இதயத்தில் அகிலலோகங்களையும் அவற்றிலுள்ளவற்றையும் படைத்திருக்கின்ற படைப்பாளன் அவன் ஒருவன் தான் என்பதை ஆக்கிவிட்டான். வானமும், பூமியும் உலகத்தில் உள்ளவை அனைத்தும் படைப்பாளன் அவன் ஒருவன் தான் என்று சாட்சியளிக்கின்றன. இது எல்லா மனிதனுடைய சிந்தனையிலும் இருக்கிறது. ஆனால் அவன் ஒருவன்தான் என்பதை இந்த உலகத் தில் நிலை நாட்டுகின்ற பாக்கியம், அவன் ஒருவன் தான் என்பதை இந்த உலகத்தில் எடுத்து வைக்கின்ற பாக்கியம். அவன் ஒரு வன்தான் என்பதை இந்த உலகத்தில் சாட்சி பகர்கின்ற பாக்கியம் யாருக்கு இருக்கிறது? அது முஸ்லிம்களாகிய நமக்கே இருக்கிறது. இது நமக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம், மாபெரும் சிறப்பு. அதனால்தான் அல்லாஹ் சொல்கிறான்ஒருவன் ´ர்க் செய்யாமல் எத்தனை பாவங்களோடு வந்தாலும் அவனை நான் நாடினால் மன்னிப்பேன்என்று. அதனால் அவனுக்கு இணை வைக்காமல் வாழக்கூடிய  சிந்திக்க கூடிய, செயல்பட கூடிய, எழுதக்கூடிய, பேசக்கூடிய அதை அப்படியே எடுத்து நடக்கக்கூடிய பண்பு நம்மிடையே உருவாக்கப்படுவதற்கு, ´ர்க்கை பற்றிய எல்லா விபரங்களையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் ஒன்றுதான் யா! என்று எங்கள் முன்னே இல்லாத ஒருவரை, நாங்கள் சொல்வதை கேட்க முடியாத ஒருவரை, நாங்கள் அழைப்பது இருக்கிறதே அது நிச்சயமாக பெரியதொரு இணை வைத்தலில் போய் சேரும். நீங்கள் பார்க்கலாம் வீடுகளில் யா அல்லாஹ், யா முஹம்மது என்று சுவரில் எழுதி யிருப்பார்கள். துர்பாக்கியம் பள்ளிகளில் கூட இதை நீங்கள் பார்க்கலாம். இந்த பள்ளிகளில் இருக்கிறதே அந்த பள்ளிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான். அங்கே அல்லாஹ்வை தவிர வேறு யாரும் அழைக்கப்பட கூடாது என்று சொன்ன அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக சில மனிதர்கள் செயல்படுகிறார்கள். இதனால் பரக்கத் இருக்கிறது. இதனால் பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்லி இச்செயலை செய்கிறார்கள்.

இந்தயா அல்லாஹ்‘, “யா முஹம்மதுஎன்று சொல்லும் அந்த வி­யம் எங்கெல்லாம் வந்துவிட்டது. முஹம்மது(ஸல்) அவர்களிடம் இறங்கி மற்ற மனிதர்களிடம் அது வந்து சேர்ந்திருக்கிறது. உதாரணமாகயா முஹையதீன்‘, “யா சாகுல் ஹமீதுபாஷாவே என்று சொல்லக்கூடிய அந்த பழக்கங்கள் கூட முஸ்லிம்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. இப்படி வந்து சேர்ந்துவிட்டதால் ஆபத்தான கட்டங்களில் யாஅல்லாஹ் என்று அழைப்பதற்குப் பதிலாக யா முஹையதீன் என்று அல்லாஹ்வுக்கு பதிலாக ஒரு மனிதரை அழைக்கும் பழக்கம் வந்து விட்டது.

அதாவது எங்களுக்கு முன்னிலையில் இல்லாத ஒருவர், நாம் சொல்வதை கேட்க முடியாத ஒருவர் இருக்கிறாரே அவரையாஎன்று அழைக்கும் பண்பு எங்களிடம் புகுத் தப்பட்டதால் இவ்வளவு பெரிய ஆபத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. நீங்கள் பார்க்கலாம். பள்ளிகளில் உள்ள ஒலி பெருக்கிகள் இருக் கின்றனவே இது தினமும் உலகம் முழுவதும் சொல்கிறது. “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்என்று சாட்சியம் பகர்கின் றது. எந்த வணக்கமாக இருந்தாலும் அது சிறிய வணக்கமாக இருந்தாலும், பெரிய வணக்கமாக இருந்தாலும் அந்த வணக்கத் திற்குரியவர்கள் யாருமே இல்லையயன்று சாட்சி பகர்கிறேன் என்று சொல்கிறது. சாட்சி என்றால் என்ன? சாட்சி என்றால் ஒன்றை சந்தேகம் வந்த இடத்தில் ஊர்ஜிதப் படுத்துகிறவர்கள். சந்தேகம் வந்த இடத்தில் பலப்படுத்துகிறவர்கள். அவர்களைத்தான் நம் சாட்சி என்று சொல்வோம்.

நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வருகிறது. வழக்கறிஞர்கள் பேசுகிறார்கள். அவர் சொல்வது சரியா? இவர் சொல்வது சரியா? என்ற கேள்வி எழுகிறது. நீதிபதி தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொன்னால் நீ சொன்னதுதான் சரி என்று சொல்வதற்கு, பலப்படுத்துவதற்கு, உறுதிப்படுத்துவதற்கு நீ உன்னுடைய சாட்சியை கொண்டுவா என்று சொல்கிறார். எனவே அந்த சாட்சியத்தை தான் நாங்கள் உலகம் முழுவதும் சொல்கின்றோம். நிச்சயமாக இந்த சாட்சியத்தை நம் வாழ்வில், பேச்சில், சிந்தனை யில் கடைப்பிடிப்பது ஆகப் பெரிய ஒரு ஃபர்ளு (கடமை). அதைத்தான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) அவர்கள் சஹாபாக் களின் விளக்கத்தை ஸஹாபாக்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பற்றி சொல்லும்பொழுது, “நாங்கள் தொழுகை யில் அத்தஹிய்யாத்தில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு, வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹுஎன்று ஓதுவதை  நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் வரை நாங்கள்  செய்து வந்தோம்.

நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு நாங்கள் அஸ்ஸலாமு அலன் நபிய்யு வரஹ்மத் துல்லாஹி வபரகக்காத்துஹு என்று சொன்னோம். (புகாரி) அதாவது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு என்று சொல்லவில்லை. உங்களுக்கு என்று சொல்வதை (அலன் நபிய்யு) நபியின் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று மாற்றி கொண் டோம். ´ர்க்கில் விழாமல் ஏகத்துவத்திற்கு சாட்சி பகர்கின்ற ஸஹாபாக்களின் தெளிவை இது  நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

அன்புச் சகோதரர்களே, பெரியார்களே இந்த செய்தி இருக்கிறதே நான் சொன்னதோடு மாத்திரம் அல்லாமல் அனைத்து விசயங்களோடும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டும். எத்தனையோ செயல்களை செய்கிறோம் நாம். இதனால் நன்மை வரலாம் என்று. நிச்சயமாக நன்மை யாராலும், எதனாலும் ஒருபோதும் வரமுடியாது. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி)அவர்களைப் பார்த்து அருமை ரசூல்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். “நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்; ஏனென்றால் உலகத்திலுள்ள அனைத்துச் சக்திகளும், மனிதர்களும் சேர்ந்து அல்லாஹ் தடுத்த ஒன்றை அவர்கள் உனக்குத் தர நாடினால் நிச்சயமாக உனக்கு அதைத் தரமுடியாது. அல்லாஹ் ஒன்றை உனக்குத் தர நாடினால் நிச்சயமாக எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதாவது எழுதப்பட்ட ஏடுகள் காய்ந்து விட்டன. எழுதிய எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டனஎன்று சொல்லிவிட்டு சொன்னார்கள். “உன்னைக் கொண்டு போய் நெருப்பில் போடுவதை எப்படி வெறுக்கின்றாயோ அப்படி அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை வெறுஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

இதுபோன்ற இணை வைத்தல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்..

Previous post:

Next post: