வலப்புறத்தை முற்படுத்துங்கள்! 

in 2023 ஜுன்

வலப்புறத்தை முற்படுத்துங்கள்! 

K.S.H.அபூஅப்தில்லாஹ் 

அல்லாஹ் படைத்த அத்தனைப் படைப்பினங்களும் பொருள்களும் இரண்டு இரண்டாகவே உள்ளன. படைப்பில் சிறந்தவனாகிய மனிதனையும் ஆண், பெண் என ஜோடியாகவே படைத்துள்ளான். இதையே “”நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி, ஜோடியாகப் படைத்தோம்அல்குர்ஆன் 51:49 என்று அல்லாஹ் கூறுகிறான்.

இப்படி ஜோடி, ஜோடியாகப் படைத் ததில் ஒவ்வொன்றிலும் வலது, இடது என இரு புறங்களையும் அமைந்திருக்கின்றான். மனிதனின் அவயங்களும் வலது இடதாகவே உள்ளன. மனிதன் சுற்றித் திரிந்து சுதந் திரமாகச் செயல்படுவதற்கு கால்களும், கைகளும் பெரிதும் துணை செய்கின்றன. இவைகளும் வலது, இடதாகவே அமைக்கப் பட்டுள்ளன.

வலது புறத்திற்கு இடது புறத்தைக் காட்டிலும் சில தனிச் சிறப்புகளை அல்லாஹ்வும், அவனது தூதர்களும் கொடுத்திருப்பதைக் காணலாம். இதுபோல இடது பக்கத்திற்குரிய செயல்களும், வலதிற்கு முற்றிலும் நேர்மாறாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.

வலதைப்  பற்றிய  அல்லாஹ்வின்  சுன்னத்:

“”நாம் மூஸா(அலை) அவர்களை நூர் (ஸினாய்) மலையின் வலது புறத்திலிருந்து கூப்பிட்டோம்அல்குர்ஆன் 19:52

“(மூஸா(அலை) அவர்கள் அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப்பள்ளத்தாக்கிலுள்ள ஓடை யின் வலது பக்கத்தில் (நடு) மரத்திலிருந்துமூஸாவே! நிச்சயமாக நானே அகிலத் தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்என்று கூப்பிட்டான். அல்குர்ஆன் 28:30

இன்னும் இந்த பூமி முழுவதும் இறுதி நாளில் அவனுடைய ஒரு பிடிதான், மேலும் வானங்கள் அனைத்தும் அவனுடைய வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும்‘. அல்குர்ஆன் 39:67

“(இந்தத் தூதர்) நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டி கூறியிருப்பாரா னால் அவரை வலக்கர பிடியாக நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர் அவருடைய நாடி  நரம்பை  தரித்திருப்போம்  அல்குர்ஆன் 69:44,45,46

ஒருவர் தம் நல்ல சம்பாத்தியத்திலிருந்து ஒரு பேரீத்தம் பழத்தின் கிரயத்தை தர்மம் செய்வாரானால் அல்லாஹ் நல்லவையே தவிர மற்றெதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். தம் வலக்கரத்தால் அல்லாஹ் அதனை ஏற்றுக்கொள்வன்‘. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.

வலது  கையை  முற்படுத்திய  நபிமார்கள்:

இப்ராஹிம்(அலை) அவர்கள் சிலை களின்பால் அவர் சென்று நீங்கள் உண்ண மாட்டீர்களா? என்று கூறினார். உங்களுக்கு என்ன (நேர்ந்தது?) நீங்கள் ஏன் பேசுகிறீர் களில்லை? பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.   அல்குர்ஆன் 37:92,93

மூஸாவே! உமது வலது கையில் இருப்பதென்ன?’ அல்குர்ஆன் 20:17

மூஸாவே! உமது (வலது கையில்) இருப்பதை  நீர்  கீழே எறியும்அல்குர்ஆன் 20:19

வலதைப் பற்றிப் பிடித்த நபி(ஸல்) அவர்கள்

நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் அனைத்துக் காரியங்களிலும் வலது பாகமே பிரியமானதாக இருந்தது. அவர்களின் பரிசுத்தம் (ஒளூச் செய்தல், குளித்தல்) தலை முடி சீவுதல், செருப்பு அணிதல் ஆகியவற்றில் வலது பாகத்தையே விரும்புவார்கள்‘. அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.

உங்களில் ஒருவர் செருப்பணிந்தால் முதலில் தம் வலது காலில் அணியட்டும்! செருப்பை கழற்றினால் முதலில் தம் இடது காலை விட்டுக் கழற்றட்டும், வலது கால் முதலில் அணிவிக்கப்படுவதாகவும் கடைசியில் கழற்றப்படுவதாகவும் இருக்கட்டும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அன்னை ஹப்ஸா(ரழி), நூல்: அபூதாவூத், திர்மிதி.

நீங்கள் ஆடைகளை அணிந்தால், ஒளு செய்தால் உங்களின் வலது பாகங்களைக் கொண்டு ஆரம்பியுங்கள்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி), நூல்: அபூதாவூத், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உணவை உண்ண ஆரம்பிக்கும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறுவீராக! வலது கையால் உண்ணுவீராக! (உணவுத் தட்டில்) உமக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து உண்ணுவீராக!’  அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்களுக்கு பால் கொண்டு வரப்பட்டது. நபியவர்களின் வலது புறம் ஒரு காட்டரபியும் இடது புறம் அபூபக்கர் (ரழி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். நபி யவர்கள் பாலைப் பருகினார்கள். (மிஞ்சிய பாலை) காட்டரபிக்கு கொடுத்தார்கள். (அப்பொழுது) வலது புறத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! பின்னர் வலது புறத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! எனப் பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் தங்கள் விரிப்புக்கு வந்தால், தங்கள் வலது பாகத்தின் மீது உறங்குவார்கள்.’ அறிவிப்பவர்: பராவு பின் ஆஸிப் (ரழி), நூல்: புகாரி.

“(தொழுகை) வரிசை (ஸஃப்யில்) வலது புறமாக நிற்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான். அவனுடை மலக்குகள் அவர்களுக்காக அருள் வேண்டி பிரார்த்திருக் கிறார்கள்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: அபூதாவூத், இப்னுமாஜா.

நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அணியாகத் தொழும்போது நாங்கள் அவர் களின் வலப்புறம் இடம் பெறுவதையே விரும்புபவர்களாக இருந்தோம்அறிவிப்ப வர்: பராவு பின் ஆஸிம்(ரழி), நூல்: இப்னு மாஜா, நஸயி

நபி(ஸல்) அவர்கள் வலது கரத்தில் மோதிரம் அணிபவர்களாக இருந்தனர்அறிவிப்பவர்: அலீ இப்னு அபூதாலிப்(ரழி) நூல்: அபூதாவூத், நஸயி.

நபி(ஸல்) அவர்கள் (தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது) மினாவிற்கு வந்தார்கள். அங்கு ஜம்ராவிற்கு வந்து ஷைத்தானிற்கு கல் எறிந்தார்கள். பின்பு குர்பானி கொடுத்தார்கள். பின்னர் முடி எடுப்பவரை அழைத்து முடியை எடுப்பீராக! எனக் கூறி தங்கள் தலையின் வலது பாகத்தின் பக்கம் காட்டினார்கள்அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல் : புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்களின் புதல்வி ஜைனப் (ரவி) அவர்களைக் குளிப்பாட்டிக் கொண் டிருந்த பெண்மணிகளுக்குக் கூறினார்கள். “நீங்கள் குளிப்பாட்டுவதை ஜைனபின் வலது பாகங்களைக் கொண்டும் அவர்கள் ஒளூ செய்யும் இடங்களைக் கொண்டும் ஆரம்பியுங்கள்.’ அறிவிப்பவர்: உம்மு அநிய்யா (ரழி), நூல்: புகாரி: முஸ்லிம்.

வலப்புறத்தாருக்கு அல்லாஹ்விடத்தில் உள்ள சிறப்புகள்:

ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதும் ஆகும். அத்தகையோர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள். அல்குர்ஆன் 90:17,18

எவனுடைய பட்டோலை அவனு டைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ, அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான். இன்னும், தன்னைச் சார்ந்தோரிடம் மகிழ்வுடன் திரும்புவான்  அல்குர்ஆன் 84:8,9

வலப்புறத்தாரே! உங்களுக்கு ஸலாம் உண்டாவதாக‘! என்று கூறப்படும். அல்குர்ஆன் 56:91

வலப்புறத்தார்கள் யார்? என்பதை அறிவீர்களா? அவர்கள் முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும், குலை குலையாக பழங்களையுடைய வாழை மரத்தின் கீழும் இன்னும் நீண்ட நிழலிலும் இருப்பார்கள்.   அல்குர்ஆன் 56:27,30

நிச்சயமாக ஹுருல்ஈன் என்னும் கன்னிகளை புதிய படைப்பாக நாம் உண்டாக்கி, அப்பெண்களை கன்னிகளாகவும், தம் துணைவர் மீது பாசமுடையோராகவும் சம வயதுடையவராகவும் வலப்புறத் தோருக்காக  ஆக்கி வைத்துள்ளோம்.’ அல்குர்ஆன் 56:41

முஃமின்களான ஆண்களையும், முஃமின்களான பெண்களையும் நீர் பார்க் கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர் களுக்கு முன்னாலும் அவர்களுக்கு வலப் புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும். அப்போது அவர்களை நோக்கி இன்று உங் \களுக்கு நன்மாராயமாவது சுவனத்து சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என் றென்றும் தங்குங்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.’ (என்று கூறப்படும்)  அல்குர்ஆன் 57:12

அல்லாஹ்வின் அர்´ன் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத இறுதி தீர்ப்பு நாளில், அல்லாஹ் தனது (அர்´ன்) நிழலை ஏழு பேர்களுக்குக் கொடுப்பான் அந்த எழுவரில் ஒருவர், தனது வலது கரம் தர்மம் செலவழிப்பதை இடது கரம் அறியாதவாறு மறைவாக தர்மம் செய்யும் மனிதர். அறிவிப்பவர்: அதீ பின் ஹாதம் (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.

இடது புறத்தை பின்பற்றும் ஷைத்தான்:

1. “உங்களில் ஒருவர் உணவு அருந்தி னால், வலது கையால் உண்ணுங்கள். பானம் பருகினால் வலது கையினால் பருகுங்கள். ஏனெனில் ஷைத்தான் இடது கையால் உண் ணுகிறான், இடது கையால் பருகுகிறான்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப் பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: முஸ்லிம்

இடது புறம் செய்யவேண்டிய செயல்கள்:

2. “ஒருவர் தாம் வெறுக்கும் தீய கனவை காண்பாரானால் தம் இடது புறம் மூன்று முறை துப்பட்டும். ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடட்டும். நிச்சயமாக அவை அவருக்கு எத்தகைய இடையூறையும் அளிக்க முடியாதுஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார். அறிவிப்பவர்: அபூகதாதா(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.

3. நபி(ஸல்) அவர்கள் கூறினார். “உங்களில் ஒருவர் தம் தொழுகையில் நின்றால், அவர் தம் ரப்புடன் தனித்து உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையில் அவரின் ரப்பு இருந்து கொண்டிருக்கின்றான். ஆகவே உங்களில் ஒருவர் கிப்லாவின் பக்கம் துப்ப வேண்டாம். தன் இடது புறம் அல்லது பாதத்திற்கு கீழே துப்பிக் கொள்ளட்டும்.’  அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.

4. நபி(ஸல்) அவர்களின் இடது கை அவர்களின் மலஜல தேவைகளை நிறைவேற்று தல் மற்றும் அருவறுப்பான காரியங்களுக்காக இருந்ததுஅறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: அபூதாவூது.

இடப்புறத்தாருக்கு ஏற்படும் இழிவுகள் :

எவர்கள் நம்முடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாம் இடப் பாரிசத்தவர்கள். அவர்களை நரகத்தில் போட்டு மூடப்படும்அல்குர்ஆன் 90:19,20

எவன் தன்னுடைய இடக்கையில் வினைச்சீட்டுக்  கொடுக்கப் பெறுவானோ அவன் என்னுடைய வினைச் சீட்டு எனக்குக் கொடுக்கப்படாதிருக்க வேண்டாமா?’  என்று கேட்பான். அல்குர்ஆன் 69:25

இடப் பாரிசத்திலுள்ளவர்களோ, இடப் பாரிசத்திலுள்ளோர் (துர்பாக்கிய) நிலை தெரியுமா? அவர்கள் கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் அடர்ந்த இருண்ட புகையின் மத்தியிலும் இருப்பார்கள்.  அல்குர்ஆன் 56:41,42

இறுதி தீர்ப்பு நாளில் எனது உம்மத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களை இடப்புறமாக நரகின் பக்கம் பிடித்துச் செல்லப்படும். அப்போது நான் கூறுவேன். “என் இரட்சகனே! இவர்கள் என் தோழர்களாயிற்றே! என்று அப்போது எனக்குக் கூறப்படும். உமக்குப் பின்னால் இவர்கள் தீனில் எதனை புதிதாக  உண்டாக்கினார்கள் என்பதை நீர் அறியமாட்டீர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்கள் சமூகத்தில் தன் இடக்கையால் சாப்பிட்டுக் கொண் டிருந்தார். அதனைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள்உமது வலது கரத்தால் சாப்பிடு வீராக! என்று அவரிடம் கூறினார்கள். அதற்கவர் அது என்னால் இயலாது! என்றார். அது உன்னால் இயலாதா? எனக் கேட்டார்கள். (உண்மையில் அவரின் பெருமை தான் வலது கையால் உண்ணுவதை விட்டு அவரைத் தடுத்தது பின்னர் அந்தக் கையை அவரின் வாயின் பக்கம் உயர்த்தவே முடிய வில்லைஅறிவிப்பவர்: ஸலமா பின் அல் அக்வவு(ரழி), நூல்: முஸ்லிம்.

அன்புச் சகோதரர்களே! அல்லாஹ்வுடைய ஸுன்னத்தைப் பின்பற்றிய நபி அவர்களின் ஸுன்னத்தைப் பற்றிப் பிடித்து வலது புறத்தை முற்படுத்துவோம். அல்லாஹ்விற்கு மாறு செய்து ஷைத்தானை பின்பற்றுவதிலிருந்து விலகிக் கொள்வோம். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் வலக்கையில் வினைச்சீட்டு கொடுக்கப் பட்டவர்களாக்கி  வலப்பரிசத்தின் சுவனச் சோலையில் நுழைபவர்களாக ஆக்கி அருள்வானாக!

Previous post:

Next post: