விமர்சனம்! விளக்கம்!!
விமர்சனம் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அன்பு அந்நஜாத் ஆசிரியர் அவர்களுக்கு, முஹம்மது இக்பாலின் அஸ்ஸலாமு அலைக்கும்!
அந்நஜாத் மே மாத இதழ் கண்டேன். அன்று அல்லாஹ்வுடைய பள்ளி இன்று சுன்னத் வல்ஜமாஅத் பள்ளி என்ற கட்டுரை (பக்கம் 23) அபூ உவைஸ் என்ற சகோதரரால் அற்புதமாக எழுதப்பட்டிருந்தது.
மவ்லவிகள் என்ற மத புரோகிதர்களின் சூழ்ச்சிகளைப் பற்றி அதில் தெளிவாக்கப் பட்டிருந்தது. அக்கட்டுரையை எழுதிய சகோதரர் அவர்களுக்கு அல்லாஹ் மார்க்க அறிவை விசாலப்படுத்த அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். அக்கட்டுரையில் அடுத்த கட்டுரையான (பக்கம் 26) மார்க்கம் மிகமிக எளிதானது என்ற கட்டுரை சகோதரர் நூருல் அமீன் அவர்களால் எழுதப்பட்டி ருந்தது. அக்கட்டுரையின் சில வரிகள் பூசாரிப் புரோகிதர்களின் உதவி மார்க்கத்திற்கு தேவை என்ற கருத்து வெளிப்படும் வகையில் இருந்தது. சற்று வியப்பாகவே இருந்தது. சகோதரர் எழுதுகிறார். (பத்தி 3).
இப்படி இஸ்லாம் முஸ்லிம்கள் மத்தியில் கடினமானதற்குக் காரணம் என்ன?
முஸ்லிம்களின் அறியாமையா? அல்லது மார்க்க அறிஞர்கள் தமது கடமையை மறந்ததினாலா? என்றால் முஸ்லிம்கள் அறியாமையிலும் இருக்கிறார்கள். மார்க்க அறிஞர்கள் தங்கள் கடமையை முறையாகச் செய்யாமல் இருக்கின்றார்கள் என்று எழுதுகிறார் சகோதரர். மேலே எழுதப்பட்ட வரிகளைச் சற்று சிந்தித்தால் மார்க்க அறிஞர்கள் சற்று மறந்த காரணத்தால், தங்கள் கடமையை செய்யாத காரணத்தால் முஸ்லிம்களுக்கு இந்தப் பின்னடைவு என்ற கருத்து வெளிப்படுகிறது. மார்க்கத்தில் இந்த மவ்லவிகளின் தேவை இருப்பது போலவும் அவர்கள் மறதியினால் தங்கள் கடமையைச் செய்யத் தவறினால் அதனால் சமூகம் பாதிப்படையும் என்பது போன்ற எண்ணம் படிக்கும் வாசகர்களிடையே ஏற்படும்.
உண்மையில் இந்த மவ்லவிகளின் தயவோ, அல்லது உதவியோ இஸ்லாமிய தூய மார்க்கத்திற்கு தேவையே இல்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களுக்கு பூசாரிகளின், புரோகிதர்களின் இடைத்தரகர்களின் உதவி தேவைப்படும். ஆனால் இம்மார்க்கம் அல்லாஹ்வினால் உருவாக்கப்ப்டட மார்க்கம். அம்மார்க் கத்தை அல்லாஹ் மக்களுக்கு தெளிவாக்கிவிட்டான்.
காண்க : இறை நெறிநூல் 29:69, 2:282, 55:3, 55:4, 54:17, 22, 32,40, 19:97, 44:58, 80:20, 5:6, 7:2, 9:91, 22:78, 4:113, 87:6 இன்னும் ஏராளமான இறைவாக்குகள் அல்லாஹ் மனிதர் களுக்கு மார்க்கத்தை எளிதாக்கி விட்டான் என்பதை பறைசாற்றி அறிவிக்கின்றன. இன்னும் தெளிவாக இந்த புரோகிதர்களால் அவாம்கள் என்று அழைக்கப்படும் பாமரர்களுக்காகவே இக்குர்ஆன் அருளப்பட்டது என்பதை 62:2, இறைவாக்கு தெளிவு படுத்துகிறது. ஆகவே புரோகிதர்கள் மறந்தாலும், அல்லது தங்கள் கடமையைச்(?) செய்யத் தவறினாலும் எப்படிப் பார்த்தாலும் புரோகிதர்களின் பங்கு இஸ்லாத்தில் இல்லவே இல்லை. சரி! இப்படி எழுதிய சகோதரர் நூருல் அமீன் அவர்கள் தனது கருத்தை அதே கட்டுரை பக்கம் 29ல் மறுத்து அவர் கருத்துக்கு அவரே முரண்படுகிறார். சகோதரர் எழுதுகிறார். (பக்கம் 29)
“யூதர்களுக்கு யாரையாவது ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுத வேண்டுமானால் நமது ஆலிம்களை யூதர்களோடு ஒப்பிட்டு எழுதலாம் ஆலிம்கள் அதற்கு மிகவும் தகுதியா னவர்கள். இவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் குணாதிசயங்களில் யூதர்களோடு ஒத்தவர்களாகவே இருக்கின்றார்கள். அல்லாஹ் திருமறையில் 2:146 வசனத்தில் யூதர்கள் குர்ஆனை இறை வேதம் என்பதை அறிவார்கள். எப்படி என்றால் தங்கள் குழந் தையை அறிவது போன்று, அறிந்து இருந் தும் மறைப்பார்கள் என்று கூறுகின்றான். யூதர்களைப் போன்று ஆலிம்களும் குர் ஆனை அறிவார்கள். இருந்தும் உலகில் கிடைக்கக் கூடிய ஒருசில சுகபோகத்திற் காகவும் உலக ஆதாயத்திற்காகவும் குர் ஆனை மக்கள் மத்தியில் மறைப்பார்கள்‘ சகோதரரின் இவ்வரிகள் அவரின் முந்தைய கருத்தை அப்படியே மாற்றி விடுகிறது. பக்கம் 26ல் ஆலிம்கள். தங்கள் கடமையை மறந்து விட்டார்கள் என்ற கருத்தை எழுது கிறார். பக்கம் 29ல்அவர்களுக்கு மறதி எல் லாம் இல்லை. தெரிந்த நிலையில்தான் மறைக்கிறார்கள் என்கிறார்.
ஆக எப்படி இருந்தபோதும் படிக்கும் வாசகர்களுக்கு சில குழப்பங்கள் ஏற்படுத் தும் இதுபோன்ற கட்டுரைகளை வெளி யிடும்போது சற்று கவனத்துடன் வெளியிட் டால் நலம். மார்க்க அறிஞர்கள் என்ற சொல் ஒருபோதும் மதரஸா என்ற இடத் தில் ஏழு ஆண்டுகள் வெறுமனே கழித்தவர் களை குறிக்காது. ஆலிம் அவாம் என்ற வேறுபாடு அறவே இல்லை. சமுதாயம் ஒன்றுதான் (21:92, 23:52) ஆலிம் என்பவர் அல்லாஹ்விற்கு அஞ்சுபவர்தான். (35:28)
ஆகவே இனிவரும் காலங்களின் அனைவரும் அறிஞர்களாக பாடுபடுவோம். அதற்காக அந்நஜாத் பாடுபட, வெற்றிபெற துஆச் செய்கிறேன். கட்டுரை ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள். அவரின் சில வரிகள் மவ்லவிகளின் துணை வேண்டும் என்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதால் இந்த மறுப்பை எழுதினேன். அல்லாஹ் அனைவருக்கும் மார்க்க அறிவை விசால மாக்கி ஆலிம்–அவாம் வேறுபாட்டை அழிக்க துணை புரிவானாகவும். அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் பக்கம் 29ல் குர்ஆனை இறை வேதம் என்கிறார். இது தவறு, குர்ஆன் இறைநெறி நூல், வழிகாட்டும் நூல்.
விளக்கம் : அந்நஜாத்தை படித்து அதில் வரும் கருத்துகள் சரியானதா? என்று பரிசீலனை செய்து, உங்கள் கருத்துக்களை எடுத்து எழுதும் சகோதரர் முஹம்மது இக்பால் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதான மும் உண்டாக இறைவனை பிரார்த்திக் கிறோம்.
சகோதரர் நூருல் அமீன் அவர்கள் மார்க்க அறிஞர்கள் என்று குறிப்பிட்டதை நீங்கள் தவறுதலாக பூசாரிப் புரோகிதர்கள் என்று தவறாக புரிந்ததால் ஏற்பட்ட குழப்பம்தான் உங்கள் சந்தேகத்திற்கு காரணம். மார்க்க அறிஞர்கள் அன்று குறிப் பிட்டது 7 வருட மதரஸா மெளலவிகளை அல்ல, குர்ஆன், ஹதீத்களை படித்து அதனை சுய சிந்தனையுடன் விளங்கிய மனிதர்களை. (பட்டம் வாங்கிய மெளலவி களை அல்ல)
இறைவன் நிச்சயமாக நாம்தாம் தவ் ராத்தை இறக்கிவைத்தோம். அதில் நேர் வழியும் ஒளியும் இருக்கின்றன. (அல்லாஹ் வுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும், அல்லாஹ் வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையி டப்பட்டவர்கள் என்பதாலும் இன்னும், அதற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தார் கள் என்பதாலும் அதனைக் கொண்டே யூதர்களுக்கு தீர்ப்பளித்து வந்தார்கள். எனவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள், என்னுடைய வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர் கள்தாம் நிராகரிப்பவர்கள். (குர்ஆன் 5:44)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறு வது குர்ஆனை கற்று அறிந்து அதன்படி தாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ சொன்ன மனிதர்களை தான். இறையச்சம் மிகுந்த மேதைகளும், அறிஞர்களும் என்று கூறுகிறான். மேலும் 26:197லிலும், 35:28லும் அறிஞர்கள் யார் என்று இறைவன் தெளிவு படுத்தியுள்ளான்.
இனிவரும் காலத்தில் இஸ்லாமிய அறி ஞர்கள் குறிப்பிடும்போது அதற்கும் பின் னால் அடைப்பு குறியில் 7 வருட மெளலவி கள் அல்ல என்று குறிப்பிட்டால் குழப்பம் வராது. இன்ஷா அல்லாஹ். தங்கள் சந்தே கத்தை கூறி மற்றவர்களையும் அதை விளங்க வைத்த உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!