அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. அல்குர்ஆனில் எத்தனை வசனங்கள் உள்ளன?
6236
2. இறைவனிடம் நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டும்?
அந்தரங்கமாகவும், பணிவாகவும். (அல்குர்ஆன் 7:55)
3. அல்குர்ஆனில் பெயர் கூறப்பட்ட பெண்கள் எத்தனை பேர்?
ஐவர்
4. பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் எந்த நபியால் கட்டப்பட்டது?
ஸுலைமான்(அலை) (அல்குர்ஆன் 34:14)
5. நபி(ஸல்) அவர்களின் மருமகன் யார்?
அலி(ரழி)
6. அல்குர்ஆனில் பிஸ்மில்லாஹ் சொல்லி துவங்காத சூரா எது?
அத்தவ்பா. (அத். 9)
7. விலை பேசி முன்னரே விலையைக் கொடுத்து விடுதல் என்பதற்கு அரபி யில் பேச்சு வழக்கின் பெயர் என்ன?
ஸலம். (புகாரி 35வது பாடம் 2241)
8. ஜிஸ்யா என்றால் என்ன?
காப்புவரி. (புகாரி 3157)
9. நபி(ஸல்) அவர்கள் ஜகாத் எத்தனை சதவீதம் என்று கூறினார்கள்?
3%
10. நபி(ஸல்) அவர்களுக்கு முதல் வஹீ மூலம் கூறப்பட்ட வசனம் எது?
96:1-5. (அல்குர்ஆன் 96வது சூரா அலக் இரத்தக்கட்டி)
11. அல்லாஹ் மனிதனிடம் எந்த அளவுக்கு சமீபமாக இருப்பதாக கூறுகிறான்?
பிடரிநரம்பைவிட. (அல்குர்ஆன் 50:16)
12. அல்குர்ஆனில் 2 முறை பிஸ்மில் லாஹ் வரும் அத்தியாயம் எது?
27 அந்நம்ல். (அத். 27, வசனம் 30)
13. புகழ் அனைத்தும் யாருக்கு என அல் லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ்வுக்கு. (அல்குர்ஆன் 29:63, 31:25)
14. யாருக்கு ஜனாஸா தொழுகை இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?
போரில் கலந்து கொள்ளாதவர்கள். (அல்குர்ஆன் 9:83, 84)
15. ஜன்னத்துல் பகிஃ இருக்கும் இடம் எந்த ஊர்?
மதினா.
16. ஹுது பறவை பற்றிய அத்தியாயம் எது?
நம்ல் (27)
17. ஹீதுடைய பாவம் மன்னிக்கப் படாதது எது?
கடன். (முஸ்லிம் : 3832)
18. மறுமை நாளில் முதலில் ஆடை அணி விக்கப்படுபவர் யார்?
இப்ராஹிம் (அலை) புகாரி : 3349
19. எந்த நான்கு மாதங்களில் போர் செய்ய தடுக்கப்பட்டது?
துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப்
20. ஏமன் நாட்டு காபா என்று அழைக் கப்பட்ட ஆலயத்தின் பெயர் என்ன?
துல்கலஸா. (புகாரி: 3823)