இறைத்தூதர் லூத்தும்! ஓரின சேர்க்கை குற்றமும்!!

in 2023 ஜூலை

இறைத்தூதர் லூத்தும்! ஓரின சேர்க்கை குற்றமும்!!
S.H. அப்துர் ரஹ்மான் 

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட் டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு  அருள்புரியட்டும்.

அந்த  ஒரே  இறைவன்  பெயரால்

ஓரினச் சேர்க்கையால் அழிக்கப்பட்ட லூத் சமுதாயம்  பற்றி  இறைவன் :

லூத்தை (அவர் சமூகத்தாரிடையே தூதராக அனுப்பினோம்) அவர் தம் சமூகத் தாரிடம் கூறினார். உலகத்தில் எவருமே உங் களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?

உண்மையாகவே நீங்கள் பெண்களை விட்டுவிட்டு, ஆண்களிடம் காம இச்சை யைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங் கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக் கின்றீர்கள். (என்று கூறினார். அதற்கு அந்த மக்கள்)

நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றி விடுங் கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதி லாக  இருக்கவில்லை.

எனவே, அவருடைய மனைவியைத் தவிர, நாம் அவரையும், அவர் குடும்பத் தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின்தங்கி விட்டாள்.

இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம். ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (தூதரே!)  நீர்  பார்ப்பீராக.         (7:80-84)

நெருக்கடி மிக்க நாளை அழைக்கும் மனிதர்கள் :

நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரி தும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க  நாளாகும்  என்று  கூறினார்.

அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன் னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) என் சமூகத்தார்களே! இதோ இவர் கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு (இறைவன் தந்த வழியில் அடைய)ப் பரிசுத்தமானவர்கள்.

எனவே நீங்கள் அந்த இறைவனுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் வி­யத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில்  இல்லையா?  என்று  கூறினார்.

(அதற்கு) அவர்கள்உம்முடைய புதல் வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையு மில்லை என்பதைத் திட்டமாக நீர் அறிந்தி ருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்என்று கூறினார்கள்.

அதற்கு அவர்உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண் டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போது மான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமேஎன்று (விசனத்துடன்) கூறினார்.

(விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: “மெய்யாகவே நாம் உம்மு டைய இறைவனின் தூதர்களாகவே இருக் கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத் துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும்  திரும்பியும்  பார்க்க வேண்டாம்.

நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற் காலையாகும்; விடியற்காலை சமீபத்து விடவில்லையா?

எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ் வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப் பட்ட  செங்கற்களை மழைபோல் பொழிய வைத்தோம்.

அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ் வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும்  இல்லை. (11:77-83)

ஓரின புணர்ச்சி செய்தவர்களின் ஊரை மேல் கீழாகப்  புரட்டிய  இறைவன்:

(இறைவனின்) தூதர்களே! உங்களு டைய காரியமென்ன? என்று (இப்ராஹீம்) கேட்டார். அதற்கவர்கள், “குற்றவாளி களான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.

லூத்தின் சமூகத்தினரைத் தவிர, அவர் களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.

ஆனால் அவர் (லூத்) உடைய மனைவி யைத் தவிர, நிச்சயமாக அவள் (இறை மறுப் பாளர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கி யிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட் டோம் என்று (வானவர்கள்) கூறினார்கள்.

(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய சமூகத்தினரிடம் வந்தபோது, (அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்க ளாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று (லூத்) சொன்னார்.

(அதற்கு அவர்கள்) “அல்ல, (உம் கூட் டத்தாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித் தார்களோ அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்.

(உறுதியாக நிகழவிருக்கும்) உண்மை யையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்தி ருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண் மையாளர்களாகவே  இருக்கிறோம்.

ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்மு டைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்லவிட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று  (த்தூது)வர்கள்  கூறினார்கள்.

மேலும், “இவர்கள் யாவரும் அதி காலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப் பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத் தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித் தோம்‘ (லூத்தின் விருந்தினர்களாக வாலிபர் கள் வந்திருப்பதையறிந்து) அந்நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.

(லூத் வந்தவர்களை நோக்கி) “நிச்சய மாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்‘; “அந்த இறைவனுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவ லப்படுத்தி விடாதீர்கள்என்று கூறினார். அதற்கவர்கள், “உலக மக்களைப் பற்றியயல் லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங் கள் உம்மைத் தடுக்கவில்லையா?’ என்று கேட்டார்கள்.

அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை முறையாக) செய்து கொள்ளலாம்என்று கூறினார். 

(தூதரே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம். இன்னும் அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச்  செய்தோம்.

நிச்சயமாக இதில் சிந்தனையுடை யோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(15:57-75)

Previous post:

Next post: