எது அழகு?
ரபீக் அஹமத்
அழகிற்கு யூசுஃப்(அலை) அவர்களை உவமையாக, உதாரணமாகக் காட்டுவார் கள். யூசுப்(அலை) அவர்கள் உடலால் மட்டும் அழகராக இருந்ததில்லை. அவர் உள்ளத்தாலும் பேரழகராக இருந்தவர். உள்ளம் மட்டுமா? அவருடைய செயல், சொல் அத்தனையும், அழகாக இருந்தன. அவருடைய தூய வரலாற்றை திருகுர்ஆன் சொல்லும் விதமே ஒரு தனி அழகு வயோதி கர்களுக்கு மட்டுமல்ல, வாலிபர்களுக்கும் கட்டிளம் காளையர்களுக்கும் அவருடைய வாழ்க்கை ஒரு அழகிய முன்மாதிரி.
அனாதையாய், அடிமையாய் விற்கப்பட்ட யூசுப்(அலை) அவர்களை வாங்கி வளர்த்தவரின் மனைவி, யூசுஃப்(அலை) அவர்களின் பேரழகில் மயங்குகின்றாள். இளமை ஊஞ்சலாடும் பருவ வயது, உணர்வுகள் அலைமோதும் வாலிபப் பருவம், கட்டுக்கடங்காத காம உணர்வுகள் கொப்பளிக்கும் கட்டிளங் காளையாக யூசுப் (அலை) அவர்கள் எதிரில் முகில் முகத்தாள், தன் துகில் உரித்தவண்ணம் எழில் அழகி யின் ஏங்கும் பார்வை, யூசுப்(அலை) அவர்களின் ஆண்மைக்கும், நேர்மைக்கும் வந்த சோதனையை திருகுர்ஆனே படம் பிடித்துக் காட்டுகின்றது.
அவர் (யூசுப்(அலை) அவர்கள்) எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அவள் அவர் மீது விருப்பம் கொண்டு கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பத்திற்கு இணங்குமாறு) வாரும் என்று அழைத்தாள் (அதற்கு அவர் மறுத்து) அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக நிச்சயமாக (உன் கணவர்) என் எஜ மானர் என்இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கின்றார். அநியாயம் செய் பவர்கள் நிச்சயமாக வெற்றி பெறமாட் டார்கள் என்று சொன்னார்.
ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தை கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார். இவ்வாறு நாம் அவரை விட்டுத் தீமையையும் மானக் கேடான செயல்களையும் திருப்பி விட் டோம். ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். (அல்குர்ஆன் 12:23,24) இது திருகுர்ஆன் சொன்ன வரலாறு.
இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண் டும். இங்கே இறைமறை, யூசுப்(அலை) அவர்களுடைய உடல் அழகை விவரிக்க, இந்தச் சம்பவத்தைச் சொல்ல முன்வர வில்லை. இறையச்சத்தால் தூய்மைய டைந்து அவருடைய உள்ளத்தின் அந்த பரி சுத்த தூய அழகை விவரிக்க இந்த வரலாற் றைப் பயன்படுத்துகின்றது.
யூசுப்(அலை) அவர்களின் மெய்யழகை இன்னும் மெருகூட்டும் வகையில் அடுத்து நிகழ்ந்த சம்பவங்களை திருகுர்ஆன் அழகு பட எடுத்தியம்புகின்றது.
இங்கே பல எகிப்திய பேரழகிகள் யூசுப் (அலை) அவர்களை வழிகெடுக்கும் முழு முயற்சியில் இயங்குகிறார்கள்.
அப்பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண் களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப்பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் திண்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். இப்பெண்கள் எதிரே செல்லும் என்று (யூசுபிடம்) கூறி னாள். அப்பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மை யாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக் கொண் டனர். அல்லாஹ்வே பெரியவன்! இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை என்று கூறினார்கள்.
அதற்கவள் “நீங்கள் எவர் சம்மந்தமாக என்னை நிந்தித்தீர்களோ அவர் தாம் இவர். நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன். ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்துக் கொள்ளா விட்டால் சிறையில் தள்ளப்படுவார். மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராக வும் ஆகிவிடுவார்‘ என்று சொன்னாள்.
(அதற்கு) அவர் (யூசுப்) “என் இறைவனே இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கி றார்களோ, அ(த்தீய)தைவிடச் சிறைக் கூடமே எனக்கு அதிக விருப்பமுடைய தாகும். இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால் நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறி வில்லாதவர்களில் ஒருவனாகி விடுவேன்‘ என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். அல்குர்ஆன் 12:31-33
இந்த வசனங்களை நாம் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். படிக்கப் படிக்க பற்பல அர்த்தங்கள் கிடைக்கின்றன. பெண்கள் அவரைக் கண்டவுடன் தம் கரங்களை தம்மையறியாமல் வெட்டிக்கொள்ளும் அளவிற்கு யூசுப்(அலை) அவர்களின் அழகு, கொள்ளையழகாக இருந்தது என்று இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் திருகுர்ஆன் யூசுப்(அலை) அவர்களின் புற அழகைப் பாராட்டவில்லை. பிறகு எந்த அழகை பாராட்டுகின்றது?
ஒரு பக்கம் அந்த வனிதைகளின் இளமை அடுத்த பக்கம் அவர்களின் ஆசை வேட்கை–அவர்களின் வெட்கத்தை மறக்க வைத்த அந்த வெறி–இம்மட்டோ? எரிகின்ற நெருப்பில் நெய்யை ஊற்றும் யூசுப்(அலை) அவர்களின் வாலிப வயது; அதுவும் காண் போரை மயங்கச் செய்யும் கொள்ளை அழகு. இத்தனைக்கும் மத்தியில் யூசுப் (அலை) அவர்கள் மன உறுதியுடன் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அழகு இருக்கின் றது. அந்த அழகைத்தான் திருகுர்ஆன் பாராட்டுகிறது.
இந்த அழகு தான் அவருடைய எல்லா அழகுகளிலும் மிஞ்சுகிறது. இந்த அழகு உலகம் உள்ளவரைக்கும் குறையாது; மறையாது; அது மறுமையிலும் பிரகாசிக்கும் என்று அந்த இறைமறை சொல்லாமல் சொல்கிறது.
அழகிற்கு அழகூட்டும் இன்னொரு அழகு; அதையும் திருகுர்ஆன் சுட்டிக்காட் டுகிறது. வாலிப பருவத்தில் எந்தெந்த விருப் பங்கள் மனிதனுக்கு அழகாகத் தெரிகின் றன என்பதை நாம் எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கின்றோம். ஆனால் யூசுஃப் (அலை) அவர்களின் அந்த அழகான விருப் பத்தையும் கொஞ்சம் பாருங்கள்.
அதற்கு அவர் அ(த்தீய)தை விட சிறைக் கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதா கும். ஆஹா! அவர் மட்டுமல்ல; அவரு டைய விருப்பமும் எவ்வளவு அழகாக இருக்கின்றது. இறை நேசத்திற்காக சிறை சென்ற அந்த சிறைவாசியின் வரலாறு எவ் வளவு அழகிய வரலாறு; படிக்க படிக்க மெய் சிலிர்க்கவைக்கும் அற்புத வரலாறு.
ஒரு முஃமினான சிறைவாசி சிறையில் என்ன செய்யவேண்டும் என்று சிறைவாசி களுக்கும் வழிகாட்டும் அதிசய வரலாறு. சிறையில் கனவுகள் நிறைய வரும். எனக் கும் அந்த அனுபவம் உண்டு. கனவு காணு வதைத் தவிர சிறை வாசிகளுக்கு வேறு என்ன வேலை இருக்க இருக்கமுடியும்.
அங்கேயும் இரண்டு கைதிகளுக்கு விடு கதைகளில் கூறப்படுவது போல், இரண்டு விதமான குழப்பமான கனவுகள் வருகின் றன. அந்த சுவாரஸ்யமான கனவுகளைப் பற்றி திருகுர்ஆன் விவரிக்கின்றது. பிறகு அந்தக் கனவுகளுக்கு விளக்கம் காண அந்த சிறையில் தன் நன்னடத்தையால் நல் லொழுக்கத்தால் அனைத்து கைதிகளின் மத்தியில் தன் மதிப்பும் மரியாதையும் பெற் றிருந்த யூசுப்(அலை) அவர்களிடம் வருகின் றார்கள்.
அப்படி வந்த கைதிகளிடம் யூசுப்(அலை) அவர்கள், தான் யார், தன்னுடைய பணி என்ன என்பதைப் பற்றி தயக்கம் இல்லாமல் விளக்குகின்றார்கள். அந்த விளக்கத்தை திருகுர்ஆன் பதிவு செய் துள்ள அழகைப் பாருங்கள்.
நான் என் மூதாதையர்களான இப்ரா ஹீம், இஸ்ஹாக், யாகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்றேன். அல் லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணை வைப்பது எங்களுக்கு தகுமானதல்ல. இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல் லாஹ் புரிந்த அருளாகும். எனினும் மனிதர் களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை. அல்குர்ஆன் 12:38
சிறையில் இருந்தாலும், தூக்கு மேடை யில் இருந்தாலும், ஒரு முஃமின் எதைச் செய்ய வேண்டும் என்பதை இந்த வசனங் கள் எடுத்துக் காட்டுகின்றன. எங்கேயிருந் தாலும் எந்த நிலையில் இருந்தாலும் அவன் செய்ய வேண்டிய ஒரே பணி, தஃவா பணி தான் என்ற உண்மையையும் இந்த வசனங் கள் உரைக்கின்றன. இன்று அமெரிக்காவில் உள்ள சிறைகளில் இறைப்பணி மிகச்சிறப் பாக நடைபெற்று வருகின்ற செய்திகளை பத்திரிக்கைகளில் பார்க்கின்றோம். தமிழக சிறைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏக தெய்வ நம்பிக்கை இருக்கின்றதே. அது மனி தர்கள் மீது அல்லாஹ் செய்த மிகப்பெரிய அருள் என்று இந்த வசனத்தில் யூசுப்(அலை) கூறியதாக திருகுர்ஆன் கூறுகிறது.
இதற்கு அடுத்து வருகின்ற வசனம் இருக்கின்றதே. அந்த வசனம்தான் யூசுப் (அலை) அவர்களின் நபித்துவத்தின் உச்ச கட்ட அழகை எடுத்தியம்பும் வசனமாகும். இணை வைப்பவர்களுக்கு இதைவிட ஒரு சிறந்த விளக்கத்தை யாராலும் தரமுடியாது. எவ்வளவு பெரிய உண்மை இந்த சிறிய வச னத்தில் அடங்கியுள்ளது என்பதைப் பாருங் கள், யூசுப்(அலை) அவர்கள் பேசுகின்றார்கள்.
சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே ஒரு இறைவனா?
அவனையன்றி நீங்கள் வணங்கி கொண் டிருப்பவை யாவும். நீங்களும் உங்கள் மூதா தையரும் வைத்துக்கொண்ட (வெறும் கற் பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத் தையும் இறக்கி வைக்கவில்லை. அல்லாஹ் ஒருவனுக்கன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று, அவன் (உங்களுக்கு) கட்டளை இட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துக் கொள்வதில்லை. அல்குர்ஆன் 12:39,40
எவ்வளவு அழகான வசனங்கள். இஸ்லாம் என்றால் என்ன? கலிமா என்றால் என்ன? என்று சுருக்கமாக விளக்குவதற்கு இந்த ஒரு வசனமே போதும் திருகுர்ஆனின் முழு நோக்கமும் இந்த ஒரு வசனத்தில் அடங்கி யுள்ளது.
ஆக்ரா கோட்டையில் தன் கடைசி காலத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த முகலாய மன்னர் ஷாஜஹான் தான் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்தில், தாஜ் மஹால் இருக்கும் திசையில் ஒரு வைரக் கல்லை ஒரு துளையில் பதித்து வைத்துக் கொண்டாராம். அந்த வைரத்தில் தாஜ் மஹாலின் நிழலைக்கண்டு மன ஆறுதல் பெற்றாராம். அது போன்று இந்த வசனத்தின் வைர வரிகளில் முழு திருகுர்ஆன் தெரிகின்றது.
ஒரு மனிதன் ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களை சந்தோசப்படுத்த முடியாது. ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு தெய்வம் என்றால், மனிதனின் நிலை என்னாவது? தேவைகளே தெய்வங்களாகி விட்டால், வணங்குவதற்கு அர்த்தமில்லா மல் போய்விடுகின்றது.
அல்லாஹ் ஒருவனுக்கன்றி (வேறெவர்க் கும்) அதிகாரம் இல்லை; எந்த அதிகாரங் களும் இல்லாதவைகளையா தெய்வங்கள் என்று நினைப்பது? எவ்வளவு பெரிய பல வீனம், எவ்வளவு பெரிய அறிவீனம். இதை விளக்கிச் சொல்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை அல்லவா? சுதந்திரமாக செயல்பட முடியாத சிறையில் யூசுப்(அலை) அவர்கள், இந்தப் பணிகளைச் செய்தார்கள். சகலவித சுதந்திரங்களையும் பெற்று, சுதந்திரமாக வெளியே இருக்கும் நாம் எந்த அளவிற்கு இந்தப் பணியை செய்ய முடியும்? செய்கின்றோம்?