கடைசி பக்க சிந்தனை! தியாகம் எங்கே?

in 2023 ஜூலை

கடைசி பக்க சிந்தனை!
தியாகம் எங்கே?
 K.M.H. 

நபி இப்ராஹீம்(அலை) அல்லாஹ்வின் பொருத்தம் வேண்டி தள்ளாத முதுமைப் பரு வத்தில் ஆசையுடன் பெற்றெடுத்த அருமை மகனையே குர்பானி கொடுக்கத் தயாரா னார்கள். சோதனையில் வெற்றி பெற்றார்கள். அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றார் கள். மகனுக்குப் பதிலாக ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க அல்லாஹ் கட்டளையிட் டான். அவர்களின் தியாக வாழ்க்கையை முன் மாதிரியாகக் கொண்டு முஸ்லிம்கள் துல்ஹஜ் மாதம் 10ம் நாள் ஈத் (பெருநாள்) தொழுகைக்குப் பிறகு குர்பானி கொடுத்து வருகி றார்கள். அப்படி குர்பானி கொடுக்கும் நம்மிடம் உண்மையிலேயே நபி இப்ராஹீம் (அலை) அவர்களிடம் காணப்பட்ட அந்த தியாக உள்ளம் இருக்கிறதா? சந்தேகம்தான். ஏதோ சடங்காக குர்பானியை நிறைவேற்றி வருகிறோம்.

நபி(ஸல்) அவர்கள் தமது 23வருட முயற்சியில் ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கிச் சென்றார்கள். அந்த நபித்தோழர்கள் யுத்த களத்தில் தாங்கள் வெட்டப்பட்டு உயிரை இழக்கும் தருவாயில் இருக்கும் போது கூட, தன் உயிர் போனாலும் பரவா யில்லை. தன் பக்கத்தில் கிடக்கும் சகோதரர் நீர் அருந்தி தாகம் தீரட்டும் என்ற உன்னத நோக்கில் தனக்கு தனது உறவினர் மூலம் கிடைத்த நீரை அங்கு கொண்டு செல்லச் சொல்கிறார். அந்த அளவு நபித்தோழர்கள் தியாகத்தில் ஊறித் திளைத்தார்கள். அதனால் தான் அவர்கள் பஞ்சை பராரிகளாக இருந்தும், மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு ஆச்சரியப்படத்தக்க வெற்றி வாழ்க்கை வாழ்ந் தார்கள். சத்தியத்தை எதிர்த்தோரை எல்லாம் மண் கவ்வச் செய்தார்கள். ஆம் அவர்கள் பெற்றிருந்த தியாக உள்ளமும் சகோதர வாஞ்சையும் அவர்களை வெற்றியின் முகட்டுக்கே கொண்டு சென்றன.

ஆனால்  இன்று  நமது  நிலை  என்ன?

நபி(ஸல்) அவர்களின், அவர்களது தோழர்களின் அருமை பெருமைகளை மேடைகள் தோறும் வாய்கிழிய முழங்கும் நம்மிடம் அவர்களிடம் காணப்பட்ட அந்த உயர்  பண்புகள்  இருக்கின்றனவா?

தியாக உள்ளம் இருக்கிறதா? சகோதர வாஞ்சை இருக்கிறதா?

நாம் தியாகம் செய்து நமக்குக் கிடைப்பதை நமது சகோதரனுக்குக் கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நமது சகோதரனுக்கு அல்லாஹ்வின் அருளால் கிடைப்பதைப் பார்த்து சந்தேகப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அதைப் பார்த்து பொறாமைப்படா மலாவது இருக்கிறோமா?  இல்லையே? எந்த அளவு பொறாமைப்படுகிறோம்? நமது சகோதரனுக்குக் கிடைப்பதை கிடைக்காமல் ஆக்க எத்தனை முயற்சிகள் உண்டோ அத்தனையையும் கொஞ்சமும் கூச்சமில்லாமல், வெட்கமில்லாமல் செய்யக்கூடிய அளவுக்கு தரம் தாழ்ந்து செல்கிறோம். அதில் வெறி கொண்டு அலைகிறோம். இந்த நிலையில் நாம் தியாகம் செய்வது  எங்கே?

இது எந்த அளவு இழிவான குணம் என்பதை நிதானமாக நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

நமது உடம்பில் இரத்தம் எங்கெல்லாம் ஓடுகிறதோ அங்கெல்லாம் ஷைத்தான் ஓடு கிறான். அவன்நமது பகிரங்க விரோதி‘, அவனை நாம் அறிந்துள்ள அளவுக்கு, பேசும் அளவுக்கு, எழுதும் அளவுக்கு, மற்றவர் களுக்கு உபதேசம் செய்யும் அளவுக்கு நாம் அவனை விட்டு ஒதுங்குவதாக இல்லையே? அவனது தூண்டுதலினால்தானே மற்றவர் களைப் பார்த்து, அவர்களின் நல்வாழ்வைப் பார்த்து, அவர்களுக்குக் கிடைக்கும் அருட் கொடைகளைப் பார்த்து பொறாமைப் படுகிறோம். இந்த நிலை நீடிக்கும் வரை நமக்குள் ஒற்றுமை ஏற்படுமா? சகோதர வாஞ்சை ஏற்படுமா? வெறும் வாயால் ஒற் றுமை, சகோதர வாஞ்சை என்று முழக்க மிட்டுவிட்டால் மட்டும் அவை ஏற்பட்டு விடுமா?

ஷைத்தானின் இந்த மாய வலையிலி ருந்து விலகி, நமது சகோதரர்களின் நல் வாழ் வைக் கண்டு பொறாமைப்படுவதை விட்டுத் தெளபா செய்து, மற்றவர்களின் நலன்களுக்காக நாம் தியாகம் செய்யும் அந்த நபி காலத்து உயர் பண்பாடு நம்மிடம் ஏற்படவேண்டும். அப்போதுதான் நாம் கொடுக்கும் குர்பானியில் பொருள் இருக்க  முடியும்

Previous post:

Next post: