சோதனைகளின் நோக்கங்கள்!
அபூ இஸ்ஸத், இலங்கை
ஜூன் மாத தொடர்ச்சி….
இதயங்களை அல்லாஹ் பயபக்தியாகச் சோதனை செய்கின்றான் :
நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அத்தகையவர் களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக் காகச் சோதனை செய்கிறான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு. (49:03)
இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும்:
உங்கள் இருதயங்கள் திருப்தியடைவ தற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் இந்த வெற்றியை அல்லாஹ் ஆக்கினான். அல்லாஹ் விடமிருந்தே தவிர உதவி இல்லை, நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமு டையவனாகவும் இருக்கின்றான். (8:10)
அமைதியடைவதற்காகவும், தூய்மைப் படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண் ணங்களை நீக்குவதற்காகவும், இருதயங் களைப் பலப்படுத்தி, பாதங்களை உறுதிப்படுத் துவதற்காகவும்.
நினைவு கூறுங்கள்: நீங்கள் அமைதிய டைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய் தான், இன்னும் உங்களை அதன்மூலம் தூய் மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களை விட்டு நீக்குவதற் காகவும், உங்கள் இருதயங்களைப் பலப் படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்து வதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலி ருந்து மழை பொழியச் செய்தான். (8:11)
பணிந்து நடப்பதற்காக :
நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ் வோர் ஊரிலுள்ள மக்களையும், அம்மக்கள் பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறு மையாலும், பிணியாலும் பிடிக்காமல் சோதிக்காமல் இருந்ததில்லை. (7:94)
பணிந்து வரும் பொருட்டு :
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூ கத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப் பினோம். அச்சமூகத்தாரை நோயைக் கொண் டும், வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு. (6:42)
பணிவதற்காகவும் பிரார்த்திப்பதற்காகவும் :
திடனாக நாம் அவர்களை வேதனை யைக் கொண்டு பிடித்திருக்கின்றோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணியவுமில்லை, தாழ்ந்து பிரார்த்திக்கவு மில்லை. (23:76)
அத்தாட்சியாக இருப்பதற்காகவும், நேர் வழியில் செலுத்துவதற்காகவும் :
ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான். அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள். இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட் டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின் களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காக வும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற் காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான். (48:20)
சத்தியங்களைப் பேணுவதற்காக :
நீங்கள் சத்தியத்தை முறிக்கும் இவ்வி யத்தில் மதிகெட்ட ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள். அவள் நூலை நூற்று நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத் (தறித்து) துண்டு துண்டாக்கி விட்டாள், ஒரு சமூகத் தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமான வர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத் தால் நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக் கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர் கள். நிச்சயமாக அல்லாஹ் உங்க ளைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத் தான். இன்னும் நீங்கள் எவ்வியத்தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, அதனை அவன் உங்களுக்கு கியாம நாளில் நிச்சய மாகத் தெளிவாக்குவான். (16:92)
எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்று கவனிப்பதற்காக :
நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின் தோன்றல்களாக ஆக்கினோம். (10:14)
நன்றி செலுத்தும் பொருட்டு :
எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் எனது சந்ததியாரிலிருந்தும் சங்கையான உனது வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்) பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! தொழுகையை அவர்கள் நிலை நாட்டுவதற்காக குடியேற்றியிருக் கின்றேன். எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வா யாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர் களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக! (14:37)
கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டு:
பேழை கண்டெடுக்கப்பட்ட பின் உமது சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக் கட்டுமா? என்று கேட்டாள். ஆகவே நாம் உமது தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை அவர்பால் மீட்டினோம். பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்றுவிட்டீர், அப் பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலி ருந்து விடுவித்தோம். மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன்வாசி களிடையே தங்கியிருந்தீர், மூஸாவே! பிறகு நீர் நமது தூதுக்குரிய தக்க பருவத்தை அடைந்தீர். (20:40)
ஓர் அடியானுக்கு தீமை செய்ய நாடிவிட்டால்:
அல்லாஹ் தனது ஓர் அடியானுக்குத் தீமை செய்ய நாடிவிட்டால் அவனது குற் றம் காரணமாக அவனை விட்டும் சோதனை யைத் தடுப்பான் இறுதியில் அவற்றுக்காக மறுமை நாளில் அவனுக்கு அதை நிறைவேற் றுவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ் (ரழி), திர்மிதி : 2396, ரியாளுஸ் ஸாலிஹீன் : 43)
சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்காக :
அதனைக் கொண்டே விவசாயப் பயிர் களையும், ஒலிவம் (ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சை கொடி களையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க் கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளை விக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக் கள் கூட்டத்தாருக்குத் தக்க அத்தாட்சி இருக்கிறது. (16:11)
நமக்கிடையில் ஏழைகளாகிய இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று செல்வந்தர்கள் கூற வேண்டும் என்பதற்காக: நமக்கிடையில் ஏழைகளாகிய இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்? என்று செல்வந்தர்கள் கூற வேண்டும் என்பதற்காக அவர்களில் சிலரைக் கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா? (6:53)
உங்களில் உண்மையாகவே இறை நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் கண்டறியவேண்டும் என்பதற்காகவும், உங்களில் மார்க்கத்திற்காக உயிரைத் தியாகம் செய்யும் மாபெரும் தியாகிகளை அவன் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவுமே.
தற்போது உங்களுக்கு உஹதுப் போரில் தோல்வியுற்றுக் காயம் ஏற்பட்டிருக்கிறதென் றால் அதைப் பற்றி அதைரியமடையாதீர்கள், ஏனென்றால், உங்களின் எதிரிகளான அந்த ஜனங்களுக்கும், இதைப் போன்றே பத்ரில் தோல்வியுற்றுக் காயம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சோதனையான நாட்களை மனிதர் களுக்கிடையில் சுழற்சி முறையில் மாறி, மாறி வரும்படி நாம் செய்கின்றோம்.
ஏனென்றால், உங்களில் உண்மை யாகவே இறை நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் கண்டறிய வேண்டும் என்பதற்காகவும், உங்களில் மார்க்கத் திற்காக உயிரைத் தத்தம் செய்யும் மாபெரும் தியாகிகளை அவன் உண்டாக்க வேண்டும் என்பதற் காகவுமே இவ்வாறு செய்கின்றான் இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (3:140)
நன்மையின்பால் திரும்பும் பொருட்டு:
அவர்களை நாம் பூமியில் பல பிரிவின ராகச் சிதறித் திரியுமாறு ஆக்கிவிட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார் கள். அவர்கள் நன்மையின்பால் திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம். (7:168)
மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறிவதற்காக : ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான். ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகின்றார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு (5:94)
குற்றங்களை மன்னிப்பதற்காக :
ஒரு முஸ்லிமுக்கு சிரமம், நோய், கவலை, துக்கம், நோவினை, மயக்கம், மற்றும் சோதனைக்காக அவனின் காலில் குத்தி விடும் முள்ளின் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது சிறு, சிறு குற்றங்களை மன்னிக்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூசயீத்(ரழி), அபூஹுரைரா(ரழி), புகாரி: 5641, முஸ்லிம்:2573, ரியாளுஸ்ஸாலிஹீன்: 37)
இலைகள் உதிர்வது போலப் பாவங்கள் உதிர்வதற்காக :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காய்ச் சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். இறைத் தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்களே! என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர் கள், ஆம்! உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகின்ற துன்பத்தை ஒரே மனிதனாகிய நான் அடைகிறேன் என்று கூறினார்கள். நான், இந்தத் துன்பத்தின் காரண மாகத் தங்களுக்கு இரண்டு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்? என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ஆம்! அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தனது இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்து மன்னிக்காமல் விடுவதில்லை என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி), கூறினார். புகாரி: 5647, 5648, 5660, 5661, 5667, முஸ் லிம்: 2571, 5023, ரியாளுஸ்ஸாலிஹீன் 38)
அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் :
கூலியில் மகத்தானது கடும் சோதனை யுடன் உள்ளதாகும். நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களைப் பலவிதமாகவும் சோதிப்பான் ஒருவன் அதில் திருப்தி அடைந்தால் அவனுக்கு அல்லாஹ் வின் திருப்தியும் உண்டு. மேலும் ஒருவன் கோபம் அடைந்தால் அவனுக்கு அல்லாஹ் வின் கோபம் உண்டு என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ் (ரழி), திர்மிதி : 2396, ரியாளுஸ் ஸாலிஹீன் : 43)
ஓர் அடியானுக்கு நல்லதை நாடிவிட்டால்:
அல்லாஹ் தனது அடியானுக்கு நல்லதை நாடிவிட்டால் அவனுக்கு உலகத்திலேயே சில சோதனைகளின் மூலம் தண்டனையைத் தீவிரமாக்குவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்(ரழி), திர்மிதி: 2396, ரியாளுஸ்ஸாலிஹீன் : 43)
ஓர் அடியானுக்கு நன்மையை நாடிவிட்டால்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடு கின்றானோ அவரை இவ்வாறான பல வகைகளிலும் சத்திய சோதனைக்கு உள்ளாக் குகிறான். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 5645)
சொர்க்கத்தை வழங்குவதற்காக :
ஒரு முஸ்லிம் சொர்க்கத்துக்குச் செல்ல நல்லறங்கள் காரணமாக அமைவது போலவே துன்பங்களைச் சகித்துக் கொள்வதும் சொர்க்கம் செல்வதற்கான காரணமாக அமைந்துள்ளது என்பதற்கு இந்த நபிமொழி சான்றாக அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான். நான் எனது அடியானை, அவனுக்கு விருப்பமான இரு பொருட்களை(கண்களைப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் அதைப் பொறுத்துக் கொண்டால், அவற்றுக்குப் பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (புகாரி: 5653)