திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்!
அபூ இஸ்ஸத், இலங்கை.
இவர்கள் மறுமை நாளைத்தான் அது திடீரெனத் தங்களிடம் வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? (அப்போதுதான் கண்ணால் பார்த்துவிட்டு நம்புவார்களா) இதோ!) அதன் அடையாளங்கள் திண்ண மாக வந்துவிட்டனவே; உண்மையில் அந்நாள் அவர்களிடம் வந்துவிட்டதெனில் அப்போது (அவர்கள்) நல்லுணர்வு பெறு வது எங்கே அவர்களுக்குப் பயன் அளிக்கப் போகிறது? (43:66, 47:18, 6:31, 22:55) மற்றுமொரு வசனத்தில்;
அவ்வாறல்ல! அது அவர்களிடம் “திடீரென‘ வந்து அவர்களைத் தட்டழியச் செய்துவிடும். அதைத் தடுத்துக்கொள்ள அவர்களால் இயலாது; அவர்களுக்குச் சிறி தும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது. (அல்குர்ஆன்:21:40) இன்னுமொரு வசனத்தில்;
மறுமை நாள் “திடீரென‘ அவர்களிடம் வரும் வரை அல்லது மலட்டு நாளின் வேதனை அவர்களிடம் வரும் வரை அது பற்றி சந்தேகத்திலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 22:55) வேறொரு வசனத்தில்;
அல்லது அவர்கள் அறியாத நிலைமை யில் திடுகூறாய் (அவர்களுடைய முடிவு காலமான) மறுமை நாள் அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அவர்கள் அச்ச மற்றிருக் கின்றனரா? (அல்குர்ஆன் 12:107) ஆனாலும்;
மறுமைக்கான நேரம் நெருங்கி விட்டது. (53:57) அதன் அடையாளமாக;
சந்திரன் பிளவுண்டது :
விசாரணைக்கான (யுக முடிவு) நேரம் நெருங்கிவிட்டது. (அதன் அறிகுறியாகச்) சந்திரனும் பிளந்துவிட்டது. (54:1) என்றும்;
அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது; எனவே அதற்காக அவசரப்படாதீர் கள். (16:1) என்றும்; மக்களுக்கு அவர்களின் விசாரணை நேரம் நெருங்கி வந்துவிட்டது; (ஆனாலும்) அவர்களோ கவனமற்ற நிலையில் அலட்சி யப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். (21:1) என்றுமாக; இது குறித்துப் பேசும் மூன்று வசனங் களும் குறித்த அத்தியாயங்களின் முதலா வது ஆரம்ப வசனத்திலேயே அல்லாஹ் குறிப்பிட்டுக் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளவேண்டியதாகும்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர் களது காலத்தில்; அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், மக்கா வாழ்க்கையில் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் மினா வில் இருந்து கொண்டிருந்தபோது, குறை´ இணை வைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே, சந்திரன் (இரண்டாகத்) பிளவு பட்ட நிகழ்ச்சியைத் (தமது நபித்துவ உண் மைக்குச் சான்றாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டினார்கள். அப்போது சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவு பட்டது எந்த அளவுக்கு எனில் அவ்விரு துண்டுகளுக்கு இடையே ஹிரா மலையை மக்காவாசிகள் கண்டார்கள்.
உடனே நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் சாட்சியாக இருங்கள்‘ என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். (பிளவுபட்ட சந்தி ரனின்) ஒரு துண்டு இந்த மலையின் மீதும், அந்த(ப் பக்கமாக உள்ள) மலையின் மீது இன்னுமொரு துண்டும் இருந்தது. அதன் இரண்டு துண்டுகளை மக்கள் கண்கூடாகப் பார்த்தார்கள். அப்போதும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! நீ சாட்சியாக இரு என்று கூறினார்கள். அப் போது, இது அபூ கபஷாவின் மகன் முஹம்மது எங்களுக்குச் சூனியம் செய்து விட்டார் என்று இறை நிராகரிப்பாளர் களான குறை´கள் கூறினார்கள். மேலும் கூறினார்கள் நமக்கு முஹம்மது நபி சூனியம் செய்தார் எனில் நிச்சயமாக மக் கள் அனைவருக்கும் சூனியம் செய்துவிட அவரால் முடியாது, எனவே;
தூர தேசங்களுக்குச் சென்ற உங்களு டைய பயணக் குழுவினர் என்ன செய்தி யைக் கொண்டு வருகிறார்கள் என்று பாருங் கள். ஏனெனில் மக்கள் அனைவருக்கும் சூனியம் செய்துவிட நிச்சயமாக முஹம் மதால் முடியாதுதானே என்று குறை´கள் கூறிக் கொண்டார்கள். அப்போது ஒவ் வொரு திசையிலிருந்தும் பயணக் குழு வினர் வந்தார்கள். அவர்களும் நாங்கள் பார்த்தோம்! நாங்கள் பார்த்தோம்!! சந்திரன் பிளவுண்டது என்றுதான் கூறினார் கள். ஆனாலும் குறை´யர்கள் நபியவர் களை ஏற்றுக்கொள்ளவில்லை. இது குறித்தே; (யுக முடிவு) நேரம் நெருங்கிவிட்டது. (அதன் அறிகுறியாகச்) சந்திரனும் பிளந்து விட்டது. ஆனால் (அதனை ஏற்க மறுக்கும்) இவர்களோ (நபியின் தூதுத்துவம் மீதான) எந்த ஒரு சான்றைக் கண்டாலும் புறக்கணிக் கின்றார்கள். இது தொடர்ந்து நடைபெறக் கூடிய சூனியம்தான் என்றும் சொல்கிறார் கள். எனும் குர்ஆன் வசனங்களின் வியத் தில் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறி யுள்ளார்கள். (54:1,2, 16:1, 21:1, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி), அனஸ்பின் மாலிக்(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி), அலீ பின் அபீதாலிப் (ரழி), ஹுதைஃபா(ரழி), ஜுபைர் பின் முத் இம்(ரழி), இப்னு உமர்(ரழி), இப்னு ஜரீர் (ரஹ்), முஜாஹித்(ரஹ்), லைஸ்(ரஹ்), புகாரி: 4864-4868, 3968, 3636-3638ன் அடிக் குறிப்பு 154ஆவது, ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ, முஸ்லிம்: 5398, திர்மிதி, பைஹகீ, அபூதாவூத், தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 8, பக்கம் 792-801)
சந்திரன் பிளவுண்ட அவ்வேளையில்;
மலபார் எனப்படும் கேரளாவின் மன்னராக அறியப்படக்கூடிய சேரமான் பெருமாள் ராமவர்மா குலசேகரா என்பவர் தமது அரண்மனையின் மேல்மாடியில் இளைப்பாறிய சந்தர்ப்பத்தில் வானில் இந்த அற்புத நிகழ்வைப் பார்த்துள்ளார். அந்நிகழ்வு குறித்துத் தமது அரச தஸ்தா வேஜுகளிலும் பதிவு செய்துள்ளார். அதை அடுத்து கேரளாவுக்கு வருகை தந்த அரேபிய வணிகர்கள் சிலரிடம் தான் கண்களால் கண்ட சந்திரன் பிளவுபட்ட இந்த அற்புத நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்ட றிகின்றார். அப்பொழுது ஷைக் ஹீருத் தீன் பின் பகீயுத்தீன் என்கிற ஒரு அரேபிய வணிகர், நாங்கள் அரபு நாட்டைச் சேர்ந்த வர்கள் இஸ்லாம் எனும் புனித மார்க்கத் தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் என்று தம்மை அறிமுகப்படுத்தியதுடன், இஸ்லாம் மற்றும் முஹம்மது(ஸல்) நபியவர்களைப் பற்றியும், மதீனாவைத் தலைமையகமாகக் கொண்ட இஸ்லாமிய அரசு பற்றியும் மேலும் பல தகவல்களை எடுத்துரைத்தார்.
அவரின் மூலமாக மேலும் பல வியங் களை அறிந்து கொண்ட மன்னர் “சேரமான்‘ உடனே முஹம்மது நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க விரும்புவதாகவும், அத்துடன் புனித இஸ்லாத்தில் சேர விரும்புவதாகவும் தெரி வித்தார். அதன்படியே சவுதி அரேபியாவுக் குப் புறப்பட்டுச் சென்று இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தில் இணைந்தார். (பார்க்க: எம்.ஹமீதுல்லாஹ் அவர்களின் முஹம்மது ரசூலுல்லாஹ் எனும் நூல், வில்லியம் மோகன் எழுதிய மலபார் மேனுவல் எனும் நூல்:அஹ்மது ஸைனுதீன் மக்தூம் அவர்கள் எழுதிய துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் எனும் நூல், மேலும் கொடுங்கலூர் ராஜா வலிய தம்புரான் என்பவர் ஓர் ஊடகப் பேட்டி யில் சேரமான் பெருமான் இஸ்லாத்திற்கு வந்து சேர்ந்த வரலாற்றைக் குறிப்பிட்டுள் ளார். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 792, 801)
பெரும்பாலான; மார்க்க அறிஞர் களின் ஒருமித்த கருத்து என்னவெனில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் திண்ண மாக நிகழ்ந்துவிட்டது. மேலும் திண்ண மாக அது திகைப்பூட்டும் அற்புதங்களில் ஒரு அற்புதமாகவே உள்ளது. (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம்: 792-801) அவ்வாறே;
அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட் டது. எனவே அதற்காக அவசரப்படாதீர் கள். (16:1) அன்றைய இறை மறுப்பாளர் களும், இணை வைப்பாளர்களும், யுக முடிவு நாள் என்ற ஒன்று உண்டு. அப்போது இறைவனின் வேதனை வரும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்ததை நம்பவில்லை; இது உண்மை எனில் இப்போதே அந்த வேதனை வர வேண்டியதுதானே! இவ்வளவு தாமதம் ஏன்? என்று நகைத்தனர். அதற்குப் பதிலா கவே இவ்வசனத்தை ஏக இறைவன் அருளி னான். (தஃப்சீர் இப்னு கஸீர்: 5:2,3) மேலும்;
அல்லாஹ்வின் ஆணை: அதாவது யுக முடிவு நாள் வந்துவிட்டது எனும் தொடர் அருளப்பெற்றவுடன் நபித்தோழர்கள் அஞ்சி நடுங்கினர். அதைத் தொடர்ந்து; “அதற்கு நீங்கள் அவசரப்படாதீர்கள் எனும் தொடர் அருளப்பெற்றது‘. இதனால் நபித் தோழர்கள் அமைதி அடைந்தனர். (தஃப்சீர் இப்னு மர்தவைஹி, தஃப்சீர் இப்னு கஸீர் 5:2,3) கவிஞர் அபுல் அத்தாஹியா கூறுகிறார்.
அலட்சியத்தில் மனிதர்கள்;
சுழல்கிறது மரணத் திரிகை.
ஆமிர் பின் ரபீஆ(ரழி) அவர்களிடம் அரபியர் ஒருவர் விருந்தாளியாக வந்து தங் கினர். அவருக்கு ஆமிர்(ரழி) அவர்கள் நல்ல முறையில் விருந்தோம்பல் செய்தார்கள். அவர்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து அம்மனிதர் ஆமிர்(ரழி) அவர்களிடம் வந்து “நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அரபு நாட் டில் உள்ள ஓர் ஓடைப் பகுதியை வருவாய் மானியமாகப் பெற்றிருக்கிறேன். அதன் ஒரு பகுதியை நீரும் உமக்குப் பின்வரும் உம்முடைய சந்ததியினரும் பயன்பெறும் வகையில் உமக்குப் பிரித்துக் கொடுக்க நான் விரும்புகிறேன் என்று கூறினார்.
அவரிடம் ஆமிர்(ரழி) அவர்கள் நீர் தர விரும்பும் பங்கு எனக்குத் தேவையில்லை. ஏனெனில் உலக மோகத்திலிருந்து எங்களது கவனத்தைத் திசை திருப்பக் கூடிய ஓர் அத்தியாயம் இன்று அருளப்பெற்றுள்ளது என்று கூறிவிட்டு “மனிதர்களுக்கு அவர் களின் விசாரணை (நேரம்) நெருங்கி வந்து விட்டது. ஆனாலும், அவர்களோ கவன மற்ற நிலையில் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். (21:1) என்ற இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள். (அபூ நுஐம் ஃபில்ஹில்யா, தஃப்சீர் இப்னு கஸீர்: 5:820-825)
மனிதர்களுக்கு, அவர்களின் விசாரணை நேரம் நெருக்கி வந்துவிட்டது. (ஆனாலும்) அவர்களோ கவனமற்ற நிலையில் அலட்சி யப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். (21:1) இங்கு வல்லமையும், மாண்பும், மிக்க அல்லாஹ் யுக முடிவு நாள் நெருங்கிவிட்டது குறித்தும், மனிதர்கள் கண்டுகொள்ளாமலும் அதற்காக எந்த முன்னேற்பாடும், செயல்பாடும், இல்லாமல் அலட்சியமாக வாழ்ந்து வருவது குறித்தும் எச்சரிக்கின்றான். அவர்களோ கவனமற்ற நிலையில் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறார் கள். (21:1) எனும் தொடருக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “இந்த உலகில்‘ என்று விளக்கமளித்தார்கள். அறிவிப் பவர் : அபூசயீத்(ரழி) அஸ்ஸுனனுல் குப்ரா லிந்நஸயீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 5:820, 825)
(நபியே!) உம்மிடம் அவர்கள் வேத னையை அவசரமாகக் கோருகின்றனர். ஒரு குறிப்பிட்ட தவணை (மட்டும் அல்லாஹ் விடம்) இல்லாதிருந்தால் (அவர்கள் அவசர மாகக் கோரியபடி) அந்த வேதனை (இப் போதே) அவர்களிடம் வந்திருக்கும் அது அவர்களே உணராத வகையில் திடீரென (ஒருநாள்) அவர்களிடம் நிச்சயமாக வரும். (29:53) இங்கு உயர்ந்தோன் அல்லாஹ் இணைவைப்பாளர்களின் அறியாமை, மூடத்தனம், குறித்துத் தெரிவிக்கின்றான்.