யூதர்கள் சனிக்கிழமையும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையும்  வார வழிபாடு நடத்துவது ஏன்? 

in 2023 ஜூலை

யூதர்கள் சனிக்கிழமையும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் 

வார வழிபாடு நடத்துவது ஏன்? 

அபூ ஹனிபா, புளியங்குடி 

யூத,  கிறிஸ்தவ  வழிபாட்டு  நாட்கள் :

இன்றைக்கு யூதர்கள் சனிக்கிழமையும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாடு நடத்துகிறார்கள். யூதர்கள் சனிக் கிழமை வார வழிபாடு நடத்துகிறார்கள் என்றால் மூஸா(அலை) அவர்களும் சனிக் கிழமை வார வழிபாடு நடத்தியிருக்க வேண்டும் அல்லவா? அதுபோல கிறிஸ்தவர் கள் ஞாயிற்றுக்கிழமை வார வழிபாடு நடத்துகிறார்கள் என்றால் ஈஸா(அலை) அவர்களும் ஞாயிற்றுக்கிழமை வார வழி பாடு  நடத்திருக்க வேண்டும்  அல்லவா?

மூஸா(அலை) சனிக்கிழமையும், ஈஸா (அலை) ஞாயிற்றுக்கிழமையும் வார வழி பாடு நடத்தினார்களா? இல்லையா? என் பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

ஆலிம்களின்  நம்பிக்கை :

இன்றைக்கு இருக்கக்கூடிய பெரும் பான்மையான ஆலிம்கள் மூஸா(அலை) அவர்கள் சனிக்கிழமையும், ஈஸா(அலை) அவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் வார வழி பாடு நடத்தினார்கள் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் அல்லாஹ் சொல்கிறான்.

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று வரம்பை மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அத னால் அவர்களை நோக்கிசிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்என்று கூறினோம்.    (அல்குர்ஆன் 2:65)

வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின் புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) “அஸ்ஹாபுஸ் ஸப்துஎன்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களி டமுள்ளதை உண்மையாக்கி அருளப் பெற்ற இதை நம்புங்கள், அல்லாஹ்வின் கட்டளை,  நிறைவேற்றப்பட்டே  தீரும்.    (அல்குர்ஆன் 4:47)

சனிக்கிழமைஎன்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டுக் கொண்டிருந்தார்களோ, அவர் களுக்குத்தான், நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டுக் கொண் டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச்  செய்வான்.    (அல்குர்ஆன் 16:124)

இந்த வசனங்களில் மூஸா(அலை) அவர்கள் சமூகத்தாரை பற்றி அல்லாஹ் கூறும்போது சனிக்கிழமை என்ற கிழமை யையும் சேர்த்து கூறுவதால் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் சனிக்கிழமையைத் தான் வார வழிபாட்டு நாளாக ஆக்கியிருந் தான். அந்த நாளில் மீன் பிடிக்கக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டிருந்தான். அல்லாஹ்வின் கட்டளையை மீறி மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தினர் சிலர் வரம்பு மீறினார்கள். அதனால் அவர்களை அல்லாஹ் சபித்தான் என்று இன்றைக்கு இருக்கக்கூடிய பெரும்பான்மை ஆலிம்கள் விளங்கி வைத்திருக்கிறார்கள். மேலும் தாங் கள் விளங்கியவாரே மக்களுக்கு விளக்கம் கொடுத்தும் வருகிறார்கள். அவர்கள் விளங் கியது சரிதானா? அவர்கள் கொடுக்கும் விளக்கம் சரிதானா? என்பதை  பார்ப்போம்.

விளக்கம்  கொடுக்க  தகுதியான  நபர்  யார்?

முதலில் மார்க்கத்திற்கு விளக்கம் கொடுக்க தகுதியான நபர் யார்? அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் மட்டுமே. அந்த அடிப்படையில் மூஸா(அலை) அவர்கள் எந்த கிழமையில் வார வழிபாடு நடத்தி னார்கள் என்பதை யார் தெளிவுபடுத்த வேண்டும்? அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களுக்கு சனிக் கிழமை தான் வார வழிபாட்டு நாள் என்று எங்கேயாவது அறிவித்து இருக்கிறார்களா? இல்லை. அப்படி என்றால் குர்ஆன் வசனங் களில் வரும் சனிக்கிழமை என்ற நாள் மூஸா (அலை) அவர்களுக்கான வார வழிபாட்டு நாளாக நாமாக எப்படி முடிவு செய்ய முடியும்?

ஆக இன்றைக்கு யூதர்கள் சனிக்கிழமை வார வழிபாடு நடத்துவதால் நாமும் மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சனிக் கிழமை தான் வார வழிபாட்டு நாளாக ஆக்கியிருப்பான் என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம். நமது நம்பிக்கையின் அடிப் படையில் மற்றவர்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். நாம் விளங்கியது  சரிதானா?

கடமையாக்கப்பட்ட  வெள்ளிக்கிழமை:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.      (புகாரி : 876 ஹதீத்)

நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமை யில் முந்தியவர்களாவோம். எனினும் அவர் கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட் டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்ட னர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டி னான். மக்கள் நம்மையே பின்தொடர் கிறார்கள். நாளைக்கு யூதர்களும் அதற்கு மறுநாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர் என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார்.

இந்த ஹதீதில் வேதம் வழங்கப்பெற்ற யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு கடமையாக்கப்பட் இந்த நாளில் (வெள்ளிக் கிழமையில்) கருத்து வேறுபாடு கொண் டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்  கூறுகிறார்கள்.

இந்த ஹதீத் ஸஹீஹானது: மேலும், இந்த ஹதீத் புகாரி 876, முஸ்லிம் 1552, சுனன் நஸயீ, புத்தகம் 14, ஹதீத் 2, சுனன் இப்னு மாஜா புத்தகம் 5, ஹதீத் 281 போன்ற ஹதீத் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீதில் இருந்து மூஸா(அலை) மற்றும் ஈஸா(அலை) ஆகிய இருவருக்கும் அல்லாஹ் கடமையாக்கியது வெள்ளிக் கிழமை  தான்  என்பது  தெளிவாகிறது.

அல்லாஹ் ஒன்றை கடமையாக்க வேண்டும் என்றால் அது தூதர்கள் மூலமா கத்தான் கடமையாக்குவான். அந்த அடிப் படையில் வேதம் கொடுக்கப்பட்டவர் களான யூதர்களுக்கு மூஸா(அலை) அவர் கள் மூலமாகவும், அதுபோல கிறிஸ்தவர் களுக்கு ஈஸா(அலை) அவர்கள் மூல மாகவும் வெள்ளிக்கிழமையை வார வழி பாட்டு நாளாக அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான்.

அல்லாஹ் ஒன்றை கடமையாக்கி னால் அதற்கு அல்லாஹ்வின் தூதர்கள் மாறு செய்வார்களா? நிச்சயமாக மாறு செய்ய மாட்டார்கள். ஆக அல்லாஹ் கடமையாக் கிய வெள்ளிக்கிழமையை மூஸா(அலை) அவர்கள் மரணத்திற்கு பின்னால் வந்த யூதர் கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தை மாற்றி அமைத்தது போல அவர்களுக்கு கடமையாக்கப்பட்ட இந்த வெள்ளிக் கிழமையை மாற்றியிருக்கிறார்கள். அது போல ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ் தன் புறத்திற்கு உயர்த்தியதும், பின்னால் வந்த பவுல் போன்ற கிறிஸ்தவர்கள் தங்க ளுக்கு வழங்கப்பட்ட வேதத்தில் பலவற்றை மாற்றி அமைத்தது போல வெள்ளிக் கிழமையை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றி யிருக்கிறார்கள்.

செவிமடுத்தோம்,  மாறு  செய்வோம் :

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்க ளுக்கு கடமையாக்கப்பட்ட வெள்ளிக் கிழமையை மாற்றி அமைத்ததற்கு காரணம் என்னவென்று  நினைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 2:93)

தூர்மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். அதை செவியேற்றுக் கொள்ளுங்கள் என்று உங்க ளிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற் றோம்; மேலும் (அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிரா கரித்த காரத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களு டைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.  (அல்குர்ஆன் 2:93)

இன்னும் (நினைவு கூறுங்கள்); நாம் கூறினோம். “இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராள மாகப் புசியுங்கள். அதன் வாயிலில் நுழை யும்போது, பணிவுடன் தலைவணங்கிஹித்ததுன்‘ (எங்கள் பாவச் சுமைகள் நீங் கட்டும்) என்று கூறுங்கள்; நாம் உங்களுக் காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.  (அல்குர்ஆன் 2:58)

ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற் றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத் தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கி  வைத்தோம்.      (அல்குர்ஆன் 2:59)

யூதர்களில் சிலர் வேதவாக்குகளில் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டு கின்றனர். (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம்.  அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!’ என்று கூறி, “ராயினாஎன்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத் தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள்நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட் டோம்; (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனி யுங்கள் (உள்ளுர்னா) என்று கூறியிருப்பார் களானால், அது அவர்களுக்கு நன்மையாக வும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிரா கரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர் களைச் சபித்துவிட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.   (அல்குர்ஆன் 4:46)

மேலே குறிப்பிட்ட வசனங்களை ஒன் றுக்கு இரண்டு முறை படித்து பாருங்கள். முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் எதற்காக சபிக்கப்பட்டார்கள் என்பது விளங்கும். நாங்கள் செவிமடுத்தோம்; அதற்கு மாறு செய்வோம் என்று அவர்கள் கூறிவந்ததன் காரணமாகவும், அவர்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தையை மாற்றி வேறொரு வார்த்தையாக ஆக்கியதாலும் அவர்கள் சபிக்கப்பட்டார்கள். அதுபோல அவர்களுக்கு வெள்ளிக்கிழமை வார வழி பாட்டு நாளாக இருந்தாலும் அதற்கு மாறு நாளான சனிக்கிழமையில் தான் அல்லாஹ் அதிகமாக சோதனை கொண்டு அவர்களை சோதனை செய்தான். காரணம் பின்னாளில் அவர்கள் சனிக்கிழமையையே தங்களுக் கான வார வழிபாட்டு நாளாக ஆக்கி வழி பிறழ வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் ஆக்கியிருக்கக் கூடும் என்பது எனது கருத்து. அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான். இப்படி சொல்லக் காரணம் சனிக்கிழமை மீன் பிடிக்ககூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டான். ஆனால் அன்றைக்குத்தான் மீன்கள் நீருக்கு மேல் வந்தன. அல்லாஹ்வின் கட்டளையை மீறி மீன் பிடித்தார்கள். அதனால் சபிக்கப்பட் டார்கள். சபிக்கப்பட்ட நாள் எப்படி வழி பாட்டு நாளாக மாறியது? ஆம்! தங்கள் முன் னோர்கள் சபிக்கப்பட்ட அந்த நாளையே பின்னால் வந்த வழிகெட்ட யூதர்கள் தங் கள் வழிபாடு நாளாக சனிக்கிழமையை ஆக் கிக் கொண்டார்கள். வழிபாட்டு நாளிலும் அல்லாஹ்விற்கு கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பதே அவர்களின் குறிக் கோளாக  இருந்திருக்க  வேண்டும்.

நபிமார்கள்  அனைவருக்கும்  வெள்ளிக்கிழமை:

ஆக மூஸா(அலை) மற்றும் ஈஸா(அலை) ஆகியோருக்கு அல்லாஹ் வெள்ளிக்கிழமை யைத்தான் வார வழிபாட்டு நாளாக ஆக்கி யிருக்கிறான் என்பதை ஹதீத்களின் மூல மாக நாம் விளங்கிக் கொண்டோம். மேலும் மற்ற நபிமார்களுக்கும் அல்லாஹ் வார வழி பாட்டு நாளாக வெள்ளிக்கிழமையே ஆக்கி யிருக்க கூடும் என்பது எனது புரிதலாக இருக்கிறது. காரணம் வெள்ளிக்கிழமை என்பது புனிதமான நாள். வெள்ளிக்கிழமை என்பது மற்றொரு பெருநாள் என்று சிறப் பித்து நபி(ஸல்) அவர்களால் சொல்லப்பட் டிருக்கிறது. அப்படி இருக்கையில் தூதருக்கு தூதர் இந்த வழிபாட்டு நாள் மாற்றப்பட்டு இருக்குமா? மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அப்படி தூதருக்கு தூதர் மாற்றப் பட்டதாக ஆதாரம் ஏதும் இருக்கிறதா? ஆதம் நபி(அலை) படைக்கப்பட்டது வெள்ளிக்கிழமை. இந்த உலகம் அழிவதும் வெள்ளிக்கிழமை. இப்படி வெள்ளிக் கிழமைக்கான சிறப்புகள் அடுக்கப்பட்டி ருக்கும்போது, ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனையே வணங்க சொல்லி வந்த நபிமார்கள் தங்களுக்கான வார வழிபாட்டு நாளை மட்டும் வெவ்வேறு நாட்களில் ஆக்கியிருப்பார்களா? அல்லாஹ் அவ்வாறு ஆக்கி தந்திருப்பானா? சிந்திக்க கடமைப் பட்டு  இருக்கிறோம்.

சனிக்கிழமையை அல்லாஹ் அங்கீகரித்தானா?

இன்றைக்கு சில சகோதரர்கள் அல் லாஹ் மூஸா(அலை) அவர்களுக்கு வெள்ளிக் கிழமை தான் வார வழிபாட்டு நாளாக ஆக்கியிருந்தான். பின்னால் வந்த வழி கேடர்கள் சனிக்கிழமையாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் ஆக்கிக் கொண்ட அந்த சனிக்கிழமையையே அல்லாஹ் அங்கீ கரித்தான் என்று சுய விளக்கம் கொடுக்கி றார்கள். வெள்ளிக்கிழமையை, சனிக் கிழமையாக ஆக்கிக் கொண்டார்கள். அதனை அல்லாஹ் அங்கீகரித்தான் என்று சொல்வோர் அதற்கான ஆதாரத்தை குர் ஆன், ஹதீத் அடிப்படையில் சமர்ப்பித்தால் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.

இப்படி விளக்கம் கொடுக்கும் சகோதரர் களுக்கு, ஈஸா(அலை) அவர்களுக்கு வார வழிபாட்டு நாள் வெள்ளிக்கிழமை என் பதை ஹதீத்களில் இருந்து நாம் தெளிவு பெற்றுள்ளோம். இன்றைக்கு கிறிஸ்தவர் கள் ஞாயிற்றுக்கிழமை வார வழிபாடு நடத்துகிறார்கள். அதனால் ஈஸா(அலை) அவர்களுக்கு பின்னர் வந்த நஸ்ரானிகள் ஞாயிற்றுக்கிழமையை எந்த அடிப்படை யில் வார வழிபாட்டு நாளாக மாற்றினார் கள்? அல்லாஹ் அதனை அங்கீகரித்தானா? இல்லையா? என்பதற்கு ஆதாரம் தந்தால் நாமும் தெளிவு பெற தயாராக இருக்கி றோம். இன்ஷா அல்லாஹ். ஆதாரம் தருவீர் களா?  காத்திருக்கிறோம்.

லிவிங் டுகெதர்‘ – கொடூர கொலைகள்

பெற்றோர், சகோதரர்கள், உற்றார், உறவினர், அண்டைவீட்டார், நண்பர் கள், ஊரார் அனைவரும் கலந்துகொள்ள உலகறிய நடக்கும் முறைப்படியான (புrrழிஐஆed னிழிrrஷ்ழிஆe) பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணம் அல்லது சட்டப்பூர்வ முறையில் ரிஜிஸ் டர் ஆஃபீசில் அரசு அதிகாரி ஒப்புத லோடு முறையான சாட்சிகள் கையய ழுத்து இட நடக்கும் (யூeஆஷ்விமிer னிழிrrஷ்ழிஆe) பதிவுத் திருமணம் ஆகியவற்றில் எல்லாம் இந்தளவுக்கு குரூர கொலைகள் நடைபெற்றதாக செய்திகள் கண்டது இல்லை. “லிவிங் டுகெதர்லதான் இது போன்ற கற்பனைக்கு எட்டாத குரூரம் எல்லாம்  செய்தியாக  வருகின்றன.

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு பணம் பெறுபவருக்கு இருக்கின்ற ஒரு விபச்சார விடுதிகள் சார்ந்த தொழில் முறை கூட்டமைப்பு வலைப்பின்னல் பாதுகாப்பு கூட இப்படியானலிவிங் டுகெதர்முறையில் தனித்து விடப்படு பவருக்கு இருப்பதில்லை என்பதுதான். இதுபோன்ற கற்பனைக்கும் எட்டாத கொடூர கொலைகளுக்கு காரணமாகிறது.

எவனோ ஒருவனால், ஒரு விபச் சாரிக்கு ஏதும் பண மோசடி பிரச்சினை ஏற்பட்டது என்றால், அவளை வைத்து சம்பாதிக்கும் மிகப்பெரிய ரவுடி/லாட்ஜ் ஓனர் அடியாட்களுடன் ஓடி வருவான். அல்லது விபச்சாரியிடம் வாராவாரம் மாமூல் வாங்கும் அதிகாரியும் ஓடி வரு வார். ஆனால், “லிவிங் டுகெதர்பெண், சமூகத்தில் கேள்வி கேட்க ஆளில்லாமல் தனித்து விடப்பட்ட அனாதை போன்று ஆகிவிடுகிறார். அந்த துணிச்சல்தான்லிவிங் டுகெதர்ஆணை தன் தேவை தீர்ந்ததும் எந்த எல்லைக்கும் போக வைத்து விடுகிறது.

பொதுவாக கற்பொழுக்கமற்ற மோசமான விபச்சார காமுக ஆணுக்கு இந்த காதல், திருமணம், விவாகரத்து, மறுமணம் எல்லாம் கடுப்பை கிளப்புகிற தேவையற்ற சுமை. எனவே, அவனுக்கு மிகவும் இலகுவானது விபச்சாரம்தான். ஆனால் இந்த விபச்சாரத்தில் அவனுக்கு 2  பிரச்சனைகள்  உள்ளன.

1. அதிக செலவு (லாட்ஜ் ரூம் வாடகை,  விபச்சாரிக்கு  ஃபீஸ்)

2. பால்வினை நோய் (எய்ட்ஸ் போன்ற  ஆபத்துகள்)

அந்த ஆணுக்கு இவை இரண்டும் இல்லாமல் லட்டு போல கிடைத்த சூப்பர் வாய்ப்புதான். “லிவிங் டுகெதர்திருமணத்தை, ஆணாதிக்கம், பெண் ணடிமைத்தனம், பிற்போக்குத்தனம், அடிப்படைவாதம், காட்டுமிராண்டித் தனம் என்று வெற்றிகரமாக சில இளம் பெண்கள் மத்தியில் கட்டமைத்த காமுக கயவர்களால் விபச்சாரத்தை, பெண்ணி யம், பெண் விடுதலை என்று கட்ட மைக்க முடியவில்லை. ஆகவே, அதை விடவும் மிகப்பெரிய பாலியல் சுரண்ட லானலிவிங் டுகெதரைஎத்தனை கொடூர ஆணாதிக்கம் மற்றும் எவ்வளவு மோசமான பெண்ணடிமைத்தனம் எது? என்று தொடர்ந்து அம்பலப்படுத்தப் பட்டு வருகிறது. அறிவு பெற வேண்டிய வர்கள் பெற்றாக வேண்டும்.

Previous post:

Next post: