அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. எந்த சமுதாயத்தின் மீது அல்லாஹ் கல் மழை பொழிந்தான்?
லூத் நபி சமுதாயத்தின் மீது. (அல்குர்ஆன் 27:52)
2. பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
அர்ரஹ்மானின் அடியார்கள்தான். (அல்குர்ஆன் 25:63)
3. நூஹ் நபியின் மகனைப் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
நிச்சயமாக அவன் உனது குடும்பத்தை சேர்ந்தவனில்லை. (அல்குர்ஆன் 11:4)
4. உம்மி என்று யாரை அல்லாஹ் கூறுகிறான்?
எழுத்தறிவற்றவர்களை. (அல்குர்ஆன் 2:78)
5. இந்த குர்ஆன் யாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
நம்பிக்கை கொள்ளும் சமூகத்திற்கு. (அல்குர்ஆன் 7:52)
6. சூனியக்காரர்கள் யாரை நம்பிக்கை கொண்டோம் என்று கூறினர்?
ஹாருன் மற்றும் மூஸாவின் இரட்சகனை. (அல்குர்ஆன் 20:70)
7. எந்த நபிக்கு மலைகளை வசப்படுத்திக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
தாவூத் நபிக்கு. (அல்குர்ஆன் 38:18)
8. முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பணி பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
நீர் எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 35:23)
9. எவைகள் சமமாகாது என அல்லாஹ் கூறுகிறான்?
இருளும் – ஒளியும். (அல்குர்ஆன்35:20)
10. நம்பிக்கை கொண்டவர்களின் சப்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்?
நபியின் சப்தத்தற்கு மேல் உயர்த்தக் கூடாது. (அல்குர்ஆன் 49:2)
11. நபி(ஸல்) அவர்களை எந்த நாளை எதிர்பார்க்க கூறுகிறான்?
வானம் தெளிவான புகையை கொண்டு வரும் நாளை. (அல்குர்ஆன் 44:10)
12. பிர்அவ்னின் கூட்டத்தாரை எதைக் கொண்டு சோதித்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
பஞ்சம், விளைச்சலில் குறைவைக் கொண்டு. (அல்குர்ஆன் 7:130)
13. ஷிஐப் நபியை பின்பற்றாதவர்களுக்கு எவ்வாறு தண்டனை தந்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
பூகம்பத்தால் பாரீய நிலநடுக்கத்தால். (அல்குர்ஆன்7:91)
14. நல்ல கனவு யாரிடமிருந்து வரும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அல்லாஹ்விடமிருந்து. புகாரி : 6984
15. பேரீச்சை பழத்திற்கு எது கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
வாசனை. முஸ்லிம் 1461
16. அரேபியர் சொன்ன சொற்களில் மிகவும் சிறந்தது எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அல்லாஹ்வை தவிர அனைத்தும் அழியக் கூடியவையே. (முஸ்லிம்: 4542)
17. நேரத்தோடு ஜும்ஆவுக்கு வருபவரது நிலை பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள்?
முதலில் வருபவரது நிலை. ஒட்டகம் குர்பானி தந்த நிலை. (புகாரி: 929)
18. தேங்கி நிற்கும் நீரில் எதை செய்ய நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்?
சிறுநீர் கழிப்பதையும், பின் குளிப்பதையும் தடுத்தார்கள். (முஸ்லிம் : 475)
19. எதை தர்மம் செய்வது சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தேவைக்கு போக எஞ்சியதை. (புகாரி: 5356)
20. யாசகம் கேட்பதை விட சிறந்தது எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
விறகு கட்டை முதுகில் சுமந்து விற்று வாழ்வது. (புகாரி: 2374)