அல்லாஹ்வின் உதவி கிடைக்குமா?

in 2023 ஆகஸ்ட்

அல்லாஹ்வின் உதவி கிடைக்குமா?

அய்யம்பேட்டை   நஜ்முதீன்

இன்றைய நவீன உலகத்தில் மீடியாக்களால் முழங்கப்படும் ஒரே மந்திரம்பரபரப்புஎன்பதே. இந்த மந்திரத்தை தங்களது மீடியாக்களின் வளர்ச்சிக்காகஉயிர் மூச்சாகசுவாசிக்கப்படு கின்றது. மீடியாக்களால் சொல்லப்படும்பரபரப்புஎன்பது உண்மையா என்றால் இல்லை. ஆனால் அதை நம்பக்கூடியவர்கள் பல்வேறு துன்பத்திற்கு  உள்ளாகிறார்கள்.

அதுபோல் நவீன மருத்துவர்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் பெரும்பாலோரின் மூலமந்திரம் முன்பு காச நோயாக (வீய) இருந்தது. தற்போது அவர் களின் மூலமந்திரம் இரத்த அழுத்தம், சுகர், கரோனா என்பதாக இருக்கின்றது. இத்தகைய செக்கப்பை (ளீக்ஷிசிளீலுUP) செய்ய சொல்லாத அலோபதி மருத்துவர்களை பார்க்கவே இயலாது. மருத்துவர்கள் வருமானத்திற்காக மக்கள் மனதில் உயிர் பயத்தை உண்டாக்கி உணவுக்கு பதிலாக மருந்து, மாத்திரைகளே உயிர்காக்கும் என்ற மனநிலைக்கு மக்களை நம்பவைத்து விட்டார்கள். இதுவும் உண்மையயன்றால் இல்லை. மருத்துவர்களால் துன்பத்திற்கு ஆளானோரே  அதிகம்.

மேற்கண்ட எல்லாவற்றையும் விட மிக, சுலபமாக மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியது யாரென்றால் இறைவனுக்குஇடைத்தரகர்கள்தேவை என்பதை ஆன்மீக ரீதியாக கூறி மக்களை ஏமாற்றிய, ஏமாற்றிக் கொண்டு இருக்கின்ற இடைத்தரகர்கள்.

இடைத்தரகர்களின் போலியான ஆன்மீக மோகத்தில் மூழ்கி படித்தவர்கள் முதல் பாமரர் வரை ஏமாறுகிறார்கள். இத்தகைய இடைத்தரகர்கள் பேய், ஜின் இவை களை பார்த்ததாகவும், தங்கள் கட்டுப்பட் டால் அவை உள்ளது எனக்கூறி நம்ப வைத்து பல்வேறு துன்பத்திற்கு மக்களை ஆளாக்குகிறார்கள்.

மீடியாவாலோ, மருத்துவர்களாலோ துன்பத்திற்கு ஆளானால் இவ்வுலகில் மட் டுமே நஷ்டம். ஆனால் இடைத்தரகர்களின் ஆன்மீக மோகத்தில் மூழ்கி துயரத்திற்கு ஆளானோர் இறைவன் என்று ஒருவன் இருக்கின்றானா? அவன் உதவி செய்வானா? என்ற சந்தேகத்திலேயே வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த சந்தேகம் சரியா?

ஆதி மனிதன் முதல் அழியப்போகும் நாள் வரை தோன்றிய, தோன்றி மறைந்த, தோன்ற இருக்கின்ற மனிதர்களில் இறைவன் ஒருவனே என யார்யாரெல்லாம் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்ப் பவர்களாக இருந்தார்கள், இருக்கின்றார்கள். ஆயினும் அல்லாஹ்வின் உதவி கிடைக் கின்றதா  என்றால்  இல்லை?

மனிதர்களை படைத்து, மனிதர் களுக்கு தேவையான எல்லாவற்றையும் படைத்துவிட்டேன். அதனால் மனிதன் தன்னிடம் உதவிக் கேட்காமல் அவர்களே முயற்சி செய்து தேடிக் கொள்ளவேண்டும் என்பது அல்லாஹ்வின் நியதியா? என்றால் அதுவும்  இல்லை.

அல்லாஹ் நான் அருளாளன், அன்புடையோன், பிடறி நரம்புக்கு மிக அருகில் இருக்கின்றேன். என்னிடம் மட்டுமே கேளுங்கள். நான் வாக்குறுதி மாறாதவன்  என்கிறான்.

அவ்வாறு எனில் யார் யாருக்கெல்லாம் எப்போது, எப்படி உதவிகள் செய்தான்! 

  • ஆதமே! நீரும் உம் மனைவியும் சுவனத்தில் குடியிருங்கள், நீங்கள் விரும்பிய வாறு அதில் உள்ளவைகளை உண்ணுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்கவேண்டாம். மீறி என்னுடைய கட்டளைக்கு மாறு செய்தால், நீங்கள் இரு வரும் அக்கிரமக்காரர்களாக ஆகிவிடுவீர்கள்  என்று  எச்சரித்தோம்.

ஆனால் ஷைத்தான் அவருக்கு குழப்பத்தை உண்டாக்கியதால் அவ்விருவரும் அல்லாஹ் வின்  கட்டளைக்கு மாறு செய்தார்கள் அதனால் வெளியேற்றப்பட்டார்கள். மேலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் உதவி கிடைக்க பல நூற்றாண்டுகள் ஆனது.

(இதைப் பற்றி பல்வேறு கற்பனை கதைகள் பல உள்ளன;  அவற்றுக்குள் நாம் சிந்தனை செலுத்த  தேவையில்லை)

அல்லாஹ் என்ன சொல்லியிருக்கின் றான்  என்பது  நமக்கு  போதுமானது.

ஆதம் (முதல் மனிதர்) தம் இறைவனி டமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டார். அவற்றின் மூலம் இறைவனிடம் மன்னிப்புக் கோரினார். எனவே இறைவன் அவரை மன்னித்தான். அவன் மிக்க மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அத்தியாயம் 2 வசனம் 37)

இது முதல் மனிதருக்கு அல்லாஹ் செய்த  உதவி.

2. நூஹ்(அலை) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வை மட்டுமே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்  இவ்வாறாக சுமார் 950 ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார்கள்.   ( : 71 – : 3)

“(அதற்கு) அவர்களுடைய சமுதாயம் அவரைப் பொய்யரென கூறினார்கள். ஆகவே நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும், இருந்தவைகளையும் (இதர உயிரினங்கள்) கப்பலில் ஏற்றிக் காப்பாற்றினோம்.’

இது நூஹ்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்  செய்த  உதவி.

3. “இப்ராஹீம்(அலை) அவர்கள் என் அருமைத் தந்தையே! யாதொன்றையும் கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுடைய எந்த தேவையையும் பூர்த்தி செய்ய இயலாதுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்? என்று தம் தந்தையிடம் கேட்டார். (:19, :42)

அதற்கு அவர்; இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் இவ்வாறு செய்வதை விட்டும் விலகி கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன். எனவே நீர் என்னை விட்டு விலகி போய்விடுஎன்று கூறினார் கள்.   (:19, :46)

(ஏகத்துவத்தை சொன்னதற்காக தந்தையால் வீட்டை விட்டு விரட்டப் பட்ட முதல் மனிதர் இப்ராஹீம்(அலை) அவர்கள்)

மேலும்  இளைஞர் ஒருவர்  தெய்வங் களைப் பற்றி (அவதூறாக) விமர்சனம் செய்துவந்ததை நாங்கள் கேள்விப்பட்டி ருக்கிறோம். அவருடைய பெயர் இப்ராஹீம் என்று  சொல்லப்படுகிறது.’

மேலும், இப்ராஹீமே! எங்கள் தெய் வங்களை விமர்சனம் செய்தவர் நீர் தாமே! என்று அவ்வூர் மக்கள் கேட்டனர்‘.   (:21, :68)

ஒரே இறைவன் தான் என்று இப்ராஹீம்(அலை) சொன்னதால் கொடுங்கோல் மன்னனால் அவர்கள் நெருப்பில் தூக்கி போடப்பட்டர்கள்; அப்போது அல்லாஹ்நெருப்பே! இப்ராஹீம் மீது குளிர்ச்சி யாகவும், சுகமளிக்க கூடியதாகவும் ஆகிவிடு  என்று  கூறினான்.    (:21, :69)

இது இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்  செய்த  பேருதவி.

4. மூஸா(அலை)  அவர்கள்  சம்பவம்:

வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதை நிச்சயமாக நீ(ஃபிர்அவ்னே!) அறிவாய்; மேலும் ஃபிர்அவ்னே!  நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று நான் எண்ணுகின்றேன் என்று கூறினார். அதன் காரணமாக,

அந்நாட்டை விட்டு மூஸாவையும், பனீ இஸ்ராயில்களையும் அழித்துவிட ஃபிர்அவ்ன் நாடினான்; ஆனால் நாம் ஃபிர்அவ்னையும், அவனுடனிருந்தவர்கள் அனைவரையும்  நதியில்  மூழ்கடித்தோம்.

இது மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்  செய்த  உதவி.   (:2, :50)

5. ஈஸா(அலை)  அவர்கள் :

நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் குமாரராகிய ஈஸா மஸிஹை கொன்றுவிட்டோம் என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ் அவரை அவர்கள் கொல்லவுமில்லை, அவரை சிலுவையில் அறையவுமில்லை. மேலும் இதில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள், அவை வெறும் யூகமே. அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (:4, .157)

அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயரத்திக்கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும்  ஞானமுடையோனாகவும்  இருக்கின்றான்.’     (:4, :158)

இது ஈஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்  செய்த பேருதவி.

6. அய்யூப்(அலை) அவர்கள் :

அய்யூப் தம் இறைவனிடம், நிச்சயமாக என்னை நோய் (துன்பம்) தீண்டியிருக்கிறது; எனவே கிருபை செய்பவர்களெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்என்று கூறி நோயிலிருந்து நிவாரணம்  தருமாறு வேண்டினார்.   (:21, :83)

அல்லாஹ் அதற்குஅவருடைய  பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்.   (:21, :84)

இது அல்லாஹ் அய்யூப்(அலை) அவர் களுக்கு  செய்த  உதவி.

7. யூனுஸ்(அலை)  அவர்கள் :

யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும் கோபமாக வெளியேறி கடலுக்கு சென்ற போது, அவரை நாம் நெருக்கடியில் ஆக்கினோம், அவரை  மீன்  விழுங்கியது. அந்த நேரத்தில்

உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர் களில்  ஒருவனாகிவிட்டேன்எனவே என் தவறை மன்னித்து விடுவாயாக என்று பிரார்த்தித்தார்‘.   (:21, :87)

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டோம்; அவரை மீன் வயிற்றிலிருந்து விடுவித்தோம்.  இவ்வாறே  முஃமின்களையும்  விடுவிப்போம்.  (:21, :88)

இது யூனுஸ்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்  செய்த  உதவியாகும்.

8. ஜகரிய்யா(அலை)  அவர்கள்:

ஜகரிய்யா(அலை) அவர்கள் தம் இறைவனிடம்என் இறைவா! நீ என்னை சந்ததி இல்லாதவனாக ஆக்கிவிடாதே! நீயே உதவி செய்பவனில் மிகவும் மேலானவன்என்று தன்னுடைய இயலாமையை கூறி பிரார்த்தித்தார்.    (:21, :89)

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அவருக்காக அவருடைய மனைவியின் மலட்டுத்தன்மையை நீக்கி, சுகப்படுத்தி அவருக்கு யஹ்யா என்ற புதல்வரை வழங்கினான்.        (:21, :90)

இது ஜக்கரியா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் செய்த  பேருதவி.

9. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மற்றும் முஸ்லிம்கள் :

முஃமின்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். பதுர் யுத்தத்தின்போது எதிர் படையினர் மீது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்க இயலாத வானவர்களை அனுப்பி எதிர் படையினரை தோற்கடிக்க செய்தோம்‘. (:33, :9)

இது நபி(ஸல்) அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் செய்த பேருதவியாகும்.

இதுவரை ஆதி மனிதன் முதல் இறுதி நபி வரை அல்லாஹ் செய்த உதவிகளை பார்த்தோம். ஆனால் இந்த உதவி யாருக்காவது உடனடியாக கிடைத்ததா? என்றால் இல்லை. ஆனால்  கிடைத்தது.

அதுபோல் அனைத்து மனிதர்களுக்கும் அல்லாஹ்வின் உதவி கிடைக்குமா? நிச்சயமாக கிடைக்கும். ஆனால் அதற்கு அல்லாஹ் சில நியதிகளை வைத்துள்ளான்.

1. அதாவதுநிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்களிள் மூலமும், உயிர்கள் (பிறப்புஇறப்பு) மூலமும், விவசாயம் (அதாவது விளைச்சல் வியாபாரம்) ஆகியவற்றின் இழப்பினால், அபிவிருத்தியினாலும், சோதிப்போம். இதில் பொறுமையுடை யோருக்கு மட்டும் அல்லாஹ்வின் உதவி  கிடைக்கும்.   (.2, :155)

2. மேலும் துன்பம் ஏற்படும்போதுநிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பி செல்லக்கூடியவர்கள்என்ற நம்பிக்கை யில்  நிலைத்து இருப்பார்கள்.  (:2,:156)

  இத்தகைய நம்பிக்கை உடையோருக்கு தான் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.
 (
:2, :157)

3. மேலும்அல்லாஹ்வையே முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வின் உதவி கிடைக்கவும், பாதுகாவலனாக இருக் கவும் அல்லாஹ்வே போதுமானவன்.    (:33, :3)

4. மேலும், “அல்லாஹ் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அந்த காரியத்தில் சுய கருத்தை விரும்பவோ அல்லது சுய கருத்தை கூறவோ நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லைஎவரே னும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் (உதவியை பெற முடியாத) வழிகேட்டில் இருக்கிறார்கள்.    (:33, :36)

5. மேலும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு அனைத்தையும் வாரி வழங்கு கின்றான், அதுபோல் சுருக்கியும் விடுகிறான் என்பதை எவர்கள் அறிந்தார்களோ? அவர்களுக்கே இதில் திடமான அத்தாட்சிகள் இருக்கின்றன  (:39, :52)

எனவே அல்லாஹ்வின் உதவியை பெற மேற்கண்ட நியதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். முழுமையான நம்பிக்கையும் வேண்டும். அவ்வாறு கட்டுப்பட்டால் இம்மையிலும், மறுமையிலும் சிலருக்கு மறுமையிலும் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.

யார் யாருக்கு எப்போ? எப்படி அல்லாஹ்வின் உதவி இவ்வுலகில் கிடைக்கும் என்பதை அல்லாஹ்வே அறிவான்.

Previous post:

Next post: