உறவே உனக்கு அர்த்தமென்ன?
எம்.பி. ரஃபீக் அஹ்மத்
மனித உறவு முறைகளுக்கு இஸ்லாம் வரைமுறைகளை வகுத்துள்ளது. சொத் துரிமை, வாரிசுரிமை, யார் யாருக்கு போய் சேரும் என்பதையும் சட்டங்களைத் தொகுத்து தந்துள்ளது. எந்தெந்த உறவு முறை யில் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கும் விளக்கங்களைத் தந்துள்ளது.
இரத்த பந்தங்களுக்கும், சொந்தங்களுக் கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளையும் அவர்களுடைய உரிமை களையும் இஸ்லாம் அழகுபட எடுத்துரைத் துள்ளது. சாதி, இனம், குலம், கோத்திரம், குடும்பம், சமுதாயம் என்ற மயக்கங்கள் மனி தனுக்கு இருக்கத்தான் செய்கின்றன. இவற்றை ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய குடும்பத் தார் என்று நினைக்கின்றான். இவர்கள்மீது அன்பு செலுத்துவது, இவர்களுக்காக, உழைப் பது, பாடுபடுவது, இவர்களுக்கு உதவிகள் புரிவது, இவர்களுக்காக போராடுவது, தியா கங்கள் புரிவது, தன்னுடைய கடமையாக நினைக்கின்றான்.
அல்லாஹ்வுடைய பார்வையில் அவனு டைய திருமறையில் அவன் யாரை குடும்பத் தார் என்று நினைக்கின்றான் அல்லது அழைக் கின்றான் என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? இதோ இந்த இறை வசனங் களை கவனியுங்கள்.
இன்னும் நூஹ், அவர் முன்னே பிரார்த் தித்த போது, அவருக்கு(அவருடைய பிரார்த் தனையை ஏற்று) பதில் கூறினோம். அவரை யும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்து நாம் ஈடேற்றினோம்.
இன்னும் நம்முடைய அத்தாட்சி களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம்; நிச்சயமாக அவர்கள் மிக்க கெட்ட சமூகத்தாராக இருந்தனர். ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம். (அல்குர் ஆன் 21:76,77)
இதே கருத்து 37:75,76லும் கூறப்பட்டுள்ளது.
உலக அகராதியில் “அஹல்‘ என்ற அரபி சொல்லுக்கு தன்னுடைய குடும்பத்தார் என்று பொருளாகும். ஆனால் அல்லாஹ்வு டைய அகராதியில் “அஹல்‘ என்ற சொல்லுக்கு பொருள் மாறுகின்றது. மூஃமின் அத்தியாயத் தில் அதில் ஒரு ஒரு விதிவிலக்கு சுட்டிக்காட் டப்படுகின்றது இதோ அந்த வசனத்தைப் பாருங்கள்.
அதற்கு, நீர் (நூஹ்) நம் கண்முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலை செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும்போது, ஒவ் வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உம்முடைய குடும் பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டு விட்டதோ அவர்களைத் தவிர (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும், இன்னும் அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேசவேண் டாம். நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படு வார்கள் என்று அவருக்கு (நூஹுக்கு) நாம் அறிவித்தோம். (அல்குர்ஆன் 23:27)
இந்த இறைவசனத்தில் அல்லாஹ் கோடிட்டுக் காட்ட விரும்பும் உண்மையை இன்னும் சற்று விளக்கமாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் இந்த இறை வசனத்தை படித்துப் பாருங்கள்.
(நூஹ் இவ்வாறு பிரார்த்தித்தார்) என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும் என் வீட்டில் நம் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், மூஃமினான ஆண் களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் நீ மன்னிப்பாயாக! மேலும் அநியாயக்கார்க ளுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே (என்றும் கூறினார்) (அல்குர்ஆன் 71:28)
இறைவனுடைய பார்வையில் “அஹல்‘ என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை புரிந்துக் கொண்டிருப்பீர்கள். இங்கே இனத்தை அடிப் படையாக வைத்தோ, அல்லது பாரம்பரி யத்தை முன்வைத்தோ, சொந்த பந்தத்தை மனதில் வைத்தோ நம்மவர்கள் யார், அந்நி யர்கள் யார் என்பதை கணக்கில் கொள்வ தில்லை. இங்கே குஃப்ரையும் ஈமானையும் முன்வைத்துத்தான் நம் சொந்தக்காரர்கள் யார் என்று தீர்மானிக்கப்படுகின்றது. நூஹ் (அலை) அவர்களுடைய வாழ்க்கை வரலாற் றில் ஏற்பட்ட இந்த சம்பவம் உலக உறவு முறைகளின் அமைப்பில் ஒரு பிரளயமே கொண்டு வந்தது. அதற்குப்பின் மனித வாழ்க் கையின் அர்த்தங்களே மாற்றி எழுதப்பட் டன எனலாம். கொஞ்சம் உங்கள் மனக்கண் களில் இந்த காட்சியை கொண்டு வாருங்கள்.
பின்னர் அக்கப்பல் மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்துக் கொண்டு செல்லலாயிற்று. (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களு டன் (சேர்ந்து) இராதே! என்று நூஹ்(அலை) அழைத்தார். (அல்குர்ஆன் 11:42)
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்கள். மகனின் பதிலை கேளுங் கள்; அதற்கு அவன் (மகன்) “என்னை தண்ணீ ரிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பில்) விடுவேன்‘ எனக் கூறினான்.
(அதைச் செவியுற்ற தந்தை கூறினார்) இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல் லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப் படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப் பட்டவர்களில் ஒருவனாகி விட்டான். (அல்குர்ஆன் 11:43)
சோகத்தின் விளிம்பில் நூஹ்(அலை) நிற் கின்றார்கள். தழுதழுத்த குரலில் இறைவனை அழைக்கின்றார்கள். பிறகு இவ்வாறு கூறுகின் றார்கள்.
நூஹ்(அலை) தன் இறைவனிடம், “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும் பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சய மாக உண்மையானது; நீதி வழங்குவோர் களில் எல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்‘ எனக் கூறினார். (அல்குர்ஆன் 11:45)
இதற்குஅடுத்துஇறைவன்தரும்பதிலைப்பாருங்கள்; இந்த பதில் தான் மானிட வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக் கியது.
அதற்குஇறைவன்கூறினான்; “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத வி யத்தைப் பற்றி என்னிடம் கேட்கவேண் டாம்; நீ அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன். (அல்குர்ஆன் 11:46)
இந்த வசனம் எத்தனை போலியான மாயைகளை உடைத்தெறிந்துள்ளது என் பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
இந்த பாசம், இனப்பற்று, மொழிப் பற்றி, தேசப்பற்று, சமுதாயப் பற்று இவைகள் எல்லாம் மனிதன் பெற்றுக்கொள்ள வேண் டிய பற்றுகளே அல்ல. என்ற பேருண்மையை இந்த உயர் வசனம் கற்றுத் தருகின்றது. இப் பொழுது இப்ராஹீம் (அலை) அவர்கள் யாரை தங்கள் உறவினர்கள் என்றழைக்கின் றார்கள் என்பதையும் கொஞ்சம் பார்ப்போம்.
இப்ராஹீம்(அலை) அவர்கள் இறை வனை நோக்கி கூறினார்கள்.
(என்) இறைவனே ! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழிகெடுத்து விட்டன; எனவே, எவர் என்னை பின்பற்றுகி றாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்; எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னை சார்ந்தவர் இல்லை) (அல்குர்ஆன் 14:36)
இந்த பிரகடனத்தை அவர்கள் வாயள வில் செய்யவில்லை; செயலளவில் செவ்வனே செய்து காட்டினார்கள். முதலில் தன் தந் தையை விட்டு விலகினார்கள். தான் பிறந்த நாட்டை, வீட்டைத் துறக்க தயாரானார்கள். தன் சமுதாய மக்களையும் ஒதுக்கினார்கள்; பிறகு கூறினார்கள்.
நான் உங்களை விட்டும்; அல்லாஹ்வை யன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கின்றேன். மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப் பது கண்டு நான் நிர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும் (என்றார்). (அல்குர்ஆன் 19:48)
இனி கொஞ்சம் லூத்(அலை) அவர்களு டைய வாழ்க்கை வரலாற்றையும் குர்ஆனின் ஒளியில் பார்ப்போம். இதோ ஒளியும் தெரிகின்றது; ஒலியும் கேட்கின்றது.
லூத்(அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த் தக்கின்றார்கள்.
என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண் டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக! (எனப் பிரார்த்தித்தார்). அவ்வாறே, நாம் அவ ரையும், அவர் குடும்பத்தாரையும் காத்துக் கொண்டோம். (அழிந்து போவோரில் ஒருத்தி யாக பின் தங்கிவிட்ட கிழவியை தவிர) பின் னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம். (அல்குர் ஆன் 26:169-172)
கணவன் மனைவியின் உறவின் நெருக் கத்தைப் பற்றி திருமறை இவ்வாறு சிலாகித்து கூறுகின்றது.
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் : 2:187)
ஆனால் இப்பொழுது அழிந்து போன அந்தக் கிழவி யார் என்று பார்ப்போம்.
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியை யும்அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கின் றான். இவ்விருவரும் ஸாலிஹான தம் நல்லடி யார்களில், இரு நல்லடியார்களின் மனைவி களாகவே இருந்தனர். எனினும் இவ்விரு வரும் தம் கணவர்களை மோசம் செய்தனர். எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரை விட்டும் அல்லாஹ்விடமிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை. இன் னும், நீங்கள் இருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள் என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது. மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகி றான். அவர் இறைவா! எனக்காக உன்னிடத் தில் சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தரு வாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னைக் காப் பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னை காப்பாற்று வாயாக என்று (பிரார்த்தித்துக்) கூறினார். அல்குர்ஆன் 66:10,11
இன்னும் அதிகமான தெளிவா தரக் கூடிய இந்த இறை வசனத்தை பாருங்கள்.
வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாளம் இடப்பட்டவை, ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம். எனவே, அதில் முஸ்லிம்களிலி ருந்து ஒரு வீட் டாரைத் தவிர, ஒருவரையும நாம் காணவில்லை! (அல்குர்ஆன் 51:34,35,36)
இங்கே “அஹல்‘ என்றால், லூத்(அலை) அவர்களுடைய வீட்டார் என்று பொரு ளல்ல. (ஆல்) என்றால் லூத்(அலை) அவர்களு டைய குழந்தைகள் என்று பொருளல்ல. மாறாக அல்லாஹ்வையும் அவன் தூதரையும் பின்பற்றக்கூடிய கூட்டத்தைத்தான் அல்லாஹ் (ஜல்) வீட்டார் என்றும், குழந்தைகள் என்றும் குறிப்பிடுகின்றான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் புலனாகின்றது.
ஆக இஸ்லாத்தில் உறவு முறை விசித்திர மானது, வித்தியாசமானது, வியப்பிற்குரியது, விவேகமானது, இறை நம்பிக்கையின் அடிப் படையில் உருவாவதுதான், உண்மையான உறவுமுறை; மற்ற உறவுகள் எல்லாம் உறவு களே அல்ல. அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை.