படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறுதி இறைநுலை!
சரஹ் அலி, உடன்குடி
கருணையாளன் கிருபையாளன் அந்த இறைவனின் பெயரால்…..
தம் இறைவனிடம் இருந்து வந்த தெளிவான சான்றில் இருப்பவர், யாருக்கு தமது தீய செயல் அலங்கரித்துக் காட்டப்பட்டுத் தம் மனவிருப்பங்களைப் பின்பற்றினார்களோ அவர்களைப் போன்றவரா (என்ன)? (இறைநூல் : 47:14)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு :
மக்களுக்கு ஒரு மோசமான காலம் வரும். அக்காலத்திலே உண்மை பேசுபவர்களை பொய்யர்களாக கருதுவார்கள். பொய் பேசுபவர்களை உண்மையாளர்களாக கருதுவார்கள். துரோகியை நம்புவார்கள். நம்பிக்கைக்குரியவனை சந்தேகப்படுவார்கள் என அல்லாஹ் வின் தூதர் (ஸல்) சொன்னார்கள். நூல்:இப்னுமாஜா, நபிமொழி எண் : 4036.
(உடல் மொழியால்) சைகை காட்டியும் (நாவால்) குறை கூறியும் திரிவோர் வக்கற்றுப் போகட்டும். (இறைநூல்: 104:1)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் :
வணக்க வழிபாடுகள் உட்பட மற்ற அனைத்து வழிபாட்டிற்கும் அடிப்படையாக இருப்பதை உனக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடத்தில், அல்லாஹ்வின் தூதரே! ஆம்! எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து, “நாவை நீ பாதுகாத்துக்கொள்‘ என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசுகின்ற போது நாவினால் பயன்படுத்துகின்ற வார்த்தை களுக்காக நாம் தண்டிக்கப்படுவோமா? என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் இறுதி விசாரணை நாளில் மக்களை முகம் குப்புற நரகில் தள்ளுவது அவர்களுடைய நாவுகளால் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்தார்கள். நூல்: முஸ்னத் அஹ்மத், நபிமொழி எண். 2100.
மனோ இச்சையைப் பின்பற்றி, கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளை மறந்துவிட்டால் கொடிய வேதனை உண்டு! மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள். ஏனெனில் அது உங்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுத்து விடும். நிச்சயமாக எவர் ஒருவர் இறைவனின் பாதையை விட்டுவிட்டு வழிகேட்டில் போகிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்துவிட்டதற்காக மிகக் கொடிய வேதனை உண்டு. (இறை நூல் : 38:26)