திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின்அடையாளங்கள்… 

in 2023 ஆகஸ்ட்

திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின்அடையாளங்கள் 

அபூ இஸ்ஸத், இலங்கை

ஜூலை மாத தொடர்ச்சி….

வேதனைக்கு அவசரப்பட்ட வேடிக்கையான மனிதர்கள் :

அவர்கள் உம்மிடம் வேதனையை அவ சரமாகக் கோருகின்றனர். நிச்சயமாக நரக மானது இறைமறுப்பாளர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும் (29:54) அவர்கள் (விளைவு குறித்து யோசிக்காமல்) அல்லாஹ் வழங்கும் வேதனையும், அவனது தண்ட னையும், தங்கள் மீது (இப்போதே) இறங் கட்டும் என்று அவசரம் காட்டினர். எவ்வாறெனில்,

(இன்னும் நிராகரிப்போர்) அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மழையைப் பொழியச் செய்வாயாக, அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வதைக்கும் வேதனையை அனுப்பு! என்று கூறினார்கள். (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்) (அல்குர்ஆன் 8:32) இவ்வசனம் குறித்து:

அனஸ் இப்னு மாலிக்(ரழி) அறிவித் தார்: (குறை´ இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல்இறைவா! இது (குர்ஆன் உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா! என்று சொன்னான்.

அப்போது (நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர் களின் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை. அவர்கள் (கஃஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆகமுடியும்! அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள். எனும் வசனங்கள் (திருக்குர்ஆன் 8:33,34) அருளப்பெற்றன. (புகாரி: 4648, 4649)

(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப் பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா? (அல்குர்ஆன் : 12:107)  அதுவோ,

கண்  இமைப்பதற்குள்  ஏற்பட்டுவிடும்  நாள்:

மறுமை (நிகழ்வு சம்பவிக்கும்) நிகழ்ச்சி யானது கண் இமைப்பதைப் போன்று அல் லது (அதை விடவும்) விரைவானதுதான். அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுள்ளவன். (16:77) எனவே,

இன்னுமா  அலட்சியம்?

யுக முடிவு நேரம் நெருங்கி விட்டதாக வும் இவ்வுலகம் ஓய்ந்துவிட்டதாகவும் அது இறுதி நிலையை எட்டிவிட்டதாகவும் உயர்ந்தோன் அல்லாஹ் அறிவிக்கின்றான்.

இறுதி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின்  வருகை :

அல்லாஹ்வின் இறுதித் தூதராகிய முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வருகை கூட மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றுதான். ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் யாரைக் கொண்டு மார்க்கத்தை முழு மைப்படுத்தி இருக்கின்றானோ,யாரின் மூலம் அகிலத்தார் அனைவர் மீதும் தனது ஆதாரத்தை நிலைநாட்டினானோ அத்தகைய இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்  தான்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள், மறுமை நாளின் அடையாளங்களை அதன் அறிகுறி களை அறிவித்துவிட்டார்கள். அவர்கள் தாம் அல்ஹார் (அவர்களின் பாதங்களின் மீதுதான் மறுமையில் மக்கள் ஒன்று திரட்டப்படுவர் என்றுள்ள) அந்தஸ்த்து உடையவர் கள். மேலும், அல்ஆகிப் (அவர்களுக்குப் பிறகு வேறொரு நபியின் வருகை இல்லை என்றுள்ள அந்தஸ்த்து உடையவர்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்: 8:462-467) அதையே,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்: தமது நடுவிரலையும், பெருவிரலையும் அடுத்துள்ள (ஆட்காட்டி, சுட்டு) விரலையும் இணைத்தவாறு, நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள் ளோம் என்று கூறினார்கள். அறிவிப்பவர்கள். ஸஹ்ல் இப்னு அத்(ரழி) அனஸ்(ரழி), அபூஹுரைரா(ரழி) ஆகியோர், புகாரி: 6503-6505, 4936, 5301, தஃப்சீர் இப்னு கஸீர் 8, பக்கம் 792-801) வேறு ஓர் அறிவிப் பில் வந்துள்ளது. இந்த விரல் இந்த விரலுடன் நெருக்காக இருப்பதைப் போல் தன் நானும் மறுமை நாளும் அனுப்பப்பட் டிருக்கின்றோம். இதன் அறிவிப்பாளராகிய அஃமஷ்(ரஹ்) அவர்கள் (அவ்விரல்கள் இவைதான் என்று) தம்முடைய சுட்டு விரலையும், நடுவிரலையும், சுட்டிக்காட்டி னார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்:8, பக்கம் 792-801) மேலும்,

மறுமை நாள் என்னை முந்திவிடப் பார்த்தது:

வேறு ஓர் அறிவிப்பில் வந்துள்ளது. இந்த விரல் இந்த விரலுடன் நெருக்கமாக இருப்பதைப் போல்தான் நானும் மறுமை நாளும் அனுப்பப்பட்டிருக்கின்றோம். ஆனால் (மறுமையயனும்) அந்நாள் என்னை முந்திவிடப் பார்த்தது: என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அறிவிப்பவர்: அஃமஷ்(ரஹ்) அவர்கள், (தஃப்சீர் இப்னு கஸீர்: 8:792-801) மேலும்,

காலித்பின் உமைர்(ரழி) அவர்கள் இவ் வாறு அறிவித்திருப்பதாக இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ் வின் தூதர்(ஸல்)அவர்கள் எங்களிடையே சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். உயர்ந் தோன் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். தொடர்ந்து பல  புகழ்ப் பண்புகளை எடுத்துரைத்தார்கள். பிறகு அவர்கள் குறிப்பிட்டதாவது; இறைப் புகழுக்குப் பிறகு நான் கூறுவது என்னவெனில் நிச்சயமாக இவ்வுலகம் விடைபெற்றுச் செல்லும் (தனது) நிலையை அறிவித்துவிட்டது. எனவே விரைவாகத் திரும்பிச் சென்று கொண்டி ருக்கிறது. பாத்திரத்தின் அடிப்பாகத்தில் மீதியிருக்கும் குறைந்த அளவு தண்ணீரைப் போன்றே தவிர அதை அருந்துபவர் அதன் சிறிதளவு அடி நீரையும் அருந்திக் கொண்டி ருக்கிறாரே அந்தத் தண்ணீரைப் போன்றே தவிர வேறு எதுவும் உலகத்தி(ன் ஆயுளி)ல் மீதமில்லை. (முஸ்லிம் : 5676, தஃப்சீர் இப்னு கஸீர் : 8:792-801) மேலும்; நடந்து முடிந்துவிட்ட ஐந்து அடையாளங்கள். 

வந்தே  தீரும் :

நீங்கள் ஏற்க மறுத்துவிட்டீர்கள். எனவே அ(தன் தண்டனையான)து வந்தே தீரும் (25:77) அதாவது; இறை மறுப்பாளர் களே! நீங்கள் ஏற்க மறுத்ததன் விளைவு உங்களைப் பிடித்தே தீரும். அது இம்மை மற்றும் மறுமையில் உங்களது அழிவு, நாசம், தண்டனை ஆகியவற்றுக்குக் காரணமாக அமைந்தே தீரும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 6:529-531) மேலும்;

மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்: (இந்த 25:77 வது வசனத்தில் வரும்லிஸாமன் எனும் சொல்லுக்கு விளக்கமளிக்கும் போது) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) (மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடை யாளங்கள் (வந்து) சென்றுவிட்டன. ஒன்று;  புகை, இரண்டாவது, சந்திரன் பிளப்பது; மூன்றாவது, ரோமர்கள் (வெற்றி கொள்ளப்பட்டு மீண்டும் அவர்கள் வெற்றி பெறுவது) நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும் என்று கூறினார்கள். புகாரி: 4767, 4820)

புகை :

எனவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வருமே அப்படிப்பட்ட தொரு நாளினை (இவர்கள் வி­யத்தில்) நீர் எதர்பார்த்திருப்பீராக! (அந்தப் புகை) மனிதர்களைச் சூழ்ந்து மூடிக்கொள்ளும் அது துன்புறுத்தக்கூடிய தண்டனையாக இருக்கும்.       (44:10,11)

வானத்துப்  புகை  உலகிலா?  மறுமையிலா?

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) அறிவித்தார். மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிக்கக் கண்ட நபி(ஸல்) அவர்கள்யூஸுஃப் நபி காலத்து ஏழாண்டுப் பஞ்சம் போல் இவர்களுக்கும் ஏழாண்டுப் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த் தித்தனர். அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு அனைத்தையும் வேரறுத்தது, தோல்கள், பிணங்கள் ஆகியவற்றை உண்ணலானார்கள். அவர்கள் (மழை மேகம் தென்படுகிறதோ என்று) வானத்தைப் பார்க்கும்போது பசியினால் புகை மூட்டத்தையே காண்பார்கள். இந்நிலையில் அபூ ஸுப்யான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! நீர் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் உறவினர்களோடு இணைந்து வாழ வேண்டுமென்றும் கூறுகிறீர். உம்முடைய கூட்டத்தினரோ அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யும் என்று கூறினார். அப்போது பின்வரும் வசனங்களை அல்லாஹ் கூறினான்.

எனவே வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வருமே அப்படிப்பட்ட தொரு நாளினை (இவர்கள வி­யத்தில்) நீர் எதிர்பார்த்திருப்பீராக! (அந்தப் புகை) மனி தர்களைச் சூழ்ந்து மூடிக்கொள்ளும் அது துன்புறுத்தக்கூடிய தண்டனையாக இருக்கும். (44:10,11)

எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த  வேதனையை நீக்குவாயாக! நிச்ச யமாக நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறோம் (எனக் கூறுவர்) நினைவுறுத்தும் நல்லு பதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம் பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளங்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி (மற்றவர்களால் இவர்) கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர் எனக் கூறினர். நிச்சயமாக! நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால் பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புவர்களே; ஒரு நாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந் நாளில்) நாம் பழி தீர்ப்போம்; (திருக்குர் ஆன் 44:10-16) கடுமையான பிடி என்பது பத்ருப் போரில் ஏற்பட்டது புகை மூட்ட மும் கடுமையான பிடியும் நடந்தேறியது. அது போல் ரூம் அத்தியாயத்தில் கூறப்பட்ட முன்னறிவிப்பும் நிறைவேறியது. புகாரி: 1007, முஸ்லிம்: 2798, இமாம் அஹ்மத், இமாம் திர்மிதி, இமாம் நஸாயீ ஆகியோரும் பதிவு செய்துள்ளனர். இந்த நபிமொழியின் கருத்து இதுதான்; நடந்து முடிந்துவிட்டன என்று குறிப்பிடப்பட்ட ஐந்து வி­யங்களில் புகையும் சந்திரன் பிளவுண்டதும், மறுமை நாளின் முக்கிய அடையாளங்களாகும். (தஃப்சீர் இப்னு கஸீர் : 8:310-320) (இன்ஷாஅல்லாஹ்தொடரும்)

Previous post:

Next post: