நான் அவன் இல்லை…
A.N.
மேற்கண்ட தலைப்பு எங்கேயோ கேட்டதாகவோ, படித்ததாகவோ நினைவு இருக்கலாம்.
ஆம்! உண்மைதான்.
நம் கட்டுரையில் வரும் கதாநாயகன் படித்து, பட்டமும் வாங்கிவிட்டு மக்களை ஏமாற்றுவார்.
அந்த படத்தின் கதாநாயகன் பல பெண்களை காதலித்து ஏமாற்றியது உண்மையே. ஆயினும் நமது இந்திய சட்டத்தின் உள்ள ஓட்டைகளின் (குறைகளின்) காரணமாக சாதுரியமாக நீதிமன்றத்தின் (ணூPளீ) தண்டனை யிலிருந்து தப்பித்து விடுவார்.
ஆயினும், “நான் அவன் இல்லை‘ என்பார்.
அதுபோல் நம் கதாநாயகன் தப்பித்து விடுவாரா?
தப்பித்துவிடுவேன் என்பதுதான் அவ ருடைய மனக்கணக்கு. ஆனால் ணூஸிபு (இஸ்லாமிய சட்ட தண்டனைப்படி) ஒருபோதும் தப்பிக்க முடியாது. ஏன் என்றால் இந்த சட்டத்தில் எந்த ஓட்டையும் (குறைபாடும்) இல்லை. வழக்கறிஞர்களின் வாதமும் எடுபடாது. ஏனெனில் அதை (ணூஸிபு) (இயற்றியவன் அனைத்தும் அறிந்தவன்.
அந்த கதாநாயகன் யார்?
அவர் மாடர்ன் டிரஸ் (விதவிதமான ஆடை) அணியமாட்டார். அதே சமயத்தில் நம்மை போன்று சாதாரண ஆடையும் அணியமாட்டார். (இது ஏனைய அனைத்து மதங்களிலுள்ள கதாநாயகன்கள் பின்பற்றுவது) அவர் அணியும் ஆடைகள் அவரை தனி அடையாளம், காண்பிப் பதற்காகவே உதவியாக இருக்கின்றது. அதனால் தான் படித்தவர்கள் முதல், பாமரர் வரை ஏமாறுகிறார்கள், ஏமாற்ற முடியும்.
அதாவது (நம் கதாநாயகன்) அணிந் திருப்பது வெள்ளை அல்லது பச்சை கலரில் ஜிப்பா, தொப்பி தலையில் பேட்டா, மற்றும் கையில் தஸ்பீஹ் மணி இந்த தோற்றம் அவரை ஆலிம் (அறிஞர்) என அடையாளம் காட்டுவதற்காக. அது மட்டுமல்ல, தான் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர், நான் அரபியில் துஆக் கேட்டால் அல்லாஹ் புரிந்துகொள்வான் என்ற மாய வலையில் மக்கள் மதி மயங்கி நம்புவதற்காக, மேலும் இவர்கள் வந்தால் பொதுமக்கள் எதிலும் முன்னுரிமை கொடுப்பார்கள். இரண்டு மடங்கு கூலி வழங்குவார்கள்.
இப்போ நம் கதாநாயகன் யார் என்று என்பது தெளிவாக புரிந்திருக்கும். அடுத்தப்படியாக அவர் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார் என்று பார்ப்போம்.
தமிழகத்தின் தலைசிறந்த வேலூர் பாக்கியாத் மதரஸாவில் ஓதுனவன் நான் என்று ஒருவர் பெருமையாக கூறுவார். வேறு ஒருவர் இந்தியாவின் தலைசிறந்த தேவ்பந்த் மதரஸாவில் ஓதுனவன் என்றும் அவரை விட நானே உயர்ந்தவன் என்றும் பெருமையாக கூறுவார். இவர்கள் இருவருக்கும் மேலாக உலக அளவில் பெரும் மதிப்பு பெற்ற மதீனாவில் ஓதி பட்டம் வாங்கியவன் என்பார் வேறொருவர்.
புதியதாக சமீப காலமாக பாம்பு புற்றுகள் போல் பரவியுள்ள தவ்ஹீது மதரஸாவில் ஓதினவன் என்று வேறு ஒருவரும் பெருமை பேசுவார். அதனால் ஏமாற்றுவது வெவ்வேறாக இருக்கும்.
அதாவது மவ்லூது, பாத்திஹா ஓதுவது கூடும் என்று ஒருவர் கூறுவார். வேறு ஒருவர் அவை எல்லாம் பித்அத் (வழிகேடு) என்று மற்றொருவர் கூறுவார். இவர்களுக்கு மேலாக நீங்கள் செய்வதெல்லாம் ´ர்க் (இணை வைத்தல்) என மதனியிலிருந்து படித்து வந்தவர் கூறுவார். ஆயினும் “நான் அவன் இல்லை‘ என்று கூறுவார்கள்.
இந்த கதாநாயகர்கள் கூடாது, கூடும் என்று சொல்வது வெரும் வயிற்று பிழைப்பு தானே தவிர உண்மையில் மக்களை ஆன்மீக ரீதியாக ஏமாற்றுவதே பிரதான (முக்கிய) நோக்கம் ஆகும்.
இந்த மாய வலையிலிருந்து விடுபட குர்ஆனை பொருள் அறிந்து படியுங்கள்.