அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
- துல்கர்னைன் சூரியன் மறையும் இடத்தை அடைந்தபோது எதைக் கண்டார் என அல்லாஹ் கூறுகிறான்?
கருப்பு நிற சேற்று நீரில் சூரியன் மறைவதைக் கண்டார். (அல்குர்ன் 18:86)
- எவர் தனது இரட்சகனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் என்ன செய்ய வேண்டும்?
அவர் நல்லறங்கள் செய்யவேண்டும். (அல்குர்ஆன் 18:110) - ஸகரிய்யா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்திய அடையாளம் என்ன’?
எவ்வித குறையும் இல்லாது நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களுடன் பேச முடியாமல் இருப்பது. (அல்குர்ஆன் 19:10)
4. மர்யம் (அலை) முன் ஜீப்ரயீல்(அலை) எவ்வாறு தோற்றமளித்தார்?
நேர்த்தியான ஒரு மனிதராக தோற்றமளித்தார். (அல்குர்ஆன் 9:17)
5. சூர் ஊதப்படும் நாளில் குற்றவாளிகள் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருந்ததாக பேசிக் கொள்வார்கள்? ]
பத்து நாட்கள். (அல்குர்ஆன் 20:103)
6. காருன் எந்த சமூகத்தை சார்ந்தவனாக இருந்தான்?
மூஸா(அலை) அவர்களின் சமூகத்தை. (அல்குர்ஆன் 28:76)
7. நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?
6 சூராக்கள். (அத்தியாயம்: 10,11,12,14,47,71)
8. துல்கர்ணன் மக்களிடம் எந்தவிதத்தில் உதவி வேண்டினார்?
உடல் பலத்தால் எனக்கு உதவுங்கள். (அல்குர்ஆன் 18:95)
9. நபியின் மனைவியரை எவ்வாறு நடந்துகொள்ள அல்லாஹ் அறிவுறுத்தினான்?
யாரிடமும் குழைந்து பேசகூடாது. (அல்குர்ஆன் 33:32)
10. பிலால்(ரழி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்து மீட்டவர் யார்?
அபூ பக்கர் ஸித்திக்(ரழி) அவர்கள்.
11. துல்கர்னைன் இரு மலைகளுக்கு இடைப்பட்ட இடத்தை அடைந்த போது எதனைக் கண்டார் என அல்லாஹ் கூறுகிறான்?
பேச்சை விளங்கி கொள்ளாத கூட்டத்தாரைக் கண்டார். (அல்குர்ஆன் 18:93)
12. ஸகரிய்யா(அலை) தம் சமூகத்திடம் அல்லாஹ்வை துதி செய்யுங்கள் என்று எவ்வாறு தெரிவித்தார்?
சைகை மூலம் தெரிவித்தார். (அல்குர்ஆன் 19:11)
13. மர்யம் (அலை) மனிதர்களை கண்டால் என்ன கூறவேண்டும் என்று அல்லாஹ் கூறினான்?
அர்ஹர்மானுக்காக மெளனம் அனுஷ்டிக்க நேர்ச்சை வைத்துள்ளேன் எந்த மனிதருடனும் பேசமாட்டேன் என்று சைகை மூலம். ( அல்குர்ஆன் 19:26)
14. சூர் ஊதப்படும் நாளில் மக்கள் எந்த ஓசையை மட்டும் செவியுறுவார்கள்?
காலடி ஓசை. (அல்குர்ஆன் 20:108)
15. காருனை அல்லாஹ் எவ்வாறு தண்டித்தான்?
பூமிக்குள் விழுங்கச் செய்து. (அல்குர்ஆன் 28:81)
16. நபியின் மனைவியர் நல்லறங்கள் புரிந்தால் அல்லாஹ் எவ்வாறு கூலி வழங்குவான்?
இரு தடவை. (அல்குர்ஆன் 33:31)
17. கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்லும் 70 ஆயிரம் நபர்களில் உள்ளவராக யாரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்?
உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரழி). புகாரி : 5705
18 .உமர்(ரழி) அவர்கள் மனமாற்றம் பெற்றிடுவதற்கு காரணமான அல்குர்ஆனின் சூரா எது?
தாஹா. அத்தியாயம் : 20