உலகில் மிக சிரமமானது எது?
அய்யம்பேட்டை, நஜ்முதீன்
உலகில் சிரமமானது….
- கோடிகோடியாகபணம்சம்பாதிப்பதா?
- பெரும் பதவியில் இருப்பதா?
- படித்து பட்டம் வாங்குவதா?
- நாட்டின் மன்னராக ஆகுவதா?
- உலக அதிசயங்களை உருவாக்கியதா?
- விவசாயத்திற்குயாருமேசெய்யமுடியாதஅளவிற்குஉற்பத்தியை பெருக்கியதா?
- பெரும்பெரும்தொழிற்சாலைகளைநிர்வாகம்செய்வதா?
- ஐவேளை தவறாமல் தொழுவதா?
- நோன்பு வைப்பதா?
- ஹஜ் செய்வதா?
உண்மையில் மேற்கண்ட எதுவும் இவ்வுலகில் சிரமமானதா என்றால் இல்லை! ஆனால் இவைகள்தான் சிரமமானது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அல்ல.
எவ்வாறு எனில்,
1. அறிவும், ஆற்றலும் இல்லாத பலரும் பெரும் சொத்துக்கு அதிபதியாக இருக்கின்றார்கள்!
2. சாதாரண தொண்டர்கள் பலர் தந்திரங்களை செய்து பெரும் பதவியில் இருக்கின்றார்கள்.
3. பள்ளிக்கு சென்று படிக்காமலேயே சிலர் பல பட்டங்களை வாங்குகின்றார்கள்.
4. அரச குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பதால் வாரிசு அடிப்படையில் தகுதி யில்லாமலேயே மன்னராக மகுடம் சூட்டப்படுகிறது.
5. நேற்றுவரை அதிசயமாக இருந்தவைகள் புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
6. விவசாயத்தில் நேற்றைய சாதனை இன்று முறியடிக்கப்படுகிறது.
7. நேற்று வரை சிறப்பாக நிர்வாகம் செய்து வந்த பல பெரும் தொழிற்சாலை கள் இப்போது மூடப்பட்டுள்ளது.
ஆக இவைகள் எதுவுமே சிரமமானது இல்லை என்பது நன்கு தெரிகிறது.
பின்பு சிரமமானது எது?
உண்ணாமல், உறங்காமல், உட்கார முடியாமல், நிற்க முடியாமல், நடக்க முடியாமல் இன்னும் பல்வேறான சிரமத்துடன் உயிரை தன் வயிற்றில் சுமந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாளே அதுவே உலகில் சிரமமானது ஆகும்.
எனவேதான் அல்லாஹ் குர்ஆனில் வானம், பூமியை தான் படைத்ததை கூட சிரமம் என்று சொல்லவில்லை. மேலும் மண்ணோடு மண்ணாகி போன மனிதர்களை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைக் கூட சிரமம் என்பதாகச் சொல்லவில்லை.
மாறாக சிரமம் என்று எதை குர்ஆனில் குறிப்பிடுகின்றான் என்றால்,
“மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்து போதித்தது, அவனது தாய் பல சிரமத்தின் மேல் சிரமம் அடைந்தவளாக அவனைச் சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் கொடுத்து வளர்த்தாள். எனவே, நீ எனக்கும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே நீ திரும்ப வருதலாக இருக்கிறது‘. (அல்குர்ஆன் 31:14)
மேற்கண்ட வசனத்தில் அவனது தாய் சிரமத்துடன் பெற்றெடுத்ததையும், பால் கொடுத்து வளர்த்ததையும் கூறிய அல்லாஹ் தனக்கும், அந்த பெற்றோருக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்பதாக கூறுகிறான்.
மனிதன் தனக்கு நன்றி செலுத்த வேண்டும், கட்டுப்படவேண்டும் என்பதாக குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள அல்லாஹ்! தாய் தந்தையருக்கும் நன்றி செலுத்த வேண்டும், கட்டுப்பட வேண்டும் என்பதாகவும் வழியுறுத்தி கூறுகிறான். அவ்வாறு கூறிய அல்லாஹ் ஒரே ஒரு விசயத்தில் கட்டுப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளான். அது என்னவென்றால்,
“உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு கட்டுப்பட தேவையில்லை என்பதாக அதே வேளையில் அவர்களுடன் அழகிய முறையில் நடந்துகொள்‘ என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 31:15)
எனவே தாய் தந்தையருக்கு நன்றி செலுத்துங்கள், மேலும் துஆச் செய்த வண்ணம் இருங்கள்.
“என் இறைவா! நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, என்னைப் பரிவோடு வளர்த்த அவ்விருவர் மீதும் நீ, கிருபை செய்வாயாக‘. (அல்குர்ஆன் 17:24)
“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடை களுக்காக, நீ பொருத்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும் எனக்கு அருள் புரிவாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக! (அல்குர்ஆன் 27:19)