தலையங்கம் :
கல்வியின் அவசியமும் உலக முஸ்லிம்களின் நிலையும்
உலக முழுவதும் இப்போது பேசு பொருளாக இருப்பது (TRENDING NEWS) இஸ்ரேல் பாலஸ்தீனம் போரைப் பற்றியே, சிறிது நாட்களுக்கு முன்பு (அக்டோபர் 7ம் தேதிக்கு முன்பு) வரை உக்ரைன் ரஷ்யா போர் பேச்சு பொருளாக இருந்துவந்தது.
உலகில் சுமார் 1080 கோடி மக்கள் (2022 ஆண்டு கணக்குப்படி) வசிக்கின்ற னர். இதில் கிருஸ்தவ மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் சுமார் 200 கோடி பேர் (இதில் மூன்று பிரிவுகள் உள்ளது) அடுத்து இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றக் கூடியவர்கள் சுமார் 180 கோடிபேர் (இதில் எண்ணிக்கையில் அடங்காத பிரிவுகள் உள்ளது) அடுத்தபடியாக யூத மார்க்கத்தை (மூசிநிணூறீ) பின்பற்றக்கூடிய வர்கள் சுமார் 15 கோடி பேர் உள்ளனர். அதாவது உலக மக்கள் தொகையில் யூதர்கள் வெறும் 0.2% சதவீதம் மட்டுமே. (இதில் 2 பிரிவுகள் மட்டுமே உள்ளது)
மக்கள் தொகையில் மிக மிக குறைவாக உள்ள யூதர்கள் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளை மறைமுகமாக ஆட்சி செய்கிறார்கள். குறிப்பாக அமெரிக்காவையும் சில அரபு நாடுகளையும் கூட யூதர்களே ஆட்சி செய்கிறார்கள்.
மக்கள் தொகையில் சுமார் 0.2% சதவீதம் இவர்களால் எப்படி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளை ஆட்சி செய்ய முடிகிறது.
அவர்கள் கல்வி அறிவில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் அவர்களே மேலோங்கி உள்ளனர். மிகப் பெரிய கம்ப்யூட்டர் தொழில் நிறுவனங்களும் அவர்கள் கையிலே உள்ளன.
மேலும் இன்று உலகை ஆட்சி செய்யும் ஆயுதமான அனைத்து மீடியாவை(MEDIA)யும் அவர்களே தங்கள் கையில் வைத்துள்ளனர்.
உலகில் சுமார் 4000 யூனிவர் சிட்டிகள் (UNIVERSITY) உள்ளது. இதில் முஸ்லிம்கள் கையில் உள்ளது. சுமார் 50க்கும் குறைவாகவே இருக்கிறது.
கிறிஸ்தவர்களும், யூதர்களும் சுமார் 90% சதவிகிதம் கல்வியை கற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது,
பல்கலைக்கழகம் வரை (UNIVERSITY) படித்தவர்கள் சுமார் 40% சதவிகிதம் உள்ளனர்.
முஸ்லிம்களில் பல்கலைக்கழகம் வரை படித்தவர்கள் சுமார் 0.1% சதவிகிதம் மட்டுமே.
தங்கள் வருவாயில் ஆராய்ச்சிக்காக சுமார் 5% சதவிகிதம் யூதர்களும், கிறிஸ்தவர்களும் செலவு செய்கிறார்கள்.
முஸ்லிம்கள் இதில் வெறும் 0.2% சதவிகிதம் மட்டுமே செலவு செய்கிறார் கள்.
யூதர்களில் இதுவரை நோபல் பரிசு பெற்றவர்கள் 108 பேர் உள்ளனர். முஸ்லிம்களில் 3 பேர் மட்டுமே.
மேற்கண்ட புள்ளி விபரங்கள் சிறு குறிப்பே தவிர இன்னும் பல உள்ளன.
இதுவரை உலக அளவிலுள்ள முஸ்லிம் களின் நிலையைபார்த்தோம்.
தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் நிலை:
இந்தியாவில் சுமார் 1080 பல்கலைக் கழகங்கள் (UNIVERSITY) உள்ளது. இதில் 2 முஸ்லிம் பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளது. புகழ் பெற்ற பல்கலைக் கழகங் கள் அலிகார் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாட்டில் ஒரே ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளன.
முஸ்லிம் சமுதாய முன்னேற்றத்திற்காக செயல்படுவதாக சொல்லும் இயக்கங்கள், அமைப்புகள் தமிழ்நாட்டில் சுமார் 40க்கு மேற்பட்டுள்ளன. ஆனால் எந்த ஒரு இயக்கமோ, அமைப்போ ஒரு மருத்துவ கல்லூரியோ (Medical College) மற்றும் பொறியியல் கல்லூரியோ (Engineering College) நடத்தவில்லை.
ஒருசில தனியார் நிர்வாகத்தின் கீழ் மட்டுமே முஸ்லிம்கள் கல்லூரி நடத்தப்படுகின்றன. அவைகளில் சில New College, Jamal Mohamed College, SIET College, Khader Mohideen College, பொறியியல் கல்லூரி (Engineering College) கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி உள்ளன.
சுமார் 40 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நம் சமுதாய பிள்ளைகள் படித்தவர்களும், படிக்காதவர்களும் அரபு நாடுகளுக்கு பெரும்பாலோர் கீழ்மட்ட தொழிலாளர்களாக பணிபுரிய அனுப்பி வைத்ததால் முஸ்லிம் சமூகம் இந்திய அரசு துறையிலும், அதிகார துறையிலும் பெரும் பின்னடைவை சந்தித்தன. அதன் விளைவை இன்று நம் சமூகம் சந்தித்து வருகிறது.
அதாவது வாழ்க்கை சிரமங்களுக்காகவும், சில ஆயிரம் பணத்துக்காகவும் 18 வயதை தாண்டிய உடனே அரபு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பியதால் வாழும் இளைய தலைமுறையும், வருங் கால தலைமுறையும் பல அவலங்களை சந்தித்து வருகிறது. இந்த அவல நிலையிலிருந்து மாறவேண்டும். இல்லையயன்றால் காலத்திற்கும் இந்திய அரசு துறை யிலும், அதிகார துறையிலும் பங்கு பெறமுடியாமல் இரண்டாம், மூன்றாம் தர குடிமக்களாகவே வாழ நேரிடும்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 6, கர்நாடகாவில் 4, ஆந்திராவில் 2,தெலுங்கானாவில் 4 என எண்ணிக்கையில் மருத்துவமனைகளை முஸ்லிம்கள் நடத்துகின்றனர். இனிவரும் காலங்களிலும் அறிவியல், ஆராய்ச்சி உற்பத்தி தொழில் வாய்ப்புக்கள், உயர் கல்வி போன்றவற்றில் ஆளுமை செலுத்தினால்தான் சமுதாயம் முன்னேற முடியும்.
நாம் (முஸ்லிம்கள்) அடிமைகள் அல்ல. அறிவு பெட்டகமான குர்ஆனை கையில் வைத்துள்ள அறிவு செல்வங்கள், அல்லாஹ்வால் ஆசிர்வதிக்கப்பட்டவர் கள். எனவே இப்போது இருக்கும் கல்வி சதவிகிதத்தை தாண்டி எல்லா துறைகளிலும் உயர் கல்வியை பயின்று முன்னேற முடியும்.
ஏனெனில்,
“…எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை‘ அல்குர்ஆன் 13:11
மேற்கண்ட இறைவாக்குப்படி நம் நிலையை நாம் மாற்றிக்கொள்ள முயற்சி செய்யாதவரை தாழ்வு மனப்பான்மையுடனும், இரண்டாம் தர குடிமக்களாகவும் வாழ நேரிடும்.
அல்லாஹ் அமானிதமாக தந்துள்ள அறிவு, அதிகாரம், பொறுப்புக்களை சமுதாய அக்கரையுள்ள அறக்கட்டளைகள், அமைப்புகள் உணர்ந்து சமுதாய முன்னேற்றத்திற்கு பெரும் முயற்சிகளை செய்ய வேண்டும்.